Jump to content

மன்னாரில் 5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று தொடரும் நிலையில், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் இன்று மாலை நேரடியாக சென்று கலந்தரையாடியுள்ளனர்.


2.jpg

மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற நபரே மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் குறித்த உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.


3.jpg

எனினும் பல்வேறு தரப்பினர் சென்று கலந்துரையாடி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் ஜேசப் தர்மன் ஆகியோர் சென்று கலந்துiராடியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/76570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனிநபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவு

February 26, 2020

DSC_0116-800x533.jpg

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து   மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற இளைஞர் சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வந்தார்.

இன்று புதன் கிழமை 5 ஆவது நாளாகவும் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தநிலையில் குறித்த நபரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு,குறித்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு குறித்த நபரின் முயற்சியை  வேறு வடிவத்தில் முன்னெடுக்க ஆலோசனை வழங்கினர்.

இந்த நிலையில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரஜைகள் குழு பிரதி நிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ்,ஜோசப் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு   ஆகாரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  #தமிழ் தேசியக்கூட்டமைப்பை  #மன்னார்  #உண்ணாவிரதபோராட்டம்

 

http://globaltamilnews.net/2020/137494/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

42220-E9-E-584-E-40-B2-AC38-DF8-C7-C9-B9

அந்த வாலை  நிமிர்த்துவதிலும் பார்க்க....
ஓட்ட...  நறுக்கி விடலாம். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.