Jump to content

Recommended Posts

625.500.560.350.160.300.053.800.900.160.

இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற்பது வயதில் கூட திருமணமாகாது பெற்றோருடன் அல்லது தனியாக வாழ்கின்றனர்.

இக்காலத்தில் பெண்ணுக்கு அறிவு விருத்தியாவதற்கு முன்னர்  21,24 வயதினுள் காதலித்தவனையோ அல்லது பசியோ திருமணம் செய்து  கொடுத்தால் ஓரளவு சம்மதித்துத் திருமணம் செய்கின்றனர். அதற்கும் நூற்றெட்டுப் பிரச்சனைகள். ஆனால்வயது 25 தாண்டியதும் நல்ல தம் சொந்தக் காலில் நிற்கும் பெண்கள் பலர் திருமணம் செய்ய ஆசை கொள்வதில்லை. குழந்தை பெறுவதற்குத் தானே திருமணம் செய்வது, உங்கள் நாட்டில் தான் கட் டாயம் திருமணம் செய்யவேண்டும், இத்தனை வயதுக்குள் திருமணம் செய்யவேண்டும், எமக்குத் தேவையானபோது செய்துகொள்கிறோம், எமக்குப்பிடித்தவரை நாமே தேடிக்கொள்கிறோம், எங்கள் ஆண்களில் எம்மை வைத்து வாழும் திறன் இல்லாதவர்கள் தான் பலர், பெருந்தமை கொண்டவராக இருக்கவேண்டும், அழகாய்க் கம்பீரமாய் இருக்கவேண்டும், தம்மிலும் படித்தவனாய் இருக்கவேண்டும், கறுப்பு மணமகனாக இருக்கவேண்டும், சொந்த வீடு உள்ளவனாய் இருக்கவேண்டும்  என்பது மட்டுமன்றி இன்னும்பல எதிர்பார்ப்புகளும் விருப்புவெறுப்புக்களும் பெண் பிள்ளைகளுக்கு இருக்கின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை அழகான கொடியிடையுடன் இருக்கும் பெண், நன்றாய் படித்த பெண் -( தான் படிக்காது ரோட்டில் திரிந்தாலும் ), நல்ல சீதனம் தரக்கூடிய பெண், தனக்கு வயது முப்பதோ நாற்பதோ அதுபற்றிப் பிரச்சனையில்லை. பெண் பத்து வயது குறைந்தவராகக்க்கூட இருக்கலாம், ஆடையின் அளவு 12 ஆக இருக்கவேண்டும், நன்றாகப் படித்த பெண்ணென்றாலும் தன்னிலும் அதிகம் சம்பளம் எடுக்கக் கூடாது இப்படிப் பல.

ஆணும் பெண்ணும் நன்றாகப் படித்த இருவருக்குத் திருமணம் பேசும்போதும் ஆணின் பெற்றோர் சீதனம் கேட்பதனால், இருவரும் பேசிப்பழகிப் பின்தான் திருமணம் என்று பல திருமணங்கள் குளம்பியுள்ளன. இந்தச் சாதியில், இந்த ஊரவர் வேண்டாம் அல்லது வேண்டும்,  பெண் அணிந்திருந்த ஆடை சரியில்லை, அடக்க ஒடுக்கமாக இல்லை, ஒரே ஒரு பிள்ளை என்றால் பாருங்கோ, ஆணுக்குப் பெண் சகோதரிகள் இருக்கக் கூடாது,  ஆண்கள் நாகரீகமாக அணியவில்லை, பெண் clubbing  போவதனால், ஆண் நண்பர்களுக்கு கன்னதத்தில் முத்தம் கொடுப்பதனால் இப்படிச் சொல்லிக்கொண்டேபோகலாம்.

பெண்கள் மனதில் ஆணை நம்பி வாழத்தேவையின்றி தன்காலில் நிற்கும் குணமும், புலம்பெயர் நாடுகளில் ஆண்  இன்றித் தனியாக வாழக்கூடிய பாதுகாப்பு உள்ளமை, தானே தனியாகச் சொத்துக்களை வாங்கவும் பிரச்சனைகளைக் கையாளவும் முடியும் என்னும் நம்பிக்கை, ஆண்கள் பெரும்பாலும் பெற்றோரை நம்பி அதாவது ஆடைகள் துவைப்பது முதல் உணவு சமைப்பது வரை தாயை நம்பி இருப்பதனால் பல விடயங்களில் முதிர்வு இன்மை, கலாச்சார மாற்றம், குழந்தைகள் பெறத் தேவை இல்லை என்னும் எண்ணம் இப்படிப்பை பலவும் காரணிகளாக இருந்து பழமுதிர் கண்ணிகளை உருவாக்கியுள்ளன. பாவம் பெற்றோர்கள் கோவில்கோவிலாக ஏறி இறங்கி, தரகர்மார்களுக்கும் திருமண சேவைகளுக்கும் பணம் இறைத்து, பொருத்தம் பார்த்துப் பார்த்து சாதகங்கள் கிழிந்தநிலையில் மாப்பிளை வீட்டார் கூறும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி முக்கியமாய் இன்னும் மக்களுக்கு ஒண்டும் பாக்கேல்லையோ?? ஏதும் தோஷம் இருக்கோ ?? ஆரையெண்டாலும் கட்டிக்க குடுங்கோ என்னும் அறிவுரை கேட்டு, பிள்ளை எப்பிடியும் கட்டினால் போதும் என்று எல்லாத்தையும் சகிச்சு, யாரையும் உங்களுக்குத் பிடிச்சிருந்தால் சொல்லுங்கோ என்று ஏலாக் கட்டத்தில் சொல்லி பிள்ளைகள் வேற்று நாட்டவரை முடிக்கப்போறன் என்றாலும் வேறுவழியின்றி தம் துக்கத்தையெல்லாம் உள்ளே வைத்துப் பூட்டி திருமணமும் செய்து வைக்கின்றனர்.

இப்படி நடக்கும் திருமணங்கள் மகிழ்வாகத் தொடர்கின்றனவா ?? என்ற கேள்விக்கான விடை அடுத்த பகுதியில்............

தொடரும் .........

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 12
 • Haha 1
Link to post
Share on other sites
 • Replies 405
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக்

இது அந்த பெற்றோர்களின் உடல் புலம்பெயர்ந்துள்ளதே தவிர மனமும், சமூகப் பார்வையும் இன்னும் ஊரிலேயே இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது. உண்மையை சொல்லப்போனால் கொழும்பில், மட்டக்ளப்பில், யாழில் இப்போ

ஒரு விளக்கம் ரதி நான் தளத்துக்கு வராமல் இருப்பது கோசனின் நடவடிக்கை தான் காரணம் என்று கூறி இருந்தார். நான் தளத்தில் இருந்து சிலகாலங்கள் ஒதுங்கி இருப்பதற்கு காரணம், கோசன், தன்னை அறிவுஜீவியாக க

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆணும் பெண்ணும் நன்றாகப் படித்த இருவருக்குத் திருமணம் பேசும்போதும் ஆணின் பெற்றோர் சீதனம் கேட்பதனால்,

வெளிநாட்டிலும் சீதனம் இருக்கோ?

நானும் இரண்டு பிள்ளைகளுக்கு கட்டி வைத்துவிட்டேன்.இன்னமும் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை.

Link to post
Share on other sites
14 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டிலும் சீதனம் இருக்கோ?

நானும் இரண்டு பிள்ளைகளுக்கு கட்டி வைத்துவிட்டேன்.இன்னமும் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை.

உங்களுக்கு அந்தப் பிரச்சனை வரவில்லை என்பதற்காக இல்லை என்று ஆகிவிடுமா ?? உங்கள் பிள்ளைகள் ஆணா பெண்ணா ?? பேசிக் செய்த திருமணமா ?? காதல்த் திருமணமா ??? என்பதை முதலில் சொல்லுங்கள் அண்ணா.

பச்சைக்கள்  தந்த ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் விளங்க நினைப்பவனுக்கும் நன்றி.

Link to post
Share on other sites

தொடருங்கள்...நானும் காத்திருக்கிறேன்...

Link to post
Share on other sites

என் பிள்ளைகளுக்கு திருமணம் பேசி நான் பட்ட பாடு இருக்கே. அதைகே சொல்லி முடியாது. என் அனுபவங்கள் சிலதை இதில் பதிகிறேன்.

திருமணப் பேச்சு 1

தொலைபேசி அழைப்பு வருகிறது.

நான் : வணக்கம்

அவ : கலோ நான் தர்மினி.

நான் : சொல்லுங்கோ

அவ: நீங்க உங்கட பிள்ளைக்கு மாப்பிள பாக்கிறியளோ ?

நான்: ஓம் .... உங்கள் மகனுக்கோ

அவ : என்ன செய்யிறா உங்கட மகள்.

நான் : வேலை செய்யிறா

அவ: என்ன வேலை செய்யிறா ?? என்ன படிச்சவ ??

நான் : முதல்ல இரண்டு பேருக்கும் பொருத்தம் பாப்பம்.
             உங்கட மகன்ர சாதகத்தை தரமுடியுமா ?

அவ : நீங்களும் ஹஸ்பண்டும் என்ன செய்யிறியள் ?

நான் : நாங்கள் சொந்தக் கடை ஒண்டு நடத்திறம்
             நீங்கள் என்ன செய்யிறியள் ? உங்கள் மகன் என்ன படிச்சவர்?

அவ : நீங்கள் முதல்ல பொருத்தத்தைப் பாருங்கோவன்.
            பொருத்தம் எண்டா எடுங்கோ மிச்சத்தைக் கதைப்பம்.
            நான் வற்சப்பில சாதகத்தை அனுப்பி விடுறன். பாய்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடையின் அளவு 12 ஆக இருக்கவேண்டும்,

அளவு 12 கொடியிடையாளா??😜

ஆடையின் அளவு 8 ஆக இருந்தால்தானே அழகாக, மெல்லீஸாக, அம்சமாக இருப்பார்கள்🥰

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

அளவு 12 கொடியிடையாளா??😜

ஆடையின் அளவு 8 ஆக இருந்தால்தானே அழகாக, மெல்லீஸாக, அம்சமாக இருப்பார்கள்🥰

அவரின் கண் கொண்டு பார்த்தால் அது கொடியிடையாகத்தான் இருக்கும்.......!   😁

Link to post
Share on other sites
9 minutes ago, கிருபன் said:

அளவு 12 கொடியிடையாளா??😜

ஆடையின் அளவு 8 ஆக இருந்தால்தானே அழகாக, மெல்லீஸாக, அம்சமாக இருப்பார்கள்🥰

8 அளவு போடுறது 12 ... 18   வயதுப் பிள்ளையள் தான் போடுறது. அந்த அளவு ஆடை அணியும் பிள்ளைகளை இளம் பிள்ளைகள் என்பர். அவர்கள் அந்த வயதுடைய ஆண்களை அல்லது ஒரு 4,5 அதிக வயதுடைய இளைஞர்களை காதலிக்கவோ திருமணம் செய்யவோ தான் விரும்புவார்களேயன்றி 28 கடந்த ஆணை அல்ல. ஆனால் ஆண்கள்  தம் வயதை பற்றிக் கவலை கொள்ளாது தம் பெண் வயதை ஒத்தவர்களை திருமணம் செய்ய ஆசை கொள்வது.  இதுதான் ஆண்புத்தி. 😃

58 minutes ago, suvy said:

அவரின் கண் கொண்டு பார்த்தால் அது கொடியிடையாகத்தான் இருக்கும்.......!   😁

குணம் நல்லதோ, திறமை இருக்கோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே கொள்வதில்லை. பாக்க வடிவாக இருந்தால் சரி. கோவைக்கு பச்சை மட்டை சரி 😃

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2020 at 4:46 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் பெரும்பாலும் பெற்றோரை நம்பி அதாவது ஆடைகள் துவைப்பது முதல் உணவு சமைப்பது வரை தாயை நம்பி இருப்பதனால் பல விடயங்களில் முதிர்வு இன்மை

கிழிஞ்சுது போ .... பாருங்கப்பா அக்காவின் ஆண்களின் முதிர்ச்சியை எடை போடும் கருவியை ....
சுமே அக்கோய் ...இங்கே சிங்கையில் தனியாக தான் சீவிக்கிறேன் , எனது உடையை வீட்டில் இருக்கும் சலவை யந்திரம் கழுவிப்போடுகிறது , அப்பார்ட்மென்டில் சமைக்க அனுமதியில்லை , அதுதான் Hawker ஸ்டால் தெருவுக்கு தெரு இருக்கிறதே விதம் விதமாக வராயிட்டி வராயிட்டியாக (பெற்றோர் ,மனிசி கூட உப்பிடி சமைத்து தந்தது இல்லை ) உள்ளே தள்ளுகிறேன் . உங்கள் கருத்துப்படி பார்த்தால் நம்முடைய முதிர்ச்சியை அடிச்சுக்க உலகிலேயே ஆள் இல்லைப்போல  

Edited by அக்னியஷ்த்ரா
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சில அவதானிப்புகள்….

1) படி படி என்று சொன்ன நேரம் , பிடி பிடி என்று சொல்லியிருக்க வேண்டும் - 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்புகள்..
2) அவுஸ்திரேலியாவில்  படித்து  சராசரி உத்தியோகங்களிலாவது இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் சீதனம் என்பது அருகி விட்டது போல் தெரிகிறது.
3) பிள்ளைகள் , துணையை தெரிவு செய்வதில் இருந்து கல்யாண வீடு ஏற்பாடுகள் வரை ,தங்களின் முடிவுகள் தான் இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் , செலவுகள் உட்பட.
4) பேசிச் செய்யும் திருமணங்களை தற்போதைய இளவல்கள் விரும்புகிறார்கள் இல்லை.  பேசிச் செய்வது , தங்களில் எதோ குறைபாடு இருக்கின்றது  என்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது என்பது அவர்களின் கருத்து ...

 • Like 1
Link to post
Share on other sites
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிழிஞ்சுது போ .... பாருங்கப்பா அக்காவின் ஆண்களின் முதிர்ச்சியை எடை போடும் கருவியை ....
சுமே அக்கோய் ...இங்கே சிங்கையில் தனியாக தான் சீவிக்கிறேன் , எனது உடையை வீட்டில் இருக்கும் சலவை யந்திரம் கழுவிப்போடுகிறது , அப்பார்ட்மென்டில் சமைக்க அனுமதியில்லை , அதுதான் Hawker ஸ்டால் தெருவுக்கு தெரு இருக்கிறதே விதம் விதமாக வராயிட்டி வராயிட்டியாக (பெற்றோர் ,மனிசி கூட உப்பிடி சமைத்து தந்தது இல்லை ) உள்ளே தள்ளுகிறேன் . உங்கள் கருத்துப்படி பார்த்தால் நம்முடைய முதிர்ச்சியை அடிச்சுக்க உலகிலேயே ஆள் இல்லைப்போல  

நான் சொன்னது கலியாண வயதில இருக்கிற ஆண்கள் பற்றி. கலியாண வயது கடந்த ஆண்கள் பற்றி அல்ல.😂😂

5 hours ago, சாமானியன் said:

சில அவதானிப்புகள்….

1) படி படி என்று சொன்ன நேரம் , பிடி பிடி என்று சொல்லியிருக்க வேண்டும் - 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்புகள்..
2) அவுஸ்திரேலியாவில்  படித்து  சராசரி உத்தியோகங்களிலாவது இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் சீதனம் என்பது அருகி விட்டது போல் தெரிகிறது.
3) பிள்ளைகள் , துணையை தெரிவு செய்வதில் இருந்து கல்யாண வீடு ஏற்பாடுகள் வரை ,தங்களின் முடிவுகள் தான் இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் , செலவுகள் உட்பட.
4) பேசிச் செய்யும் திருமணங்களை தற்போதைய இளவல்கள் விரும்புகிறார்கள் இல்லை.  பேசிச் செய்வது , தங்களில் எதோ குறைபாடு இருக்கின்றது  என்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது என்பது அவர்களின் கருத்து ...

ஐரோப்பாவிலும் சீதனம் என்று பலர் வாங்குவதில்லைத்தான். ஆனால் எளிமையான திருமணம் என்றால் தப்பும் பெண்ணின் பெற்றோர் ஆடம்பரத் திருமணங்களில் எல்லாச் செலவுகளும் தம் தலையில் கட்டப்படுவதையும் சில அடக்குமுறையான செயல்களையும் கண்டுகொள்வதில்லை. அல்லது வெட்கத்தில் வெளியே சொல்வதில். மணமகனுக்குத் தெரியாமலே சகுனி வேலை பார்க்கும் எத்தனையோ பெற்றோர் இருக்கினம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்காள்,

Social skills என்று ஒரு விடயம் இருக்கு பாருங்கோ. நாம் வாழும் சூழலில் எப்படி இசைவாக்கம் அடைவது, எம் தனிமனித தனித்துவத்தை எப்படி பேணுவது. இப்படி பல சமூக தகமைகள் இதில் அடங்கும்.

இதை பள்ளிகூடத்தில் சொல்லித்தராயினம். பெற்றோர்தான் இதை அமைத்துக் கொடுக்க வேண்டும். 

இவற்றில் ஒன்றுதான் - உரிய வயதில், தனக்கான துணையை அமைத்துக்கொள்ளும் இயலுமையும். நாயும், நரியும் கூட இதை செய்யும் போது, 30 வயதுதாண்டி விட்ட மகனோ, மகளோ வாழ்கை துணையின்றி நிற்கிறார்கள் என்றால், ஒன்றில் தனித்து வாழுவது அவர்கள் இஸ்டமாக இருக்க வேண்டும் அல்லது, பெற்றோர்கள் மிகவும் அடிப்படையான ஒரு சோசல் ஸ்கில்லை இந்த பிள்ளைக்கு அறிமுகப் படுத்தவில்லை என்றே அர்த்தம்.

 இதில் சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2020 at 6:00 PM, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டிலும் சீதனம் இருக்கோ?

நானும் இரண்டு பிள்ளைகளுக்கு கட்டி வைத்துவிட்டேன்.இன்னமும் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை.

அண்மையில் கனடாவில் இருக்கும் எனது நண்பனின் மைத்துனரின் திருமணம் சீர்தனப் பிரச்சனையால் தடைப்பட்டது.

நண்பர் சீர்தனம் ஏதுமின்றி இலங்கையில் திருமணம் முடித்து பின்னர் மணமகளின் குடும்பத்தை கனடாவிற்கு எடுத்திருந்தார். 

நண்பரின் வீட்டில் முழுக் குடும்பமும்  எதுவித செலவுகளுமின்றி இருந்து, படித்து முடித்த பின்னர் பெற்றோர் பேசிய பெண்ணை பதிவுத் திருமணம் செய்தபின்னர் சீர்தனமாக வீடு தரவில்லையென்று சமயாசாரத் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இறுதியாக வீடு கொடுத்தபின்னரே திருமணம் ணடைபெற்றது.

இத்தனைக்கும் இருவீட்டாரும் முற்போக்கு பேசும் (?) கிறீத்துவ குழுமத்தைச் சேர்ந்தவர்கள். 

😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கமாக சிந்தித்து பார்த்தால் - எனது படுக்கைத் துணையை எனது தந்தையும் தாயும் பேசி ஒப்பந்தம் செய்வார்கள் என்பதை விட ஒரு கீழ்தரமான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.

தமிழனை கட்டு, அதுவும் இலங்கை தமிழன், சாதி மாறி கட்டாதே, மாவட்டம் தாண்டி போகாதே, அந்த குறிச்சிக்கும் எமக்கும் சரிவராது, அவர்கள் பட்டிக்காடு, இவர்கள் தீவுப்பகுதி, தேப்பன் குடிகாரனாம், ஒன்றை விட்ட குஞ்சம்மா வேற சாதில கட்டினவாம், இப்படி பிள்ளைகளின் எல்லா வழிகளையும் அடைத்து விட்டால்- பாவம் அதுகளும் என்ன செய்யும்.

30 வயசுவரை இவர்கள் எனக்கு ஒரு வழியை காட்டுவார்கள் என நம்பி, ஏமாந்து கடைசியாக படபஸ்சில் ஏறுவது போல “மிச்ச சொச்சம், சொச்ச மிச்சத்தை” கட்டும் போது?

இப்படியான வாழ்கை கசப்பதில் எந்த வியப்பும் இல்லை.

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோசான்நீங்கள் காதலிச்சோ செய்தனீங்கள்? ஏனென்டால் எல்லாராலையும் காதலிக்க ஏலாது பாருங்கோ என்னைபோலை சில பேருக்கு பேசி செய்தபடியால் தான் கல்யாணமேநடந்தது

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாதவூரான் said:

கோசான்நீங்கள் காதலிச்சோ செய்தனீங்கள்? ஏனென்டால் எல்லாராலையும் காதலிக்க ஏலாது பாருங்கோ என்னைபோலை சில பேருக்கு பேசி செய்தபடியால் தான் கல்யாணமேநடந்தது

🤣 ஓம் தீராக்காதல்🤣
 
ஆனால் நீங்களும் வேறுபட்ட ஒரு சூழலுக்குள் வளர்திருந்தால் - உங்களுக்கான துணையை தேடும் நிர்பந்தம் உங்களையும் களத்தில் இறக்கி இருக்கும். என்ன இந்த கட்டமைப்பில் இருப்பதால் - எப்படியும் அம்மா ஆக்கள் கட்டி வைப்பினம்தானே என்று விட்டுவிட்டீர்கள்.

உங்களை போல வெள்ளை/ ஆபிரிக்க இனத்தில் ஏன் ஆட்கள் இல்லை? அங்கே மிக சொற்பமானவ ஆக்களே துணையை தேடும் இயலுமை இன்றி இருக்கிறார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

8 அளவு போடுறது 12 ... 18   வயதுப் பிள்ளையள் தான் போடுறது. அந்த அளவு ஆடை அணியும் பிள்ளைகளை இளம் பிள்ளைகள் என்பர். அவர்கள் அந்த வயதுடைய ஆண்களை அல்லது ஒரு 4,5 அதிக வயதுடைய இளைஞர்களை காதலிக்கவோ திருமணம் செய்யவோ தான் விரும்புவார்களேயன்றி 28 கடந்த ஆணை அல்ல. ஆனால் ஆண்கள்  தம் வயதை பற்றிக் கவலை கொள்ளாது தம் பெண் வயதை ஒத்தவர்களை திருமணம் செய்ய ஆசை கொள்வது.  இதுதான் ஆண்புத்தி. 😃

கீழே உள்ள படத்தில் size 8 ஐப் பார்த்தால் 12 - 18 வயது மாதிரியாக இருக்கு!

நல்லா மட்டன்கறி சாப்பிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் வளர்ந்தால் கலியாண வயதில் 12-16 சைஸில் இருப்பார்கள் என்பது உண்மைதான்😬

asos.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கீழே உள்ள படத்தில் size 8 ஐப் பார்த்தால் 12 - 18 வயது மாதிரியாக இருக்கு!

நல்லா மட்டன்கறி சாப்பிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் வளர்ந்தால் கலியாண வயதில் 12-16 சைஸில் இருப்பார்கள் என்பது உண்மைதான்😬

asos.jpg

ஜி,

சைஸ் 8 எல்லாம் வெறும் எலும்பு ஜி. சூப் வைக்க ஓகே 😀. அல்லது புளூமியா மாரி வருத்த கேஸ் அல்லது மேலே காட்டப்படும் மாடல் அழகிகள்தான் 25 வயசுக்கு மேல் சைஸ் 8 இல் இருப்பார்கள்.

சைஸ் 8-10 க்கு பெண்கள் இருக்க வேண்டும் என்பது, நுகர்வோர் கலாச்சாரத்தால் மேற்குலகில் பரப்பட்ட ஒரு மாயை. இதை unrealistic expectations on women என இப்போ மேற்குலகே கைவிட தயாராகி வருகிறது.

லலிதா, பத்மினி, நதியா, குஸ்பு, மீனா, நயந்தாரா என்று நம்ம காதல் தெய்வங்கள் எல்லாம் எப்பவும் 12-14 தானே ஜி.

சிம்ரன் ஸ்ரேயா விதி விலக்கு.

 • Like 2
Link to post
Share on other sites
4 hours ago, goshan_che said:

மக்காள்,

Social skills என்று ஒரு விடயம் இருக்கு பாருங்கோ. நாம் வாழும் சூழலில் எப்படி இசைவாக்கம் அடைவது, எம் தனிமனித தனித்துவத்தை எப்படி பேணுவது. இப்படி பல சமூக தகமைகள் இதில் அடங்கும்.

இதை பள்ளிகூடத்தில் சொல்லித்தராயினம். பெற்றோர்தான் இதை அமைத்துக் கொடுக்க வேண்டும். 

இவற்றில் ஒன்றுதான் - உரிய வயதில், தனக்கான துணையை அமைத்துக்கொள்ளும் இயலுமையும். நாயும், நரியும் கூட இதை செய்யும் போது, 30 வயதுதாண்டி விட்ட மகனோ, மகளோ வாழ்கை துணையின்றி நிற்கிறார்கள் என்றால், ஒன்றில் தனித்து வாழுவது அவர்கள் இஸ்டமாக இருக்க வேண்டும் அல்லது, பெற்றோர்கள் மிகவும் அடிப்படையான ஒரு சோசல் ஸ்கில்லை இந்த பிள்ளைக்கு அறிமுகப் படுத்தவில்லை என்றே அர்த்தம்.

 இதில் சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த கூட்டம் மடிந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறும்.
ஆணாக இருந்துகொண்டு நீங்கள் இதனை இலகுவாகச் சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை என்னதான் பல விடயங்களில் மாற்றமடைந்துவிட்டாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மனப் பதைப்புடன்தான் வாழவேண்டிய நிலை. அதற்கான காரணம் பிள்ளைமேல் நம்பிக்கை இல்லை என்பதல்ல. ஆபத்தான புறக்காரணிகளைக் கொண்டு அச்சுறுத்தியபடிதான் வெளிநாட்டு வாழ்வு.  ஒரு ஆண் தனித்து வாழ்வதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் பெண் பிள்ளை தனியாகத் திருமணமாகாது வாழ முடியுமென்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சொன்னது கலியாண வயதில இருக்கிற ஆண்கள் பற்றி. கலியாண வயது கடந்த ஆண்கள் பற்றி அல்ல.

அக்கோய் .. கலியாண வயதிற்கு முன்னும் இதே கதைதான் ..சரி ஒருபேச்சுக்கு கலியாணத்திற்கு முன் வராத முதிர்ச்சி எப்புடி கலியாணத்திற்கு பிறகு வந்தது...பெற்றோரில் தங்கியிருந்தவன் எப்புடி தனியே இயங்கக்கூடியவனாக மாறினான் ஆக உங்கள் முதிர்ச்சி அளவு கோலில் எங்கேயோ கோளாறு இருக்கு  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஒரு பக்கமாக சிந்தித்து பார்த்தால் - எனது படுக்கைத் துணையை எனது தந்தையும் தாயும் பேசி ஒப்பந்தம் செய்வார்கள் என்பதை விட ஒரு கீழ்தரமான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.

தமிழனை கட்டு, அதுவும் இலங்கை தமிழன், சாதி மாறி கட்டாதே, மாவட்டம் தாண்டி போகாதே, அந்த குறிச்சிக்கும் எமக்கும் சரிவராது, அவர்கள் பட்டிக்காடு, இவர்கள் தீவுப்பகுதி, தேப்பன் குடிகாரனாம், ஒன்றை விட்ட குஞ்சம்மா வேற சாதில கட்டினவாம், இப்படி பிள்ளைகளின் எல்லா வழிகளையும் அடைத்து விட்டால்- பாவம் அதுகளும் என்ன செய்யும்.

30 வயசுவரை இவர்கள் எனக்கு ஒரு வழியை காட்டுவார்கள் என நம்பி, ஏமாந்து கடைசியாக படபஸ்சில் ஏறுவது போல “மிச்ச சொச்சம், சொச்ச மிச்சத்தை” கட்டும் போது?

இப்படியான வாழ்கை கசப்பதில் எந்த வியப்பும் இல்லை.

என்ர  பொடி  எனக்குச்சொன்னது

தமிழாக்கள் சொல்வதை கடைப்பிடித்து திருமணம்  செய்வதென்றால்

99வீதம்  சாத்தியமில்லை

Link to post
Share on other sites

இந்த காலத்து பிள்ளைகள் பேசி செய்யும் கல்யாணமாக இருந்தாலும், ஒருவரோடு ,ஒருவர் கதைத்து,பழகிய பின்னர் திருமணம் செய்ய விரும்புகின்றனர்...அதில் பிழை ஒன்றும் இல்லை 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிழிஞ்சுது போ .... பாருங்கப்பா அக்காவின் ஆண்களின் முதிர்ச்சியை எடை போடும் கருவியை ....
சுமே அக்கோய் ...இங்கே சிங்கையில் தனியாக தான் சீவிக்கிறேன் , எனது உடையை வீட்டில் இருக்கும் சலவை யந்திரம் கழுவிப்போடுகிறது , அப்பார்ட்மென்டில் சமைக்க அனுமதியில்லை , அதுதான் Hawker ஸ்டால் தெருவுக்கு தெரு இருக்கிறதே விதம் விதமாக வராயிட்டி வராயிட்டியாக (பெற்றோர் ,மனிசி கூட உப்பிடி சமைத்து தந்தது இல்லை ) உள்ளே தள்ளுகிறேன் . உங்கள் கருத்துப்படி பார்த்தால் நம்முடைய முதிர்ச்சியை அடிச்சுக்க உலகிலேயே ஆள் இல்லைப்போல  

கொஞ்ச காலத்தில் கடை சாப்பாட்டை சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த பிறகு தெரியும் அருமை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த கூட்டம் மடிந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறும்.
ஆணாக இருந்துகொண்டு நீங்கள் இதனை இலகுவாகச் சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை என்னதான் பல விடயங்களில் மாற்றமடைந்துவிட்டாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மனப் பதைப்புடன்தான் வாழவேண்டிய நிலை. அதற்கான காரணம் பிள்ளைமேல் நம்பிக்கை இல்லை என்பதல்ல. ஆபத்தான புறக்காரணிகளைக் கொண்டு அச்சுறுத்தியபடிதான் வெளிநாட்டு வாழ்வு.  ஒரு ஆண் தனித்து வாழ்வதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் பெண் பிள்ளை தனியாகத் திருமணமாகாது வாழ முடியுமென்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

இது அந்த பெற்றோர்களின் உடல் புலம்பெயர்ந்துள்ளதே தவிர மனமும், சமூகப் பார்வையும் இன்னும் ஊரிலேயே இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது.

உண்மையை சொல்லப்போனால் கொழும்பில், மட்டக்ளப்பில், யாழில் இப்போ இருக்கும் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர் பலர் தாம் 2020 இருக்கிறோம் என்பதை உணர்ந்து, காலத்துக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.

ஆனால் லண்டனில், கனடாவில், இருக்கும் பெற்றோர் சிலரே இன்னும் 1960ம் ஆண்டில் நின்றபடி “நாம் பெண்ணை பெற்றோர்” என பதைபதைக்கிறார்கள்.

ஏன் இந்த பதைபதைப்பு? ஊருக்கு பயந்துதானே? ஊர் என்ன சொல்லும். சாதி சனம் என்ன சொல்லும் எனும் பயம்தானே?

ஊராவது மண்ணாவது, துணை நல்லவனா? உனக்கு (மனப்) பொருத்தமா? பிடித்திருக்கிறதா? அப்போ கல்யாணம் செய்யுங்கள் என சொல்லும் தைரியம் இருந்தால் - எந்த பதைபதைபுக்கும் காரணமில்லை.

ஊருக்கு பயந்து, தமிழ், வெள்ளாள, படித்த, உயரமான, பசையுள்ள, நல்ல தொழில் பார்க்கும், கெத்தான மாப்பிள்ளைதான் வேணும், என்று நினைத்தால் மட்டுமே பதை பதைப்பு ஏற்படும்.

 • Like 6
 • Thanks 1
Link to post
Share on other sites
6 hours ago, goshan_che said:

ஒரு பக்கமாக சிந்தித்து பார்த்தால் - எனது படுக்கைத் துணையை எனது தந்தையும் தாயும் பேசி ஒப்பந்தம் செய்வார்கள் என்பதை விட ஒரு கீழ்தரமான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.

யோவ் கோசான்,

அடி மடியில கை வைக்காதீர்கள்! நானும் பேசித்தான் கலியாணம் கட்டியது. அஞ்சு ஆறு காதல் சரிவராமல் போக (அதில் ஒன்று சிங்களப் பெண், இன்னொன்று ஏற்கனவே எங்கேஜ்மண்ட் முடிஞ்ச பெண்) கடைசியில எனக்கும் காதலுக்கும் சரிப்பட்டு  வராது என்று அம்மாவின் கால்களில் விழுந்து கடைசியில் அவர் தயவால் ஒன்று கிடைத்து வாழ்க்கையும் சந்தோசமாக போகுது,,,

 • Like 1
Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

ஆனால் லண்டனில், கனடாவில், இருக்கும் பெற்றோர் சிலரே இன்னும் 1960ம் ஆண்டில் நின்றபடி “நாம் பெண்ணை பெற்றோர்” என பதைபதைக்கிறார்கள்.

ஏன் இந்த பதைபதைப்பு? ஊருக்கு பயந்துதானே? ஊர் என்ன சொல்லும். சாதி சனம் என்ன சொல்லும்

ஏற்கனவே ஒரு முறை எழுதியிருந்தனான். எனக்கு தெரிந்த ஒரு பெண் 100 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தான் இன்னும் வாழ்கின்றார். தன் ஆண் பிள்ளைகளில் காதலித்த பெண்களை  சாதி சொல்லி, மதம் சொல்லி பிரித்து வைக்க, ஈற்றில் அவர் இன்னொரு ஆணைக் கூட்டிக் கொண்டு திரிகின்றார். லிவிங் டு கெதர் (living together) முறைப்படி அவனும் அவனும் வாழ்கின்றனர்.

என் பிள்ளைகளுக்கு இப்பவே கூறி வளர்க்கின்றேன். "உங்களுக்கு என்னால் படிப்பிக்க மட்டுமே முடியும்... அந்த அறிவை வைச்சுக் கொண்டு நீங்களே உங்கள் துணையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதில ஒரு முஸ்லிமை கட்டினால் நான் கொஞ்சம் கவலைப்படுவன், மற்றப்படி யார் என்றாலும் எமக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது". இதைக் கேட்கும் என் மகன், "அப்பா நீங்கள் ஒரு ரேசிஸ்ட் (Racist)" என்று சொல்லி விட்டு நகர்வான்.

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.