Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நாங்க ஒன்னும் புரோக்கரை நாடவும் இல்லை.. அவிங்களா.. ஊரில அறியப்பட்டவங்க வாயிலா வந்தாய்ங்க.. நம்மிட வாயிடம் வாங்கிக் கட்டினாய்ங்க.. போனாய்ங்க. நம்ம வாயி.. சும்மா வாயி இல்ல. அன்புக்கு அன்பு.. வன்புக்கு வன்பு. 

உங்கள் வாய் பற்றி உலகத்துக்கே தெரியுமே அநியாய வாய் என்று 🤪

1 hour ago, MEERA said:

சும்மா யாரும் எதையும் எழுதலாம்,

என்னைப் பொறுத்த வரை, சந்தர்ப்பமும் வசதியும் அமைந்தால் தமிழ் பெற்றோர் தமது பிள்ளையை ஹாவாட்டிற்கு கூட அனுப்புவார்கள்....

பிள்ளைகளும் போவார்கள்

இதைத்தான் சாதாரண மனிதர்கள் வந்து  செய்வது. ஆனால் இடம் கிடைக்காதவர்களுக்கு அது புளிக்கும் பழம் தான். நெடுக்ஸ் சொல்வது போல.

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நல்ல யூனியில் படித்தவர்களுக்கு இவர்களிலும் அதிக சம்பளம் கொடுப்பார்களா இல்லையா என்று எனக்குத்தெரியாது. ஆனால் சாதாரண யூனியில் கற்றவரும் பெயர்போன யூனியில் கற்றவரும் ஒரு இடத்தில் வேலைக்கு முயலும்போது நல்ல யூனியில் படித்தவருக்குத்தான் அவ்வேலை கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிக அதிகம். மற்றும் ஒரு உயர் பதவிகள் தலைமைப் பொறுப்புகள் எல்லாம் கூட அவர்களைத்ட்தான் தெரிவு செய்வார்கள். அது சாதாரணமாகவே உலக நியதி.

இந்த கருத்துடன் ஒத்துப்போகின்றேன். 90களில் நான் பாடசலைக்கு முடித்து விட்டு வேலை தேடியபோது பல முன்னனி கம்பனிகளுக்கு என்னை நேர்முக தேர்வுக்கு அழைப்பார்கள். என்னுடன் இத்தேர்வின்று வந்தவர்கள் பலர் யாழ் இந்து, வேம்படி மேலும் பல சிங்கள் பின்தங்கிய ஊர்களில் இருந்து 8D களும் 4A களும் எடுத்து இருப்பர்கள். ஆனால் என்னவோ குறித்த வேலை பொதுவாக கொழும்பில் உள்ள பிரபல கல்லூரிகளான ரோயால், தோமயன், ஜோசப் அல்லது பெண்களாயின் ஹோலி ஃபெமிலி, சென்.ப்ரிட்ஜெட், பிஷப் போன்றவற்றில் படித்தவர்களயே தெரிவு செய்வார்கள். 

இவ்வளவிற்கும் இதில் படித்தவர்களுக்கு பெரியளவு பெறுபேறுகள் இருக்காது.ஆங்கிலம் நன்கு கதைப்பார்கள், நல்ல ஒரு நெட்நொர்க் இருக்கும். எனவே இவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். 

எனவே இதேபோல் உலகின் முன்னனி பல்கலை கழ‌கத்தில் படித்தவர்களுக்கு எங்குமே வாய்ப்புகள் அதிகம் மறுக்க முடியாது. ஆனால் இதனுடைய அர்த்தம்  மற்ற பல்கலை கழகங்கள் மோசமனதல்ல மாறாக‌ அதில் இருந்துவரும் பட்டதரிகளும் தரமானவர்களே.

என்னுடய மகளை நான் சென். பிரிர்ஜட்டிலேயே சேர்க்க விரும்புகின்றேன். நிச்சயமா வெட்டிப் பந்தாவுக்காக அல்ல. டொடேசன் மட்டும 10, 12 இலட்சத்தை தாண்டும். எனக்கு கிடக்காத வாய்ப்பு என் பிள்ளைக்கவது கிடைக்கட்டுமென்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

உங்களிடம் பணமிருந்தால், போதிய வசதி இருந்தால் நல்லதொரு பள்ளியில் பிள்ளை கற்கவேண்டுமென்று தான் எண்ணுவார்கள். அதில் எத்தவறும் இல்லை. நானும் அதைக் கேவலமாக எண்ணவில்லை. ஆனால் அதில் கேம்பிரிச்சில் படித்த பிள்ளை பந்தா காட்டுது என்று மிகவும் இளகாரமாகக் கதைத்ததற்ற்க்காகவும் அந்த மனிதர் என்னிடம் கதைத்த தோரணையும் இன்னொருவரைப் பற்றி என்னிடம் கதைக்கவேண்டிய அவசியமில்லையே என்னும் கோபத்திலும் எழுதியதுதான். அதில் இந்தத் தவறும் இல்லை.
எமது பெற்றோர் பணத்தைப் பெரிதுபண்ணாது கல்விக்குமுதலிடம் கொடுப்பது தவறு அல்ல. அந்தப் போட்டிமனப்பாங்கும் இல்லாவிடில் தமிழர்களும் சில இனங்கள்போல் புலம்பெயர் நாடுகளில் பின்தங்கிய நிலையிலேயே வாழவேண்டி இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளா நானும் சறே தான். ஆனால் அதுக்காக கேம்ப்ரிச்சிலை படிச்சாக்கள் உயர்ந்த சாதி அவையள் எங்களைக் கட்ட மாட்டினம் எண்டதெல்லாம் சரியான அதிகப்பிரசங்கிதனம் கண்டியளோ. கோசான் சாதியைப்பற்றி வாய் கிழிய கத்துறியள் இதுக்கும் சாதி பாக்கிறதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கேம்ப்ரிச்சிலையோ ஒக்ஸ்போட்டிலையோ படிச்ச்சாக்களுக்கு இலகுவாக வேலை கிடைக்கலாம், இலகுவாக பதவி உயர்வு கிடைக்கலாம் அதுக்காக அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் இல்லை.நான் கேம்ப்ரிச்சிலை படிக்கிறன் என்று மற்றவர்களுக்கு எடுப்பு காட்டவேண்டிய அவசியமில்லை. இது முன்பு யாழ் இந்து வேம்படியில் படிப்பவர்களும் செய்வது தான். ஆனால் எல்லாரும் மனதில் வைக்கவேண்டிய விடயம் உயர்தர பல்கலைக்கழகத்திலோ உயர்தர பாடசாலையிலோ படித்தால் அவர்களுக்கு எல்லாம் தங்கத்திலை செய்தது என்டில்லை. அவர்கள் பொருளாதார ரீதியில்நல்ல நிலையில் இருக்கலாம் அல்லது பல சாதனைகளுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எல்லாரும் மனிசர் தான். அதுக்காகநீ சரேயிலை படிச்சிட்டு கேம்ப்ரிச்சிலை படிச்ச என்னோடை சமனாக கதைக்காதை என்று சொல்வது என்பது சாதித்தடிப்பை போலவே மோசமான ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 10:59 PM, goshan_che said:

இங்கே யாரும் அரச பள்ளிகளில் படிப்பது குறைவு என்றோ, அல்லது எனைய யூனிகளில் படிப்பது குறைவு என்றோ எழுதவில்லை.

ஆனால் வளங்கள் மட்டுப்பட்ட உலகில், அதிக வளங்கள் இருக்கும் பள்ளிகளை, யூனிகளை தேடிப்போவதில் ஒரு தவறும் இல்லை.

இதில் எந்த வெட்டிப் பெருமையும் இல்லை. 

இதை வெட்டி பந்தா என்பவர்கள் தம்மை விட, தம் இனத்தில் இருந்து யாரும் மேலே போய்விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம் உள்ளவர்களாகவே இருக்க முடியும்.

#தமிழ் நண்டு

எல்லாருக்கும் கேம்பிரிட்ஜ் சரிவராது, உங்கள் பிண்ணனி உங்களை கீழே அமிழ்தலாம். இதை மீறி வர முடியுமா பாருங்கள், இல்லை என்றால் வேறு ஒரு தெரிவை எடுங்கள் ஆனால் தமிழ் நண்டுகளின் கதையை கேட்டு முயலாமலே விட்டு விடாதீர்கள்.

எனது அனுபவம்  ஒன்றயும் எழுதலாம் என  நினைக்கின்றேன்

(ஏற்கனவே  மகன் பாசானதும் ஒரு  கதையாக  இங்கே எழுதியதாக  ஞாபகம்)

என்ர  மூத்தவன் படித்தது 

Logo du marchand
Efrei Paris
Source : Efrei Paris 
"Efrei Paris est une école d’ingénieurs généraliste dans les domaines de l’informatique et des technologies du numérique. Habilitée par la Cti – Commision des Titres d’ingénieurs – depuis 1957, Efrei Paris est classée dans le top des palmarès des grandes écoles d’ingénieurs pour son ouverture à l’international, son image auprès des entreprises, sa pédagogie axée sur les softskills (compétences humaines) et l’entrepreneuriat."
 
இது எனது  வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் தான்  உள்ளது.   இங்கே அவன்  தேர்வுக்கான போன போது ஏன் இந்தப்பாடசாலையை தேர்வு  செய்கிறாய்  எனக்கேட்டதற்கு  எனது  மகனின் பதில். பிறந்ததிலிருந்து ஒவ்வொரு  நாளும் இதன் முன்னால் செல்லும் போதெல்லாம் இங்கே  நான்  ஒரு  நாள் படிப்பேன்  என்பது  எனது  கனவு என்பது.
 
வருடத்துக்கு 12 ஆயிரம்  யூரோக்கள் Master 2 வரை 5 வருடம் படித்தான். 60 ஆயிரம்  யூரோக்கள் செலவு.  
ஒரு  நாள்  கேட்டேன் சாதாரணமாக யூனிக்கு  சென்று இலவசமாக  படித்து பெறும் பட்டத்துக்கும் 60 ஆயிரம்  யூரோக்களை செலவு  செய்து  படித்து  எடுக்கும் பட்டத்துக்கும் நீ வெலை  தேடும் போது வித்தியாசம் இருந்ததா?  இருக்கா ??  என்று.
 
அவன்  சொன்னது  ஒப்பிடவே  முடியாத  அளவுக்கு  மதிப்பிருக்கப்பா  என்பது  தான்.
எனவே அது  எனக்கு  திருப்தி  தரும் செலவு  தான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

கொழும்பான்,

உங்கள் அனுபவத்தின் எதிர் அனுபவம் என்னுடையது. ஆனால் அந்த வாய்ப்பு என் தகப்பனாரின் விடாமுயற்சியாலும் என் அதிஸ்டத்தாலும் மட்டுமே அமைந்தது.

கொஞ்சம் கரணம் தப்பி இருந்தாலும் அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியிராது. அந்த வாய்ப்பை மட்டும் நான் அடைந்திராவிட்டால் என்னில் இப்போ நான் காணும் வளர்சியில் 60% கூட எய்தியிருக்க மாட்டேன். 

எனவே இந்த கோட்டின் இரெண்டு பகுதியில் நின்றாலும் இருக்கும் சாதக, பாதகங்களை என்னால் தெளிவாக தரிசிக்க முடிகிறது.

கொழும்பு லேடீஸ் கொலீஜ், மெதடிஸ்ட், பிஷப்ஸ்சும், இந்த வகையில் நல்லம். ஆனால் படிப்பு என்று பார்த்தால் சைவ மங்கையர் கழகமும், இராமநாதனும்தான். 

உங்கள் முயற்சி கைகூட வாழ்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களிடம் பணமிருந்தால், போதிய வசதி இருந்தால் நல்லதொரு பள்ளியில் பிள்ளை கற்கவேண்டுமென்று தான் எண்ணுவார்கள். அதில் எத்தவறும் இல்லை. நானும் அதைக் கேவலமாக எண்ணவில்லை. ஆனால் அதில் கேம்பிரிச்சில் படித்த பிள்ளை பந்தா காட்டுது என்று மிகவும் இளகாரமாகக் கதைத்ததற்ற்க்காகவும் அந்த மனிதர் என்னிடம் கதைத்த தோரணையும் இன்னொருவரைப் பற்றி என்னிடம் கதைக்கவேண்டிய அவசியமில்லையே என்னும் கோபத்திலும் எழுதியதுதான். அதில் இந்தத் தவறும் இல்லை.
எமது பெற்றோர் பணத்தைப் பெரிதுபண்ணாது கல்விக்குமுதலிடம் கொடுப்பது தவறு அல்ல. அந்தப் போட்டிமனப்பாங்கும் இல்லாவிடில் தமிழர்களும் சில இனங்கள்போல் புலம்பெயர் நாடுகளில் பின்தங்கிய நிலையிலேயே வாழவேண்டி இருந்திருக்கும்.

1.பணமோ, பொருளோ, உடல் வலிமையோ, அழகோ இதில்   எதை வைத்தும், இருப்பவன் இல்லாதவனுக்கு பெருமை காட்டுவது சின்னத்தனமே. அதிலும் படிப்பு, அறிவை, பண்பை கூட்ட வேண்டிய சாதனம், அந்த படிப்பை வைத்தே கலர் காட்டுவது என்பதும். கேம்பிரிஜ் போன பிள்ளைக்கு சறேயில் மாப்பிள்ளை வேண்டாம் என்பதும் பைத்தியக்கார மனோநிலை. ஆனால் இதை வைத்தே, கிரெமர் ஸ்கூலை விட ஸ்டேட் ஸ்கூல் நல்லம் என்பதோ, உலகில் 1ம் தரத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டை விட 500-600 க்குள் வரும் ஓபன் யூனிவர்சிட்டி நல்லம் என்பதோ, அதை வெண்ட பைதியக்காரத்தனம். 

2.போட்டி மனப்பான்மை என்பது தவறான பதம். இன்னொருவரை பார்த்து போட்டி போட வேண்டியதில்லை. நம் நிலையை உயர்த்த வேண்டும் என்ற சுயமுன்னேற்ற மனப்பாங்கே தேவை. என் நண்பனின் மகன் கிரமர் ஸ்கூல் போய் நல்ல நிலைக்கு வந்துள்ளான், சந்தோசம், அதே வாய்ப்பை என் மகனுக்கும் கொடுக்க வேண்டும் என விழைவது போட்டியல்ல.   யூகேயில் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானி/சோமாலி/பங்களதேசி களுக்கும் இடையே கடந்த 40 வருடத்தில் ஏற்பட்டு உள்ள  social mobility பார்த்தேலே தெரியும் - சுயமுன்னேற்ற மனப்பாங்கு, சமூகங்களை எப்படி உயர்த்துகிறது என்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

அட பாவியளா நானும் சறே தான். ஆனால் அதுக்காக கேம்ப்ரிச்சிலை படிச்சாக்கள் உயர்ந்த சாதி அவையள் எங்களைக் கட்ட மாட்டினம் எண்டதெல்லாம் சரியான அதிகப்பிரசங்கிதனம் கண்டியளோ. கோசான் சாதியைப்பற்றி வாய் கிழிய கத்துறியள் இதுக்கும் சாதி பாக்கிறதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கேம்ப்ரிச்சிலையோ ஒக்ஸ்போட்டிலையோ படிச்ச்சாக்களுக்கு இலகுவாக வேலை கிடைக்கலாம், இலகுவாக பதவி உயர்வு கிடைக்கலாம் அதுக்காக அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் இல்லை.நான் கேம்ப்ரிச்சிலை படிக்கிறன் என்று மற்றவர்களுக்கு எடுப்பு காட்டவேண்டிய அவசியமில்லை. இது முன்பு யாழ் இந்து வேம்படியில் படிப்பவர்களும் செய்வது தான். ஆனால் எல்லாரும் மனதில் வைக்கவேண்டிய விடயம் உயர்தர பல்கலைக்கழகத்திலோ உயர்தர பாடசாலையிலோ படித்தால் அவர்களுக்கு எல்லாம் தங்கத்திலை செய்தது என்டில்லை. அவர்கள் பொருளாதார ரீதியில்நல்ல நிலையில் இருக்கலாம் அல்லது பல சாதனைகளுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எல்லாரும் மனிசர் தான். அதுக்காகநீ சரேயிலை படிச்சிட்டு கேம்ப்ரிச்சிலை படிச்ச என்னோடை சமனாக கதைக்காதை என்று சொல்வது என்பது சாதித்தடிப்பை போலவே மோசமான ஒன்று.

வாதவூரான்,

நீங்கள் நான் எழுதியவற்றை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறீர்களா? அல்லது சுமே எழுதியவற்றையும் என் தலையில் கட்டுகிறீர்களா?

எனது முதல் பதிவில் இருந்து ஒரு பதிவில்தானும் நான் கேம்பிரிஜ்ஜில் படித்த ஆள், சறேயில் படித்த ஆளை கட்டக்கூடாது என்ற தொனி பட எழுதவே இல்லை?

BMW ஓடுகிறேன் என சில மொக்கு கூட்டம் கலர் காட்டுது என்பதற்காக BMW கார் நல்லமில்லை/ஓடக்கூடாது என்றாகாது என்ற என் பதிவை நீங்கள் பார்க்கவில்லையா?

எனக்கென்னமோ “தாழ்த்தப்பட்ட சாதி” விடயத்தில் நான் சொன்ன கருத்தின் காரம், இந்த திரியில் நான் சொல்லாதவற்றையும் சொல்லியதாக உங்களை காண வைப்பதாகவே படுகிறது😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனது அனுபவம்  ஒன்றயும் எழுதலாம் என  நினைக்கின்றேன்

(ஏற்கனவே  மகன் பாசானதும் ஒரு  கதையாக  இங்கே எழுதியதாக  ஞாபகம்)

என்ர  மூத்தவன் படித்தது 

Logo du marchand
Efrei Paris
Source : Efrei Paris 
"Efrei Paris est une école d’ingénieurs généraliste dans les domaines de l’informatique et des technologies du numérique. Habilitée par la Cti – Commision des Titres d’ingénieurs – depuis 1957, Efrei Paris est classée dans le top des palmarès des grandes écoles d’ingénieurs pour son ouverture à l’international, son image auprès des entreprises, sa pédagogie axée sur les softskills (compétences humaines) et l’entrepreneuriat."
 
இது எனது  வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் தான்  உள்ளது.   இங்கே அவன்  தேர்வுக்கான போன போது ஏன் இந்தப்பாடசாலையை தேர்வு  செய்கிறாய்  எனக்கேட்டதற்கு  எனது  மகனின் பதில். பிறந்ததிலிருந்து ஒவ்வொரு  நாளும் இதன் முன்னால் செல்லும் போதெல்லாம் இங்கே  நான்  ஒரு  நாள் படிப்பேன்  என்பது  எனது  கனவு என்பது.
 
வருடத்துக்கு 12 ஆயிரம்  யூரோக்கள் Master 2 வரை 5 வருடம் படித்தான். 60 ஆயிரம்  யூரோக்கள் செலவு.  
ஒரு  நாள்  கேட்டேன் சாதாரணமாக யூனிக்கு  சென்று இலவசமாக  படித்து பெறும் பட்டத்துக்கும் 60 ஆயிரம்  யூரோக்களை செலவு  செய்து  படித்து  எடுக்கும் பட்டத்துக்கும் நீ வெலை  தேடும் போது வித்தியாசம் இருந்ததா?  இருக்கா ??  என்று.
 
அவன்  சொன்னது  ஒப்பிடவே  முடியாத  அளவுக்கு  மதிப்பிருக்கப்பா  என்பது  தான்.
எனவே அது  எனக்கு  திருப்தி  தரும் செலவு  தான்.

என் தந்தையார் இப்போ உயிருடன் இல்லை,

அவர் எனக்கு இரெண்டு குறள்களை மீள மீள சொல்லுவார்.

ஒன்று

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

மற்றையது

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

உங்கள் பதிவை வாசித்த போது இதுதான் என் மனதில் மீள ஓடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

1.பணமோ, பொருளோ, உடல் வலிமையோ, அழகோ இதில்   எதை வைத்தும், இருப்பவன் இல்லாதவனுக்கு பெருமை காட்டுவது சின்னத்தனமே. அதிலும் படிப்பு, அறிவை, பண்பை கூட்ட வேண்டிய சாதனம், அந்த படிப்பை வைத்தே கலர் காட்டுவது என்பதும். கேம்பிரிஜ் போன பிள்ளைக்கு சறேயில் மாப்பிள்ளை வேண்டாம் என்பதும் பைத்தியக்கார மனோநிலை. ஆனால் இதை வைத்தே, கிரெமர் ஸ்கூலை விட ஸ்டேட் ஸ்கூல் நல்லம் என்பதோ, உலகில் 1ம் தரத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டை விட 500-600 க்குள் வரும் ஓபன் யூனிவர்சிட்டி நல்லம் என்பதோ, அதை வெண்ட பைதியக்காரத்தனம். 

2.போட்டி மனப்பான்மை என்பது தவறான பதம். இன்னொருவரை பார்த்து போட்டி போட வேண்டியதில்லை. நம் நிலையை உயர்த்த வேண்டும் என்ற சுயமுன்னேற்ற மனப்பாங்கே தேவை. என் நண்பனின் மகன் கிரமர் ஸ்கூல் போய் நல்ல நிலைக்கு வந்துள்ளான், சந்தோசம், அதே வாய்ப்பை என் மகனுக்கும் கொடுக்க வேண்டும் என விழைவது போட்டியல்ல.   யூகேயில் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானி/சோமாலி/பங்களதேசி களுக்கும் இடையே கடந்த 40 வருடத்தில் ஏற்பட்டு உள்ள  social mobility பார்த்தேலே தெரியும் - சுயமுன்னேற்ற மனப்பாங்கு, சமூகங்களை எப்படி உயர்த்துகிறது என்பது.

இவையும் எம்மவரிடையே ஊறிப்போன  சாதித்தடிப்பு மற்றும் பிரதேசவாதம்  போன்ற  ஒன்று  தான்.

இதில்  ஒருவரையொருவர் மாறி  மாறி  தாழ்த்திக்கொள்ளும் நிலை  இருப்பதால்இதொரு தொடர்கதையாக  உள்ளது

சிலர்  என்னிடம் யாழ் இந்து யாழ் இந்து என்று  கடுப்பேத்துவார்கள்

போங்கடா

நான்  கொழுப்பு பம்பலப்பிட்டிய   இந்து  என்றுவிட்டு  நகர்ந்து  விடுவேன்

அப்புறம் வெட்கமாக  இருக்கும் எனக்குள்ளும்  அது இருக்கு என்று???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வாதவூரான்,

நீங்கள் நான் எழுதியவற்றை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறீர்களா? அல்லது சுமே எழுதியவற்றையும் என் தலையில் கட்டுகிறீர்களா?

எனது முதல் பதிவில் இருந்து ஒரு பதிவில்தானும் நான் கேம்பிரிஜ்ஜில் படித்த ஆள், சறேயில் படித்த ஆளை கட்டக்கூடாது என்ற தொனி பட எழுதவே இல்லை?

BMW ஓடுகிறேன் என சில மொக்கு கூட்டம் கலர் காட்டுது என்பதற்காக BMW கார் நல்லமில்லை/ஓடக்கூடாது என்றாகாது என்ற என் பதிவை நீங்கள் பார்க்கவில்லையா?

எனக்கென்னமோ “தாழ்த்தப்பட்ட சாதி” விடயத்தில் நான் சொன்ன கருத்தின் காரம், இந்த திரியில் நான் சொல்லாதவற்றையும் சொல்லியதாக உங்களை காண வைப்பதாகவே படுகிறது😂.

கோசான்,
முதலாவது பந்தி சுமே அன்டிக்கானது (வேலையிலை இருந்து எழுதியதால் விளக்கமாக எழுத முடியவில்லை மன்னிச்சுக்கொள்ளுங்கோ).  இந்த தாழ்த்தப்பட்ட சாதி என்பது கூட அவசரமாக எழுதும் போது எழுதியது தான்.நான் அங்கே சொல்லவந்த விசயம் இது சாதிப்பிரச்சினை தான் என்பதே ஒழிய அவர்களை குறைத்து சொல்வதற்கல்ல. எப்பவும் சுருக்கமாக எழுதும் போது இப்படியான பிரச்சினைகள் வருவதுதான். உங்களைக் குறை கூறியதுநீங்கள் நெடுக்சை குறை கூறுவதாகநினைத்துக்கொண்டு சுமே அன்டிக்கு சார்பாக கதைத்தது தான். என்னுடைய பதிவுக்கு பின்னர் தான்நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறீர்கள். அடுத்தது "தாழ்த்தப்பட்ட சாதி " விடயத்தில் என்னுடைய மனதில் எதுவும் இழிவான எண்ணம் எதுவும் இல்லாததால் எனக்கு எந்த காரமும் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 6:05 PM, goshan_che said:

இது அந்த பெற்றோர்களின் உடல் புலம்பெயர்ந்துள்ளதே தவிர மனமும், சமூகப் பார்வையும் இன்னும் ஊரிலேயே இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது.

உண்மையை சொல்லப்போனால் கொழும்பில், மட்டக்ளப்பில், யாழில் இப்போ இருக்கும் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர் பலர் தாம் 2020 இருக்கிறோம் என்பதை உணர்ந்து, காலத்துக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.

ஆனால் லண்டனில், கனடாவில், இருக்கும் பெற்றோர் சிலரே இன்னும் 1960ம் ஆண்டில் நின்றபடி “நாம் பெண்ணை பெற்றோர்” என பதைபதைக்கிறார்கள்.

ஏன் இந்த பதைபதைப்பு? ஊருக்கு பயந்துதானே? ஊர் என்ன சொல்லும். சாதி சனம் என்ன சொல்லும் எனும் பயம்தானே?

ஊராவது மண்ணாவது, துணை நல்லவனா? உனக்கு (மனப்) பொருத்தமா? பிடித்திருக்கிறதா? அப்போ கல்யாணம் செய்யுங்கள் என சொல்லும் தைரியம் இருந்தால் - எந்த பதைபதைபுக்கும் காரணமில்லை.

ஊருக்கு பயந்து, தமிழ், வெள்ளாள, படித்த, உயரமான, பசையுள்ள, நல்ல தொழில் பார்க்கும், கெத்தான மாப்பிள்ளைதான் வேணும், என்று நினைத்தால் மட்டுமே பதை பதைப்பு ஏற்படும்.

On 3/1/2020 at 5:30 PM, goshan_che said:

அன்ரி,

நீங்கள் கேம்பிரிட்ஜா, யூசிஎல் ஆ, சறேயா எண்டு பாக்கிறியள்.

அவர்கள் கடை நடத்துறியளா, அரச உத்தியோகமா?

என தராதரம் பாக்கினம்.

உங்கள் சம்பாசணையில் அந்தாள் ஆரம்பம் முதலே உங்களை வெட்டி விடப் பாக்கிறமாரித்தான் தெரியுது.

இப்படி தராதரம் சரி வந்தாலும், அடுத்து சாதகம் பொருந்துதா என பாக்கிறியள்.

இங்கே நடப்பது யாவாரமா? தலை சுத்துதடா  சாமி.

பிகு: இப்படி அவவிண்ட கலியாண விசயம் யாழில் அலசப்படுவது உங்கள் மகளுக்கு தெரியுமா?

என் தாயார் இப்படி என்ர கலியாண விசயத்தை பற்றி எழுதினால் நான் செம்ம கடுப்பாகி இருப்பேன் 😂

உண்மையிலே, சாதி, அந்தஸ்து, பார்கிற ஆக்கள் கூட சாதகத்தை ஒரு சாட்டா பயன்படுத்துவதுண்டு.

உந்த சிங்கபூருக்கே உரித்தான பெரனகன் சமையலையும் வீதி ஓரச் கடைகளையும் எல்லாரும் புகழந்தாலும், எனக்கு சொல்லும் படியாக பிடிக்கவில்லை.

ஆனால் கோமளவிலாஸ் சாப்பாடு அந்த மாதிரி.

On 3/2/2020 at 5:49 PM, goshan_che said:

எழுதுவதற்காக எழுதவில்லை சில course இற்கு UCL ஐ விட சறேயில் எடுக்கும் டிகிரிக்கு மதிப்பும் வேலை வாய்ப்பும் அதிகம்.

கீழே ஒரு இணைப்பை கொடுதுள்ளேன் பாருங்கள்.

https://www.quora.com/Is-UCL-overall-more-superior-than-the-University-of-Surrey 

இன்னொரு உதாரணத்தை சொல்வதானால் - கீழைத்தேய படிப்புகளுக்கு SOAS இல் படிப்பதை போல சிறப்பு வேறெங்கும் இல்லை.

ஒட்டுமொத்தமாக டைம்ஸ் தரவரிசையில் பார்த்தால் - முதல் ரெண்டுக்குள் எப்போதும் கேம்பிரிட்ஜ் வரும் ஆனால் சறே 10-15 க்குள் வரும். 

பலதடவைகள், ரசள் குரூப் யூனிகளனா வாரிக், காடிவ்வை விட சறே மேலே வந்துளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2020 at 7:35 PM, goshan_che said:

கொலரை இழுத்து விட என யாரும் படிப்பதில்லை.

ஆனால் தரவரிசை என்பதே ஒட்டுமொத்தமாக எந்த யூனிவர்சிட்டி எந்த இடத்தில் காட்ட என்றுதான்.

எனவே தான் வளர்ந்த நாடுகளில் யூனிவசிட்டிகளை தரப்படுத்தும் வழக்கம் உளது. தவிரவும் நான் மேலே சுட்டிய times, guardian தரவரிசைகள், யூகே லிஸ்டையும், அதனுள்ளே துறைசார்ந்து மேலும் பல லிஸ்டுகளையும் கொடுக்கும்.

இங்கே உயர்தரம் படித்து, யூனிவர்சிட்டிக்கு யூகாஸ் மூலம் உள்வாங்கப் படாமல், வெளிநாட்டில் யூனிக்கு போய், அதன் பின் இங்கே வந்து யூனியில் வெளிநாட்டு மாணவர்களா சேர்ந்தவகளுக்கு இந்த புரிதல் இல்லாமல் இருக்க கூடும்.

ஆனால் இந்த முறையை கடந்து யூனி போன சொந்த அனுபவமே நான் மேலே எழுதியது.

இங்கே பள்ளிகூடங்களில், யூகாஸ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது ஆலோசனைக்கு என்று ஆசிரியர்களை நியமிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் கூட, யூனிவர்சிட்டி தரவரிசையை அடிப்படையாக வைத்தே ஆலோசனை செய்வார்கள்.

தாம் தரம் குறைந்த யூனிக்கு போனதால் என்னமோ சிலர் இங்கே வந்து ஆக்ஸ்போர்ட்/கேம்பிரிட்ஜ் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல எழுதுகிறார்க்ள் 😂

கீழே எந்த யூனியின் எந்த படிப்புக்கு அதிக சம்பளம் என்ற தரவுகளை தருகிறேன் பார்த்து பயனடையுங்கள் அல்லது  வயிறு எரியுங்கள் 😂.

https://www.telegraph.co.uk/education-and-careers/0/what-highest-paying-degrees-uk-top-graduate-salary-britain/ 

https://www.telegraph.co.uk/education/universityeducation/11918904/Oxbridge-graduates-earn-double-200000-Russell-Group-premium.html

ஆக்ஸ்போர்ட்டும், கேம்பிரிஜ்ஜும் உலக வரிசையில் ஹார்வர், ஸ்டான்போர்டுக்கு அடுத்து தொடர்சியாக முதல் 5 துக்குள் வருவன. முதல் 10க்குள் வர மிகுதி யூகே யூனிகள் எல்லாம் படாதபாடு படும்.

கனகரட்ணம் மாகாவித்யாலலம் கொமேர்சுக்கு நல்லம்தான் ஆனால் ஒட்டு மொத்த ஒப்பீட்டில் யாழ் இந்து/ சென்யோன்சை விட கீழேதானே?

இதுதான் யதார்த்தம். 

அடுத்து சில மொக்குகள் BMW ஓடுறோம் என காலரை தூக்கி விடுகிறது என்பதற்காக BMW கார் சரி எல்லை என்றோ அல்லது BMW m3 யும் பாஜாஜ் ஆட்டோவும் ஒன்று என்று சொல்ல முடியாதுதானே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 9:59 PM, goshan_che said:

இங்கே யாரும் அரச பள்ளிகளில் படிப்பது குறைவு என்றோ, அல்லது எனைய யூனிகளில் படிப்பது குறைவு என்றோ எழுதவில்லை.

ஆனால் வளங்கள் மட்டுப்பட்ட உலகில், அதிக வளங்கள் இருக்கும் பள்ளிகளை, யூனிகளை தேடிப்போவதில் ஒரு தவறும் இல்லை.

இதில் எந்த வெட்டிப் பெருமையும் இல்லை. 

இதை வெட்டி பந்தா என்பவர்கள் தம்மை விட, தம் இனத்தில் இருந்து யாரும் மேலே போய்விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம் உள்ளவர்களாகவே இருக்க முடியும்.

#தமிழ் நண்டு

எல்லாருக்கும் கேம்பிரிட்ஜ் சரிவராது, உங்கள் பிண்ணனி உங்களை கீழே அமிழ்தலாம். இதை மீறி வர முடியுமா பாருங்கள், இல்லை என்றால் வேறு ஒரு தெரிவை எடுங்கள் ஆனால் தமிழ் நண்டுகளின் கதையை கேட்டு முயலாமலே விட்டு விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வாதவூரான் said:

கோசான்,
முதலாவது பந்தி சுமே அன்டிக்கானது (வேலையிலை இருந்து எழுதியதால் விளக்கமாக எழுத முடியவில்லை மன்னிச்சுக்கொள்ளுங்கோ).  இந்த தாழ்த்தப்பட்ட சாதி என்பது கூட அவசரமாக எழுதும் போது எழுதியது தான்.நான் அங்கே சொல்லவந்த விசயம் இது சாதிப்பிரச்சினை தான் என்பதே ஒழிய அவர்களை குறைத்து சொல்வதற்கல்ல. எப்பவும் சுருக்கமாக எழுதும் போது இப்படியான பிரச்சினைகள் வருவதுதான். உங்களைக் குறை கூறியதுநீங்கள் நெடுக்சை குறை கூறுவதாகநினைத்துக்கொண்டு சுமே அன்டிக்கு சார்பாக கதைத்தது தான். என்னுடைய பதிவுக்கு பின்னர் தான்நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறீர்கள். அடுத்தது "தாழ்த்தப்பட்ட சாதி " விடயத்தில் என்னுடைய மனதில் எதுவும் இழிவான எண்ணம் எதுவும் இல்லாததால் எனக்கு எந்த காரமும் தெரியவில்லை

வாதவூரன்,

1. மேலே நான் கோடிட்ட அத்தனை பதில்களும் உங்கள் பதிவுக்கு முன்னதாக நான் இதே திரியில் எழுதியது. யூனிவர்சிட்டிகளுக்கு இடையில் தராதரபாகு பாடு இருக்கிறது என்பதுதான் யதார்தம். முதல்தர யூனிக்கு போவபர்களுக்கு வாழ்கையில் வேலைவாய்பு உட்பட பல விடயங்கள் சுலபமாக கைகூடும் என்பதும் உண்மை. எனவே எம் பிள்ளைகள் முதல்தர யூனிக்கு போக வேண்டும் என உழைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் இதை ஒரு அணிகலனாக, பெருமைகுரிய தம்பட்டம் அடிக்கும் விடயமாக, தராதரம் பார்க்கும் விடயமாக மாற்றுவது பேதமை.  இந்த பேதமை நம்மில் சிலரிடம் இருக்கிறது என்பதும் உண்மை, அதற்காக இந்த யூனிகள் ஒன்றும் பெரிய விடயமில்லை என்றாகாது. இந்த திரியில் நான் தொடர்சியாக எழுதியது இதைதான்.

2. உங்கள் பதிவுக்கு பின்னான பதிவு கூட உங்கள் பதிவை வாசிக்க முன், சுமேயின் பதிவை வாசித்துவிட்டு எழுதியதுதான்.

3. புத்தூர் சுடலை சம்பந்தமான திரியில், நீங்கள் தவறுதலாக அந்த மாதிரி எழுதினீர்கள் என்பதை நானும் ஏற்று கொண்டேன். அதனால்தான் அங்கே உங்களை கோடிட்டு கேள்வி கேட்காமல், அந்த பதங்களை பற்றி பொதுப்படையாக எழுதினேன். அதே திரியில் நீங்கள் மட்டுமே உண்மையான தகவல்களை எழுதினீர்கள் என்றும் எழுதியுள்ளேன்.

4. மேலே பாருங்கையா உங்க யூனி பற்றியும் நல்லாகவே எழுதி உள்ளேன். கொஞ்சம் கருணை காட்டுங்கப்பு 😂

பிகு: எனக்கு மனக்கசப்பும் இல்லை. உங்களுக்கும் அப்படி இருக்க வேண்டுகிறேன். ( இல்லாட்டி ரதி அக்காச்சி வந்து கோசான், வாதவூரனை கொத்தி கலைச்சுபோட்டார் எண்டு ஏசும் 😂).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:
வருடத்துக்கு 12 ஆயிரம்  யூரோக்கள் Master 2 வரை 5 வருடம் படித்தான். 60 ஆயிரம்  யூரோக்கள் செலவு.  
ஒரு  நாள்  கேட்டேன் சாதாரணமாக யூனிக்கு  சென்று இலவசமாக  படித்து பெறும் பட்டத்துக்கும் 60 ஆயிரம்  யூரோக்களை செலவு  செய்து  படித்து  எடுக்கும் பட்டத்துக்கும் நீ வெலை  தேடும் போது வித்தியாசம் இருந்ததா?  இருக்கா ??  என்று.

அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைக்கு வருடம் 50-60 ஆயிரம் டாலர்கள்.
இதிலே கூடுதலான புள்ளிகள் பெற்றவர்கள் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் என்று பார்த்து சிறிது தள்ளுபடி கொடுப்பார்கள்.
4 வருடம் பிள்ளை படித்து முடிய 200 ஆயிரம்.

இத்தனைக்கும் வீட்டுக்கடன் 3-4%வீதத்துக்கு எடுக்கலாம்.
படிப்பு கடன் 6-7 %.

இத்தனைக்கும் கிறடிற் லைன் நன்றாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம்.

விசுகுவும் வாதவூரனுகம் சாதிய பாகுபாட்டையும், கல்வி பாகுபாட்டையும் ஒன்றாக சித்தரித்தனர். இது சரியானதாக எனக்கு படவில்லை.

எவ்வளவுதான் பேதமை மிக்கதாக இருந்தாலும், ஒருவர் நான் இன்ன யூனியில் படித்தேன் என்பதில் ஒரு குறைந்த பட்ச லொஜிக்காவது இருக்கிறது. கேம்பிரிஜ்ஜுக்கு போவது அவரின் தகமையில், திறனில்தானே தங்கியுளது. பிறப்பில் அல்லவே?

தவிரவும், கேம்பிரிஜ்ஜில் தந்தை படித்தார் என்பதற்காய், நல்ல ரிசல்ட் எடுக்காத மகனையும் அங்கே படிக்கவிடுவதில்லை.  

ஆனால் சாதியம் அப்படி இல்லை. அது திறனடிப்படையில் ஆனது அல்ல.

தவிரவும் சாதியத்தால் நடக்கும் ஒடுக்குமுறைகள் ( மலம் உண்ண வற்புறுத்தல், ஆணவ கொலை) என்ப யூனியை வைத்து பேசும் வெற்றுப் பெருமை பேதமையை விட மிக அபாயகரமானவை.

எனவே இரெண்டையும் ஒப்பிடுவது சாதிய பிரச்சினையை trivialize பண்ணுவதாகவே அமையும். 

பிகு: trivialize ற்கு தமிழ் யாதோ?

13 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைக்கு வருடம் 50-60 ஆயிரம் டாலர்கள்.
இதிலே கூடுதலான புள்ளிகள் பெற்றவர்கள் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் என்று பார்த்து சிறிது தள்ளுபடி கொடுப்பார்கள்.
4 வருடம் பிள்ளை படித்து முடிய 200 ஆயிரம்.

இத்தனைக்கும் வீட்டுக்கடன் 3-4%வீதத்துக்கு எடுக்கலாம்.
படிப்பு கடன் 6-7 %.

இத்தனைக்கும் கிறடிற் லைன் நன்றாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் யூகே வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.

இங்கே உள்ளூர் மாணவர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட எந்த யூனியும் அதிகம் வசூலிக்க முடியாது. 

இது பெரும்பாலும் 8-12 ஆயிரம் பவுண்சுகள். வருடத்துக்கு. 

இதையும் கூட அரசு முதலில் கடன் அடிபடையில் கட்டி விடும். வேலை கிடைத்த பின், 23 ஆயிரத்துகு மேல் சம்பளம் எடுத்தால், அதில் ஒரு பங்கு கடன் மீளளிக்க எடுக்கப்படும். 50 வயதாகிவிட்டால் கடன் தள்ளுபடியாகி விடும்.

இது இப்போதைய சிஸ்டம். முன்பு, இந்த தொகையை அரசு இனாமகவே வழங்கி, வாழும் செலவையும் இனாமாக வழங்கியது (97 ற்கு முன்).

மாஸ்டர் படிப்புக்கு இந்த உதவிகள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இன்னொரு விடயம்.

விசுகுவும் வாதவூரனுகம் சாதிய பாகுபாட்டையும், கல்வி பாகுபாட்டையும் ஒன்றாக சித்தரித்தனர். இது சரியானதாக எனக்கு படவில்லை.

ஒன்றாக சித்தரிக்கவில்லை சகோ

இவை  எம்மோடு ஊறியவை என்றே  சொன்னேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

அட பாவியளா நானும் சறே தான். ஆனால் அதுக்காக கேம்ப்ரிச்சிலை படிச்சாக்கள் உயர்ந்த சாதி அவையள் எங்களைக் கட்ட மாட்டினம் எண்டதெல்லாம் சரியான அதிகப்பிரசங்கிதனம் கண்டியளோ. கோசான் சாதியைப்பற்றி வாய் கிழிய கத்துறியள் இதுக்கும் சாதி பாக்கிறதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கேம்ப்ரிச்சிலையோ ஒக்ஸ்போட்டிலையோ படிச்ச்சாக்களுக்கு இலகுவாக வேலை கிடைக்கலாம், இலகுவாக பதவி உயர்வு கிடைக்கலாம் அதுக்காக அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் இல்லை.நான் கேம்ப்ரிச்சிலை படிக்கிறன் என்று மற்றவர்களுக்கு எடுப்பு காட்டவேண்டிய அவசியமில்லை. இது முன்பு யாழ் இந்து வேம்படியில் படிப்பவர்களும் செய்வது தான். ஆனால் எல்லாரும் மனதில் வைக்கவேண்டிய விடயம் உயர்தர பல்கலைக்கழகத்திலோ உயர்தர பாடசாலையிலோ படித்தால் அவர்களுக்கு எல்லாம் தங்கத்திலை செய்தது என்டில்லை. அவர்கள் பொருளாதார ரீதியில்நல்ல நிலையில் இருக்கலாம் அல்லது பல சாதனைகளுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எல்லாரும் மனிசர் தான். அதுக்காகநீ சரேயிலை படிச்சிட்டு கேம்ப்ரிச்சிலை படிச்ச என்னோடை சமனாக கதைக்காதை என்று சொல்வது என்பது சாதித்தடிப்பை போலவே மோசமான ஒன்று.

வாதவூரன் நீங்கள் நான் எழுதிய கருதத்தையோ அல்லது மற்றவற்றையோ சரியாக வாசிக்காது ஓடஓட வாசித்துவிட்டுக் கருத்து எழுதியுள்ளீர்கள். மூன்றாம் பக்கத்தில் உள்ள திருமணப் பேச்சு 2 ஐ வடிவா வாசியுங்கோ. பிறகு வந்து எழுதுங்கோ. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடவேண்டாம்.

5 hours ago, விசுகு said:

இவையும் எம்மவரிடையே ஊறிப்போன  சாதித்தடிப்பு மற்றும் பிரதேசவாதம்  போன்ற  ஒன்று  தான்.

இதில்  ஒருவரையொருவர் மாறி  மாறி  தாழ்த்திக்கொள்ளும் நிலை  இருப்பதால்இதொரு தொடர்கதையாக  உள்ளது

சிலர்  என்னிடம் யாழ் இந்து யாழ் இந்து என்று  கடுப்பேத்துவார்கள்

போங்கடா

நான்  கொழுப்பு பம்பலப்பிட்டிய   இந்து  என்றுவிட்டு  நகர்ந்து  விடுவேன்

அப்புறம் வெட்கமாக  இருக்கும் எனக்குள்ளும்  அது இருக்கு என்று???

உண்மையை ஒத்துக்கொண்டமைக்குப் பாராட்டுக்கள் அண்ணா. எதையும் பார்ப்பதில்லை என்று வெளியே கூறுபவர்கள் வீட்டினுள்ளே அத்தனையையும் பார்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

1.பணமோ, பொருளோ, உடல் வலிமையோ, அழகோ இதில்   எதை வைத்தும், இருப்பவன் இல்லாதவனுக்கு பெருமை காட்டுவது சின்னத்தனமே. அதிலும் படிப்பு, அறிவை, பண்பை கூட்ட வேண்டிய சாதனம், அந்த படிப்பை வைத்தே கலர் காட்டுவது என்பதும். கேம்பிரிஜ் போன பிள்ளைக்கு சறேயில் மாப்பிள்ளை வேண்டாம் என்பதும் பைத்தியக்கார மனோநிலை. ஆனால் இதை வைத்தே, கிரெமர் ஸ்கூலை விட ஸ்டேட் ஸ்கூல் நல்லம் என்பதோ, உலகில் 1ம் தரத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டை விட 500-600 க்குள் வரும் ஓபன் யூனிவர்சிட்டி நல்லம் என்பதோ, அதை வெண்ட பைதியக்காரத்தனம். 

2.போட்டி மனப்பான்மை என்பது தவறான பதம். இன்னொருவரை பார்த்து போட்டி போட வேண்டியதில்லை. நம் நிலையை உயர்த்த வேண்டும் என்ற சுயமுன்னேற்ற மனப்பாங்கே தேவை. என் நண்பனின் மகன் கிரமர் ஸ்கூல் போய் நல்ல நிலைக்கு வந்துள்ளான், சந்தோசம், அதே வாய்ப்பை என் மகனுக்கும் கொடுக்க வேண்டும் என விழைவது போட்டியல்ல.   யூகேயில் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானி/சோமாலி/பங்களதேசி களுக்கும் இடையே கடந்த 40 வருடத்தில் ஏற்பட்டு உள்ள  social mobility பார்த்தேலே தெரியும் - சுயமுன்னேற்ற மனப்பாங்கு, சமூகங்களை எப்படி உயர்த்துகிறது என்பது.

என்னகோசான் எனக்குப் புரியவில்லை. வாதவூரன் உங்களை கேள்வி கேடடாவுடன்  நீங்கள் சரியானதையும் தவறானதாகக்கருதி எனக்கு எழுதியுள்ளீர்கள். இதில் பந்தா காட்டுவது பற்றி எங்கே நான் எழுதியுள்ளேன் ???நீங்களும்  மீண்டும் வாசியுங்கள் நீங்கள் எழுதியதை.
பொறாமைதான் எமக்கு அவசியமற்றதே ஒழிய போட்டி மனப்பான்மை மனிதர்களுக்கு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னகோசான் எனக்குப் புரியவில்லை. வாதவூரன் உங்களை கேள்வி கேடடாவுடன்  நீங்கள் சரியானதையும் தவறானதாகக்கருதி எனக்கு எழுதியுள்ளீர்கள். இதில் பந்தா காட்டுவது பற்றி எங்கே நான் எழுதியுள்ளேன் ???நீங்களும்  மீண்டும் வாசியுங்கள் நீங்கள் எழுதியதை.
பொறாமைதான் எமக்கு அவசியமற்றதே ஒழிய போட்டி மனப்பான்மை மனிதர்களுக்கு அவசியம்.

வாதவூரனுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். மேலே நான் சொன்னவற்றையே மீள் பதித்து, நீங்களும் நானும் வேறுபடும் இடங்களை போல்ட் செய்துள்ளேன். 

இந்த விசயத்தில் என் நிலைப்பாடும் உங்கள் நிலைபாடும் சில இடங்களில் ஒத்தும், சில இடங்களில் ஒவ்வாமலும் இருக்கிறது. 

தவிர வாதவூரன் என்ன சிவபாதவிருதையர் வந்து சொன்னாலும் கருத்தை மாற்றக் கூடிய ஆளா என்ன கோசான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, colomban said:

90களில் நான் பாடசலைக்கு முடித்து விட்டு வேலை தேடியபோது பல முன்னனி கம்பனிகளுக்கு என்னை நேர்முக தேர்வுக்கு அழைப்பார்கள். என்னுடன் இத்தேர்வின்று வந்தவர்கள் பலர் யாழ் இந்து, வேம்படி மேலும் பல சிங்கள் பின்தங்கிய ஊர்களில் இருந்து 8D களும் 4A களும் எடுத்து இருப்பர்கள். ஆனால் என்னவோ குறித்த வேலை பொதுவாக கொழும்பில் உள்ள பிரபல கல்லூரிகளான ரோயால், தோமயன், ஜோசப் அல்லது பெண்களாயின் ஹோலி ஃபெமிலி, சென்.ப்ரிட்ஜெட், பிஷப் போன்றவற்றில் படித்தவர்களயே தெரிவு செய்வார்கள். 

நீங்கள் சொல்வது 90' களில்.

இப்போதெல்லாம் மாறி விட்டது. நீங்கள் சொல்லும் கல்லூரிகளை விட, கொழும்பில் உள்ள சாதாரண பாடசாலைகளில் எல்லாம் திறமையாக சித்தியடைகிறார்கள்.

இப்போதுள்ள தொழில் வழங்குபவர்கள் பெரும்பாலும், மேற்படி கல்லூரிகளை பார்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

நீங்கள் சொல்வது 90' களில்.

இப்போதெல்லாம் மாறி விட்டது. நீங்கள் சொல்லும் கல்லூரிகளை விட, கொழும்பில் உள்ள சாதாரண பாடசாலைகளில் எல்லாம் திறமையாக சித்தியடைகிறார்கள்.

இப்போதுள்ள தொழில் வழங்குபவர்கள் பெரும்பாலும், மேற்படி கல்லூரிகளை பார்ப்பதில்லை.

அப்படியா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் பேசட்டா என்ற இந்த திரி நாலு படித்த  ஆட்களின் அலப்பறையாக போகுது.அதோட எங்கை படிச்சால் சுலபமாக வேலை எடுக்கலாம் என்டுதான் ஓட்டமே தவிர ஆரும் நாலு பேருக்கு வேலை கொடுப்பது பற்றி ஒன்டுமே இல்லை;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

அப்படியா 🤔

இல்லை. 90 களில் இருந்ததை விட நிலைமை கொஞ்சம் முன்னேறற்றம்தாம் ஆனால் வேலைவாய்ப்பில், நெட்வேர்க்கி இல் பாரம்பரிய பாடசாலைகளின் பிடி அதிகம் தளரவில்லை.

இந்த பட்டியலில் சென் பீட்டர்ஸ் போன்ற 90 வரைக்கும் முதல் தரவரிசைக்கு சற்று கீழே இருந்த பாடசாலைகளும் இப்போ சேர்ந்துள்ளன.

கொழும்பில் 90 களின் ஆரம்பம் முதலே தனியே தமிழ் மீடியம் ஏ எல் ரிசல்டை வைத்து மட்டும் பார்த்தால் பம்பலபிட்டி இந்துவும், சைவ மங்கையரும், பின்நாட்களில் இராமநாதனும்தான் முன்னிலை.

ஆனால் ஏல் பெறுபேறுகளையும் தாண்டி கொழும்பில் முண்ணணி பாட்சாலைகள் கோலோச்சும் பாங்கு உண்டு.

ரோயல் கல்லூரி தமிழ் மீடியம் பெரிதாக ரிசல்ட் கொடுப்பதில்லை (எண்ணிக்கையும் குறைவு) ஆனால் சிங்கள மீடியம் அடித்து நொருக்குவார்கள்.

அதேபோல கொழும்பு லேடீஸ், கல்கிசை பரிதோமாவின் கல்லூரி என்பன சிங்கள, தமிழ் மீடியம் ரெண்டிலும் பெரிதாக சாதிப்பதில்லை என்றாலும் அவர்களுக்கான மவுசுக்கு குறைவில்லை.

இந்த கல்லூரிகளில் சேர பணம் மட்டும் போதுமானதாகவும் இருப்பதில்லை.

பணம் இருந்தும் இந்த கல்லூரிகளில் சேர்க முடியாத பெற்றார் இண்டர் நேஷனல் ஸ்கூல்களை நாடுகிறார்கள்.

நான் அறிந்த மட்டில் இதுதான் இப்போ கொழும்பில் நிலைமை.

கொழும்பான் நேரடி, உடன் அனுபவம் உள்ளவர் அவர் இதை உறுதிப் படுத்த அல்லது மறுக்க கூடும்.

2 hours ago, சுவைப்பிரியன் said:

கலியானம் பேசட்டா என்ற இந்த திரி நாலு படித்த  ஆட்களின் அலப்பறையாக போகுது.அதோட எங்கை படிச்சால் சுலபமாக வேலை எடுக்கலாம் என்டுதான் ஓட்டமே தவிர ஆரும் நாலு பேருக்கு வேலை கொடுப்பது பற்றி ஒன்டுமே இல்லை;

😂 யாழ்களமே இதுதானே ஐயா. அரட்டை அரங்கம். மற்றையவருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு சாதனையாளர்களாக இருப்பவர்கள் இங்கே வந்து criminal wastage of time செய்யமாட்டார்கள்😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.