Jump to content

மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா?


Recommended Posts

மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா?

 
Untitled-1-470-696x464.jpg
 

வடமாகாணத்தின் முக்கிய கிரிக்கெட் விளையாடும் கல்லூரிகளான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் போர்” (Battle of the Heroes) என வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரானது 20 ஆவது முறையாக, இம்மாதம் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் இதுவரையில் 19 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், மகாஜனா கல்லூரி 5 போட்டிகளிலும், ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளை 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற மோதல் சமநிலை முடிவையே கொடுத்துள்ளது  எனினும், இறுதியாக கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மகாஜனாக் கல்லூரி அணியினர் வெற்றியைத் தமதாக்கி இறுதியாக வெற்றி பெற்றவர்கள் என்ற பதிவை தம்மகத்தே கொண்டுள்ளனர். அதேவேளை, ஸ்கந்தவரோதயா கல்லூரி 2014 ஆம் ஆண்டில் இறுதி வெற்றியை பதிவு செய்துள்ளது.

சகலதுறை வீரரான கிருஷன் தலைமையில் இம்முறை பெரும் சமரில் பங்கெடுக்கும் மகாஜன அணியினர் இந்த பருவகாலத்தில் 7 போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருப்பதுடன், மத்திய கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி உடட்பட ஏனைய 5 போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக, ஹாட்லி கல்லூரி, யூனியன் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றுள்ளனர்.

மகாஜன கல்லூரியின் எதிர்பார்ப்பிற்குரிய வீரராக சகலதுறை ஆட்டக்காரரான வரலக்ஷன் விளங்குகின்றார். துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் அணியின் தலைவர் கிருஷன் மற்றும் மதீசன் வலுச்சேர்க்கவுள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்துவீச்சாளர் சதுர்ஜன் மற்றும் சகலதுறை வீரர்கள் கிருஷ்ணன் மற்றும் வரலக்சனின் கைகளிலேயே அணி தங்கியுள்ளது. 

இரண்டு நாட்களும் ஸ்கந்தவரோதயா அணிக்கு பலத்த சவாலை கொடுப்பது மாத்திரமின்றி, சொந்த மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் தமக்கு சாதகமான முடிவொன்றைப் பெற்று ஐந்தாவது ஆண்டாக கிண்ணத்தினை தக்கவைப்பது மகாஜனன்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

சகலதுறை வீரரான பிரசன் தலைமையில் களமிறங்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் ஒப்பீட்டளவில் பலமான அணியாக பிரிவு மூன்றின் தரம் ஒன்றிற்கான போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த பருவகாலத்தில் 8 போட்டிகளில் பங்கெடுத்திருக்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஒரு இன்னிங்ஸ் வெற்றி உட்பட இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சென். ஜோன்ஸ் மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகள் உட்பட 4 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளதுடன், இரு போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளனர். 

அணியின் பலமாக சகலதுறை வீரர்களே காணப்படுகின்றனர். துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் அணியின் தலைவர் பிரசன், உபதலைவர் டான்சன், டக்சன், சரதன் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். பிரசன் மற்றும் டான்சன் முறையே யூனியன் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு எதிராக சதங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பந்துவீச்சினை அவதானிக்கையில் வேகப்பந்துவீச்சாளர்களாக கடந்த வருடம் பெரும் சமரில் சோபித்த டான்சன், கௌரி ஷங்கர் ஜோடி உள்வாங்கப்பட்டுள்ளது. அதேவேளை அணியின் சுழல் பந்துவீச்சு துறையினை பிரசன், தனுஷ்ராஜ் ஜோடி பலப்படுத்துகின்றது. 

இம்முறையும் பலமான அணியாகவே களமிறங்கும் ஸ்கந்தவரோதயா வீரர்களின் எதிர்பார்ப்பு கிண்ணத்தினை மகாஜனவிடமிருந்து மீட்பதாகவே இருக்கின்றது. 

சொந்த மைதானத்தில் மகாஜனவை எதிர்கொள்ளும் ஸ்கந்தாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு மகாஜனாவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பட்சத்தில் கிண்ணத்தினை மீட்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மறுபக்கம் ஸ்கந்தாவின்  பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் ஒரு வருடத்திற்கு மகாஜனங்கள் கிண்ணத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம். 

மகாஜன கல்லூரி மைதானத்தில் போட்டி இடம் பெறுவதனால் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். 

போட்டியின் புகைப்படங்கள் மற்றும் போட்டி விபரங்களை thepapare.com இணையம் ஊடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.  

http://www.thepapare.com/20th-battle-of-the-heroes-preview-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.