Jump to content

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!


Recommended Posts

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!

 

 

by : Dhackshala

Jaffna-Puttur-Peoples-Protest-2.jpg

யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மயானப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Jaffna-Puttur-Peoples-Protest-2-1-scaled

Jaffna-Puttur-Peoples-Protest-2-2-scaled

புத்தூரில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

எனினும் அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தைச் சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் எதிர் மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை இரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை கடந்த நவம்பர் மாதம் முன்வைத்தனர்.

இதன்போது, ‘மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்ட முடியும். அதனை எதிர்த் தரப்பு தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்தத் தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-5-1-scaled.jpg

Jaffna-4-2-scaled.jpg

Jaffna-6-scaled.jpg

Jaffna-1-2-scaled.jpg

Jaffna-2-2-scaled.jpg

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

யாழ்கள நண்பர்களே இந்த பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியா? சுற்றுப்புற சூழல் மாசடைதலை தடுத்தலா? தயவு செய்து பின்னணி தகவல் அறிய உதவுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரதானமாக சாதி தான். மயானத்தை சுற்றி இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர்.அவர்களுக்கும் மற்றையவர்களுக்கும் ஏற்கனவே பிரச்சினை வேறு காரணங்களால் அது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்க்க இறந்தவருக்கு கொடுத்துவைக்கவில்லை 
இருக்கும்போது அடுத்தவனையும் மனிதனாக மத்தித்திருங்கள் 
இறந்தபோதும் மனிதனாக செல்லலாம். 

எடுப்பார் பிள்ளையாகி அடுத்தவனின் உசுப்பேத்தலை கேட்டு 
சொந்த வாழ்க்கையை உங்கள் சொந்த ஊர்களிலேயே நாசம் பண்ணுவதா?

சைவமதத்தில் பிறப்பது என்னை பொறுத்தவரை ஒரு பெரும்பாக்கியம் 
அப்படி பிறந்ததும் சைவம் தெரியாது ... சைவத்தை அழிக்கவந்த  இந்துமதம் 
என்ற சாக்கடைக்குள் வீழ்ந்து  ஊர் உலகமே சிரிக்கும்படிக்கு  சேறடித்து 
நாறிப்போய் கிடக்கிறது சமூகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இது பிரதானமாக சாதி தான். மயானத்தை சுற்றி இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர்.அவர்களுக்கும் மற்றையவர்களுக்கும் ஏற்கனவே பிரச்சினை வேறு காரணங்களால் அது தான்

சிறு பரிந்துரை. சரியென்றால் ஏற்றுக்கொள்ளவும்.

தாழ்ந்த என்கின்ற சொற்பாவனையை இங்கே தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதற்கு காரணம் சாதி இல்லை என்றும் , இறந்தவரும்,அவரது உறவுகளும், ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களும் ஒரே சாதி தான் என்றும் சொல்லினம்...முதலில் அங்க மயானம் மட்டும் தான் இருந்ததாம் . இப்ப மயானத்தை  சுத்தி ஆட்கள் கொஞ்சம்,கொஞ்சமாய்  வீடு  கட்டி வந்து விட்டு மயானத்திற்கு தங்களுக்கும் ஒரே வெளி தான் அதனால் எரிக்க விட மாட்டோம் என்று நிக்கினமாம்....ஒரே சாதிக்குள் நடக்கும் பிரச்சனையை வேறு சாதியை சேர்ந்த சிலர் பின்னால் இருந்து தூண்டி விடினமாம் 

 

Link to comment
Share on other sites

இதை தடுக்கும் மக்களின் வீடுகளுக்கான போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை துண்டித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

Link to comment
Share on other sites

2 hours ago, Rajesh said:

இதை தடுக்கும் மக்களின் வீடுகளுக்கான போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை துண்டித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

அந்த ஏழை மக்களுக்கு மின்சாரமோ ஒழுங்கான போக்குவரத்தோ இல்லாவிட்டால் எப்படி துண்டிப்பீர்கள்?  இவற்றை உடனடியாக ஏற்படுத்தி கொடுத்துவிட்டு “துண்டித்து விடுவோம்” என்று மிரட்டி பாருங்கள்.

Link to comment
Share on other sites

12 hours ago, ரதி said:

 

இதற்கு காரணம் சாதி இல்லை என்றும் , இறந்தவரும்,அவரது உறவுகளும், ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களும் ஒரே சாதி தான் என்றும் சொல்லினம்...முதலில் அங்க மயானம் மட்டும் தான் இருந்ததாம் . இப்ப மயானத்தை  சுத்தி ஆட்கள் கொஞ்சம்,கொஞ்சமாய்  வீடு  கட்டி வந்து விட்டு மயானத்திற்கு தங்களுக்கும் ஒரே வெளி தான் அதனால் எரிக்க விட மாட்டோம் என்று நிக்கினமாம்....ஒரே சாதிக்குள் நடக்கும் பிரச்சனையை வேறு சாதியை சேர்ந்த சிலர் பின்னால் இருந்து தூண்டி விடினமாம் 

 

சமரசம் உலவும் இடம்தான் மயானம்। அங்கு தாழ்ந்தவன் , உயர்ந்தவன் என்று ஒன்றுமில்லை। ரதி அக்கா சொல்வதை பார்த்தால் அங்கு சாதி பிரச்சினை இல்லைபோல தெரிகின்றது। அப்படி என்றால் அங்கு சுகாதார, சுற்று சூழல் மாசுபடும் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கும்।

அங்கு இந்த மயானம் இருந்ததும் , அதட்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துமிருக்கிறது। எனவே இந்த பிரச்சினையை (சுகாதாரம், சுற்று சூழல்) தீர்க்க ஒரே வழி மின்சார மூலமாக உடல்களை தகனம் செய்வதுதான்।

இப்போது எல்லா இடங்களிலும் இப்படியான மின்சார எரியூட்டிகளை அமைத்திருக்கிறார்கள்। கனத்தை, கொஹுவளை, தெஹிவளை இப்படியாக எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது। இந்த மாயணங்கள் எல்லாம் மக்கள் அண்டிய பகுதிகளில்தான் இருக்கின்றன।

இப்போதிருக்கிற விறகு தட்டுப்பாடினால் இலங்கையில் உள்ள அநேகமான இடங்களில் மின்சார எரியூட்டிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லை மண்டான் மயானத்தில் உடலம் தகனம்

February 27, 2020

IMG_7435-800x600.jpg

புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

சிறுப்பிட்டியை சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்து பிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது , குறித்த மாயனத்தை சூழவுள்ள மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து  காவல்துறையினர்  , காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுக்களை நடாத்திய போதிலும் இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வராத நிலையில் இரு தரப்பினை சேர்ந்த நால்வரை மல்லாகம் நீதிவானிடம் அழைத்து சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த நீதிவான் , சடலத்தை எரிக்க விடாது எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை சேர்ந்த நால்வரையும் கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான் , சடலத்தை எரியூட்ட வந்த தரப்பினரை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

அதனை அடுத்து மயானத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உடலத்தை தகனம் செய்ய வந்திருந்தவர்கள் சுமார் நான்கரை மணித்தியாலம் காத்திருந்த நிலையில் , நீதிமன்ற கட்டளையை அடுத்து வல்லையில் உள்ள மண்டான் மயானத்தில் உடலத்தை தகனம் செய்ய கொண்டு சென்று உடலத்தை தகனம் செய்தனர்.

குறித்த சுடலையில் தகனம் செய்ய கூடாது என சூடலையை சூழவுள்ள மக்கள் கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் சுடலையில் உடலத்தை தகனம் செய்து வரும் தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இரண்டு வருட காலமாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி , “மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எதியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக காவல்துறையினர்  உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #வல்லை   #உடலம் #தகனம்  #சிறுப்பிட்டி  #கிந்துபிட்டிமாயனம்

 

http://globaltamilnews.net/2020/137579/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சிறு பரிந்துரை. சரியென்றால் ஏற்றுக்கொள்ளவும்.

தாழ்ந்த என்கின்ற சொற்பாவனையை இங்கே தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

மன்னித்துக் கொள்ளுங்கோநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை . இது எங்களுக்கு பக்கத்து ஊர் தான். பொதுவாக மயானத்துக்கு பக்கத்தில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு வேறு இடத்தில் காணி வாங்க அருகில் உள்ள உயர் சாதி என்று சொல்லப்படுபவர்கள் விடவில்லை . இந்த மயானப்பிரச்சினைநீண்ட காலமாக இருக்கிறது.இந்த மயானம்நாலைந்து கிராமங்களுக்கு பொதுவானது. இது இன்னுமொரு கிராமத்தினருக்கும் மயானத்துக்கு அருகில் உள்ளவர்களுக்குமான பிரச்சினை.இதை தீர்ப்பது என்றால் அவர்களுக்கு வேறு இடத்தில் காணி கொடுப்பது தான்.

மேலும் இறந்தவர் அதே சாதியை சேர்ந்தவர் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

மன்னித்துக் கொள்ளுங்கோநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை . இது எங்களுக்கு பக்கத்து ஊர் தான். பொதுவாக மயானத்துக்கு பக்கத்தில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு வேறு இடத்தில் காணி வாங்க அருகில் உள்ள உயர் சாதி என்று சொல்லப்படுபவர்கள் விடவில்லை . இந்த மயானப்பிரச்சினைநீண்ட காலமாக இருக்கிறது.இந்த மயானம்நாலைந்து கிராமங்களுக்கு பொதுவானது. இது இன்னுமொரு கிராமத்தினருக்கும் மயானத்துக்கு அருகில் உள்ளவர்களுக்குமான பிரச்சினை.இதை தீர்ப்பது என்றால் அவர்களுக்கு வேறு இடத்தில் காணி கொடுப்பது தான்.

மேலும் இறந்தவர் அதே சாதியை சேர்ந்தவர் இல்லை

நீங்கள் என்னைப் பிழையாக எடுத்துக்கொள்ளக் கூடாது வாதவூரான். பிழைகாணும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. யாழ் களத்தை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவதானித்து வருபவன். அந்த புரிதலின் அடிப்படையில் எழுதினேன். தங்கள் புரிதலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, poet said:

யாழ்கள நண்பர்களே இந்த பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியா? சுற்றுப்புற சூழல் மாசடைதலை தடுத்தலா? தயவு செய்து பின்னணி தகவல் அறிய உதவுங்கள்

இங்கே வாதவூரனை தவிர ஏனையோர் எழுதியதில் பல உண்மைக்குப் புறம்பானவை.

1. இது சாதி சம்பந்த பட்டது. இறந்தவர் வெள்ளாளர். மயானத்தை சுற்றி குடி இருப்பவர்கள் (கலைமதி கிராமம்) பள்ளர் சாதியினர் (பெரும்பாலும்).

2. மயானத்தை சுற்றி உள்ள காணியை தனியாரிடம் இருந்து தாம் முறைப்படி விலைக்கு வாங்கி அங்கே குடியிருப்புகளை அமைத்ததாயும். அதுவே இப்போ கலைமதி கிராமத்தில் ஒரு அங்கம் எனவும், தமது கிராமத்தின் அருகில் பிணத்தை எரிக்க வேண்டாம் எனவும் அந்த மக்கள் வேடுண்டுகிறார்கள்.

3. இல்லை இந்த காணிகள் எல்லாம் கள்ள உறுதியில் வாங்கியவை. ஆண்டாண்டு காலமாக இதில் நாம் பிணம் எரித்தோம், தொடர்ந்தும் எரிப்போம் என்கிறனர், மயானத்தில் இருந்து தொலைவில் வசிக்கும் வெள்ளாளர்.

4. வரலாறு யார் பக்கம் எனத் தெரியவில்லை - ஆனால் எனக்கு அது தேவையும் இல்லை. தற்போதைய நிலை என்ன? அங்கே ஒரு கிராமம் உருவாகி பல தசாப்தங்கள் ஆகி விட்டது.  அருகே பல வேறு மயானங்கள் இருக்கும் போது குடியிருப்புக்குள் கொண்டுபோய்தான் பிணத்தை ஏரிப்போம் என்பது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, எளிய யாழ்பாணத்து வெள்ளளா மனோநிலையே அன்றி வேறில்லை. இதில் மின்சாரத்தை வெட்டுங்கள் என்பதெல்லாம் சாதிய புத்தியின் அடுத்த படிநிலை.

பிகு: அவர்கள் தாழ்ந்த சாதியினர் இல்லை, தாழ்தப்பட்டவர்கள் (உங்களால்). நீங்கள் உயர்சாதியினர் அல்ல உயர்த்தப்பட்டவர்கள் ( உங்களால்).

இதை ஏற்க மனமிலாவிட்டால், பள்ளன் பறையன் என்றே எழுதுங்கள் அதில் ஒன்றும் அவர்கள் அவமானப்படப்போவதே இல்லை 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சனங்கள் ஒண்டும் திருந்தவே போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தச் சனங்கள் ஒண்டும் திருந்தவே போவதில்லை.

பொதுப்படையாக உந்தச் சனங்கள்  என கூறுவதற்கான காரணங்கள் ஏதுமுண்டோ ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.pagetamil.com/108560/

இந்த செய்தியின் உண்மை,பொய்  தெரியாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

http://www.pagetamil.com/108560/

இந்த செய்தியின் உண்மை,பொய்  தெரியாது 

 

இது நிச்சயமாக சாதி பிரச்சனைதான்.

பேஜ்தமிழ் ஒரு சாதி சார்பாக எழுதி, இதை குடும்ப பகை என சித்தரிக்கிறது.

ஒரு குடும்பத்தின் பகைக்காக ஒட்டு மொத்த கிராமமும் சேர்ந்து தகனத்தை மறிக்குமா?

எவனதோ குடும்ப விசயத்தில் நாம் ஏன் தலையிடுவான் என்று விலகி அல்லவா செல்வார்கள்?

இது பல ஆண்டுகளாக ஓடும் பிரச்சினை. பேஸ்புக்கில் போய் கலைமதி எனத் தேடுங்கள் தெரியும்.

பிகு: நான் முன்பே சொன்னேன், கள்ள உறுதியா, முன்னர் இது மயானமா என்பதெல்லாம் இப்போ வேண்டாத கதைகள். இப்போ அங்கே மக்கள் குடி இருக்கிறார்களா இல்லையா? அப்போ அங்கே எரிக்காமல் வேறு இடத்தில் எரிப்பதுதான் ஒரே வழி.

அதாவது இவர்கள் சொல்கிறார்கள், வெள்ளாள பிணத்தின் தகனத்துக்கான உரிமை, பள்ளர்களின் வாழ்வதற்கான உரிமையிலும் மேலானதாம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய பேருக்கு தமிழர் தாயகத்தில் மத சண்டை சாதிச் சண்டை தேவைப்படுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு ஒற்றுமை எனும் பெயரில் சாதிய ஒடுக்குமுறைகளை கண்டும் காணாமல் விட வேணும் என்ற தேவை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சாதி பிரச்சனை,மதபிரச்சனையைகளை தீருங்கள் அதன் பின்பு இனபிர்ச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற புரட்சிகர சிந்தனையும் உண்டு.....இது மார்க்சிய ,மவோசியவாதிகளுக்கு அதிகம் உண்டு.....
வாழ்க்கை வாழ்வதற்கே .....😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

சிலருக்கு சாதி பிரச்சனை,மதபிரச்சனையைகளை தீருங்கள் அதன் பின்பு இனபிர்ச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற புரட்சிகர சிந்தனையும் உண்டு.....இது மார்க்சிய ,மவோசியவாதிகளுக்கு அதிகம் உண்டு.....
வாழ்க்கை வாழ்வதற்கே .....😃

அந்தச் சிலரில் முதன்மையானவர் பிரபாகரன்.

ஏன்னென்றால் அவர்தான் தன் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்திலும், தன் ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் சாதி, மத பிரச்சினைகளை அடக்கி, இனப்பிரச்சினை தீர்வு காண முயன்றார்.

சம்பந்தனா, டக்லசா, சுமந்திரனா, சுரேசா, சித்தரா, கஜேந்திரன்களா, ஐங்கரநேசனா, விக்கியா,

யாழின் அத்தனை அரசியல் தலைமைத்துவத்தையும் வெள்ளாளர் கையில் வைத்திருக்கும் போது, ஊடகங்களும், புலம்பெயர் ஊடகங்களும் அவர்களினதே எனும் போது,

தமது அரசியலை முன்னிறுத்தியேனும் இடதுசாரிகள் மட்டுமே அந்த மக்களுக்கா களத்தில் நிற்கிறார்கள்.

ஏனைய நான் குறிப்பிட்ட தலைமைகள் எல்லாம் வெள்ளாள தரப்புக்கே வேலை செய்கிறார்கள்.

இது இப்படி இருக்க அந்த மக்கள் இந்த தம்மை ஆதரிக்கும் கட்சியைதானே ஆதரிப்பார்கள்.

சாதியத்தை நீங்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து வெளியேற்றினால் மக்கள் ஏன் கம்யூனிஸ்ட் பின்னால் போகப் போகிறார்கள்.

பிகு: இது இன்று நேற்றல்ல, மாவிட்டபுரம் கோவிலுக்குள் சக தமிழன் போகக்கூடாது என்று “அடங்கா தமிழன்” சுந்தரலிங்கம் கோவில் வாசலில் துவக்கோடு நின்ற காலம் தொட்டு, காரைநகரில் பொது கிணறில் மலம் ஊற்றிய காலம் தொட்டு, டிராக்டர் வைத்து தேரிழுக்கும் காலம் வரை - தமிழ் தேசிய அரசியலின் கள்ள பிள்ளைதான் வெள்ளாள சாதிய மேலாதிக்க வெறி.

பிரபாகரனின் தலைமையிலான காலம் மட்டுமே விதிவிலக்கு.

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தில் குடிமனைகள் உள்ள இடங்களில் உள்ள சகல மயானங்களும் மூடப்படவேண்டும். ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மயானங்கள்  பொது மயானங்கள் என பிரகடனபட வேண்டும். பொது மயானங்களுக்கு இடுகாடுகளுக்கு வெளியில் புதைத்தல் எரித்தல் பாரிய குற்றச் செயலாக்கப்படுதல் வேண்டும். குறைந்த காலக்கெடுவில் பொது மயானங்கள் மின்மயானங்களாக்கப்பட வேண்டும். 

இத்தகைய சமூகங்களுக்கிடையில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு தீர்த்து வைப்பதில் உறவுக்கார புலம்பெயர்ந்த தமிழர்களும்  ஊடகங்களும் பிரதேச கிராம நகர சபைகளும் நல்லாசிரியர்களும் கிராம அலுவலர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது என்பது இன்னும் உணரபடாதமை அதிற்ச்சி தருகிறது. பெரும்பாலான சாதி சமூக முரன்பாடுகள் சுடலை கோவில் குளம் சார்ந்தே உருவாகிறது.

இத்தகய வெட்கம்கெட்ட சாதி வெறியர்கள் உருவாக்கும்   முறுகல்களுக்கு நிதி மூலமாக பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஊராரும் உறவுக்காரருமே உள்ளனர்; அதனால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அதிக பொறுப்ப்பு உள்ளது. குறிப்பாக கோவில் குழம் மயானம் என்பவையே சாதி மோதல்களின் ஆரம்பப் புள்ளிகளாக இருப்பதால் தயவு செய்து இத்தகைய நிறுவனங்களுக்கு நிபந்தனையில்லாமல் பொருள் உதவி தருவதை தவிர்த்துக்கொள்ளுவது அவசியம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2020 at 2:18 PM, goshan_che said:

 

பிரபாகரனின் தலைமையிலான காலம் மட்டுமே விதிவிலக்கு.

உண்மை...

.பிரபாகரன் காலத்தில் இந்த சிவப்பு சிந்தனையாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது ?.....பிரபாகரன் சர்வாதிகாரி என்ற பிரச்சாரத்தை சர்வதேசரீதியிலும்...இந்திய அரசிடமும் முறைப்பாடு  செய்வதிலயே சிவப்பு சிந்தனையாளர்கள்நேரத்தை கழித்தனர்.....மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கவே இல்லை....ஏன்?
சிவப்பு சிந்தனையாளருக்கு தமிழ் தேசியத்தை விட சிறிலங்கா தேசியம் முதலிடம் பெற்றது.....என எடுத்து கொள்ளலாமா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2020 at 3:39 PM, poet said:

யாழ்பாணத்தில் குடிமனைகள் உள்ள இடங்களில் உள்ள சகல மயானங்களும் மூடப்படவேண்டும்.     

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.