Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப்  பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

2 hours ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்

இது தவறு!
அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம் நேற்று முளைச்ச மத பாரிமபரியங்களை பின்பற்ற தேவையில்லை.

Edited by Rajesh
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

உண்மை...

.பிரபாகரன் காலத்தில் இந்த சிவப்பு சிந்தனையாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது ?.....பிரபாகரன் சர்வாதிகாரி என்ற பிரச்சாரத்தை சர்வதேசரீதியிலும்...இந்திய அரசிடமும் முறைப்பாடு  செய்வதிலயே சிவப்பு சிந்தனையாளர்கள்நேரத்தை கழித்தனர்.....மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கவே இல்லை....ஏன்?
சிவப்பு சிந்தனையாளருக்கு தமிழ் தேசியத்தை விட சிறிலங்கா தேசியம் முதலிடம் பெற்றது.....என எடுத்து கொள்ளலாமா?

சிகப்பு சிந்தனையாளர்களின் புலிகள் சம்பந்தமான போக்கில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிகப்பு சிந்தனையாளர்களிடமும், புலிகளிடமும், தமிழ் வாக்காளர்களிடமும் பிழைகள் உண்டு.

ஆனால், அவர்கள் அப்போ நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்பதற்காக, இப்போ அவர்கள் நிற்கும் பக்கத்தில் நியாயம் இல்லை என்றாகாதே?

உங்கள் கருத்து என்ன?

1. சாதிய ஒடுக்கு முறை தவறா சரியா?

2. தவறு எனில் அதை எதிர்த்து போராட வேண்டுமா? அல்லது தமிழர் ஒற்றுமை கெடக்கூடாது என்பதற்காக அதை கண்டும் காணாமல் விட வேண்டுமா?

3. போராடவேண்டும் எனில், புலிகள் விடயத்தில் தவறான முடிவை எடுத்தார்கள் என்பதற்காக, இப்போ கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதை தடுக்க வேண்டுமா?

பிகு: இப்போ வெள்ளாளர்கள் பிரபாகரனை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், ஆரம்பத்தில் அவரின் சாதியை காரணம் காட்டி புலிகளை வெள்ளாள சாதியினர் புறக்கணித்தார்கள் என்பதும் உண்மையே.

ஆரம்பத்தில் புளொட்தான் வெள்ளாளர்களின் இயக்கம்.

வல்வெட்டித்துறை மக்களும், பிரபாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்த அவரின் சாதியை சேர்ந்த மக்களும் இல்லை என்றால், பிரபாவும் இல்லை, போராட்டமும் இல்லை.

3 hours ago, putthan said:

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

அப்படியா,

அப்போ கொஞ்சம் வெள்ளாரரை முதலில் ஒரு மயானத்தின் அருகில் குடியிருக்க வையுங்கள்.

அதன்பிறகு நான் ஏனைய சாதியினரை கூட்டி வருகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மேற்கு நாடுகளில் அடக்கஸ்தலங்களை எவ்வளவு அழகாக நேர்த்தியாகப்  பராமரிக்கிறார்கள். அங்கே செல்லும்போது பயத்திற்குப் பதிலாக காலமானவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. 

கற்பிதன்,

எமது மயானங்கள் உடலை விறகு போட்டு எரிக்கும் இடம். புதைத்து அழகாக தோட்டம் போல் பராமரிக்கும் இடமல்ல.

இங்கே மட்டும் அல்ல, யாழ் நகரில் கூட கிறீஸ்தவ இடுகாடுகளை சுற்றி, தேவாலயமும், பள்ளிகூடமும், வீடுகளும் உண்டு. ஆனால் சுடலைகளை சுற்றி எங்கும் இல்லை.

யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

அண்மையில் கூட ஒரு இந்து அமைப்பு உயர் நீதி மன்றுவரை போய் கூட, வழக்கில் வெல்ல முடியவில்லை. ( கட்டுப்பாடுகள் தளரவில்லை). 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

யூகேயில் எந்த சாதி, இனம் என்றாலும் மின்சார அடுப்புதான். 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Rajesh said:

இது தவறு!
அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம் நேற்று முளைச்ச மத பாரிமபரியங்களை பின்பற்ற தேவையில்லை.

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

Edited by Kapithan
சொற் பிழை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கற்பிதன்,

எமது மயானங்கள் உடலை விறகு போட்டு எரிக்கும் இடம். புதைத்து அழகாக தோட்டம் போல் பராமரிக்கும் இடமல்ல.

இங்கே மட்டும் அல்ல, யாழ் நகரில் கூட கிறீஸ்தவ இடுகாடுகளை சுற்றி, தேவாலயமும், பள்ளிகூடமும், வீடுகளும் உண்டு. ஆனால் சுடலைகளை சுற்றி எங்கும் இல்லை.

யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

அண்மையில் கூட ஒரு இந்து அமைப்பு உயர் நீதி மன்றுவரை போய் கூட, வழக்கில் வெல்ல முடியவில்லை. ( கட்டுப்பாடுகள் தளரவில்லை). 

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

யூகேயில் எந்த சாதி, இனம் என்றாலும் மின்சார அடுப்புதான். 

நான் கூறிய விடயம் எரிப்பதோ புதைப்பதைப் பற்றியதல்ல. மேற்கு நாடுகளில் உள்ள . கிறீத்துவர்களின் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நிற்கும்போது பயம் வருவதில்லை. அங்கு வருபவர்கள் இறந்தவர்களின் கடந்த காலத்தில் நடந்த மகிழ்வான தருணங்களை அசைபோடுவதை அவதானித்துள்ளேன். மாறாக இலங்கையில் உள்ள கல்லறைகள் சுடலைகளை அண்மிக்கவே மனதில் பயமேற்படும்.

அண்மையில் எனது நண்பர் இலங்கையின் வட புலத்தில் காணி ஒன்றைக் வேண்டுவதற்கு முயற்சித்தார். விலையிலிருந்து சகலமும் அமைந்து வந்தது. ஆனால் இறுதியில் வேண்டுவதை நிறுத்திவிட்டார். காரணம்...

காணியின் விலாசம் உறுதியில் பின்வருமாறு இருந்தது.

..... பெரிய பேயாடும் புலவு, சுடலை வீதி, .....

(அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக வீதியின் இலக்கத்தையும் ஊரின் பெயரையும் தவிர்த்துள்ளேன்.)

😂

Link to comment
Share on other sites

Yes, I have seen that in 2019, Same village Puttur in Sri Lanka, Went for a funeral and saw that.

ஆம், 2019 ஆம் ஆண்டில், இலங்கையில் அதே கிராமமான புட்டூர், ஒரு இறுதி சடங்கிற்குச் சென்று அதைப் பார்த்தேன்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

இலங்கையில் சடலத்தை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து, புது உடையோ, அல்லது பெண்ணாகின் அவரின் கூறையையோ ( கெடாமல் இருந்தால்) ஆண் ஆயின் அவரின் உயர் ரக உடை ஒன்றை அணிவித்து, பெட்டியில் கிடத்தி அதன் பின்னே கிரியை நடக்கும்.

குளிப்பாட்டும் போது அரப்பு வைப்பார்கள். நல்லெண்ணை வைத்து தலை வருவார்கள்.

இந்த வேலையை குறித்த ஒரு சாதியினர் செய்தாலும், பின்னாட்களில் ஊரில் இருக்கும் இளந்தாரிகளும் ( சாமி தூக்கிற கோஸ்டி) செய்தார்கள்.

இப்போ funeral service காரரே எல்லாத்தையும் செய்வார்கள். உடுப்பை மட்டும் கொடுத்தால் போதும்.

2 hours ago, Kapithan said:

நான் கூறிய விடயம் எரிப்பதோ புதைப்பதைப் பற்றியதல்ல. மேற்கு நாடுகளில் உள்ள . கிறீத்துவர்களின் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நிற்கும்போது பயம் வருவதில்லை. அங்கு வருபவர்கள் இறந்தவர்களின் கடந்த காலத்தில் நடந்த மகிழ்வான தருணங்களை அசைபோடுவதை அவதானித்துள்ளேன். மாறாக இலங்கையில் உள்ள கல்லறைகள் சுடலைகளை அண்மிக்கவே மனதில் பயமேற்படும்.

அண்மையில் எனது நண்பர் இலங்கையின் வட புலத்தில் காணி ஒன்றைக் வேண்டுவதற்கு முயற்சித்தார். விலையிலிருந்து சகலமும் அமைந்து வந்தது. ஆனால் இறுதியில் வேண்டுவதை நிறுத்திவிட்டார். காரணம்...

காணியின் விலாசம் உறுதியில் பின்வருமாறு இருந்தது.

..... பெரிய பேயாடும் புலவு, சுடலை வீதி, .....

(அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக வீதியின் இலக்கத்தையும் ஊரின் பெயரையும் தவிர்த்துள்ளேன்.)

😂

அப்படி பயம் ஏற்படாத சைவச் சுடலையை அமைத்து (அமைந்தால்) -அதன் பின் குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரிக்கலாம் என்கிறீர்களா?

இங்கே பிரச்சினையின் கரு சுடலை பார்க்க அழகாக இருக்கிறதா, பயம் ஏற்படும் படியாக இருக்கிறாதா என்பதல்லவே?

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமான தேவையும் உண்டு. உயர்வான புகைபோக்கி கொண்ட மின்சார அடுப்பால் எரிக்கும் மயானமாக இந்த மயானத்தை மாற்ற வேண்டும். கனடாவில் இப்படியான மயானம் உள்ளது. கொழும்பிலும் இருக்கலாம். யார் இதற்கு செலவளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. மாகாண ஆட்சி தனியாருடன் இணைந்து வணிக நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த வணிக நிறுவனம் மயானத்தை தமது உரிமையாக்கி இந்த வணிகத்தை செய்யலாம். எரிப்பது மட்டுமல்லாது, கிடைக்கும் இலவச காணியில் ஏனைய மரணசடங்கு சம்பந்தப்பட்ட சேவைகளான, பெட்டி தயாரித்தல், மலர்வளையங்கள் செய்தல், உடல் பதப்படுத்துதல், ஆவணங்கள், சட்ட உதவிகள் செய்தல் போன்ற வணிகங்களையும் ஆரம்பிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு இங்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். 

Edited by கற்பகதரு
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

அவற்றை தொட்டு குளிப்பாட்டி நிறைய சடங்குகள் செய்து, அந்த உடலம் படிப்படியா சீரழியாமல், உடன  இயற்கையோடு சங்கமிக்க வைக்கிறோம்.
அருமையா பார்ப்பரியம்

நீங்கள் சொல்வது ஏதோ உண்மைதான். ஆனால் மரணம் நடந்த வீட்டில் சாப்பிட்டால், தண்ணீர் குடித்தால் கோயிலுக்கு போகேலாது. சாமிக்கு விளக்கு வைக்கேலாது என்றும் விலகுகிறோம். அது ஏன் என்றதுதான் எனக்குப் புரியவில்லை?

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:யூகேயில் எமது முறைப்படி கட்டை போட்டு திறந்த வெளியில் பிணம் எரிப்பது சட்டவிரோதம். மிகவும் கட்டுப்பாடாக, அதி உயர் மதில்கள் கட்டி, கூரையும் கட்டி, காற்றுப் போக்க்கிகள் பொருத்திய ஒரு இடத்தில் மட்டுமே எரிக்க முடியும்.

ஏன் சட்டவிரோதம் தெரியுமா? பிணத்தை எரிப்பதால் வரும் மாசுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடத்தில் வைத்து எரித்தாலும், மனித சுக வாழ்வுக்கு கெடுதலானவை.

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

Link to comment
Share on other sites

23 minutes ago, satan said:

சாமிக்கு விளக்கு வைக்கேலாது என்றும் விலகுகிறோம். அது ஏன் என்றதுதான் எனக்குப் புரியவில்லை?

இது சைவர்களின்ட மூடநம்பிக்கைகளில் ஒன்டு என்டு தான் நான் நினைச்சிருந்தான். இப்ப இந்த வழக்கம் வெகுவா மாறிட்டு. இளம் சமுதாயம் மத்தியில இந்த நம்பிக்கை இல்லை.  

இப்ப 14 நாளுக்கு பின்னரே கண்டறியக்கூடிய கொரோனா வைரஸ் போன்ற ஏதாவது தொற்று பயங்கர நோய் காரணமாக புனித, பொது வெளில நோய்கள் பரவிடக் கூடாது என்ற ஆழமான விஞ்ஞான முடிவாகவும் இத சைவர்களின்ட ஆழமான விஞ்ஞான நம்பிக்கையா கருத வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இலங்கையில் சடலத்தை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து, புது உடையோ, அல்லது பெண்ணாகின் அவரின் கூறையையோ ( கெடாமல் இருந்தால்) ஆண் ஆயின் அவரின் உயர் ரக உடை ஒன்றை அணிவித்து, பெட்டியில் கிடத்தி அதன் பின்னே கிரியை நடக்கும்.

குளிப்பாட்டும் போது அரப்பு வைப்பார்கள். நல்லெண்ணை வைத்து தலை வருவார்கள்.

இந்த வேலையை குறித்த ஒரு சாதியினர் செய்தாலும், பின்னாட்களில் ஊரில் இருக்கும் இளந்தாரிகளும் ( சாமி தூக்கிற கோஸ்டி) செய்தார்கள்.

இப்போ funeral service காரரே எல்லாத்தையும் செய்வார்கள். உடுப்பை மட்டும் கொடுத்தால் போதும்.

அப்படி பயம் ஏற்படாத சைவச் சுடலையை அமைத்து (அமைந்தால்) -அதன் பின் குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரிக்கலாம் என்கிறீர்களா?

இங்கே பிரச்சினையின் கரு சுடலை பார்க்க அழகாக இருக்கிறதா, பயம் ஏற்படும் படியாக இருக்கிறாதா என்பதல்லவே?

அந்த மக்கள் சுடலையை பார்க்க ரம்மியமானதாக மாற்றி விட்டு பிணத்தை எரியுங்கள் என்றா சொல்கிறார்கள்? இல்லையே?

எமது குடிமனைகளுக்கு அருகில் பிணத்தை எரியாதீர்கள் என்பதே அவர்கள் கேட்பது. 

ஐயா கோசான் 

குப்பை கூழங்களை எரிப்பதையே நான் விரும்புபவனல்ல. புதைப்பதையே விரும்புபவன். அப்படியிருக்க உடலங்களை குடியிருப்புக்கள் மத்தியில் எரிப்பதை ஆதரிப்பதாக எப்படி புரிந்து கொண்டீர். நான் எந்த்வொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லையே. 

எனது எழுத்திலேதும் தவறோ ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Rajesh said:

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

இதில் கோவிக்க ஏதுமில்லை ராஜேஸ். நீவீர் எப்போதுமே சிண்டுமுடிவதால் நானும் உம்முடன் சற்றே தனகினேன்(😎) . மற்றும்படி நீங்கள் என்னைக் கோவித்தாலும் நான் உங்களுடன் வேற்றுமை பாராட்டப் போவதில்லை.  

ஏனென்றால் நான் Kapithan ஆக்கும்😀

12 minutes ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

இசுலாம் தடை செய்கிறதா . நானறிந்தவகையில் அவர்கள் உடலத்தை புதைப்பவர்கள் என நம்பியிருந்தேன். இதில்  எது சரியானது ? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

இசுலாம் தடை செய்கிறதா . நானறிந்தவகையில் அவர்கள் உடலத்தை புதைப்பவர்கள் என நம்பியிருந்தேன். இதில்  எது சரியானது ? 

நீங்கள் சொல்வது சரி.

பிணங்களை எரிப்பதற்கு தடையிருக்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Rajesh said:

உங்கட குப்பைக் கேள்விகள் அளவு கணக்கே இல்லாம நீளுது. உங்கட குணம் அப்பிடி தானே! 🤪

யோவ் ராஜேஸ்,

நான் என்ன சாதியை கேட்டேன் என்று நினைத்தோ சன்னதம் ஆடுகிறீர்.  அப்படி நினைப்பீராக இருந்தால் இதோ குறித்துக் கொள்ளுமையா.

சாதி, சமயம், பிரதேசவாதம் பார்ப்பதற்கு நான் ஒன்றும் முட்டாளலல்ல.

(இப்ப ஓகேயா ?)

4 minutes ago, மாங்குயில் said:

நீங்கள் சொல்வது சரி.

பிணங்களை எரிப்பதற்கு தடையிருக்கிறது.

👍 நன்றி.

Link to comment
Share on other sites

உண்மைதான் புத்தன். ஆனாலும் நாம் அவர்கள்போல இல்லையே. நம்மிடம் உலகத்தில் மட்டுமல்ல மயானத்திலும் சாதி இருக்கே.

Link to comment
Share on other sites

நாம் பிணங்களை எரிக்கிறோம். குடிமனைகளுக்குள் வைத்து எரிப்பது தடைசெய்யபடுதல் அவசியமல்லவா? சாதியில்லாத பொது மின் மயானங்கள் தமிழக நகரங்களில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த அனுபவம் முக்கியமல்லா?

Edited by poet
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சிகப்பு சிந்தனையாளர்களின் புலிகள் சம்பந்தமான போக்கில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர்கள் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் சிகப்பு சிந்தனையாளர்களிடமும், புலிகளிடமும், தமிழ் வாக்காளர்களிடமும் பிழைகள் உண்டு.

ஆனால், அவர்கள் அப்போ நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்பதற்காக, இப்போ அவர்கள் நிற்கும் பக்கத்தில் நியாயம் இல்லை என்றாகாதே?

உங்கள் கருத்து என்ன?

1. சாதிய ஒடுக்கு முறை தவறா சரியா?

2. தவறு எனில் அதை எதிர்த்து போராட வேண்டுமா? அல்லது தமிழர் ஒற்றுமை கெடக்கூடாது என்பதற்காக அதை கண்டும் காணாமல் விட வேண்டுமா?

3. போராடவேண்டும் எனில், புலிகள் விடயத்தில் தவறான முடிவை எடுத்தார்கள் என்பதற்காக, இப்போ கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதை தடுக்க வேண்டுமா?

பிகு: இப்போ வெள்ளாளர்கள் பிரபாகரனை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், ஆரம்பத்தில் அவரின் சாதியை காரணம் காட்டி புலிகளை வெள்ளாள சாதியினர் புறக்கணித்தார்கள் என்பதும் உண்மையே.

ஆரம்பத்தில் புளொட்தான் வெள்ளாளர்களின் இயக்கம்.

வல்வெட்டித்துறை மக்களும், பிரபாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்த அவரின் சாதியை சேர்ந்த மக்களும் இல்லை என்றால், பிரபாவும் இல்லை, போராட்டமும் இல்லை.

அப்படியா,

அப்போ கொஞ்சம் வெள்ளாரரை முதலில் ஒரு மயானத்தின் அருகில் குடியிருக்க வையுங்கள்.

அதன்பிறகு நான் ஏனைய சாதியினரை கூட்டி வருகிறேன்.

சாதிய ஒடுக்கு முறை நிச்சயமாக தவறு ஆனால் அதை போராடியோ, அறிக்கைவிட்டோ மாற்றமுடியாது என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .....பொருளாதாரரீதியிலும்,கல்வியிலும் சமநிலை அடையும் பொழுது சில வேளை சாதிய ஒடுக்கு முறை இல்லாமல் போகலாம்....புலம்பெயர் பிரதேசங்களில் இது நடைபெறுகின்றது........

சைவர்கள் இறந்தவரின் பூதவுடலை சிவனுக்கு சமனாக நினைத்து தான் சகல கிரிகைகளையும் சைவ குருக்கள் ஊடாக செய்கிறார்கள் .......ஆனால் தீட்டு என்று சொல்லி கோவிலுக்கு போக விடமாற்றார்கள்.....

ஒதுக்கு புறமாக சுடலை இருப்பதை நான் எதிர்க்கவில்லை ,,,,,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மயானத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.....

Link to comment
Share on other sites

இந்த விஞ்ஞான யுகத்தில் சமூக விடுதலைக்கு விஞ்ஞானம் என நாம் செயல்பட வேண்டாமா?  ஊருக்குள் உள்ள எரியூட்டும் பழைய தொழில்நுட்ப மயானங்களை மூடிவிட்டு / புங்காக்களாக மாற்றிவிட்டு ஒதுக்கு புறமான இடங்களில் உள்ள மயானங்களை மின்மயானங்களாக மாற்றும் பிரேரனையை முன்வைத்து ஏகமனதாக ஆதரிக்குமாறு யாழ் அங்கத்தவர்களைக் கோருகிறேன். யாழ் குடும்பம் ஆதரிக்கும் பட்சத்தில் யாழ் இணைய தொடர்பாடல் வலையை முழுமையாக பயன்படுத்தி இத்திட்டத்தை முதலில் பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மக்கள் மற்றும் நிர்வாகிகள்  மத்தியிலும் பின்னர் முழு வடகிழக்கு மக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் எடுத்து செல்லலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

யூகே பிணத்தை எரிப்பதை தடை செய்யவில்லை. திறந்த வெளியில் எரிப்பதைதான் தடை செய்கிறது.

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

2 hours ago, putthan said:

சாதிய ஒடுக்கு முறை நிச்சயமாக தவறு ஆனால் அதை போராடியோ, அறிக்கைவிட்டோ மாற்றமுடியாது என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .....பொருளாதாரரீதியிலும்,கல்வியிலும் சமநிலை அடையும் பொழுது சில வேளை சாதிய ஒடுக்கு முறை இல்லாமல் போகலாம்....புலம்பெயர் பிரதேசங்களில் இது நடைபெறுகின்றது........

சைவர்கள் இறந்தவரின் பூதவுடலை சிவனுக்கு சமனாக நினைத்து தான் சகல கிரிகைகளையும் சைவ குருக்கள் ஊடாக செய்கிறார்கள் .......ஆனால் தீட்டு என்று சொல்லி கோவிலுக்கு போக விடமாற்றார்கள்.....

ஒதுக்கு புறமாக சுடலை இருப்பதை நான் எதிர்க்கவில்லை ,,,,,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மயானத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.....

போராட்டத்தின் மூலம் சாதி பார்ப்பதை நிறுத்த முடியாது ஆனால் சாதிய அடக்குமுறையை நிறுத்தலாம். 

40-50-60 களில் மக்கள் போராடி இருக்காவிட்டால், இப்பவும் யாழில் பல சாதியினர் கோவிலுக்கு வெளியேதான் நிற்பார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

மயானத்தை பயன்படுத்த கேட்பவர்களின் பக்கமான வாதத்தை இங்கு எவரும் தருவதாக தெரியவில்லை. சாதி இங்கே சம்பந்தப்பட்டு அவர்கள் பக்க வாதத்தை வெளிவராமல் செய்துள்ளது. நீதிமன்றம் அவர்கள் பக்க வாதத்தை நியாயமானதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஏனைய மயானங்கள் தொலைவில் இருப்பதாக அவர்கள் வாதம் இருக்க கூடும். மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மயானம் அருகில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டே அங்கு குடியிருக்க ஆரம்பித்தார்கள். இப்போது மயானத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். ஆகவே, அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அதே வேளை, இன்று அவர்கள் குடியிருப்பதால், மயானத்தால் உண்டாகும் உடல்நல குறைபாடுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமான தேவையும் உண்டு. உயர்வான புகைபோக்கி கொண்ட மின்சார அடுப்பால் எரிக்கும் மயானமாக இந்த மயானத்தை மாற்ற வேண்டும். கனடாவில் இப்படியான மயானம் உள்ளது. கொழும்பிலும் இருக்கலாம். யார் இதற்கு செலவளிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. மாகாண ஆட்சி தனியாருடன் இணைந்து வணிக நிறுவனம் ஒன்றை அமைத்து அந்த வணிக நிறுவனம் மயானத்தை தமது உரிமையாக்கி இந்த வணிகத்தை செய்யலாம். எரிப்பது மட்டுமல்லாது, கிடைக்கும் இலவச காணியில் ஏனைய மரணசடங்கு சம்பந்தப்பட்ட சேவைகளான, பெட்டி தயாரித்தல், மலர்வளையங்கள் செய்தல், உடல் பதப்படுத்துதல், ஆவணங்கள், சட்ட உதவிகள் செய்தல் போன்ற வணிகங்களையும் ஆரம்பிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு இங்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். 

மயானம் அருகே குடியிருக்கும் அளவுக்கு அவர்களுக்கு வாழ இடம் இல்லை யூட். 

அவர்கள் அடாத்தாக கூட பிடிக்கவில்லை. பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 

மேலே வாதவூரன் எழுதியதையும் பாருங்கள் - அந்த பகுதியில் வேறு எங்கு யாரும் அவர்களுக்கு யாரும் காணி விற்க முன்வரவில்லை.

(எனது வீட்டை வேறு சாதி மனிதன் ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்து நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும் 😂).

அதே ஊரில் பலர் வேறு மயானங்களில்தான் எரிக்கிறார்கள். (இரெண்டு வருடத்துக்கு ஒரு சாவா நடக்கும்).

ஒரு சிலர்தான் சாதித்தடிப்பால் இப்படி செய்கிறர்கள்.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

Link to comment
Share on other sites

19 minutes ago, மாங்குயில் said:

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும் , அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் , மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார். மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். மகனே.. நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா...? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால், தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல், மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார். மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது, எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது. கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் , அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது..? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா....!! அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!! இங்க இருக்கார்.....! என்று அலறினான்....! அவ்வளவுதான் துண்டைக் காணோம் , துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!! கட்டுனது எமனாயிருந்தாலும், இல்லை எவனாயிருந்தாலும் ,,,, பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!!    
  • நடக்கபோகும்நாட்கள் நல்லதாகநடக்கட்டும் SV; பாடல்:- கண்ணதாசன்; பாடியவர்:- P.சுசிலா;
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.