Jump to content

Coronavirus, info and protection


Recommended Posts

கொரோனா வைரஸ் குறித்த புள்ளிவிவரங்களில் இதுவரை உலக நாடுகளில் மொத்தம் 1,34,769 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு 70,387 பேர் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

4,983 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, கொரோனா பாதித்தவர்களில் 52 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குணமடைந்ததாகவும், 3.6 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த தொற்றுநோய் பாதிப்பால் 59,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5,994 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சீனாவில் 80,814 பேர் பாதிக்கப்பட்டு அதில் 64,117 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர்.

இத்தாலியில் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேரில் 12,839 பேர் குணமாகியுள்ளனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2500855

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்   

கடந்த ஒரு மாதமாக, கொரோனாத் தொற்றிலிருந்து தப்புவதற்கான ஏராளமான வழிமுறைகளை, ஒவ்வொருவரும் தமது அலைபேசிகளின் ஊடாகப் பெற்றிருப்போம்; பெற்றுவருகிறோம். அவற்றில் பெரும்பாலானவை, அறிவியல் ரீதியாகத் தவறானவை. ஆனால், அவற்றை உணராமல், அவை உண்மை என்று நம்பி, நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.   

சில தினங்களுக்கு முன்னர், உலக சுகாதார நிறுவனம் இவற்றுக்கு விரிவான பயனுள்ள பதில்களை அளித்துள்ளது.   

உள்ளி பயன்படுத்துவது, இந்தத் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் என்ற செய்தி முதலாவது. ‘உள்ளி மருத்துவக் குணங்கள் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், உள்ளி சாப்பிடுவதால், கொரோனாத் தொற்று ஏற்படாது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை’ என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.   

இரண்டாவது, எமது தொண்டையை ஈரலிப்பாக வைத்திருந்தால் கொரோனா வைரஸ் தாக்காது. நீர் அருந்துவது நல்லது; ஆனால், அது கொரோனாத் தொற்றிலிருந்து காப்பாற்றாது; ஏனெனில், கொரோனா வைரஸுகள்  சுவாசத்தின் ஊடாக உட்புகுபவை.  

மூன்றாவது, வெப்பநிலை; அதிக வெப்பமுள்ள நாடுகளில் இந்தத் தொற்றுப் பரவாது. இதற்கும் அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை.  

 நான்காவது, தேசிக்காய் போன்ற விற்றமின் சீ உள்ளவற்றை உட்கொள்வது, பலனளிக்கும் என்பதாகும். விற்றமின் சீ, சில மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆனால், கொரோனாத் தொற்றிலிருந்தான பாதுகாப்புக்காக அல்ல.  

இந்தத் தகவல்கள், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் சொல்லப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், இதை ஐ.நா சிறுவர் நிதியம் மறுத்துள்ளதோடு, இந்தத் தகவலுக்கான அறிவியல் அடிப்படை எதுவுமே இல்லை என்று சொல்லியுள்ளது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கரன-வரஸ-அசசததககம-அறவயலககம-நடவ/91-246746

Link to comment
Share on other sites

Coronavirus: Europe now epicentre of the pandemic, says WHO Why is Europe the 'epicentre'?

More than 132,500 people have been diagnosed with Covid-19 in 123 countries around the world, according to the WHO.

The total number of deaths has reached about 5,000 - a figure Dr Tedros described as "a tragic milestone".

"Europe has now become the epicentre of the pandemic, with more reported cases and deaths than the rest of the world combined, apart from China," he said.

"More cases are now being reported every day than were reported in China at the height of its epidemic."

 

As well as the increases in Spain and Italy, France has now confirmed 2,876 cases and 79 deaths, up from a total of 61 deaths on Thursday.

Germany has seen 3,062 cases and five deaths. There have been 798 confirmed infections in the UK and 11 deaths.

Map of European cases

https://www.bbc.com/news/world-europe-51876784

Link to comment
Share on other sites

There are more than 142,000 cases worldwide

There are now more than 142,000 coronavirus cases globally and more than 5,300 related deaths, according to the latest figures from the World Health Organization.

Here's the latest breakdown:

  • Total cases: 142,320
  • Deaths: 5,388
  • Countries or territories with cases: 129

China remains the hardest-hit country, with close to 81,000 cases. Italy has more than 17,000 cases, followed by Iran, with more than 11,000 cases.

 

  • India declares a "a notified disaster"
  • Coronavirus cases in Spain have risen by 1,500 to more than 5,700, public health officials say. Spain is the worst affected country in Europe after Italy, which has more than 15,000 cases.
  • Italy's death toll has increased by 250, bringing the total to 1,266 on its fourth day of lockdown
  • In badly-affected Iran, the streets are being cleared to prepare all citizens for testing in the next 24 hours
  • In the UK, local elections have been postponed for a year, and Canada's parliament has been suspended temporarily
Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் - இதுவரை சிறுவர்களிற்கு பாதிப்பு குறைவு

கொரோனா வைரசினால் சிறுவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏஎவ்பி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் வைரஸ் தாக்கத்திற்குள்ளான சிறுவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் மூலம் நோய்பரவாது என்பது அர்த்தமில்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவர்கள் வைரசினால் பாதிக்கப்படுவது எங்களிற்கு தெரியும்,ஆனால் அவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை மரணிக்கவில்லை என ஜோன்கொப்கின்ஸ் புளும்பேர்க் பொது சுகாதார கல்லூரியின் தொற்று நோயியலாளர் ஜஸ்டின் லெஸ்லெர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவ்வாறு அறிகுறிகளற்ற அல்லது சிறிதளவு அறிகுறிகளை கொண்டுள்ள சிறுவர்கள் எவ்வளவு தூரம் நோயை பரப்புகின்றனர் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வுகானை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது 10 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களில் ஒரு வீதமானவர்களே நோய் தொற்றிற்கு ஆளாகியிருந்ததும் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

பத்து வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் நோய் தொற்று மிகவும் குறைந்தளவே காணப்பட்டமையும் இறப்புகள் இல்லாததும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

20 வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் பாதிப்பு குறைவாக உள்ளமைக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் என அமெரிக்காவின் சுகாதார பொகட்ரி சர்வதேச ஆய்வு மையத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/77815

Link to comment
Share on other sites

இன்றைய நிலையில், ஓரு மணித்தியாலத்திலேயே கோவிட்-19 குறித்துப் பல விடயங்கள், பல செய்திகள், அனைத்தையும் முழுமையாகக் கிரகிப்பது கடினம் என்பதை கடந்து, அதை புரிதலுக்கு உட்படுத்துவதே சவால் நிறைந்த பணி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

இறங்கு நிலையில், முதல் இடத்தில் சீனாவும், அதற்கு பின்னால் தென் கொரியாவும் உண்டு. அவர்கள் தங்கள் உச்ச நிலையை ஏய்தி கீழ் இறங்குவதாலேயே, அவற்றின் புதிய எண்ணிக்கைகள் நாளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஏனைய அனைத்து நாடுகளும் ஏறுநிலையிலேயே உள்ளன. ஏறுநிலையில் முன்னணியில் தற்போது இத்தாலி உள்ளது. அது இன்னமும் தன் உச்சத்தைத் தொடவில்லை. அதன் அடுத்த நிலையில், சுவிட்சலாந்து, நோர்வே, டென்மார்க், ஸ்பெயின் அதன் பின்னாலே ஏனைய நாடுகள் உள்ளன. அங்கு தான் நாடுகளுக்கு சவால் உருவாகிறது. அந்த உயர் நிலையை ஏய்தும் போது, அதிகரித்த எண்ணிக்கையிலானோரை வைத்திசாலை பராமரிப்பில் பேண வேண்டிய சூழல் ஏற்ப்படும். அதற்கான முன்கூட்டிய தயாரிப்பில் அவர்கள் தற்போது உள்ளனரா? என்பதே கேள்வி. இருந்தால், ஒரு சமூகமாக அதைக்கடந்து இறங்கு நிலையை அவர்கள் ஏய்துவார்கள்.

அதையே வரைபு (அ) ஊடாக நீங்கள் அவதானிக்கலாம். மோசமாக பாதிக்கப்படுபவர்களே வைத்திசாலைக்கு செல்லும் போது, அவர்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் வேண்டும். இரண்டாவது வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசம் வழங்குவதற்கான உபகரணங்கள் எவ்வளவு உண்டு என்பது. அவ்வெண்ணிக்கைக்கு ஏற்றவாறு நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பை திட்டமிட்ட முறையில் அனுமதிப்பதிலேயே, அந்த சமூகமாக கடந்து செல்லல் தங்கியிருக்கிறது.

 

 

சரியான திட்டமிட்ட முறையில் அணுமாகால், அது தன்னிச்சையாக வேகமாக அதிகரித்தால், அதனை தாங்கும் சக்தியை அந்நாட்டின் சுகாதாரத்துறை கொண்டிராக நிலையில், நிலைமை நாடு தழுவி மேலும் பாரிய சிக்கலை வளர்த்துவிடும். அதனை வரைபு (ஆ) கீழே காட்டுகிறது. 

-- முகநூல் 

இருக்க 30 இல் இருந்து 70 சதவீதமானோர் இந்நோய்த் தொற்றை சந்திப்பர் என நாட்டிற்கு நாடு வேறுபட்டுப் பேசப்டுகிறது. அது சாத்தியமே. ஆனால் அதில் 60 முதல் 80 சதவீதமானோர் தமக்கு நோய்த் தொற்று ஏற்ப்பட்டது என்பது தெரியாமலே கடந்து செல்லும் வாய்ப்பும் உண்டு.

Link to comment
Share on other sites

கையை அடிக்கடி தொற்று நீக்குவதுடன், அலைபேசியையும் தொற்று நீக்கிவிடுங்கள்

கோவிட்-19ஜ அண்டாமல் விரட்டுவதற்கு கைகளை அடிக்கடி கழுவுங்கள் என்பதே எங்கு திரும்பினாலும் நினைவூட்டப்படும் செய்தி. கோவிட்-19 காற்றுவழி மூலம் பரவுகின்ற ஒரு தொற்றல்ல. கோவிட்-19 தொற்றுள்ள ஒருவர் இருமுகின்ற போது அல்லது தும்முகின்ற போது வெளிப்படும் நீர்த்துணிக்கைகள், அருகில் உள்ள ஒரிவரின் கண், மூக்கு, வாய்ப்பகுதியை சென்றடைந்தால், அவர் வைரஸ் தொற்றிக்கு உள்ளாகலாம். கண், மூக்கு, வாய் மூலமே இது உடலினுள் புகும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறான தாக்கத்திற்கு உள்ளாமல் இருப்பதற்கே, ஒருவரில் இருந்து ஆறடி தூரத்தைப் பேணுமாறு வேண்டப்படுகிறது.

அதேவேளை ஒருவர் இருமிக்கொண்டிருந்தாலோ, அல்லது தும்மிக்கொண்டிருந்தாலோ, அவரை விட்டு நீண்ட தூரம் விரைந்து விலகிவிடுவதே பாதுகாப்பானது. இருக்க இருமலிலோ அல்லது தும்மலிலோ வெளிப்படும் நீர்துணிக்கைகள், அருகில் உள்ள பலதரப்பட்ட பரப்புகளில் படிவதற்கான வாய்ப்பும் அதிகம். அவ்வாறு படியும் வைரஸ் எவ்வளவு காலம் வாழும் என்பது விவாதத்திற்குரியது. ஆனாலும் ஒரு பக்றீரியா போன்று அதிகம் வாழும் வாய்ப்பை வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு படிந்திருக்கும் வைரசை கொண்டிருக்கும் நீர்த்துணிக்கைகளை, எமது கையால் தொட்டுவிட்டு பின்னர், அதனை எமது கண் அல்லது மூக்கு அல்லது வாய்ப்பகுதிக்கு கொண்டு செல்லும் போது, நாமே எமக்கு சூனியம் வைக்கும் நிலை தோன்றிவிடுகிறது. பலவேளைகளில் எம்மையறியாமலே எமது கை இதைச் செய்தும்விடுகிறது. அதனாலேயே கையை அடிக்கடி கழுவும் விடயம் வலியுறுத்தப்படுகிறது. வெளியில் நடமாடும் போது இது சாத்தியமில்லை என்பதால், கான்ட் சனிட்டைசர் எனப்படும், கையை தொற்று நீக்கிக் கொள்ளும் திரவம் அடங்கிய சிறிய போத்தல்களை, வாங்கி வைத்துக் கொள்வோமானால் அது இத்தகைய சூழலில் பேருதவியாக இருக்கும். இதற்குத் தான் கடைகளில் தற்போது பெரும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதன் ஒரு அங்கமாகவே கைலாக்கு எனப்படும் கைகளைக் குலுக்கிக் கொள்வதை, தவிர்க்குமாறும் வேண்டப்படுகிறது. பல வேளைகளில் இருமுபவரோ அல்லது தும்முபவரோ தமது கைகளால் பொத்தி, அதிலேயே தும்மியோ இருமியோ விடுகின்றனர். பின்னர் அவர்கள் கைகளில் தங்கிவிடும் வைரசுடன் கைகுலுக்கிக் கொள்ளும் போது, மற்றையவருக்கு அதை கடத்தியும் விடுகின்றனர். ஏன் இந்த வம்பு தவிர்த்து விடுவோமே.

அதேவேளை பிளாஸ்டிக்கில், கோவிட்-19 சற்று நீண்டு நிலைக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் பல கடைகளில் நீராகாரப் பதார்த்தங்களை தரும் போது, தற்போது பிளாஸ்டிக் குவளைகளில் தருவது தவிர்க்கப்படுகிறது. அத்துடன் ரிம் கொட்டனில் உங்கள் பிளாட்டிக் குடுவையைக் கொடுத்து, அதில் நிரப்பி வாங்குவதை வேறு தடை செய்துள்ளனர். பிளாஸ்டிக் என்று வரும் போது தற்போது பாவனையில் உள்ள நாணயத்தாள்கள் அனைத்துமே பிளாஸ்டிக்காலானவை. அது தொடர்ந்தும் பல கைகள் மாறும் வாய்ப்புள்ளதால், அது ஒரு பெரும் நோய்க்காவியாக மாறிவிடும் ஆபத்துள்ளதாலேயே, சீனா கோவிட்-19தை கட்டுக்குக் கொண்டுவருவதில், அதிலும் அதீத கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக்கைக் கொண்டிருக்கும், அதேவேளை எமது அதிகரித்த பாவனையில் உள்ள ஒரு பொருள் தான், எம் கைத்தொலைபேசி எனப்படும் அலைபேசி. இவரை எமது கையால் கையாண்டு, முகத்திற்கு அதிகரித்த எண்ணிக்கையில் எடுத்துச் செல்கிறோம். பின்னர் பேசிவிட்டு எங்கெங்கோ அடிக்கடி வைத்தும் விடுகின்றோம். கோவிட்-19 பயணிப்பதற்கு அலைபேசி பெரும் வாய்ப்பாக மாறிவிடுகிறது. ஆகவே அவர் மீதும் அதீக கரிசனை செலுத்துங்கள். முடிந்தவரை அவரையும் அடிக்கடி தொற்று நீக்கி விடுங்களேன். கோவிட்-19ஜ அருகில் அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதில் முன்னெச்சரிக்கையே முதன்மை பெறுகிறது. அதனை தொடர்ந்தும் தவறாமல் கடைப்பிடிப்பதுவும் முதன்மையாகிறது. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தொலைபேசி

-- முகநூல்

Link to comment
Share on other sites

சீனாவை பின்தள்ளி உலகில் வியாபித்தது கோவிட்-19

கோவிட்-19 வைரஸ் தொற்று என்றால், சீனாவை மையப்படுத்திய பேச்சு அருகும் வகையில், நோய்த் தொற்று எண்ணிக்கையிலும், இறப்பு எண்ணிக்கையிலும், சீனாவின் எண்ணிக்கைகளைக் கடந்து, இன்று மார்ச் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நகர்ந்துவிட்டது கொவிட்-19.

இதுவைரையிலான நோய்த் தொற்று எண்ணிக்கையிலான சீனாவின் எண்ணிக்கை, 80 ஆயிரத்து 849 ஆகும். ஆனால் சீனாவிற்கு வெளியில் ஏனைய அனைத்து நாடுகளிலுமான மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை, இன்று சீன எண்ணிக்கையை முதல் தடவையாகக் கடந்து, இதை நான் பதிவிடும் வேளையில், 88 ஆயிரத்து 366 ஆகியுள்ளது.

அதனால் உறுதிப்படுத்தப்பட்ட உலகளாவிய மொத்த எண்ணிக்கை, 1 லட்சத்து 69 ஆயிரத்து 215 ஆகியுள்ளது. சமீபகால நோய்த்தொற்றுக்களான, "சார்ஸ்", "சுவைன் புளு", "இபோலா", "மீர்ஸ்" ஆகியவற்றை விட, கோவிட்-19 இன்; தொற்றின் வேகம் மிக அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. சீரிய உடல்நிலையைக் கொண்ட இளைய வயதினர் பலர், தமக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டது அல்லது ஏற்பட்டுள்ளது என்பதை, உணரும் வகையிலான அறிகுறிகளை வெளிப்படுத்தும் வாயப்பு இல்லை, என்பதால் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை, இதைவிடப் பல மடங்காக இருக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

இருக்க கோவிட்-19 நோய்த் தொற்றினால், இறந்தவர்களின் சீனாவிலான இதுவரையிலான எண்ணிக்கை 3,199 ஆகும். ஆனால் மார்ச் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, சீனாவைக் கடந்த ஏனைய உலகளாவிய நாடுகளில், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஆகியுள்ளது. இதனால் கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, 6,499 ஆகியுள்ளது.

 

நாள் ---- புதிய நோய்த்தொற்றாளர்கள் --- இறப்புக்கள்
மர்hச் 15 --- 12748 (10) ------ 668 (8)
மார்ச் 14 --- 11139 (20) ------ 404 (10)
மார்ச் 13 -- 10907 (11) ------- 448 (13)
மார்ச் 12 -- 8362 (20) --------- 353 (7)
மார்ச் 11 -- 7266 (15) --------- 332 (11)
மார்ச் 10 -- 4567 (24) --------- 271 (22)
மார்ச் 9 --- 4390 (19) --------- 198 (17)
மார்ச் 8 --- 3892 (40) --------- 228 (22)
மார்ச் 7 --- 4049 (44) --------- 105 (27)

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
 
 

 

முகநூல் 

Link to comment
Share on other sites

நோய் அறிகுறி வெளிப்படாதவர்களே வைரசை பரப்புகின்றனர்- சர்வதேச நிபுணர்கள் தகவல்

வைரஸ் தொற்றிற்குள்ளாகி நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாமலிருப்பவர்களே வைரசினை பரவுவதற்கு காரணமாக உள்ளனர் என்பது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் வெளியாகியுள்ளது என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்றிற்குள்ளான போதிலும்  நோய்க்கான அறிகுறி வெளிப்படாமலிருப்பவர்கள்   நோய் பரவுவதற்கு எவ்வளவு தூரம் காரணம் என்பது இன்னமும் தெரியாத போதிலும்; அறிகுறிகள் தென்படாத அல்லது சிறிதளவு அறிகுறிகள் உள்ளவர்களே நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளனர் என பல நிபுணர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.

நோய் அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலமான பரவுதலே வைரஸ் பரவுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது என அமெரிக்காவின் மினெசொட்டா பல்கலைகழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை பிரிவின் இயக்குநர் மைக்கல் ஒஸ்டர்ஹோம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சர்வதேச நோய்தொற்றினை நோய் அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலமான பரவுவதலால் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் இதனை கட்டுப்படுத்துவது கடினமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிதளவு நோய் தொற்றுள்ளவர்கள் மூலம் அல்லது நோய் தொற்று அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலம் கொரோனா பரவுவதால் சார்சினை விட இதனை கட்டுப்படுத்துவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பல நிபுணர்கள் நோய்அறிகுறி வெளிப்படாதவர்களே காரணம் என்பதை ஏனைய பல நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நோய் அறிகுறி வெளிப்படாதவர்களும் சிறிய அறிகுறிகள் காணப்படுபவர்களுமே நோய் தொற்றிற்கு காரணம் என வில்லியம் ஸ்காவ்னெர் என்ற பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவர்களே சமூகங்களில் நோயை பரப்பபோகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் நோய் பரவுவது குறித்து தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/77975

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

வெப்பம் அதிகரிக்க கோவிட்-19 மறைந்துவிடுமா?

இன்று நாம் உலகளாவி எதிர்கொள்ளும் கோவிட்-19 வைரசின் சவாலை ஓரளவு வெளிப்படையாக அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆம் தற்போதைய நிலை உச்சநிலையை எய்த இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்டுவதற்கில்லை... இதில் இருந்து முழுமையாக மீள பல மாதங்களை எடுத்துக் கொள்ளப்போகிறோம்... அவ்வாறானால் கோடையில் அதிகரிக்கும் வெப்பநிலை நிவாரணியாக அமையாதா? என்பதே எங்கும் எழும் கேள்வி...

வழமையாக வைரஸ் தாக்கம் வெப்ப காலத்தில் குறைவாகவும், குளிர் காலத்தில் அதிகமாகவும் அமைவது வழக்கம்... ஆனால் அது தற்போதைய கொரோனா வைரஸ் கோவிட்-19க்கும் பொருந்துமா? என்பதே கேள்வி. சீனாவிற்கு அருகில் உள்ள வெப்பநிலை அதிகமான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியாவில் குறைந்த நோய்த் தொற்றை அதற்கு உதாரணமாக சிலர் காட்ட முனைந்தனர்... ஆனால் ஆரம்பத்தில், அவ்வாறான நாடுகளிலான போதியளவு சோதனையின்மையைக் காரணமாகக்காட்டி, தற்போது சோதனைகள் அதிகரிக்க அங்கு கண்டறியப்படும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, விரைவாக அதிகரிப்பதையும் காட்டி, வெப்ப சூழல் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலாக்கலில் பாதிப்பை ஏற்பபடுத்தவில்லை என அடித்துக் கூறுகின்றனர்.

அவ்வாறாயின் எம்மை தற்காத்துக் கொள்ள நாம் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையாக இருப்பது கோடையிலும் அவசியமென்றாகிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
 
 
-- முகநூல் 
Link to comment
Share on other sites

Power of Social Distancing

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

 

Know the difference: Self-Monitoring, Self-Isolation and Isolation [COVID19]

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

Coronavirus: Australian scientists map how immune system fights virus

Scientists in Australia say they have identified how the body's immune system fights the Covid-19 virus.

figure1

https://www.nature.com/articles/s41591-020-0819-2

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கியத் தகவல்கள்

இலங்கையை மட்டுமன்றி, முழு உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸ்தொற்றாக கொரோனா காணப்படுகின்றது.
 

ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் கொரோனா குறித்த தேடல்களும், அனுபவங்களும், அறிகுறிகளும் பத்திரிகைகலிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றது.

அந்தவையில், பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத செம்புகளின் வெளிப்பகுதிகளில் கொரோனா வைரஸ் 3 தினங்கள் இருக்கமுடியும் என்று புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

sfdfs.jpg


மேற்படி தகவலை New England Journal of Medicine என்ற சஞ்சிகை வெளியிட்டுள்ளது. வெளிப்புறத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் போது 2002 ஆம் ஆண்டு பரவிய SARS  - CoV - 1 அல்லது SARS வைரசுடன் கொரோனா வைரசை ஒப்பிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் செம்பு பொருட்களில் 4 மணித்தியாலங்களும், காட்போட் பொருட்களில் 24 மணித்தியாலங்களும், பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத இரும்பு பொருட்களின் வெளிப்பகுதியில் 72 மணித்தியாலங்களும் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் காற்றில் 3 மணித்தியால காலம் தங்கியிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்பது மிருகங்கள் மத்தியில் பெருமளவில் காணப்படும் வைரஸ் குழுமத்தைச் சேர்ந்ததாகும். விஞ்ஞானிகளினால் இது ஸுனோடிக் (Zoonotic) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இது மிருகங்கள் ஊடாக மனிதர்களுக்கு தொற்றக்கூடுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுகள் மூலம் கொரோனா வைரஸ் சில மணித்தியாலங்கள் தொடக்கம் ஒரு வார காலத்திற்கு மேற்பட்ட காலம் சுற்றாடல் பகுதிகளில் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78157

Link to comment
Share on other sites

அசுர வேகம் எடுக்கும் எண்ணிக்கைள், கட்டை இழக்கும் இத்தாலி, ஈரான், ஸ்பெயின்

உத்தியோகபூர்வ எண்ணிக்கையில், நொய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்தையும் இறப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் இன்று கடக்கின்றன. இதைப் பதிவிடும் வேளையில் அவ்வெண்ணிக்கைகள் முறையே, 1,98,543 ஆகவும் 7,988 ஆகவும் உள்ளன. நான் பலமுறை குறிப்பிட்டது போல் உண்மையான எண்ணிக்கைகள் இவ்வுத்தியோக பூர்வ எண்ணிக்கைகளை விட பல மடங்கே.

நேற்று மார்ச் 17ஆம் நாள், அன்றைய புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து 740 ஆகவும், இறப்புகளின் எண்ணிக்கை, 817 ஆகவும் பதிவாகின. இவ்வெண்ணிக்கைகளே ஒரு நாளில் எட்டப்பட்ட் அதிவுயர் எண்ணிக்கைகள் ஆகும்.

சமீப நாட்களாக ஒவ்வொரு நாளும் இவ்வெண்ணிக்கைகள் புதிய இலக்கை அடைவதுவும், எண்ணிக்கை அதிகரிப்பை அனைத்து வட்டகை நாடுகளும் வெளிப்படுத்துவதுவும், அந்நாடுகளில் அதிகரித்த எண்ணிக்கையிலானோர் சோதனைக்கு உட்ப்படுத்தப்படுவதுவே காரணமாகும். கோவிட்-19 அனைத்து நாடுளிலும் எல்லைகளைக் கடந்து, பரந்து, வியாபித்து வருகிறது. ஆனால் சோதனைகள் முறையாக முன்னெடுக்கப்படாததால், வியாபிப்பின் அளவு வெளிப்படாமல் இருக்கிறது. இது ஒரு பேராபத்தை சுட்டி நிற்கிறது.

ஏற்கனவே மூன்று நாடுகள், கோவிட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் தோற்றுவிட்டன என்றே சொல்லாம். கோவிட்டின் இறப்பு சதவீதம் 3.4 ஆகவே இருக்கிறது என்பதே உலக சுகாதார மையத்தின் கணிப்பாகும். ஆனால் இத்தாலியில் அது 8 சதவீதமாகவும், ஈரானில் 7 சதவீதமாகவும், மற்றும் ஸ்பெயினில் 5 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளை சமீப நாட்களிலான இறப்புவீதம், இந்நாடுகளில் 10 சதவீதத்தை தொட்டும் கடந்தும் இருப்பது, அவை கட்டை இழந்துவருவதை தெளிவாக காட்டுகிறது.

அதாவது தமது சுகாதார சேவையால் பேணப்படமுடியாத அளவை, கடந்துவிட்ட நிலையில், இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்தேயாகும். காரணம் மருத்துவ வசதியைப் பெறும் நிலையை, புதிய ஆபத்து நிலையை ஏய்துபவர்கள் பெறமுடியாத நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளனர் என்பதேயாகும். இந்நிலையை எய்திவிடக்கூடாது என்றே பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துப் போராடுகின்றன.

ஆனால் அதிலும் பல இப்போரை கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுவருகின்றன என்பதே நிதர்சனமான உண்மையாகும். கோவிட்-19 மனிதர்களின் கால்களுக்குக் கீழே இந்த உலகத்தையே அனைத்து அம்சங்களிலும் மாற்றியமைத்து வருகின்றது என்பது தான் யதார்த்தமான உண்மையாகும். மனித உலகம் கடந்த நூற்றாண்டில் கண்டிராத வரலாற்றுச் சவால் இதுவாகும். அதன் ஆழத்தையும், அகலத்தையும், புரிந்து கொள்ளும் பக்குவமோ, அல்லது தாங்கிக் கொள்ளும் மனோநிலையோ, இருப்பது அரிதாகவே இருக்கும்...

- முகநூல் பதிவு 

Link to comment
Share on other sites

COVID-19 will spread like a forest fire. We need to control the burn as best we can

Ashleigh Tuite and David Fisman are epidemiologists and professors at the Dalla Lana School of Public Health at the University of Toronto. Dr. Fisman is also a practising physician at the University Health Network in Toronto

There is no single measure that will control COVID-19. We can change the course of this pandemic, but it will require all of us to make dramatic, disruptive and potentially prolonged changes to our lives to reduce transmission and protect the most vulnerable in our communities. We have a choice. We act early, pro-actively, or we act late, reactively.

https://www.theglobeandmail.com/opinion/article-covid-19-will-spread-like-a-forest-fire-we-need-to-control-the-burn/

 

கொரோனா வைரஸ் சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்: மலேசிய சுகாதார அமைச்சு எச்சரிக்கை

"சுனாமி போன்ற மூன்றாம் அலை உருவாக வாய்ப்பு"

மலேசியர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவுறுத்தி உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51949212

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.