Jump to content

Coronavirus, info and protection


Recommended Posts

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பது ஏன் கடினமாகிறது?

கோவிட்-19 வைரஸ் கட்டற்று உலகலாவிப் பரவுகிறது என்பது தான் இன்றைய நிலை. ஏன் அவ்வாறு அமைகிறது? ஏன் தடுக்கமுடியவில்லை?. விமான நிலையங்களில் தொற்று உடையவர்கள் வந்திறங்கும் போது, அங்கே அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தியிருந்தால், நோய்த் தொற்று நாட்டுக்குள் வராமல்த் தடுத்திருக்கலாமே? இவை அனைத்தும் நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளுக்கான பதில் தான் அதிர்ச்சியானது.

இந்நோய் தோற்றம் கண்ட சீனாவில், ஜந்தில் நான்கு பேர், இந்நோய்த் தொற்றை யாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களோ, அந்த நபருக்கு;கு தனக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்ப்பட்டுவிட்டது என்பது தெரியாமலே இருந்துள்ளார். அதாவது அவ்வாறானவர்களிடம் நோய்த் தொற்றிக்கான அறிகுறிகள் பெரிதாக வெளிப்படவில்லை. ஆம், அவர்களுக்கு காச்சல் இருக்கவில்லை. அவர்கள் இருமவில்லை அவர்கள் தும்மவில்லை. அவர்கள் சாதாரணமாக சுவாசித்தார்கள். அதேவேளை நோய்த் தொற்று ஏற்ப்படுபவர்களில் அதிகபட்சம் 15 சதவீதமானோரே வைத்தியசாலை சிகிச்சைகளை நாடும் நிலை ஏற்ப்படுகிறது. ஏனையவர்கள் தமது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டே இன்று குணமடைய முனைகின்றனர்.

இப்போது சொல்லுங்கள், அதிகரித்த உடல் வெப்பநிலை இருக்கிறதா? இருமல், தும்மலுடன் ஒருவர் வருகின்றாரா? என விமானநிலையங்களிலோ, விமானங்களில் ஏற்றுவதற்கு முன்னரோ, சோதித்துப் பார்த்தால், 20 சதவீதமோ அல்லது அதற்கு குறைவானவர்களே மாட்டிக் கொள்ளுவார்கள். 80 சதவீதமோ அலலது அதற்கு மேற்ப்பட்டவர்கள், நழுவிச் சென்றுவிடுவார்கள். சரி அது சாத்தியமில்லை என்பது தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நாட்டிற்குள் கட்டுப்படுத்துவதில் என்ன சவால்? இங்கும் அதே சவால தான். தனக்கு நோய்த் தொற்று உண்டு என்று தெரியாமலே, ஏற்கனவே கோவிட்-19 நோய்த் தொற்றுடைய 80 சதவீதமோ அல்லது அதற்கு மேற்ப்பட்டோர், ஏனையவர்களுக்கு பரப்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகமே. அவர்கள் தாங்களாகவே சோதனைக்கு வரப்போவதில்லை. இதனால் தான் நாடுகளை பல வழிகளில் முடக்கவேண்டிய தேவை அதிகரிக்கிறது. அதேவேளை நோய்ப் பரம்பலின் வேகத்தை சரியாக அறிந்தாலே, அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே, உலக சுகாதார நிறுவனம் சோதனை, சோதனை, சோதனை, என மீண்டும், மீண்டும் அலறுகிறது.

சரி, எழுந்தமான சோதனைகளை அதிகரிக்கலாம் தானே? என நீங்கள் கேட்டால், அது சரியான யோசனை தான். இங்கு தான் அடுத்த சிக்கல் வெடிக்கிறது. சோதனை செய்வதற்கான போதிய சோதனைப்பொதிகள் இன்றி, இன்றும் அல்லாடுகிறது அமெரிக்காவே. அவ்வாறானால் ஏனைய நாடுகளின் நிலையை ஒரு முறை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.. இருக்க உலகில் இன்று அனைத்து நாடுகளும், நோய்த் தொற்றிக்கு இலக்காகி, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் நிலையில், இந்தப் சோதனைப் பொதிகளை யாரும் இன்னொவருக்கு வழங்கும் நிலையில் இல்லை. இதனால் நாளும் அதிகரித்துச் செல்லும் தொற்றின் எண்ணிக்கை எல்லை கடக்கிறது என்பதே உண்மை. முன்னேற்ப்பாடாக இருந்திராத நிலையில், துரத்தியாவது பிடிக்க முயன்று, அதில் மோசமாக நாம் இன்று உலகளாவிய நிலையில், தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்நிலை சொல்லும் செய்தி, இன்று நாளும் வெளியாகும் புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, வெறும் சிறு துண்டு தான். அதே போன்று இறந்துபோகும் பலர், முன்கூட்டியே நோய்த் தொற்று உடையவர்கள் என்று கண்டறியப்படாததால், கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையிலும் அடங்கமாட்டார்கள். இந்நிலையில், உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், காத்துக் கொள்வதில் புரிதலுடன் அதீத கவனம் எடுத்துச் செயற்பட்டுக் கொள்ளுங்கள்..

முகநூல் 

 

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

அடுத்து என்ன?

அடுத்து என்ன? என்பது குறித்த ஒரு தெளிவான பார்வை இன்றி உலக அரசியல்வாதிகள் அல்லாடுகின்றனர். அறிஞர்கள் இப்புதியவகை வைரசை எதிர்கொள்வது எவ்வாறு என்று வழிகாட்டுவதற்கான தீர்க்கமான முடிவுகளுக்கு போதிய தரவுகள் இன்றி தவிக்கின்றனர்

சீரிய திட்டமிடலுக்கு போதிய அவகாசத்தை வழங்காது கோவிட்-19 வேகமான பரம்பலை மேற்கொள்கிறது. அது நாட்கள் செல்லச் செல்ல மேலும் வலுப்பெறுகிறதா? வட்டகைக்கு வட்டகை அதன் தாக்கம் மாறுபடுகின்றதா? எனத் தேடுதல்கள் குவிகின்றன. அன்றாட வாழ்க்கையில் சவால்கள் தொடர்ந்தும் இதனால் அதிகரிக்கின்றன. வேலைவாய்பிழப்பு, வருமானம், வீட்டிற்குள் முடக்கம், கல்வி முடக்கம், சுகாதார அனுசரணை எனப் பலவிடயங்கள் முதன்மையாகின்றன. இவை அங்கலாப்பையும், மன அழுத்தத்தையும் அனைவரிடமும், அனைத்து வயதிலும் அதிகரிக்கிறது.

இருதயநோய் உள்ளவர்கள், நீரழிவு நோய் உள்ளவர்கள், ஆஸ்மா போன்றவையினூடாக துரையீரல் பாதிப்பு உடையவர்கள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், புற்றுநோய்த் தாக்கம் உடையவர்கள் ஆகியோருக்கு இத்தொற்று ஏற்ப்பட்டால் அது அவர்களில் அதிகரித்த தாக்கத்தை ஏற்ப்படுத்திவிடும் என்பதே தரவு.

கனடாவிலும், இங்கிலாந்திலும் மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தென்ஆசியர்கள் இந்நாடுகளில் உள்ளவர்களை விட மேற்கண்ட தாக்கங்களை மூன்று மடங்கு அதிகமாக கொண்டிருப்பதாக கண்டறியக்கட்டுள்ளது. ஆகவே மேற்குலகில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர் சமூகம் இதனால் அதிகரித்த தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமே. எனவே இச்சவாலை ஒரு சமூகமாக எதிர்கொள்வோம். ஒருவருக்கு ஒருவர் ஆதாரசக்தியாக, உளவள துணையாக தாங்கி நிற்ப்போம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

 

உலகில் எம்மை அனைத்து முறைமைகளிலும், ஆற்றல் உள்ள வலிமைமிக்க சமூகமாக வெளிப்படவேண்டும் என்பதற்காவும், அதியுயர் ஈகத்தை செய்த எங்கள் வீரமறவர்களின் அந்தக்கனவைத் தாங்கி, இன்றைய சவாலையும் ஒரு சமூகமாக தீர்க்கமான செயற்பாடுகளுடன் நாம் எதிர்கொள்ளவேண்டும். இன்றைய நிலையிலாவது, ஒரு ஒற்றுமை எம் சமூகத்தில் ஏற்ப்படட்டும். அந்தப் பொறுப்பை அனைவரும் ஏற்ப்போம். எமது சமூகத்தில் உள்ள அனைத்துத்துறைசார் வல்லுனர்களும், சமூகத்தின் நலன்சார்ந்து இணையும் புள்ளி ஒன்று இங்கு வெளிப்படுகிறது. இன்றைய சவாலையும் ஏனைய சமூகங்களைவிட சிறப்பாக இப்பூமிப்பந்தில் கடந்தோம் என்பது வரலாறாகட்டும். தொடர்ந்தும் நிறையவே தயார் படுத்தலுக்கான தகவல்களுடன் சந்தித்துக் கொள்வோம்.

 

 

முகநூல் பதிவு ஒன்றில் இருந்து சில மாற்றங்களுடன் 

Link to comment
Share on other sites

காலச்சக்கரம்
பெய்ஜிங் சீனாவில் இருந்து இணைகிறார்
மருத்துவர் சி சதீஸ்குமார்
தொகுத்து வழங்குவது
சி ஸ்ரீகுமார்

UzpfSTY1NTcwNTI2MToxMDE2MzA5ODAxNDU0NTI2

UzpfSTY1NTcwNTI2MToxMDE2MzA5ODAxNDU0NTI2

Link to comment
Share on other sites

Coronavirus: When will the outbreak end and life get back to normal?

 

It is clear the current strategy of shutting down large parts of society is not sustainable in the long-term. The social and economic damage would be catastrophic.

What countries need is an "exit strategy" - a way of lifting the restrictions and getting back to normal.

But the coronavirus is not going to disappear.

If you lift the restrictions that are holding the virus back, then cases will inevitably soar.

"We do have a big problem in what the exit strategy is and how we get out of this," says Mark Woolhouse, a professor of infectious disease epidemiology at the University of Edinburgh.

"It's not just the UK, no country has an exit strategy."

It is a massive scientific and societal challenge.

https://www.bbc.com/news/health-51963486

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'For people who still don't take it seriously. ITALY: February 23: 155 Cases February 28: 888 Cases March 18: 41,035 Cases Canada March 13: March 19: 150 Cases 801 Cases Wash your hands Do your Part Stay at Home' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

Link to comment
Share on other sites

தண்ணீரையும் 'ப்ளீச்சையும்' சேர்த்து வீட்டில் கோவிட்டை அழிக்கும் திரவத்தை தயாரித்து வீட்டில் பாவிக்கலாம்.  

 

Link to comment
Share on other sites

Hydroxychloroquine and azithromycin as a treatment of COVID-19: results of an openlabel non-randomized clinical trial

Hydroxychloroquine_final_DOI_IJAA-24-1024x546.jpg

https://www.mediterranee-infection.com/hydroxychloroquine-and-azithromycin-as-a-treatment-of-covid-19/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.