• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை பதிவு செய்ய..

Recommended Posts

நீங்கள் அவசரத்தில் வந்து இது எனது உறுதிக்காணி தானே அரசாங்கம் இன்னும் விடுவிக்கவில்லை அதனால பதிய வாறன் என்டு பதிய வெளிக்கிட்டால்.ஆம் பதியலாம் உங்கள் கிராம உத்தியோகத்தரும் அதனை உறுதிப்படுத்தி தருவார்.நீங்களும் பதிந்து விட்டோம் என்ற சந்தோசந்தில் சென்றுவிடுவீர்கள் அங்கு தான் அடுத்த கட்ட விடயங்கள் ஆரம்பமாகின்றது.

j5Rcu5VCdz8Gqex1bz-Ubqd1UdzSMPfjDB5A72aIx3P2u1GZU8byUw30Ol6WP5Y

ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்களின் காணிகளில் பாவனையற்று அல்லது எந்தவித நடவடிக்கையற்றும் இருக்கும் காணிகள் தொடர்பில் தகவல் திரட்டு தேவையான அளவு உண்டு அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல் திரட்டும் உண்டு.
 
எவர் ஒருவர் இலங்கையில் எந்தவிதமான பதிவுகளும் அற்று புலம்பெயர் தேசத்தின் பிரஜையாக மட்டும் உள்ளாரோ அவரால் இலங்கையில் சொத்துக்களோ வங்கி நடவடிக்கைகளோ மேற்க்கொள்ள முடியாது.ஏனனில் அவர் இலங்கை பிரைஜை அல்ல.
 
அரச நிறுவனங்களில் அல்லது திணைக்களங்களில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும் உள்ளவர்கள் தங்களின் கடமைகளை சுற்றுநிரூபங்களுக்கு உட்பட்டு  மாத்திரம் செய்பவர்கள்.ஆக கிராம உத்தியோகத்தரின் வேலை உங்களின் காணி உறுதியை சரிபார்த்து உறுதிப்படுத்துவது மாத்திரம் அதுவே காணி பதியும் இடத்தில அந்த உறுதிப்பாட்டை வைத்து பதிந்து தருவது.எவரும் இதன் பின்னால் வரப்போகும் சிக்கல்களை பற்றி கதைக்கவோ தெளிவுபடுத்தவோ மாட்டார்கள் அது அவர்களின் சுற்றுநிருப கடமையும் அல்ல.
 
ஆக இலங்கை பிரஜை இல்லாத உங்களுக்கு பரம்பரை காணி இருந்தாலும் அதனை எந்த விதத்தில் உங்களால் உங்களுடையது என உரிமை கோர முடியும் இலங்கைப்பிரையையே இல்லாத நீங்கள் எப்படி சொத்து வைத்திருக்க முடியும்.இப்படி எப்பயாவது சிந்தித்துள்ளீர்களா? ஓடிவந்து பதிந்தால் அந்த தகவல் திரட்டை வைத்து பலதுறைக்கு உங்கள் காணிகளை சுவீகரிக்காவிட்டாலும் அரசுடமையாக்குவதற்க்கு நீங்களே தகவலை குடுக்கின்றீர்கள் அல்லவா.
 
இதற்க்கு செய்யக்கூடியது இரட்டை பிராயாவுரிமை எடுத்து உங்களின் சொத்துக்கள் வாக்குரிமை என்பவற்றை பாதுகாக்க முடியும்.இல்ல இலங்கையில் உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரின் பெயரில் பெயர் மாற்றம் செய்து கொடுப்பது.
 
இது இரண்டில் நீங்கள் எதையும் செய்யாது விட்டு உணர்ச்சி அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் அல்லது  விளக்கம் கெட்டதனமாக விதண்டாவாதமாக எங்கட காணி தானே ஊரில சண்டை நடக்காட்டி  நாங்கள் ஏன் போறம் எங்கட காணி பரம்பரை காணி தானே எண்டு கதைச்சுக்கொண்டு நிப்பியல் எண்டால் நில்லுங்கோ உங்கட காணிய ஏதாவது ஒரு அரச தேவைக்கானதாக மாற்றிவிடுவார்கள் அது கட்டாயம் பாதுகாப்புத்தரப்புக்காக தான் இருக்க வேணும் என்றில்லை அதாவது மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் ஒரு திணைக்களத்தின் பிரதேச காரியாலயம் கூட அமைக்க முடியும் அவ்வளவு ஏன் பிரதேச இன விகிதாசாரத்ததை குலைக்க கூடியவாறு 2 சோனக அல்லது சிங்கள குடும்பத்தை கூட குடியேற்ற முடியும்.
 
அதுக்கு பிறகு ஆர்ப்பாட்டம்  போராட்டம் என கட்சிகள் தங்கட வாக்கிற்க்கான வேலைகளை தொடங்கும் சில போலித்தேசியவாதிகள் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் செய்வார்கள் வீடியோ எடுக்கிறவஙாகள் உங்களிட்ட வந்து உணர்ச்சிகரமான பதிவுகளை எடுத்து தங்கட வருவாயை பார்ப்பார்கள். சில சட்டம் தெரிஞ்சவங்கள் தங்கட வருமானத்த பாக்க வழக்கு போடுவம் எண்டுவாங்கள் எல்லாம் நடக்கும் ஆனால் காணி திரும்ப வருமா? வராது.கொஞ்ச நாளைக்கு பிறகு இதுவும் பேரினவாதத்தின் அடக்குமுறை என ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணீட்டு முகநூல்காரங்களும் போய்டுவம் நீங்கள் அடுத்த தரம் ஊருக்கு வரும் போது பேரப் பிள்ளைகளுக்கு இது முந்தி தாத்தாடது பிறகு கிப்ட்டா குடுத்தாச்சு எண்டு விழுந்தவன் மீசைல மண்ணில்லை என போய்டுவியல் ஆனால் இதனால வரப்போற அடுத்த கட்ட பிரச்சினைகள் ஊரில இருக்கிறவனுக்கு தான்.
 
ஆக தயவு செய்து உங்கள் உடமைகளை சொத்துக்களை வங்கிகளில் உள்ள வைப்புக்களை எடுக்க ஓடிப்போய் முட்டி முக்கி நிற்க்காமல் படிப்படியாக உங்களின் ஆவணங்களை சரி செய்து கைவசம் வைத்துக்கொண்டு செல்லுங்கள்.ஒன்றுமில்லாமல் போய் அரசுடமையாக்காதீர்கள் தமிழர் சொத்துக்களை.
 
உங்களிடம் அடையாள அட்டை இருந்தால் உங்கள் வாக்காளர் பதிவை ஒரு தரம் சரி பாருங்கள் அதனை உறுதிப்படுத்துங்கள்.அது இருந்தாலே பாதி சிக்கலுக்கு நிவாரணம் சரி
எதுவுமே இல்லை என்றால் முதலில் அவற்றை எடுக்க தகுந்த நடவடிக்கையை செய்யுங்கள்.
 
சிலர் சொல்வார்கள் ஏன் நாங்கள் எதுவுமே இல்லாமல் செய்துள்ளோமே என்று.ஆம் செய்துள்ளீர்கள் ஆப்பு கண்ணுக்கு தெரியாது ஏன் என்றால் நீங்களாகவே ஏறி அதுக்கு மேல இருக்கிறியல் என்றதால அதன் விபரம் வரும் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பெற்று வருபவரால் காட்டப்படும். 
 
 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this