Jump to content

தோற்கடிக்கப்படாத புலிகளின் சித்தாந்தம்


Recommended Posts

கே. சஞ்சயன்  

 image_d229bd22d7.jpg 

 

சாம்பியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, நெருக்கமான இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளோ தொடர்புகளோ கிடையாது. இலங்கை இராணுவம், ஆண்டு தோறும் நடத்துகின்ற, கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்குகளில், சாம்பியா இராணுவம் பற்கேற்பது வழக்கம்.  

அதுதவிர, சாம்பியா இராணுவத்தின் பயிலுநர் அதிகாரிகள் ஆறு பேரும், மேஜர் நிலையிலுள்ள பெண் அதிகாரி ஒருவரும் தற்போது, இலங்கையில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கற்கை நிறுவனங்களில், பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  

இதற்கு அப்பால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரியளவிலான பாதுகாப்பு உறவுகள் இல்லாத போதும், ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள சாம்பியா, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்காத நிலையிலும், அந்த நாட்டின் இராணுவத் தளபதியின் இலங்கைப் பயணம், பரபரப்புடன் பேசப்பட்டது.  

கடந்த மாதம் 21ஆம் திகதியில் இருந்து, 26ஆம் திகதி வரையான ஐந்து நாள்கள், சாம்பியா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் W.M Sikazwe, மேலும் ஆறு இராணுவ அதிகாரிகள் சகிதம், இலங்கையில் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.  

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சாம்பியா இராணுவத் தளபதி சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வெளியிட்ட கருத்தே, சாம்பியா இராணுவத் தளபதியின் இலங்கைப் பயணம் பிரபலமடைவதற்குக் காரணம்.  

இந்தச் சந்திப்பின் போது, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்துப் பேசவில்லை. 

21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், இஸ்லாமிய தீவிரவாதம், அதனைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம், அதற்கான மூலோபாயங்கள் குறித்தே, இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள், அதிகளவில் கருத்துகளை வெளியிட்டு வந்தார்கள். திடீரென, சாம்பியா இராணுவத் தளபதியுடனான சந்திப்பில், விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களின் சித்தாந்தம் குறித்தும் பேசியிருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தான், புலிகளின் சித்தாந்தம் பற்றி அவர் பேசியிருக்கிறார்.  

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற இராணுவ அதிகாரிகளில் ஒருவர். போரில் முக்கிய பங்காற்றிய 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிப்போரில் நடந்த மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய அதிகாரிகள் என்று வரிசைப்படுத்தப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.  

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இராணுவத்தில் இருந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றியவர் என்ற வகையிலும், கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, இறுதிக்கட்டப் போரை முன்னெடுப்பதில் அவருடன் இணைந்து செயற்பட்டவர் என்ற ரீதியிலும், காணப்பட்ட நெருக்கமே, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் பதவியைப் பெற்றுக் கொடுத்திருந்தது.  

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது, இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால் தான், இலங்கை இப்போது சர்வதேச அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.   

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் இணைந்து, போரில் பங்கேற்ற தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்தமைக்கும், போர்க்கால மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளே காரணம்.  

இஸ்லாமிய தீவிரவாதம், கடந்த ஆண்டு இலங்கைக்கு பேரிடியாக அமைந்த போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட போர், பதினோர் ஆண்டுகளாகியும் இலங்கை இராணுவத்தை, அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டு தான் இருக்கிறது.  

அதன் வெளிப்பாடாகத் தான், விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்புமே இல்லாத சாம்பியா இராணுவத் தளபதியுடன், புலிகளின் சித்தாந்தம் குறித்துப் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன பேசியுள்ளதற்குக் காரணமாகும்.  

2009 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி, முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, “பிரபாகரனின் ஈழக்கனவு, நந்திக்கடலில் புதைக்கப்பட்டு விட்டது. புலிகளின் தனிநாட்டுக் கோட்பாடு, தோற்கடிக்கப்பட்டு விட்டது” என்று கூறியிருந்தார்.  

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் கூட, புலிகளின் சித்தாந்தம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவே தெரிவித்திருந்தார்.  

எனினும், இந்த விடயத்தில் யதார்த்தபூர்வமான கருத்தை வெளிப்படுத்தி வந்தவர், இறுதிக்கட்டப் போரில் இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மட்டும் தான். அவர், “விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் உயிர்ப்புடனேயே இருக்கிறது” என்று கூறிவந்திருக்கிறார்.  

புலிகளைத் தோற்கடித்து விட்டதாகவும், புலிகளின் சித்தாந்தம், ஈழக்கனவை நந்திக்கடலில் புதைத்து விட்டதாகவும் பிரகடனம் செய்த அரசியல் தலைவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இப்போது புலிகளின் சித்தாந்தம் அழிக்கப்படவில்லை என்று கூற முனைகிறார்கள்.  

விடுதலைப் புலிகள், தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அது அவர்களின் கனவாக, சித்தாந்தமாக இருந்தது என்றாலும், தனிநாட்டுக் கோரிக்கை என்பது, தனியே விடுதலைப் புலிகளால் மாத்திரம் முன்வைக்கப்பட்டதொன்று அல்ல.  

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ் மக்களின் ஆணையைக் கேட்டிருந்தது. அந்த தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையும் அளிக்கப்பட்டது.  

இலங்கைத் தீவில் ஒன்றாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பிய போதும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளும், இன வன்முறைகளும், நில ஆக்கிரமிப்புகளும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் தான் தனிநாட்டுக் கோரிக்கையை தமிழர்கள் முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு முக்கிய காரணம்.  

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தபோது, தமிழ்த் தலைவர்கள் யாரும், தனிநாட்டைப் பிரித்துக் கொடுக்குமாறு வலியுறுத்தவில்லை. சிங்களப் பேரினவாத அடக்குமுறைகள் தான், அவ்வாறான நிலைக்குத் தமிழர்களைத் தள்ளிச் சென்றிருந்தது. தமிழர்களின் தரப்பில் இருந்தே, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்தனர்; தலைமை தாங்கினர்.   

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தனிநாட்டுக் கோட்பாடு அழிந்து விடும் என்றும், அவ்வாறான சிந்தனை தமிழர்களுக்கு இனி வராது என்றே, சிங்கள அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் நினைத்திருந்தனர்.  

போர் முடிந்து, ஒரு தசாப்தத்துக்குப் பின்னரும், தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதும், பெரும்பான்மையின அரசியல்வாதிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் புலிகளின் சித்தாந்தப் பிரசாரமாகவே தெரிகிறது.  

புலிகளின் சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்கு, தனிநாட்டுக் கொள்கையை வலுவிழக்கச் செய்வதற்கு, அரசாங்கத்துக்கு போதிய வாய்ப்புகள் இருந்தன. அதை போருக்குப் பின்னர், ஆட்சியில் இருந்த இரண்டு அரசாங்கங்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  

போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நியாயத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  அதை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. இனிவரும் அரசாங்கங்களும் செய்யப் போவதில்லை.  

அடுத்து, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்கி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதையும் இந்த 11 ஆண்டுகளில் நிறைவேற்ற எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்த இரண்டு முக்கியமான காரணிகளையும் தீர்க்காமல், விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாட்டைத் தோற்கடிக்கவே முடியாது.  

ஏனென்றால், தமிழ் மக்கள் எப்போதெல்லாம் ஆட்சியாளர்களால் அநீதிகளை எதிர்கொள்கிறார்களோ, அடக்குமுறைகளைச் சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் நினைப்பு வரும். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நிலை வருமா என்ற சிந்தனை வரும்.  

அவ்வாறான சிந்தனை வரும் வரை, செயற்பாட்டு நிலையில் இல்லாவிடினும் கருத்து நிலையிலாவது புலிகளின் சித்தாந்தம், உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.  இராணுவ ரீதியாகப் புலிகளை அழித்து விட்டாலும், புலிகளின் சித்தாந்தத்தையிட்டு இன்றும் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்புகளும் அச்சம் கொண்டிருக்கின்றன.  

அதைத் தோற்கடிப்பதற்கான வழிகள் அரசாங்கத்துக்குத் தெரியும். ஆனால், அந்த வழிகளைப் பின்பற்றுவதற்கு சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனை, கோட்பாடுகள் அரசாங்கத்துக்கு இடமளிக்காது.  புலிகளின் சிந்தாந்தத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலரே, பிரசாரம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. சிங்களப் பௌத்த பேரினவாத சிந்தனை தான், அதன் உயிர்ப்புக்கு இன்னமும் காரணமாக இருக்கிறது என்பதே உண்மை.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தறகடககபபடத-பலகளன-சததநதம/91-246144

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.