Sign in to follow this  
தமிழ் சிறி

இந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்

Recommended Posts

trump-1.jpg

இந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்குமென பாகிஸ்தான் குற்றம்  சுமத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக கடந்த 24ஆம் திகதி, அரசமுறை பயணமாக இந்தியா வந்தார். தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது டிரம்ப், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது பயணத்தின் இறுதி நாளான 25ஆம் திகதி பிரதமர் மோடிஈடிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். இந்த கொள்முதல் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில்  இந்தியா- அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கூறுகையில்,”ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள பிராந்தியத்தை அமெரிக்கா- இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேலும் சீர்குலைத்துவிடும்.

பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிடையேவும் மிகவும் ஆக்ரோஷமான தன்மையை பின்பற்றும் இந்தியா குறித்து உலக நாடுகளுக்கு நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

http://athavannews.com/இந்தியா-அமெரிக்க-ஆயுத-ஒப/

Share this post


Link to post
Share on other sites
On 2/27/2020 at 11:59 PM, தமிழ் சிறி said:

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கூறுகையில்,”ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள பிராந்தியத்தை அமெரிக்கா- இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேலும் சீர்குலைத்துவிடும்

இன்று தாலிபான்கள் எவ்வாறு பாகிஸ்தான் அரசை, உளவை மீறி அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டார்கள் என்பதும் பாகிஸ்தானின் பலத்திற்கு/பயங்கரவாத முன்னெடுப்புக்களுக்கு  ஒரு பின்னடைவு தான்   

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, ampanai said:

இன்று தாலிபான்கள் எவ்வாறு பாகிஸ்தான் அரசை, உளவை மீறி அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டார்கள் என்பதும் பாகிஸ்தானின் பலத்திற்கு/பயங்கரவாத முன்னெடுப்புக்களுக்கு  ஒரு பின்னடைவு தான்

😂   பாகிஸ்தானுக்கு கவலை தான்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • #நுண்ணுயிரிகள் நுண்ணுயிரிகள் கண்ணுக்கு தெரியாதவை. அதில் பல நன்மை அளிப்பவை. சில மட்டுமே கெடுதல் விளைவிக்கும். அதிக நோய் பரப்புகிற கிருமி வோல்பேக்கியா எனும் பாக்டீரியா. ஆனால் அது மனிதர்களைத் தாக்குவதில்லை. மாறாக அது இறால், புழுவைத் தாக்கும் என்கிறார்கள். முற்காலத்தில் பலர் வியாபாரம் செய்ய வெளிநாடுகள் சென்றாலும் கடல் பயணத்தில் உப்புக்காற்றில் அழிந்துவிடும் என நம்பினர். ஒரு வேளை கிருமிகள் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை வென்றனர்.   #வைரஸ் வைரஸ் என்ற சொல்லுக்கு நச்சு என்பது பொருள். கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி. இது மிக நுண்ணிய துகள்களாகும். இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை. பொதுவாக 20nm 300nm வரை விட்டமுடையவை. TMV வைரஸின் அளவு 300*20nm ஆகும். (1892ல் கண்டறியப்பட்ட புகையிலை தேமல் வைரஸ்) வைரஸ் ஒரு ஒட்டுண்ணி. தனித்திருக்கையில் அவை செயலற்றவையும் தீங்கற்றவையும் ஆகும். ஆனால் பொருத்தமான செல்களில் ஒட்டிக்கொண்டால் சுறுசுறுப்பாகிவிடும். ஓர் உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லிலுள்ள திட திரவப் பொருள்களை உட்கொண்டு பல்கிப் பெருகிவிடும். இதுவரை 5000 வகை வைரஸ்கள் அறியப்பட்டுள்ளன. ஜலதோசத்தில் தொடங்கி எய்ட்ஸ் வரை நம்மைப் பாதிக்கின்றன.   #வேலைனு வந்துட்டா வைரஸ்காரன் உயிருள்ள பொருளில் முதலில் தங்கி அதிக வைரஸ்களை உற்பத்தி செய்கிறது. பின்னர் தாக்குவதற்கு நிறைய செல்களைத் தேடி அழிக்கிறது. HIV உள்ளிட்ட வைரஸ்கள் சில மரபணுக்களையே வைத்திருந்தாலும் அதன் பாதிப்பு அதிகம். இவை அனைத்தையும் மின்னணு நுண்ணோக்கியில்தான் காண முடியும். பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களுக்குப் பாக்டீரியோபேஜ் என்று பெயர். வைரஸில் RNA அல்லது DNA ஏதாவது ஒன்றுதான் காணப்படும். தாவரங்களை தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள். மனிதர்களை DNA மற்றும் RNA இரண்டுமே தாக்கும். HIV விலங்கு வைரஸாக இருப்பினும் RNAவைக் கொண்டுள்ளதால் மனிதர்களைத் தாக்கும். எய்ட்ஸ் கிருமியால் மனிதர்கள் இறப்பதில்லை. இது T லிம்போசைட் எனும் முக்கிய வெள்ளை அணுவில் புகுந்து வளர்ந்து அதை அழிக்கிறது. இதனால் சாதாரண கிருமிகளை அழிக்கும் திறனைக் கூட உடல் இழந்துவிடுவதால் மரணம் வருகிறது. 1959ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதலில் HIV கண்டறியப்பட்டது. #வைரஸ் பரவுவதல் வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாகப் பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக். * எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். * எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக டெங்குக் காய்ச்சல் வரும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும். * பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தற்போதைய கொரோனாவைக் குறிப்பிடலாம்.   #வைரஸ் நோய்கள் தாவரங்களுக்கு 10 வகையான நோய்கள் வைரஸ்களினால் ஏற்படுகின்றன. விலங்குகளுக்குக் கோமாரி நோய், வெறிநாய் கடி, குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு சளி, ஹெப்பட்டைடிஸ் B, புற்றுநோய், சார்ஸ், எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பொன்னுக்கு வீங்கி, இளம்பிள்ளைவாதம், சிக்கன் குனியா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை ஏற்படுகிறது. தற்போது கொரோனா நோய் severe acute respiratory syndrom=Sars-2 என்ற வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் உருவாக்கும் நோயே கோவிட்-19. இதுவரை உலகை உலுக்கிய முக்கிய நோய்க்கிருமிகளாக ஜிபா, நிபா, எபோலோ, சார்ஸ், மெர்ஸ், லஸ்ஸா, மார்பர்க் ஆகியவற்றைச் சொல்லலாம்.
  • 1990ம் ஆண்டுக்கு முத‌ல் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளுக்கு இந்த‌ பாட‌சாலை நிக‌ழ்வு கிடைத்து இருக்காது / 1992ம் ஆண்டு , முத‌லாம் ப‌குப்பு ப‌டித்த‌ போது , கார்த்திகை மாத‌ம்   மாவிர‌ நாள் தொட‌ங்க‌ ப‌த்து நாளுக்கு முத‌லே பாட‌சாலையில் ஒவ்வொரு வ‌குப்பில் ப‌டிக்கும் பிள்ளைக‌ள் , பாட‌சாலை க‌ம்ப‌த்தில் எம‌து தேசி கொடி ஏத்தும் போது ( ஏறுது பார் கொடி ஏறு பார் என்ர‌ எங்களின் தேசிய‌ கீத‌ம் ப‌டிக்க‌னும்) பெரிய‌ வ‌குப்பு அக்கா மார் தான் தேசிய‌ கீத‌ம் பாடுவின‌ம் அவையோட‌ சேர்ந்து என்ர‌ வ‌குப்பு பிள்ளைக‌ளும் பாட‌னும் 🙏 / அடுத்த‌ நாள் ம‌ற்ற‌ வ‌குப்பு பிள்ளைக‌ளின் நாள் அவையும் நிரைக்கு நின்று தேசிய‌ கொடி ஏறும் போது சேர்ந்து பாட‌னும் / மேல் வ‌குப்பு ப‌டிச்ச‌ அண்ணா மார் பின் நாளில் போராட்ட‌த்தில் இணைந்து த‌ங்க‌ளின் உயிரை தாய் ம‌ணுக்கு தியாக‌ம் செய்தார்க‌ள் / அவ‌ர்க‌ளின் முக‌ம் ஒரு போதுன் என் க‌ண்ணில் இருந்து நீங்காது 😓/    
  • உண்மைதான் சிறித்தம்பி.நானும் களவாய் படம் பாத்து அடிவாங்கினது கொஞ்சம் இல்லை. ஒருக்கால் மாமியார் வீடு படம் பார்க்க வின்சர் தியேட்டருக்கு போனனான். அப்ப ஊர் பொடியன் என்னை கண்டுட்டான்.அப்பவும் நான் அவனிட்டை கெஞ்சி மண்டாடி வீட்டை சொல்லிப்போடாதை எண்டு சொல்லி தேத்தண்ணியும் கடலை வடையும் வாங்கிக்குடுத்தனான்.  அப்பிடியிருந்தும் அவன் முதல் வேலையாய் செய்த வேலை வீட்டை போய் அண்ணரிட்டை மாமியர்வீட்டுக்கு நான் போனதை சொன்னது தான்.அதுக்கு பிறகு பூவரசம் கேட்டியாலை விழுந்த பூசை இருக்கே எழுத வார்த்தைகள் இல்லை.நான் குளறினது அஞ்சாறு வீடு தள்ளி கேட்டிருக்கும். இந்தபாட்டு இல்லாட்டி மாமியார்வீடு  எண்ட சொல்லை கேட்டால் அந்த நன்றி கெட்ட நாயின்ரை ஞாபகம் தான் வரும்.தேத்தண்ணியும் வடையும் வாங்கிக்குடுத்தும் நன்றி விசுவாசம் இல்லாத பன்னாடைய நினைச்சால்...🤬  
  • என்ன கொரோனா வைரஸ் வந்தாலும்,  இயற்கை அனர்த்தம் வந்தாலும் அதை அரசியலாக்குவதுதான்  எமக்கு உள்ள  திறமை. நாட்டில் அல்லல் படுவோர் பலர் இருந்தாலும், எமக்கொரு  ஆபத்தென்றால் நமக்கு கைகொடுப்பவர்கள் இவர்கள் தான். நாம்  இப்போ செய்வதை சமயம் வரும்போது  வேறு வழியாய் பெற்றுகொள்வோமில்ல.
  • ஏன் இல்லை , நிறைய‌ வ‌ழி இருக்கு / இந்த‌ விளையாட்டை கையில் எடுங்கோ பொழுது போர‌து தெரியாது / மூளைக்கும் ந‌ல்ல‌ம் இந்த‌ விளையாட்டு 🤞 நேற்று இங்கைத்த‌ வெள்ளைய‌ர் வ‌ந்து கேட்டார் ச‌ங்க‌ர் இந்த‌ விளையாட்டு விளையாடுவோமா என்று , நான் சிரிச்ச‌ ப‌டியே சொன்னேன் ஓம் வாங்கோ விளையாடுவோம் என்று 😁, ஆளுக்கு 2-5 என்று வென்று விட்டேன் 😁,  முதிய‌வ‌ருக்கு 77வ‌ய‌து  டென்மார்க் நாட்டு ராணுவ‌த்தில் இருந்த‌வ‌ர் / இந்த‌ விளையாட்டு குறைந்த‌து 20பேருட‌ன் விளையாடி இருப்பேன் , ஒரு ஆள் இட‌ம் தான் தோத்த‌ நான் , மீதி பேருட‌ன் வென்று இருக்கிறேன் / நீங்க‌ளும் உங்க‌ட‌ பிள்ளைக‌ள் க‌ண‌வ‌ர் ஓட‌ விளையாடி பாருங்கோ அந்த‌ மாதிரி இருக்கும்