Jump to content

மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை

February 28, 2020

 

Millennium-Challenge-Corporation-.jpgஅமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தினூடாக, மீளப் பெறப்படாத வகையில், 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (85 பில்லியன் ரூபாய்) நிதி உதவி கிடைக்கப்பெற இருந்ததாகவும் இது, 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியாகவும் 32.5 மில்லியன் டொலர்கள் சேவையாகவும் வழங்கப்படவிருந்தன.

இந்த நிதியுதவியானது, பிரதான இரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே வழங்கப்படவிருந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரச் சுதந்திரம், நியாயமான நிர்வாகம், பொதுமக்களுக்கான முதலீடுகள் போன்ற சில நிபந்தனைகள் உள்ளதனால் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால், இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதாக இது பற்றி ஆராய்ந்த குழு, தனது இடைக்கால அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்  #மிலேனியம்  #ஒப்பந்தம்  #கையொப்பம்  #பந்துலகுணவர்தன

 

http://globaltamilnews.net/2020/137589/

Link to comment
Share on other sites

எந்த நாட்டிடம் எதை வைத்து 'உதவி' கேட்பது?  

இல்லை இராணுவத்தை வைத்து மக்களை அடக்கவேண்டிய தேவை வரும். 

Link to comment
Share on other sites

எம்.சி.சி. தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டது - அஸாத் சாலி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்வரை கைச்சாத்திடுவதில்லை என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி அல்லது பிரதமர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.


asath.jpg


இதேவேளை, நாட்டில் இன, மதங்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்புவதறகாக பாராளுமன்ற துறைசார் பேற்பார்வை குழு சில பரிந்துரைகளை செய்திருக்கின்றது. அதில் பள்ளிவாசல்கள் குர்ஆன் மத்ரசாங்களுக்கு சட்ட திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்திருக்கின்றது.

ஆனால் கடந்த சில வருடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இன்னும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன. மஹர சிறைச்சாலை வளாகத்தில் பல வருடங்களாக செயற்பட்டுவந்த பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் முஸ்லிம் பள்ளிவாசல் மதில்களில் புத்தர் சிலை வைக்க மேற்கொண்ட முயற்சிகளால் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில் பொருத்தமில்லாத இடங்களில் புத்தர் சிலைகளை வைப்பது இன,மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதற்கு தேவையான பரிந்துரைகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. அதனால் இன,மத நட்புறவை கட்டியெழுப்புவதென்றால் சகல மதங்களுக்கும் ஒரேமாதிரியான சட்ட முறைமைகளை ஏற்படுத்தவேண்டும். அதில் பக்கச்சார்ப்பு இருக்க முடியாது என்றும் கூறினார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/76743

Link to comment
Share on other sites

பலவேறு குழுக்களும் பண உதவி, மற்றும் சம்பள உயர்வு கேட்டு போராடடம் நடாத்தி வருகிறார்கள்.
அரசோ, பாராளுமன்றத்தில் அதிக கடனை, அதவாது அதிக பணத்தை அச்சிட முனைகின்றது.

இன்னும் சில வருடங்களில் இலங்கை ரூபாய் மேலும் சரியாலம்.
 

image_10459dedbd.jpg

Fair Fare Taxi Drivers Association at the Bandaranaike International Airport staged a  protest outside Presidential Secretariat demanding solutions for the difficulties they are faced with, while engaged in their profession. Pix Damith Wickramasinghe

http://www.dailymirror.lk/caption_story/Mete-out-justice/110-184017

image_d0dbf87890.jpg

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியவர்கள், இன்றைய தினம், வடக்கு மாகாண சபைக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

About 1,000 school teachers and principals protested in Colombo on February 14 to demand higher pay and better conditions. The demonstration marked the entry of another key section of Sri Lankan workers into the growing struggles that have developed since President Gotabhaya Rajapakse came to power.

image.jpg?rendition=image480

https://www.wsws.org/en/articles/2020/02/21/sled-f21.html

Link to comment
Share on other sites

மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமக்கே

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/CcjjTAdA00Y 

http://www.hirunews.lk/tamil/235435/மூன்றில்-இரண்டு-பெரும்பான்மை-எமக்கே
         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் சவாலை அடக்குவதற்கு இன்னொரு தாக்குதலை எதிர்பார்க்கலாம்  

14 hours ago, ampanai said:

பலவேறு குழுக்களும் பண உதவி, மற்றும் சம்பள உயர்வு கேட்டு போராடடம் நடாத்தி வருகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

On 2/29/2020 at 12:21 AM, ampanai said:

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எடுத்துக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்க தயாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.