Sign in to follow this  
nunavilan

உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன்

Recommended Posts

உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன்

 

     by : Litharsan

ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் சார்பாக  ஜெனிவாவுக்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்ர கூறகையில், “ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலே, ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள 30/1 40/1 தீர்மானங்களில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அதன் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்வதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது மிகவும் அபாயகரமான செய்தி. இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தாங்கள் புரிந்த போர்க் குற்றங்கள், மனிதப் படுகொலைகள் குறிப்பாக தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறி நீதியை வழங்கவேண்டிய ஒரு காலகட்டம் இது.

இந்நிலையில், ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால், புதிய அரசாங்கம் வந்ததையடுத்து இந்த விடயங்களிலிருந்து விலகிக்கொள்வதாகக் குறிப்பிடுவது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும் மையப்படுத்தியே அவர்கள் இதனைக் கையாள்கிறார்கள் என்பதே உண்மை.

உலகத்திலேயே மனித குலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையை மூடி மறைத்தல் அல்லது தாங்கள் அதிலிருந்து விலகுவதாக ஒருபக்கச் சார்பாக இலங்கை விலகிக் கொள்ளுதல் என்பது உலக நாடுகள் கொண்டுவருகின்ற தீர்மானங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அடுத்துவரும் காலங்களில் உலகத்தில் இவ்வாறு மனிதப் பேரவலங்கள் நடைபெற்றால் இந்த உலகம் என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை முன்வைத்துள்ளது.

ஆகவே, இலங்கையின் இந்த செயற்பாடு தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களை நீதியின் தராசுக்குக் கொண்டுசெல்ல முனைகிறது. இலங்கை இவ்வாறு பல ஒப்பந்தங்களிலே பின்வாங்குதல் அல்லது அவர்கள் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வது அவர்களுக்குப் புதிய விடயம் அல்ல.

இப்பொழுது ஒரு சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொண்ட விடயத்தில் இருந்துகூட இலங்கை விலகுவதாகக் குறிப்பிடுவது இலங்கையின் கடந்தகால சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைகளை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆகவே இலங்கையின் இந்தப் போக்கு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் நாடுகளைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

எனவே, நீதியின் தராசில் உலகத்தினுடைய மனித உரிமைகள் ஆணையகம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி மீண்டும் இனப்படுகொலை நடைபெறாவண்ணம் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/உலக-நாடுகளால்-கொண்டுவரப்/

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, nunavilan said:

உலகத்திலேயே மனித குலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையை மூடி மறைத்தல் அல்லது தாங்கள் அதிலிருந்து விலகுவதாக ஒருபக்கச் சார்பாக இலங்கை விலகிக் கொள்ளுதல் என்பது

இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை  சபையையும் தனது பாராளுமன்றம், நீதிமன்றம், புத்த சங்கம் என்று நினைத்து அந்த  முடிவை எடுத்திருக்கும். அதற்கு ஐக்கியநாடுகள் சபையும் ஒரு காரணம். 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, stripes

பத்து  வருசத்துக்கு பிறகு.....  தூசு தட்டும் ஐ.நா.
அதுக்கு... இதுகள், கோட்டு.. சூட்டு...  
போட்டுக் கொண்டு வெளிக்கிட்டுதுகள்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • காசு வேணும் தான் அதற்காக காசே தான் எல்லாம் என்று இருக்க கூடாது ...மற்றவர்கள் எல்லாம் கடையை மூடும் போது தமிழர்கள் மட்டும் கடையை துறந்து வைத்து கொண்டு இருக்கினம் ...டக்சி ஓடுதல் இந்த இக் கட்டான கால கட்டத்தில் தேவையா? கஞ்சியை,  கூழை குடித்துக் கொண்டு வீட்டை இருக்கலாம்  
    • எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள். பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் . அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்    
    • அகல் விளக்குகளை  ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்.!! சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விளக்குகளை அணைத்த கையோடு பொதுமக்கள் பட்டாசுகளையும் வெடித்தனர்.கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை 9 நிமிடங்கள் நிறுத்த வேண்டும்; அப்போது அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள், டார்ச் லைட், செல்போன் லைட் ஆகியவற்றை ஒளிர விடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதனை ஏற்று இன்று நாடு முழுவதும் 9 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, செல்போன் லைட்டுகள் ஒளிரவிடப்பட்டன.அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாமல் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. பிரதமர் மோடி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்குத்தான் இந்த விளக்கேற்றுதலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பொதுமக்களோ தீபாவளியைப் போல இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர். தற்போதைய லாக்டவுனால் காற்றின் மாசு குறைந்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று இரவு ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது. பட்டாசுகளுடன் அமர்க்களம். லாக்டவுனால் 10 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர் பொதுமக்கள். எந்த ஒரு கொண்டாட்டமும் எதுவும் இல்லை.வீட்டின் நான்கு சுவர்களையும் மோட்டு வலையும்தான் பார்த்து கொண்டிருந்தனர் பொதுமக்கள். இப்போது பிரதமர் மோடி விடுத்த அழைப்பை பயன்படுத்தி பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடி தீர்த்துவிட்டனர் நம்ம மகா ஜனங்கள். https://tamil.oneindia.com/news/chennai/people-celebrates-pm-modi-s-invite-with-firecrackers-381820.html