Sign in to follow this  
ampanai

ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் குறித்து மீள் பரிசிலனை செய்யவும் : ஐ.நா.விடம் விக்கி கோரிக்கை!

Recommended Posts

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சர்வதேச சமூகத்தினர் முன்னிலையில் தொடர்ந்து பத்தாண்டு காலமாக தனது கடப்பாடுகளைத் ஏற்றுவந்த இலங்கை அதே தொடர் ஒழுங்குடன் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கத் தவறி வந்துள்ளது.

உண்மையில் முதல் இரு வருடங்கள் முடிந்து மேலும் கால அவகாசம் கொடுக்க விழைந்தபோது அக்காலகட்டத்தில் எம்முட் சிலர் அமெரிக்க பிரதிநிதியைச் சந்தித்து கடந்த இரு வருடங்களில் கண்கூடாக முன்னேற்றத்ததைக் காணமுடியாத நிலையில் மேலும் கால அவகாசம் கொடுப்பது அவசியமா என்று கேட்டிருந்தோம்.

தன் பாற்பட்ட பல கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை, போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாகப் பதிலளித்தலுக்கான பொறிமுறையொன்றை உருவாக்க தொடர்ந்து மறுத்து வந்தமை அதன் பிழையான செயல்களுள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

பிரிவினைப் பயங்கரவாதஞ் சார்பாக 2009 மே மாதம் தொடக்கம் இன்று வரையில் இலங்கையில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை என்று பெருமையுடன் கூறிய மதிப்பிற்குரிய அமைச்சர் குணவர்த்தன அவர்கள் அப்படியாயின் ஏன் 1979ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத (தற்காலிக)த் தடைச் சட்டத்தை இதுவரை இலங்கை கைவாங்கத் தவறியுள்ளது என்பது பற்றிக் காரணம் கூறத் தவறியுள்ளார்.

கற்றுணர்ந்த பாடங்கள், மீள் நல்லிணக்க சமரச ஆணைக்குழுக்களை நியமிப்போம் என்று 2010ல் கூறிய கூற்றின் மறு உருவமே நேற்றைய தினம் (26.02.2020) உள்ளக விசாரணை ஆணைக்குழுவை நியமிப்போம் என்று ஜெனிவாவில் கூறிய கூற்று.

இவ்வாறான உள்ளக விசாரணை ஆணைக்குழுவை அமைப்போம் என்ற இலங்கையின் புதிய கூற்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இனிவரும் பத்து வருடங்களில் கூட உண்மையைக் கண்டறிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்பதே யதார்த்தம். இலங்கையின் இவ்வாறான வாக்குறுதிகள் மதிப்பற்ற வாக்குறுதிகள்.

காரணம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து வந்துள்ள சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் ஒருமித்த கருத்தை உதாசீனம் செய்யும் இந்தச் செயற்பாடு சம்பந்தமாக போதுமான பதில் நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என்பதே எமது திடமான வேண்டுகோள்.

தனது உலகளாவிய நியாயாதிக்க அதிகாரத்தைப் பாவிக்க வேண்டிய கடப்பாடு தற்போது சர்வதேச சமூகத்தைச் சார்ந்துள்ளது. அதைப் பாவித்து மிகக் கொடூரமான இவ்வாறான குற்றங்களைப் பற்றி ஆராயும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது அதே மாதிரியான அதிகாரம் கொண்ட வேறு மன்றங்களின் முன் இலங்கையின் படையணியினரின் பணியாளர்களை நிறுத்த சர்வதேச சமூகமானது முன் வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் பிரேரணைகளைத் தொடர்ந்து மதிக்காது மீறி வந்துள்ள இலங்கையின் நடத்தையையும் நாட்டின் மக்களிடையே குறிப்பிடட சில பகுதியினருக்கு எதிராக அரசாங்க அனுசரணையுடன் பலகாலமாக நடாத்தி வந்த தவறான செயல்பாடுகளையும் கணக்கில் எடுக்கும்போது இலங்கையை ஐக்கிய நாடுகள் பட்டய உறுப்புரை 6 ன் கீழ் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றே நாம் நம்புகின்றோம்.

குறித்த உறுப்புரை 6 பின்வருமாறு-

தற்போதைய பட்டயத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகளைத் தொடர்ந்து மீறிச் செயற்படும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் ஒருவரை பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் குறித்த நிறுவனத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் வெளியேற்ற முடியும்

எனவே பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொது சபையானது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இன்று வரையில் இலங்கை உலகை உதாசீனம் செய்து வந்துள்ளது. உலகானது நடவடிக்கை எடுக்க இப்போது தருணம் உதயமாகியுள்ளது. ஒரு உறுப்பு நாடு தனது கடப்பாடுகளை மீற இன்று ஐக்கிய நாடுகள் இடமளித்தால் நாளை இந்த உலக நிறுவனத்தின் சாவு மணியைக் கேட்கநேரிடும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76734

Share this post


Link to post
Share on other sites

உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டால் இலங்கை ஐநா வுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு இல்லாமல் போகாதோ ?

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, Kapithan said:

உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டால் இலங்கை ஐநா வுக்குப் பதிலளிக்கும் பொறுப்பு இல்லாமல் போகாதோ ?

போகும். ஆனால், சிறிலங்கா என்பது ஒரு 'சுதந்திர நாடு' என்ற பெயரை இழந்து விடும். அதன் பின்னால் அதுவும் ஒரு அங்கீகரிப்படாத, அதற்கு போராடும் ஒரு நாடாக, உதாரணம் பாலஸ்தீனம், ஆக மாறிவிடும். 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, ampanai said:

எனவே ஐக்கிய நாடுகளின் ஒருமித்த கருத்தை உதாசீனம் செய்யும் இந்தச் செயற்பாடு சம்பந்தமாக போதுமான பதில் நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என்பதே எமது திடமான வேண்டுகோள்.

நீங்க உப்புடிச் சொல்ல சுமந்திரன் ஓடிப்ப்போய் குய்யோ முறையோ என்டு குளறி சொறிலங்காவை காப்பாத்திடுவார்.

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ampanai said:

உலகானது நடவடிக்கை எடுக்க இப்போது தருணம் உதயமாகியுள்ளது. 

உலகம் உண்மையாக அரசாங்கத்திற்கு எதிராக  நடவடிக்கை எடுக்க நினைத்திருந்தால், இவ்வளவு காலம் வீணாக  கடந்திருக்காது. ஏன்? இந்தப் போர் ஏற்பட்டு இத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் இருந்திருக்காது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எங்க படத்தைக் காணவில்லை. படத்தைப் போட்டாத் தான் நம்புவம். இல்லாவிட்டால் பொய்ச் செய்தி.
    • கொரோனா எதிரொலி: ஆஸ்திரேலிய கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் எல்லைகளை மூட முடியுமா? ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை வெறும் சிறு அடையாளம் மூலமே கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருக்கும். தூசி நிறைந்த எல்லைப்புற சாலையில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநில எல்லைக்குள் நுழைகிறோம் என்பதை கூட அறிந்திருக்க முடியாத அளவிலேயே சூழல் இருந்திருக்கின்றது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், இதை அத்தனையையும் மாற்றி இருக்கிறது. இந்த சூழல், மாநிலங்கள் இடையே எல்லைகள் அமைத்து வேலி அமைக்கும் நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியிருக்கிறது. இவ்வாறு தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா,  குயின்ஸ்லாந்த் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடியிருக்கின்றன. இது முன்னெப்போதும் யோசித்துக்கூட பார்க்க இயலாத முடிவாகும். இந்த நிலையில், மாநில எல்லையை கடக்க எண்ணும் பயணிகள், 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். தீவு மாநிலமான தாஸ்மானியாவும் இவ்வாறான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. குயின்லாந்த் எல்லையை மூடுவதாக அறிவித்திருந்த அம் மாநில முதல்வர் அன்னஸ்டாசியா பாலாஸ்குக், சரக்கு மற்றும் அத்தியாவசிய பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இச்சூழலில் தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் மீது 13,345 ஆஸ்திரேலிய டாலர்களை வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 1919ல்பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் இதுபோன்றதொரு எல்லைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதில்லை. ஒரு பக்கம் கொரோனாவுக்கான கட்டுப்பாடு என்றாலும் எல்லை மூடல் பல சிக்கல்களையும் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உதாரணத்திற்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் குயின்ஸ்லாந்த் மாநிலத்தில் பணியாற்றுகிறார் என்றால் அவர் பணியாற்றும் மாநிலத்தில் நுழைய சிறப்பு அனுமதியை பெற்றிட வேண்டும். இச்சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற பல வெளிநாட்டினர்கள் உள்புற பகுதிகளில் சிக்கயுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற 75,000 பேர் பூங்காக்கள் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதே சமயம் தற்போதைய நிலை, இதுபோன்று மாநிலங்கள் இடையேயான எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில்  மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியலமைப்பு சட்ட வல்லுநரான பேராசிரியர் ஏனி டவோமி, வர்த்தகம் தடைப்பட்டாலும் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்கிறார். “மக்கள் எல்லைகளை கடப்பதற்கு மாநிலங்கள் தடை விதிக்கவில்லை, மாறாக மருத்துவ பரிசோதனைகளும், தனிமைப்படுத்து கொள்ளுதலும் கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ளன,” எனக் கூறுகிறார் பேராசிரியர் டவோமி. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், அடிப்படை சேவைகளான மருத்துவம், பள்ளிகள், பொது போக்குவரத்து, காவல்துறை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஆனால்,  வர்த்தகம், பாதுகாப்புத்துறை, குடிவரவுத்துறை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அதிகாரங்கள் மத்தியிலேயே குவிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய மாநிலங்களிடையே தனித்துவமான உச்சரிப்புகளோ அடையாளங்களோ பெரிதும் இல்லாமையால் மாநில உரிமைகளை பாதுகாப்பது பற்றி பெரிய அக்கறை காட்டுப்படுவதில்லை. மாநில முறைகளை ஒழிக்கலாமா என்று கூட நீண்ட விவாதம் நடந்திருக்கின்றது. ஆனால், தற்போதைய அச்சுறுத்தல் மாநிலங்களின் தேவையை வலிமையாக்கியிருக்கிறது எனலாம். கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக, எட்டு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஆட்சிப்பகுதிகளின் தலைவர்களைக் கொண்டு போர்க்கால பாணியிலான தேசிய அமைச்சரவையை பிரதமர் ஸ்காட் மாரிசன் அமைத்திருப்பது வழக்கத்திற்கான மாறான நகர்வாக பார்க்கப்படுகின்றது. சிறந்த பொருளாதார மற்றும் சமூக கொள்கை உருவாக்கத்திற்கு ‘ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி முறை’ தடையாக இருப்பதாகக் கூறுபவர்களுக்கு இந்த அமைச்சரவை ஓர் அசாதாரண உருவாக்கம் எனக் கூறியிருக்கிறார அரசியல் விமர்சகர் டாம் புர்டன். http://www.vanakkamlondon.com/கொரோனா-எதிரொலி-ஆஸ்திரேல/
    • கொரோனவும் உலக பொருளாதாரச்சரிவும்!v    
    • எமது தளபதிகள், தோற்றுப் போய், மக்களையும் அழியவிட்டு தாமும் மறைந்து போனார்கள். அமெரிக்க தளபதிகள் இன்றும் மேலாண்மையுடன் இருக்கிறார்கள். வித்தியாசம் தெரிகிறதா?
    • Global cases: At least 1,141,190 Global deaths: At least 60,960 US cases: At least 278,942 US deaths: At least 7,174 Canada’s Trudeau won’t retaliate over US blocking mask imports   CDC director says coronavirus won’t be a one-time foe NYC mayor pleads for more doctors and nurses: ‘The worst is actually ahead’   Spain’s daily coronavirus death toll falls for second day in row Iran’s coronavirus death toll rises to 3,452, health ministry says   France overtakes China as number of confirmed cases rises above 83,000 UK unlikely to relax lockdown measures till end May, top epidemiologist says NY governor says China is donating 1,000 ventilators to the state