Jump to content

ஒன்டாரியோ கராத்தே சம்மேளன தலைவராக தமிழர் ஒருவர் தெரிவு


Recommended Posts

கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனம் கராத்தே கனடா என அழைக்கப்படுகின்றது.


உலக கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் இது இயங்கி வருகின்றது. கராத்தே கனடா, கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சம்மேளனத்தை ஸ்தாபித்து உள்ளது.

88230727_687359888673905_432425525781200

( சிவா வடிவேலு ஒன்டாரியோ - கராத்தே சம்மேளனத்தின் நடப்பாண்டின் தலைவர் )

அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

88975810_813825879105299_385142854019291
(சின்னையா பாண்டியராஜா சிரேஷ்ட கராத்தே பயிற்றுனர்)

c.jpg

(கராத்தே பிரதம பயிற்றுனர் சின்னத்தம்பி மனோகரனுடன் சில பயிற்றுனர்கள் )


இந்த நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ வாக்குகள் வழங்கக்கூடிய அங்கீகார உறுப்பினர்களாக இலங்கையில் பல வருடங்கள் கராத்தே கலையை பயிற்றுவித்த பிரதம பயிற்றுனர் சென்செய் .சின்னையா பாண்டியராஜா மேலும் இலங்கையை சேர்ந்த சென்செய். சின்னத்தம்பி மனோகரன் இவர்களுடன் இன்னும் சில இலங்கையைச் சேர்ந்த பயிற்றுனர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/76711

Link to comment
Share on other sites

27 minutes ago, ampanai said:

அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த நாள் ஞாபகம் நினைவில் வந்ததே நண்பனே, வாழ்த்துக்கள்  !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி இவரை கனடாமேடையிலை கலர் துண்டு போர்த்தபடி காணலாம்..

Link to comment
Share on other sites

1 hour ago, alvayan said:

அப்ப இனி இவரை கனடாமேடையிலை கலர் துண்டு போர்த்தபடி காணலாம்..

நீங்கள் ஒருவருக்கு பொன்னாடை போர்க்க என்னென்ன தகுதிகள் வேண்டுமென்று பட்டியலிட்டு இவருடன் ஒப்பிட்டால் தெரியும் இவருக்கு போர்த்தலாமா இல்லையா என்று.  

பின்குறிப்பு : எனது பார்வையில் இவர் பல எமது இளையவர்களுக்கு ஒரு வழிகாட்டி (role model) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 4:31 PM, ampanai said:


88975810_813825879105299_385142854019291
(சின்னையா பாண்டியராஜா சிரேஷ்ட கராத்தே பயிற்றுனர்)

வாழ்த்துக்கள் பாண்டிராஜ் அண்ணா. 

என்ன‌வென்று சொல்வது. 

பாடசாலை நாட்களில் நீங்கள் தான் எங்களுக்கு ஹீரோ. 70 களின் பிற்பகுதி 80 களின் ஆரம்பம் மறக்க முடியாத காலங்கள் நீங்கள் ஸ்ரேடியத்தில் இறங்கினாலே கைத்தட்டல். ஓடத்தொடங்கினால் மேள சத்தம். shotokan கராத்தேயின் ஆரம்ப‌ முன்னோடி. நீங்கள் சத்தத்துடன் செய்யும் ஒவ்வொரு katas சின் நேர்த்தியையும், வேகத்தையும்,  அந்த நாட்களில் சிறுவனாக இருந்து நேரில் பார்த்து ரசித்தவன் enter the dragon, way of the dragon போன்ற படங்களை பார்த்து ரசிக்க‌ வைத்தவர்.

மறக்க முடியாத காலங்கள்

 வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

பின்குறிப்பு : எனது பார்வையில் இவர் பல எமது இளையவர்களுக்கு ஒரு வழிகாட்டி (role model) 

பொதுவாக பாடசாலைகளிலும் வீட்டிலும் பிள்ளைகள் கண்டிப்பானவர்களிடம், ' நீ அதை செய் இதை செய்யாதே' என்ற அன்பான ஆனால் அடக்கும் தொனியிலான கட்டளைகளை  பெறுவார்கள். சில வேளைகளில் அது அவர்களின் மனஉறுதியை நசுக்குவதாயும் மன உளைச்சசலை தருவதாயும் அமைந்து விடும். 

ஆனால், கராத்தே கற்கும் பொழுது தரப்படும் கட்டளைகளை அவர்கள் விருப்பத்துடன் ஏற்று தங்கள்   மனஉறுதியை வளர்க்கவும் மன உளைச்சசலை இல்லாமல் செய்ய உதவுவதாயும் உள்ளது. இது, அவர்களின் நீண்ட கால வளர்ச்சிற்கு, தலைமைத்துவ பண்புகளுக்கு உதவுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .........!   🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.