Sign in to follow this  
ampanai

நம் டிஜிட்டல் வாழ்க்கைக்கும் `உயில்' அவசியம்! எழுதுவது எப்படி?

Recommended Posts

நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது.

இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் கூறியுள்ளது. 2007-லேயே சராசரி 25 என்றால் இப்போது எவ்வளவு இருக்கும் என கணக்கிட்டுப்பாருங்கள்.

இந்த டிஜிட்டல் கணக்குகளில் சில சாதாரணமாக இருந்தாலும், சிலவற்றில் நமக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் இருக்கும். நாம் இல்லை எனும்போது, மூன்றாம் நபரால் நம் தகவல்கள் கைப்பற்றப்படும் வாய்ப்பு அதிகம். எனவே, நம்முடைய கணக்குகளை நாம் இறந்த பிறகு மூடவோ அல்லது பராமரிக்கவோ முறையான செயல்முறையைச் செய்துவைக்க வேண்டும்.

ஃபேஸ்புக்கில் நம் கணக்கை, நாம் இறந்த பிறகு யார் பராமரிக்க வேண்டும் எனப் பதிவுசெய்து வைக்கலாம். அதன்மூலம், நம் கணக்கை அவர்கள் நிர்வகிக்க முடியும். ஒன்று, நம் கணக்கை அழித்துவிடலாம் அல்லது அதை ஒரு நினைவாக அப்படியே வைத்திருக்கலாம். நம் நினைவாக அந்தக் கணக்கை வைத்திருந்தால், நம் நண்பர்களுக்கு மட்டும் அந்தக் கணக்கு தென்படும். அப்படி யாரும் நிர்வகிக்க வேண்டாம் என்றால், நாம் இறந்தபிறகு நம் கணக்கை அழித்துவிடும் வகையில் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

இன்று, கூகுள் சம்பந்தப்பட்ட நிறைய கணக்குகளை நாம் பயன்படுத்துகிறோம். கூகுளில் நம்பகமான கணக்கு ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால், நம் கணக்குகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் நாம் தேர்ந்தெடுத்தவரின் கணக்கிற்குச் சென்றுவிடும். நாம் இறந்துவிட்டோம் என்பதை கூகுள் எப்படி கண்டறியும்? குறிப்பிட்ட காலம் நம் கணக்கு திறக்கப்படாமல் இருக்க வேண்டும். அதன் பிறகுதான் நாம் தேர்ந்தெடுத்த கணக்கிற்கு நம் தகவல்கள் அனுப்பப்படும். அது எவ்வளவு காலம் என்பதை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, உங்கள் தகவல்களை யாருக்கும் பகிர முடியாது. நாம் இறந்துவிட்டால், நமக்கு நெருக்கமானவர்கள் மூலம் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நம் கணக்கை நிரந்தரமாக அழிப்பதுதான் ஒரே வழி.

நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது. இதற்காகப் பல இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளன. நிஜ வாழ்வில் நாம் உயில் எழுதி வைப்பதைப் போலத்தான் இதுவும். ஆஃப்டர் நோட் (Afternote) என்ற இணையதளம் நமது ஆன்லைன் மற்றும் வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்டுகள் மற்றும் நாம் நமது நெருக்கமானவர்களுக்குச் சொல்ல நினைக்கும் விஷயங்கள் எனப் பலவற்றையும் தங்கள் பக்கத்தில் சேமித்து, நாம் இறந்த பிறகு நமக்கு நெருக்கமானவர்களுக்கு அது சென்று சேரும் வகையிலான வசதிகளைக் கொடுக்கிறது. நாம் இறக்கும் முன் எழுதி வைத்துச் செல்லும் கடிதத்தின் டிஜிட்டல் வெர்ஷன்தான் இது.

இதன்மூலம், நம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், நம் நெருக்கமானவர்களுக்குத் தேவையான தகவல்கள் நம்மிடமிருந்து நம் பிரிவுக்குப் பின் அவர்கள் அதை அணுகமுடியாமல் போவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் முடியும். இவையெல்லாம் இப்போது அவசியமா என்றால், டிஜிட்டல் உலகிலேயே நாம் வாழத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவும் அவசியமே.

https://www.vikatan.com/technology/tech-news/tips-to-handle-your-data-after-the-death

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கை வான்பரப்பில் அடையாளம் காணப்படாத உயிரினம் – கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-வான்பரப்பில்-அடைய/
    • இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை Jun 07, 20200   உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியதையடுத்து, நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இறை வழிபாட்டுத் தலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வழிப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இறை-வழிபாடுகளில்-ஈடுபட-அ/
    • ஓகஸ்ட்டில் பொதுத்தேர்தல் : நாளை வர்த்தமானி அறிவித்தல் பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் நாளை திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல் குறிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது பரிசீலித்து வருவதாகவும் இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தபபடலாம் என்றும் தெரியவருகிறது. அந்த குறிப்புக்களின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பெரிய கூட்டங்கள் வைக்க அனுமதிப்பதுடன், அதில் அதிகபட்சமாக 500 பேரே கலந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்பவர்களிற்கிடையில் 1 மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும். இந்த கூட்டங்களில் கலந்து கொள்பவர்களின் பெயர் விபரம், தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். “பொக்கற் மீற்றிங்“களில் அதிகபட்சமாக 100 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். நாளை திங்கள்கிழமை, வேட்பாளர்களின் இலக்கங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும். இதனை தொடர்ந்து, தேர்தல் பிரச்சரங்கள் முறையாக ஆரம்பிக்கப்படும். பொதுத்தேர்தல் ஓகஸ்ட் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை, மரத்தாலான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படாது. அட்டைப் பெட்டிகளே பயன்படுத்தப்படும். வாக்களிப்பிற்கு மறுநாள் வாக்குகள், விருப்பு வாக்குகள் எண்ணப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.samakalam.com/செய்திகள்/ஓகஸ்ட்டில்-பொதுத்தேர்தல/
    • யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை காலமானார் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக காலமானார். யாழ் நாரந்தணையில் பிறந்த லோகநாதபிள்ளை தனது கல்வியை கரம்பன் சென் அன்றனிஸ் கல்லூரியில் பயின்று பின்னர் 1957ல் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார். பின்னர் கொழும்பு மாநகரசபையில் உத்தியோகத்தராக சேர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வா மற்றும் தமிழ் தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்தார். 1983ல் ஏற்பட்ட இன கலவரத்தினால் தனது வீடு ஏரிக்கப்பட் நிலையில் யாழ்பாணத்திற்கு இடம்பெயர்ந்து சென்று பின்னர் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் பெற்று அங்கு சிறிதுகாலம் பணியாற்றினார். ஓய்வுபெற்ற பின்னர் யாழ்ப்பாணம் முரசொலி பத்திரிகையில் சேர்ந்த அவர் இந்திய அமைதிகாக்கும் படை பத்திரிகை காரிலாயத்தை எரிக்கும் வரை தனது பணியை தொடர்ந்தார். அக்காலத்தில் ஈரோஸ் பாலகுமாருடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் 1989ல் நடைபெற்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருடன் சேர்த்து ஈரோஸ் சார்பில் வெற்றி பெற்ற 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறும், இந்திய -இராணுவத்தை உடனடியாக வெளியேற்றுமாறும் , தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக புறக்கணித்ததால் தமது பதவிகளை இழந்தனர். மீண்டும் 2000 ஆண்டில் யாழ் மாவட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தபோதிலும் அப்போது செயற்பட்ட துணை இராணுவ குழு ஒன்றினால் குடும்ப உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடியான அச்சுறுத்தல்கள் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். முதுமை காரணமாக இயலாமை அடைந்திருந்தபோதிலும் தமிழ் தேசியத்துக்காக வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அரசியல் பத்திகளை எழுதிவந்திருந்தார். 1983 ஆம் ஆண்டு கொழும்பில் இன கலவரத்தின்போது தனது வீட்டை எரித்தமைக்காக பல ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் விசாரைணகளில் கலந்துகொண்டு சாட்சியங்கள் அளித்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் போராடி வந்திருந்தார். அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுகிழமை மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லமான Brilliant Institute, 136 Sangamitha Mawatha, Colombo13 அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும். http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்ட-முன்னாள்-பார/