Jump to content

என் பிழைப்புக்காக மிகக் கஷ்டப்பட்டு நல்ல தமிழைக் கற்றுக்கொண்டேன்


ampanai

Recommended Posts

a10.jpg?itok=4hhvMyzH

கம்பன் விழாவில் எஸ் .பி.

என்னை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய சிரேஷ்ட அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் மற்றும் ராமதாஸ் ஆகியோர் எனது நன்றிக்குரியவர்கள்.

ராமதாஸ் இப்போது எம்மத்தியில் இல்லை. அப்துல் ஹமீட் அவையில் அமர்ந்திருக்கின்றார். இந்த நிகழ்வுக்கு வருவதாகக் கூறியிருந்தார். அதேபோன்று வந்திருக்கின்றார். அவரை நான் மிகவும் நேசிக்கின்றேன். 

அவரது தமிழ் இனிமையானது. அவரிடமிருந்து நான் இனிய தமிழைக் கற்றுக்கொண்டுள்ளேன். நான் பாடிய பல மேடைகளில் என் பாடல்களை இரசித்துள்ளார் அவர். 

வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை அறக்கட்டளை மூலம் கம்பன் கழகம் கம்பன் விருது வழங்கி என்னை கௌரவித்து வாழ்த்துகிறது.

இலங்கையில் கிடைக்கும் இது போன்ற கௌரவிப்பு,-விருது உலகில் எங்கும் எனக்குக் கிடைக்கவில்லை.

வி. ரி.வி. அறக்கடடளை பல ஆணடுகளாக கலைஞர்கள, மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் சேவை செய்து வருபவர்கள்.

சகோதரர்களாக அவர்கள் இணைந்து இத்தகைய அறச்செயல்களைச்செய்து வருவது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது.

என்னை கம்பன் கழகத்துக்கு அறிமுக்கப்படுத்திய எஸ். பி முத்துராமனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.  

தமிழுக்காக சேவை செய்யும் அறிஞர்கள் பெருமக்கள் முன்னிலையில் நான் என்னை ஒரு பாலகனாகவே கருதுகிறேன். 

சிறு வயதிலிருந்தே பாடவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் எனக்கு வாய்புக்கிடைக்கவில்லை. என் பிழைப்புக்காக நான் மிக கஷ்டப்பட்டு நல்ல தமிழைக் கற்றுக்கொண்டேன்.

எனது பாடலைக்கேட்டு இரசித்து உங்கள் வாழ்க்கையில் என்னையும் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு நன்றி.

நான் பாடும் பாடல்களில் பத்துவீத உழைப்பே என்னுடையது. மீதி 90வீதமும் எனக்குப் பின்னால் செயற்படுகின்ற இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பின்னணி செயற்பாட்டாளர்களையே  சாரும்.                      --

எல்.செல்வா

http://www.thinakaran.lk/2020/02/21/இலக்கியம்/48675/என்-பிழைப்புக்காக-மிகக்-கஷ்டப்பட்டு-நல்ல-தமிழைக்-கற்றுக்கொண்டேன்

Link to comment
Share on other sites

 

ஆங்கிலத்தால் பொருளாதாரம் உயரும் என்றால் - ஆங்கிலம் கற்போம்

பிரெஞ்சால் பொருளாதாரம் உயரும் என்றால் - பிரஞ்சும்   கற்போம்

டொச்சால் பொருளாதாரம் உயரும் என்றால் - டொச்சும் கற்போம்

தமிழால் பொருளாதாரம் உயரும் என்றால் - தமிழும் கற்போம் !!!!!!!!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.