Jump to content

வறுமையின் நிறம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://lh3.googleusercontent.com/proxy/2N5U2bStk1NySEBEtM7V7JS4swRsBD-QSy5315ZVoKuXtS5u9WUgJwY3IVmV93pP0f0HJk4XQ8GE8bnA11jfCnkYY66s6nA

 

வறுமையின் நிறம்

கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அன்றைய நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாமே அந்தக் குழாயடிச் செய்திகள்தான். கூடிக் குதூகலமாகப் பேசிக் கொண்டிருக்கும் பெண்களிடையே சில சமயம் பேச்சு முற்றி சண்டையாக மாறிவிடுவதுமுண்டு.  நாங்கள் சிறுமிகளாக அங்கு பேசும் நடக்கும் நாடகங்களையெல்லாம் பாதி புரிந்தும் மீதி புரியாமலும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்போம். சில வேளைகளில் அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் ஏதோ பேசுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டு நிற்போம். அப்பொழுதெல்லாம் சிலர் பெரியவர்கள் பேசுமிடத்தில்  உங்களுக்கென்ன வேலை என்று கேட்டதுமுண்டு.   

அன்றும் அப்படித்தான். பெண்கள் கூட்டம் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பதட்டமும் ஒருவித அங்கலாய்ப்பும் தெரிந்தது. நானும் என்வயதொத்த சிலரும் ஒன்றும் விளங்காமல் பார்த்துக்கொண்டு நின்றோம். அங்கு முன்பின் பார்த்திராத ஒரு பெண் அழுதுகொண்டு நின்றாள். அவளது கையில் துணியினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தை. ஆளாளுக்கு அப்பெண்ணுக்கு ஆறுதல் சொல்லுவதும் தமக்குள் கூடிக் கதைப்பதுமாக வினாடிகள் கழிந்தன. நாங்களும் என்னதான் நடக்கிறது என்றறியும் ஆவலில் அவர்களுக்கு அருகில் சென்று நின்று கொண்டோம்.
அன்றைய நாட்களில்  எமது ஊரிலிருந்துதான் கடல் பிரயாணம் மேற்கொள்ளப்படும். நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு எழுவைதீவு என படகுப்பிரயாணத்தினால் எமது ஊர் துறைமுகம் நாள் முழுவதும் திருவிழாப்போல கோலாகலமாகக் காட்சியளிக்கும். படகுகளில் வருவோரும் போவோரும் கடைவீதியும் வாகனங்களுமாக துறைமுகம் களைகட்டும். அத்துடன் காரைநகருக்கு போகும் சிறுபடகுகளும் பாதைஎனப்படும் வாகனங்களையும் மக்களையும் ஏற்றிச்செல்லும் இயந்திரப்பாதையும் இயங்குவதால் நாள் முழுவதும் சனக்கூட்டத்திற்கு குறைவில்லை.

அந்தப் பெண் அனலை தீவிலிருந்து எமது ஊர் அரசினர் வைத்தியசாலைக்கு குழந்தை எடுத்து வந்;திருக்கிறார். வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி கூறி அனுப்பி விட்டிருந்தனர்.  என்ன நோய் ஏன் அனுப்பினார்கள் என்ற விபரமெல்லாம் எமக்குத் தெரியாது. வசதியற்ற அந்தப் பெண்  தனியாகத்தான் குழந்தையை எடுத்து வந்திருந்தார். அவளது குடும்பச் சூழ்நிலையும் எமக்குத் தெரியாது. சந்திரமதிபோல   கையில் குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் அப்பெண்ணைப் பார்த்து அனைவரும் பரிதாபப் பட்டனரே ஒழிய பொருளுதவி செய்யக் கூடிய நிiயில் அங்கு குழுமிநின்ற பெண்கள் யாரும் வசதி படைத்தவர்களில்லை. அங்குநின்ற சில புத்திசாலிப் பெண்கள் சிலர் குழந்தையை யாருக்கும் தெரியாமல் சுகவீனமுற்ற பிள்ளைபோல் துணியில் சுற்றி மடியில் வைத்து தமது ஊருக்கு கொண்டு போகும்படி புத்தி சொன்னார்கள். சிலரோ அது பிழை கண்டு பிடித்தால் பிரச்சனையாகும் என்று அறிவுரை கூறினர்.
உயிரற்ற குழந்தையைக் கொண்டு போவதானால் படகிற்கு விசேட பணம் செலுத்த அந்தப் பெண்ணிடம் வசதியில்லை. சிறிது நேரத்தில் அப்பெண் துணியில் சுற்றிய சிசுவுடன் துறைமுகம் உள்ள வீதியில் நடக்கத் தொடங்கினாள். ஆனாலும் அழுது வீங்கிய முகமும் அவளது விம்மலும் காட்டிக் கொடுத்து விடுமோ என சிலர் பேசிக்கொண்டனர் ;. அந்த உயிரற்ற உடலைச் சுமந்தபடி சென்ற அந்தப் பெண்ணின் முகமும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழகான விழிமூடிய அமைதியான முகமும் பல ஆண்டுகள் கழிந்தும் என் நினைவுத் திரையில் நின்று அகலவில்லை. இந் நிகழ்வு மனக்கண்ணில் நிழலாடும் பொழுது ஜயோ அப்பொழுது அந்த தருணத்தில் எம்மால் உதவக்கூடிய வயதோ வசதியோ இல்லாமல் போய் விட்டதே என மனம் அங்கலாய்க்கும்.  


'பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ' என்ற பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கும் நேரமெல்லாம் என் நெஞ்சில் நிழலாடும் ஈர நினைவுகளில் இதுவும் ஒன்று.

 

 

--- xx --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavallur Kanmani said:

அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன.

இதே பிரச்சனை மீண்டும் வரும் போல தெரிகிறது.

நல்லதொரு கருவை சுருங்க சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.

31 minutes ago, Kavallur Kanmani said:

வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி கூறி அனுப்பி விட்டிருந்தனர்.  என்ன நோய் ஏன் அனுப்பினார்கள் என்ற விபரமெல்லாம் எமக்குத் தெரியாது.

இதே மாதிரி எனது அம்மம்மா இறந்த போதும் எனது ஒன்றுவிட்ட மாமனார் ஒரு வானை பிடித்து ஆள் இனி பிழைக்காது என்று டாக்ரர் வீட்டுக்கு கொண்டு போகட்டாம் என்று சாரதியும் சேர்ந்து ஏற்றி வீட்டை கொண்டுவந்து இறக்க வீட்டுகாரரும் ஆளாளுக்கு ஏனடா வீட்டை கொண்டுவந்தநீ என்று பேச வாங்கெடுத்து ஆளைக்கிடத்தி வான்காரனை அனுப்பிய பின்னர் தான் ஆள் முடிந்துதென்ற விடயம் எல்லோருக்கும் தெரியவந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசை அலைக்கழிக்கும் மிகவும் சோகமான நிகழ்வு. என்ன செய்வது அவைதான் "பசுமரத்து ஆணி" யாய் மனசில் தங்கி விடுகிறது.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பிரிந்த குழந்தையின் உடலோடு யாருமே தெரியாத இடத்தில் அலைந்த அந்தத்தாயின் மனதின் வேதனை ஒரு போதும் தணிந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட ஈழப்பிரியன் சுவி கிருபன் அனைவருக்கும் நன்றிகள்.

 பச்சைப் புள்ளியிட்ட தமிழ் சிறி ரதி ஈழப்பிரியன் கிருபன் ஆகியோருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சில கொடுமையான நிகழ்வுகள் அப்பப்போ கேள்விப்படுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திற்கு நன்றி சுமே. கேள்விப்படும்பொழுது ஏற்படாத வலி நேரில் கண்டு அனுபவிக்கும்பொழுது தீராத வலியாக மனதில் பதிந்துவிடுகிறது. 

Link to comment
Share on other sites

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி.

உடலும் விறைச்சதடி உயிரும் தொலைந்ததடி கண்மணி என் கண்மணி

பச்சைப் புள்ளையடி பிச்சை கிடைக்கவில்லை

பெத்த வயிறதிர பேதை நடந்ததென்ன

 கதையா இது கண்மணி

காயமென்ன மாயமென்ன காவு வந்து கொண்ட பின்னே

கண்ணில் உள்ள நீரும் அழும் காட்சி எந்தன் முன்னே

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை. படகில் திரும்பி போகும் போது அந்த தாயின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 5:06 PM, Kavallur Kanmani said:

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ' என்ற பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கும் நேரமெல்லாம் என் நெஞ்சில் நிழலாடும் ஈர நினைவுகளில் இதுவும் ஒன்று.

 

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடினான் வறுமையும் துன்பமும் இல்லாதொரு உலகம் வரவேண்டும் சகோதரி.
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் எஎன்பது போல் ஏழைகள் வாழ்வை எப்படி சொல்லுவது.மனது வலிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட ஆதிவாசி கோசான் உதயகுமார் அனைவருக்கும் நன்றிகள். உலகில் ஒருபுறம் செல்வமும் செழிப்பும் மறுபுறம் ஏழ்மையும் வறுமையும் . நேரமின்மையால் விரிவாகக் கருத்தெழுதமுடியவில்லை. மன்னிக்கவும். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து விருப்பிட்ட சுமே ரதி ஆகியோருக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.