Sign in to follow this  
ampanai

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

Recommended Posts

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு 8 மனித உரிமை அமைப்புகள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாரை கேட்டுக்கொண்டுள்ளன.

மனித உரிமை கண்காணிப்பகம், மன்னிப்புச்சபை உட்பட எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரிற்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

இலங்கையில் மனித உரிமை விடயத்தில் குறிப்பிடத்தக்க பின்னோக்கி நகர்வுகள் இடம்பெறுகின்றனஎன்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என எட்டு மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் ஆற்றியுள்ள உரை இதனை உறுதி செய்வது போல காணப்படுகின்றது என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அரசமைப்பின் 19 வது திருத்தத்தை மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு நீதித்துறையினதும் ஏனைய ஆணைக்குழுக்களினதும் சுதந்திரத்தை பாதிக்கும்,இலங்கை அரசாங்கம் காணாமல்போனோர் குறித்த அலுவலக சட்டம் குறித்து மீள் பரிசீலனை செய்கின்றது இதேபோன்று சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் காணமல் போனவர்கள் குறித்து ஜனாதிபதி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஈவிரக்கமற்ற கருத்து காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை அளித்துள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச சட்டங்களை மீறியதாக இலங்கைதொடர்பான அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் என 8  அமைப்புகள் தெரிவித்துள்ளன.


ER3zbfiUEAUNigU.jpg

 

 நவம்பர் முதல் அரசசார்பற்ற அமைப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது,இதன் மூலம் அவர்களின் கண்காணிப்பு ஆபத்து அதிகரித்துள்ளது,பல மனித உரிமை அமைப்புகளிற்கும் ஊடகங்களிற்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் அச்சுறுத்தும் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்,பத்திரிகையாளர்களிற்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன எனவும் சர்வதேச அமைப்புகள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன.

இலங்கையில் மீண்டும் அச்சசூழல் தோன்றியுள்ளது குறிப்பாக உண்மை நீதி பொறுப்புக்கூறலிற்காக குரல்கொடுப்பவர்களிற்கு அச்சசூழ்நிலை திரும்பியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட தெளிவான கட்டமைப்புகளை ஏற்றுநடக்கப்போவதில்லை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதால் இலங்கையை சர்வதேச சட்டங்களின் கீழான அதன் கடப்பாடுகளின் அடிப்படையில் பொறுப்புறக்கூறலிற்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/76752

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43ம் கூட்டத்தொடரில் சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பிலிருந்து இன்று உரையாற்றிய Janath W. Ultamawadu இன் உரையினை கவனமாக செவிமடுக்கவும் !

முக்கியமான சில விடயங்கள்:
72 வருடங்களாக சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடும் நடைமுறையை கடந்த அரசு மாற்றியமை புலனாய்வு மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தி அதன் விளைவாக ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 400க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கையின் 6.9 மில்லியன் மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நல்லாட்சி என்று கூறி கடந்த அரசின் சகல விடயங்களுக்கும் துணைபோன தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த முறையாவது தமிழருக்கு ஆதரவாக உண்மையை எடுத்துரைக்கக் கூடாதா ??

 

Share this post


Link to post
Share on other sites

Date : 2020.02.28

IMADR delivered the joint oral statement on “Accountability and human rights in Sri Lanka” at the 43rd session of the Human Rights Council. Whole text can be read below or download here.pdficon_small.png?resize=16%2C16&ssl=1

Co-sponsors of the statement are: Amnesty International; Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA); CIVICUS; Franciscans International; Human Rights Watch; IMADR; International Service for Human Rights (ISHR); and Minority Rights Group International

———

Joint Oral Statement: 43rd session of the Human Rights Council

Item 2: General Debate on reports and oral updates of the High Commissioner and the Secretary-General

28 February 2020

Madam President,

We are deeply concerned by indicators of a significant backsliding on human rights in Sri Lanka, underscored by the government using their address to the Council this week to go back on the important commitments made by Sri Lanka through HRC resolution 30/1.

Sri Lankan authorities’ indication to revoke the 19th amendment to the Constitution would remove check and balances on the executive and seriously jeopardise the independence of the judiciary and relevant commissions. The Government is reportedly considering reviewing the Office on Missing Persons (OMP) Act. Similarly, the President’s recent callous comments about the fate of thousands of missing persons without any conclusion of investigations in line with international law have added to the distress of families of the disappeared. A Gazette on 22nd January granted powers to a Commission of Inquiry (CoI) to scrutinise investigations into emblematic cases. The COI has attempted to halt criminal proceedings against navy officers accused of the disappearance and killing of eleven youth. We echo the High Commissioner’s concern[1] on the promotion of several military officers who are named in the OISL report for violations of international law.

Since November 2019, the Ministry of Defence has been assigned as the oversight body for NGOs, significantly increasing the risk of their surveillance. More than a dozen human rights and media organisations have received intimidating visits from law enforcement and intelligence agencies,[2] while death threats[3] against journalists have resumed. The climate of fear has returned to Sri Lanka, in particular among those who continue to call for truth, justice and accountability. Relentless campaigns against minorities also require immediate attention.

We urge this Council to hold Sri Lanka accountable to its obligations under international law. Given this week’s announcement that the new Government will not continue to engage with the clear framework agreed through resolution 30/1; the failure of past domestic reconciliation and accountability mechanisms; and the ongoing compromise of the rule of law as pointed out by the High Commissioner yesterday, we call on the Council to establish an international accountability mechanism on Sri Lanka.

Thank you, Madam President.

[1] A/HRC/43/19, paragraph 34

[2] Amnesty International, Sri Lanka: Attacks on Human Rights Organisations, Media Organisations and Journalists In Sri Lanka, 2020, https://www.amnesty.org/en/documents/asa37/1678/2020/en/

[3] Colombo Gazette, Batticaloa Tamil journalists receive death threats, 2020, http://colombogazette.com/2020/01/24/batticaloa-tamil-journalists-receive-death-threats-2/

 

https://imadr.org/accountability-humanrights-srilanka-hrc43-2020-joint-os/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கையில் கொரோனா வைரஸால் 6 ஆவது உயிரிழப்பு!         by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கையில்-6-ஆவது-நோயாளிய/
  • அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி           by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளோம். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அற்ப-விடயங்களுக்காக-அநாவ/
  • சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் – டலஸ்!          by : Benitlas கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எந்த வேறுபாடும் இன்றி இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டதை எனது அரசியல் வாழ்வில் நான் பார்க்கவில்லை. நூற்றுக்கு 80 வீதம் கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் சமூர்த்தி நிவாரணங்களை வழங்கிய போது அதனைப் பெற்றுக்கொண்ட யாருக்கும் 80 வீத கட்டாய சேமிப்பு காணப்படவில்லை. தற்போது அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. 80 வீத கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையை தற்போதும் நடைமுறையில் இருந்திருந்தால் கடந்த அரசாங்கத்தில் நிவாரணம் பெற்ற எவருக்கும் தற்போது கிடைக்கப்பெறாது. எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காது எவ்வித பேதமும் இன்றி இம்முறை எமது அரசாங்கத்தால் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் சமூகமயப்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பரவலடைந்துள்ளன. இதுவே உண்மை நிலைமையாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சமூர்த்தி-பயனாளிகளுக்க-3/
  • என்ன! கேட்க நாதியில்லாதவர்களின் பெயரில் வந்த பணத்தை  பதுக்கி   உங்களுக்கு வரவில்லை என்று குறிப்பிட்டவருக்கு கூறி விட்டு, அவர் பெயரில் வந்த பணத்தை  தனக்கு வேண்டியவர்களின் பெயரில் பதிந்திருப்பார். சனக்கூட்டம் நிக்கும் பொழுது வந்தால் அவர்களை துரத்த முடியாது என்பதால்  சண்டித்தனம் விட்டிருப்பார். பொறுப்பில்லாததுகளை நியமிச்சுப்போட்டு பொறுப்பை எதிர்பாக்கலாமா? இந்த நேரத்தில மக்களுக்கு சேவை செய்யாமல் என்ன வெட்டி விழுத்துகினம்? ஒரேயடியாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு சேவை செய்யக்கூடியவர்களை நியமிக்க வேண்டும்.  அதிகாரிகள் இவர்களிடம் பணம் வாங்கி பதவி வழங்கியிருப்பார்கள். எப்படி வீட்டுக்கு அனுப்பமுடியும்? என்கிற மமதை அவர்களை இப்படி கதைக்கவும், செய்யவும் வைக்குது.  எங்கும் ஊழல். பாதிக்கப்படுவது ஏழைகள்தான்.  
  • சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன.   ஜெர்மனி AP அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்துகளுக்கும் பாதுகாப்புக் கவசங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தங்கள் பகை அனைத்தையும் மறந்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமும் இந்தியா, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளிடமும் உதவி கேட்டு வருகிறார் அதிபர் ட்ரம்ப். கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட சீனா தற்போது அதிகளவில் முகமூடிகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது   அப்படி சீனாவிடம் 2 லட்சம் மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள். இதை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட அதிகளவு பணம் கொடுத்து அந்த மாஸ்க்குகளைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ``சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது. அதனால் தாய்லாந்திலிருந்து ஜெர்மனி செல்லவேண்டிய விமானம் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறந்தது. இதை நவீன திருட்டு, கடல் கொள்ளையாகவே நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். உலகளாவிய நெருக்கடிக் காலத்தில்கூட இத்தகைய நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது" என ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் குற்றம் சுமத்தியுள்ளார் அதேபோல் பாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் கூறியுள்ள குற்றச்சாட்டில், `நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகமூடிகளுக்குப் பாதி விலை கொடுத்து வாங்குகிறோம். நாங்கள் வாங்கும் பொருள்கள் தரமாக இருக்க வேண்டும் அதனால் பொருளைக் கண்ணில் பார்த்துவிட்டு மீது பணத்தைக் கொடுக்கிறோம். ஆனால் அமெரிக்கா, நாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மாஸ்க்குகளைப் பார்க்காமல் மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் பார்க்க நினைக்கிறது’ எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.   ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அமெரிக்க அதிகாரிகளா, பிராந்திய நிறுவனங்களா அல்லது தனியார் நபர்களா என எந்தத் தகவலையும் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும், இதுபோன்ற செயல்களில் நிச்சயம் அமெரிக்கா ஈடுபடவில்லை. இதை எப்போதும் செய்யவும் செய்யாது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று பாரிஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.   https://www.vikatan.com/news/international/germany-accused-the-us-of-taking-face-masks-already-ordered?artfrm=v3