Jump to content

புலிகள் ஜனநாயக படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஜனநாயகப் படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்: எம்.ஏ.சுமத்திரன்

MP-MA-Sumanthiran--620x330.jpg

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் மீதான விமர்சனக் கருத்துக்களுக்கு பதில் உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எமது கட்சி யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி. இது யுத்த காலத்திற்கு முன்னரும் இருந்தது யுத்த காலத்திற்குப் பின்னரும் இருக்கும் கட்சி. இது யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி, அந்த கட்சிக்கு திடீரென ஜனநாயக பண்புகள் வந்துவிடாது. 30 வருடம் வேறு விதத்தில் பழகிவிட்டோம். சொன்னதை செய்தது .

யுத்தகாலத்தில் கூட பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன, தனியே ஒன்று மட்டும் இருக்கவில்லை, அது ஒன்றாக வந்தது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். சகோதர படுகொலைகளின் மூலமாகத்தான் அது ஒன்றாக வந்தது எனவும் தெரிவித்தார்.

http://www.vanakkamlondon.com/sumanthiran-01-03-2020/

உப மூலம்:

https://www.todayjaffna.com/179041

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உலகத்துக்கு சனநாயகத்தை பெத்துப் போட்டவர் சொல்ல வந்திட்டார். சனநாயகமே அமெரிக்காவில் ஒரு பெரும் யுத்தம் படுகொலைகளின் மத்தியில் பிறந்தது தான். அதனை பிரசவித்தவரே சுட்டுத்தான் கொல்லப்பட்டார். அந்த வரலாறு தெரியுமோ தெரியல்ல.. இந்த மோட்டு மேதாவிக்கு. 

Link to comment
Share on other sites

46 minutes ago, nedukkalapoovan said:

இந்த மோட்டு மேதாவிக்கு. 

இவர் மோட்டு மேதாவியென்று அறிந்தபின்பும் இவரைத் தெரிவுயெய்வார்களா.? மீண்டும் தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழர் கையில்தானே இருக்கிறது. 🤔 

Link to comment
Share on other sites

சுமந்திரனின் கூட்டத்தில் சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் திண்டாட வைத்த கலாநிதி கணேசலிங்கத்தின் உரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் கூட்டத்தில் சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் திண்டாட வைத்த கலாநிதி கணேசலிங்கத்தின் உரை

அறிவாளியின் அருமையான சாட்டையடி....ஆக்கபூர்வமான உரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இவர் உலகத்துக்கு சனநாயகத்தை பெத்துப் போட்டவர் சொல்ல வந்திட்டார். சனநாயகமே அமெரிக்காவில் ஒரு பெரும் யுத்தம் படுகொலைகளின் மத்தியில் பிறந்தது தான். அதனை பிரசவித்தவரே சுட்டுத்தான் கொல்லப்பட்டார். அந்த வரலாறு தெரியுமோ தெரியல்ல.. இந்த மோட்டு மேதாவிக்கு. 

ஜனநாயம் பிறந்தது கிமு 507 இல்  கிரேக்கத்தில். ஏதென்ஸ் நகர அரசில். டெமோ என்றால் கிரேக்க மொழியில் மக்கள். அதுதான் டெமோகிரசி என்ற சொல்லின் வேர்.

முதலாவது பிரதிநிதிதுவ பாராளுமன்றம் இங்கிலாந்தில் 1215 இல் நிறுவப் பட்டுவிட்டது. இது 1610 இல் சட்டம் ஆக்கும் உரிமையை அரசனுக்கு ரத்து செய்து, பாராளுமன்றுக்கு மாற்றியதோடு இன்னும் வலுப்பெற்ற சனநாயகம் ஆகிறது. 1628 இல் வரி விதிக்கும் இயலுமையும் அரசனிடம் இருந்து பறிக்கப்படுகிறது. ஈற்றில் ஆங்கியேய சிவில் யுத்தத்தில் பாராளுமன்றம் வென்று, Bill of Rights 1689 இல் தேர்தல் ஜனநாயகத்தை நிறுவுகிறது.

1779-1789 பிரெஞ்சுப் புரட்சி - வெள்ளையினத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் சம உரிமையை வழங்கி, பிரெஞ்சு குடியரசை ( ஜனநாயக அரசை) நிறுவுகிறது.1794 இல் பிரான்ஸ் அடிமை முறையை ஒழிக்கிறது.

1791 இல் ஹெயிட்டி குடியரசாகிறது

1861-1866 அமெரிக்க சிவில் யுத்தம். யுத்த முடிவில் லிங்கனின் படை வெல்ல, அடிமை முறை  அடிமை முறை அமெரிக்காவில் ஒழிக்கபபடுகிறது.

1870 அமெரிக்க குடியரசின் அரசியலமைப்பின் 15வது திருத்தம், ஆண் கறுப்பினத்தவருக்கும் முன்னாள் அடிமை ஆண்களுக்கும் வாக்குரிமை வழங்குகிறது.

1893  - நியூசிலாந்து முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமையை கொடுத்து, முதலாவது  பிரபஞ்ச-வாக்குரிமை ஜனநாயகம் ஆகிறது.

1920 இல் அமெரிக்க அரசியலமைப்பின் 19வது திருத்தம் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கிறது.

இதில் அமெரிக்க சிவில் யுத்தத்தில் எங்கே பிறந்தது ஜனநாயகம்? சுட்டுகொல்லப்பட்ட ஆபிரகாம் லிங்கன் எப்படி ஜனநாயகத்தை பிரசவித்தவர் ஆனார்?

பிகு: நீங்கள் வழமை போல ஏதாவது “என்ன கையை பிடித்து இழுத்தியா?” ரேஞ்சில் இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பீர்கள் என்பது தெரியும்.

ஆனாலும் வரலாறு முக்கியம் என்பதால் இது மற்றவர்களுக்கா எழுதியது.

Link to comment
Share on other sites

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகள் ஜனநாயகப் படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்: எம்.ஏ.சுமத்திரன்

இந்தியன்ட எடுபிடிகள் சொல்லற வழமையான பொய்யை அவிழ்த்துவிடுறார் சுமந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சாமானியன் said:

சூ  னாவுக்கு ஒரு ரிக்கற்றுப் போட்டால் நேரை வந்து வகுப்பு எடுப்பார்..

Link to comment
Share on other sites

உலகத்தில் எல்லா படுகொலைகளுமே சனநாயக படுகொலைகள் தான்.

பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு செய்யப்படும் படுகொலைகளும் சனநாயக கொலைகளின் ஒரு அங்கம்.

உலகத்தில் நடக்கும் போர், உலகப்போர், ஒட்டுக்குழுக்கள் ஊடான போர், விடுதலைக்கான போர் எல்லாமே சனநாயக போர்கள் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, alvayan said:

சூ  னாவுக்கு ஒரு ரிக்கற்றுப் போட்டால் நேரை வந்து வகுப்பு எடுப்பார்..

"சு" சந்தோசமாக வகுப்பு எடுப்பார் தான் , நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொல்லக்கூடியவர்கள் நாம் என்று புளகாங்கிதத்துடன் இருக்கும் நீங்கள் போன்றவர்கள்  "சு " வின் பின்னால் நின்று "சூ " காட்டாமல் , உங்களின் கருத்துக்களை சொல்லலாமே ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வழக்கமான சுமத்திரன் தந்திரங்களில் ஒன்று தன்னுடைய பலவீனம்களை  மறைக்க  சர்சையான விடயங்களை தூக்கி போட்டுவிடுவது. இனி இந்த திரி சுமத்திரனின்  தமிழருக்கு எதிரான துரோகத்தை மறந்து  தேவையற்ற கருத்துகளோடை கொழுந்து விட்டு எரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இதே ஜனநாயகம் பற்றி கதைக்கும் நாரா வாய்தான் தீர்வு இல்லையேல் அரசியலுக்கு மூடுவிழா என்றது இப்ப தீர்வும் இல்லை ஒன்றும் இல்லை இவரை யாருய்யா  இழுத்து பிடிக்கிறது அரசியலில் நில்லுங்க என்று .

Link to comment
Share on other sites

10 hours ago, Paanch said:

இவர் மோட்டு மேதாவியென்று அறிந்தபின்பும் இவரைத் தெரிவுயெய்வார்களா.? மீண்டும் தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழர் கையில்தானே இருக்கிறது. 🤔 

இப்படிக் கதைக்கும் சுமந்திரன் வடமராட்சியில்தான் சென்ற தேர்தலில் வெற்றிபெற்றார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, manimaran said:

இப்படிக் கதைக்கும் சுமந்திரன் வடமராட்சியில்தான் சென்ற தேர்தலில் வெற்றிபெற்றார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்

அது இவரின் தந்திரம் ராணியை வெட்டிவிட்டு சதுரங்கம் ஆடும் கலை  விக்கியை துரத்தி விட்டு அல்லது முடக்கி விட்டு வெறும் கோல்ட் போஸ்ட் ல்  கோல் அடித்து விளையாடுகிறார் இவர் இல்லாவிட்டால் நிறைய தமிழ்  இளையவர்கள் மூன்று மொழியும் சரளமாய் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் இவர்  வழி விட்டால்தானே அவர்கள் வருவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பல கொலைகளை செய்தது உண்மைதானே. அதிபர் ஆனந்தராஜா, ராஜினிதிராகம போன்ற பலர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வாந்தியெடுக்கும் சகோதரப் படுகொலைகள் தொடர்பாக ஒரு மீள் பதிவு.. -PKR- | வெளிச்சவீடு

By மணிமாறன் -
2320-1-696x328.png

சுமந்திரன் வாந்தியெடுக்கும் சகோதரப் படுகொலைகள் தொடர்பாக ஒரு மீள் பதிவு..

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதி அது.

நான் எனது ஊரான வல்வெட்டித்துறையிலிருந்து உடுப்பிட்டிக்கு ரியூசனுக்காக மலர் அக்காவீட்டிற்கு சென்றிருந்தபோது அவரின் வீட்டின் முன்னால் ஒரு வாகனம் ஒன்று வந்து கிறீச்சிட்டு நின்றது. அந்த வாகனத்திலிருந்து குதித்த பல பெடியங்கள் ஆயுதங்களுடன் மலர்அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்குள் ஓடினார்கள்.

அப்போது ஒரு வயதான அம்மாவும் மூன்று அக்காக்களும் “அண்ணா ஓடு ஓடு” என்று கத்தியபடி அந்த பெடியங்களை தடுக்க முனைந்தார்கள். ஆனால் பெடியங்கள் அவர்களை துப்பாக்கியால் தாக்கி தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் ஒரு அண்ணாவை வாகனத்தில் தூக்கி எறிந்தபடி அங்கிருந்து மிக வேகமாக மறைந்து போனார்கள்.

அப்போது ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.. “பொபியின்ர பெடியள் வந்து தாஸின்ர பெடியளை சுட்டு இழுத்துகொண்டு போகிறாங்கள்” என்று.

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை அது.

சிங்களவன் தமிழனை கொன்றதை நான் அப்போது பார்க்கவில்லை. ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அழித்ததையும் பார்க்கவில்லை. ஒரே இயக்கத்திற்குள் இருந்தவரை அதே இயக்கம் சுட்டுகொன்றதை பார்த்ததே எனது ஈழப்போராட்ட அரசியலின் முதல் மனப்பதிவு.

ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களால் அதன் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் சுடப்பட்ட வரலாறு இது.

பிற்பாடு அந்த இரு பிரிவினரும் யாழ் வைத்தியசாலைகளில் ஒன்றின் முன் மக்களையும் நோயாளிகளையும் பொருட்படுத்தாது மிக மூர்க்கமாக பொருதி ரெலோவின் பொபி பிரிவினரால் தாஸ் உட்பட பலர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ரெலோ இயக்கத்தை புலிகள் அடக்குவதற்கு முன்னான ஒரு நிகழ்வு இது.

இப்படி நிறைய நிகழ்வுகளை ஒவ்வொரு இயக்கம் தொடர்பாகவும் வரலாற்றிலிருந்து பட்டியலிட முடியும்.

புளொட் இயக்கத்திற்குள் நடந்த உட்கொலைகள் கற்பனைக்கெட்டாத கொடூரங்களைக் கொண்டவை.

கோவிந்தனின் “புதியதோர் உலகம்” வாசித்தால் இதன் ஒரு பகுதியைத் தரிசிக்கலாம்.

இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சுழிபுரத்திற்கு மாமி வீட்டிற்கு சென்றிருந்தபோது ‘ஆறு விடுதலைப்புலிகளை காணவில்லை’ என்ற அறிவித்தலும் பிற்பாடு அவர்கள் புளொட் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கண்ணீர் அஞ்சலி அறிவித்தல்களையும் காணநேரிட்டது.

நிலைமை இப்படியிருக்க எல்லா மாற்று இயக்க ஆட்கள் எல்லோரும் சேர்ந்து புலிகள்தான் சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவை என்று சொல்லித் திரியினம்.

அதை ஏந்தி வாந்தியாக எடுக்க காலாகாலத்திற்கு ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது.

இப்போது இது சுமந்திரனின் காலம்.

ஆயுதம் ஏந்தியதற்கான நோக்கத்தை மறந்து உள் இயக்க கொலைகளில் ஈடுபட்டமை/ அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலில் இயங்கியமை/ மக்கள் விரோர நிகழ்வுகளில் ஈடுபட்டமை / சுய ஒழுக்கம் இன்மை போன்ற போராட்ட எதிர் விழுமியங்களை அடையாளம் கண்ட தலைவர் வேறு வழியில்லாமல் பின்னாட்களில் இவர்களை அடக்கியதே வரலாறு.

இது இப்போதைய 2000 கிட்ஸ்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

-PKR-

WWW.VELICHAVEEDU.COM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஜனநாயம் பிறந்தது கிமு 507 இல்  கிரேக்கத்தில். ஏதென்ஸ் நகர அரசில். டெமோ என்றால் கிரேக்க மொழியில் மக்கள். அதுதான் டெமோகிரசி என்ற சொல்லின் வேர்.

முதலாவது பிரதிநிதிதுவ பாராளுமன்றம் இங்கிலாந்தில் 1215 இல் நிறுவப் பட்டுவிட்டது. இது 1610 இல் சட்டம் ஆக்கும் உரிமையை அரசனுக்கு ரத்து செய்து, பாராளுமன்றுக்கு மாற்றியதோடு இன்னும் வலுப்பெற்ற சனநாயகம் ஆகிறது. 1628 இல் வரி விதிக்கும் இயலுமையும் அரசனிடம் இருந்து பறிக்கப்படுகிறது. ஈற்றில் ஆங்கியேய சிவில் யுத்தத்தில் பாராளுமன்றம் வென்று, Bill of Rights 1689 இல் தேர்தல் ஜனநாயகத்தை நிறுவுகிறது.

1779-1789 பிரெஞ்சுப் புரட்சி - வெள்ளையினத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் சம உரிமையை வழங்கி, பிரெஞ்சு குடியரசை ( ஜனநாயக அரசை) நிறுவுகிறது.1794 இல் பிரான்ஸ் அடிமை முறையை ஒழிக்கிறது.

1791 இல் ஹெயிட்டி குடியரசாகிறது

1861-1866 அமெரிக்க சிவில் யுத்தம். யுத்த முடிவில் லிங்கனின் படை வெல்ல, அடிமை முறை  அடிமை முறை அமெரிக்காவில் ஒழிக்கபபடுகிறது.

1870 அமெரிக்க குடியரசின் அரசியலமைப்பின் 15வது திருத்தம், ஆண் கறுப்பினத்தவருக்கும் முன்னாள் அடிமை ஆண்களுக்கும் வாக்குரிமை வழங்குகிறது.

1893  - நியூசிலாந்து முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமையை கொடுத்து, முதலாவது  பிரபஞ்ச-வாக்குரிமை ஜனநாயகம் ஆகிறது.

1920 இல் அமெரிக்க அரசியலமைப்பின் 19வது திருத்தம் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கிறது.

இதில் அமெரிக்க சிவில் யுத்தத்தில் எங்கே பிறந்தது ஜனநாயகம்? சுட்டுகொல்லப்பட்ட ஆபிரகாம் லிங்கன் எப்படி ஜனநாயகத்தை பிரசவித்தவர் ஆனார்?

பிகு: நீங்கள் வழமை போல ஏதாவது “என்ன கையை பிடித்து இழுத்தியா?” ரேஞ்சில் இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பீர்கள் என்பது தெரியும்.

ஆனாலும் வரலாறு முக்கியம் என்பதால் இது மற்றவர்களுக்கா எழுதியது.

இப்போ உலகில் நடைமுறையில் இருப்பது அமெரிக்க சனநாயகம் தான். தானே அதற்கு காவலன் என்று காடைத்தனம் பண்ணிக் கொண்டிருப்பதும் அமெரிக்கா தான்.

அந்த வகையில்.. இந்த சம் சம் கும்பலும்.. தமக்கு பதவி சுகம்..  கிடைக்காமல் போய் விடுமோ என்ற அந்தரத்தில் உளறித்தள்ளுகிறார்கள்.

புலிகள் எப்போதும் தங்களை சனநாயகப் பிரியர்கள்.. அமெரிக்க வால் பிடிகள் என்று காட்டிக்கொண்டதே இல்லை. அவர்கள் ஒரு விடுதலைப் போராளிகள். இதய சுத்தியோடு தமது மண் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். அதனை வலுப்படுத்த வேண்டின்.. நூறு கட்சி அமைச்சு வலுப்படுத்த முடியாது. உலகில் எந்த நாட்டிலும் ஆயிரம் இராணுவக் குழுக்களை வைத்திருப்பதில்லை. ஒரு இராணுவத் தளபதியும் அவரின் கீழ் தான் மிச்சம் எல்லாம்.

விடுதலைப்புலிகள்.. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் போராளிகள் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாம் சுமந்திரன் என்கிற இந்த அரைவேக்காடு போடும் ஊளையிடலுக்கு இவ்வளவு விளக்கம் அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

எதிர்பார்த்த பதில்தான்- 😂

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகமே பிரெஞ்சு சிஸ்டத்திடம் அதிகம் இரவல் வாங்கியதுதான்.

எனவே உலகெங்கும் கடைப்பிடிக்கபடும்  ஜனநாயகம் அமெரிகாவிலும் உள்ளது என்பதுதான் உண்மை

ஆகவே அமெரிக்கா சிவில் யுத்தத்தில் ஜனநாயகம் பிறந்தது என்பதும், லிங்கன் அதை பிறப்பித்தார் என்பதும் முற்றிலும் தவறான கூற்று.

பிகு: சுமந்திரனை பற்றி எழுதி என் காலத்தை விரயம் செய்ய நான் விரும்பவில்லை. நான் எழுதியதெல்லாம் நீங்கள் தந்த பிழையான வரலாற்றுத் தரவு பற்றியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஆகவே அமெரிக்கா சிவில் யுத்தத்தில் ஜனநாயகம் பிறந்தது என்பதும், லிங்கன் அதை பிறப்பித்தார் என்பதும் முற்றிலும் தவறான கூற்று.

நாங்கள் நடைமுறை உலகை பற்றித்தான் கதைக்கிறோம். ஆதிகாலத்தைப் பற்றி அல்ல. நடைமுறை உலகில் இருக்கும்..  சனநாயகத்தை பிரசவித்தது அமெரிக்க சிவில் யுத்தமும்.. லிங்கனும் தான். 

உண்மையான சனநாயகம்.. என்பதை எங்கள் திருவள்ளுவரும்.. எங்கள் ஒளவை பாட்டி தான் பிறப்பித்தவர்கள். ஆனால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஒரு சிறுவனின் கருத்துச் சுதந்திரத்தை இன்றும் மதிக்கமாட்டார்கள் பல இடத்தில்.. ஆனால்.. ஒளவையார் தான் அதையும் பாடிக்காட்டினார். 

போதுமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

போதும். இதுக்கு மேலே தாங்காது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

போதும். இதுக்கு மேலே தாங்காது😂

அந்தப் பயம் இருக்கட்டும் 🤣😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.