Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

`நீங்கள் தூங்க வேண்டும் என்று நினைத்தால், இந்தக் கருவி உதவுமாம்' - டெக் சுவாரஸ்யம்!


Recommended Posts


மனநிலையைக் கட்டுப்படுத்தும் கருவி

`நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் வெவ்வேறு மனநிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு, `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும்,திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

Image result for hapbee

இந்தச் சாதனம் தலையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன விதமான மனநிலையில் இருக்க விரும்புகிறீர்களோ அதற்கேற்றவாறு இந்தச் சாதனத்தில் பதிவு செய்து உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளலாம். தூங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா, இதைக் கொண்டு தூக்கத்திற்கான மனநிலையை உண்டாக்க முடியும். விழிப்புடன் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறீர்களா, அதையும் செய்து கொள்ளலாம். இப்படி எந்தவிதமாக வேண்டுமானாலும் நம் மனநிலையை மாற்றிக்கொள்ளலாம்.

`ஹப்பீ' (Hapbee) என்ற நிறுவனம்தான் இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளது. சரி, எப்படி நம் மனநிலையை ஒரு சாதனத்தைக்கொண்டு மாற்றமுடியும் என்ற கேள்வி எழும். அந்த நிறுவனம் தெரிவித்த வரையில் காப்புரிமை பெற்ற எலக்ட்ரோ மின்காந்த அதிர்வெண்களை வெளியிடும் தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தித்தான் இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளனர். அந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காந்தப்புலமானது 0-22kHz வரையிலான அதிர்வெண்களை வெளியிடுகிறது. குறிப்பிட்ட அளவு மின்காந்த அதிர்வெண்களை வெளியிடுவதன் மூலம் நாம் நம் மனதிற்குப் பிடித்தமான மனநிலையை மாற்றிக்கொள்ள முடியும். இதைத் தவிர வேறு எந்த ரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை.

இந்தச் சாதனத்திற்கான செயலியை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் நாம் எந்த மனநிலையில் இருக்க விரும்புகிறோமோ, அந்த அளவிற்கான மின்காந்த அதிர்வெண் வெளியீட்டைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். கடந்த 15 வருடங்களாக ஆராய்ச்சிசெய்து இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளதாக ஹப்பீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு, மே மாதம் இது விற்பனைக்கு வரக்கூடும். ஆனால், விலையும் தாறுமாறுதான், ஒரு சாதனத்தின் விலை அமெரிக்க மதிப்பில் 359 டாலர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,900.

https://www.vikatan.com/technology/tech-news/this-tech-helps-you-to-change-your-desired-mindset

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிக்க மகிழ்ச்சி குணமடைந்து வந்தது
    • இப்படிப்பட்ட திமிர் பிடித்த கூட்டங்கள் இருக்கும் வரை, ஏழைகளுக்கு விடிவில்லை, இவர்கள் எல்லாம் மோட்டு குடிகள்
    • எல்லா கவிதைகளும் நிறைவாக இருக்கின்றது புயல்.....பாராட்டுக்கள்.....!  👍
    • இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதுசென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலேயே கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்து விட்டது.புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/11/24125120/2103843/Tamil-News-Nivar-cyclone-Bay-of-Bengal-centered-3.vpf
    • ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது என்றும், இதனால் தேசிய சுகாதாரத்தில்  ஏற்படக்கூடிய பாதிப்பு ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. மார்ச் இறுதி வரை நீடிக்கும் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்திற்குள் இங்கிலாந்து காலடி எடுத்து வைக்கிறது என்று போரிஸ் ஜான்சன் எச்சரித்தார். மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் திருத்தப்பட்ட பிராந்திய மூன்று அடுக்கு கட்டுப்பாட்டு முறை குறித்த விவரங்களை பிரதமர் வெளியிட்டார்.இந்த நிலையில் அபாயங்கள் நிறைந்த ஒரு திட்டத்தை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார். மேலும் கொரோனாவுக்கு எதிராக தற்போது வரை நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தவிர்க்கும் வகையில் மற்றும் பொதுமக்கள் செய்த கடினமான தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரதமரின் புதிய திட்டம் உள்ளது என விமர்சித்துள்ளார் புதிய நடவடிக்கைகள் அக்டோபரை விட கடுமையானவை என்று பிரதமர் கூறுகிறார், உண்மையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொற்று விகிதங்கள் மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது  மற்றும் இறப்புகள் அதிகமாக இருக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளில் 4,000 பேர் மற்றும் உட்புறங்களில் 1,000 பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது முழு ஊரங்கிற்கு வழிவகுத்த மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் திட்டம் எதனால் தோல்வியடைந்தது என்பது தற்போது நமக்கு தெரியும், அரசாங்கம் மீண்டும் அதே தவறுகளை செய்து கொரோனா பரவுவதை அதிகரிக்க வழிவகுக்கக்கூடாது என டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார். https://www.dailythanthi.com/News/World/2020/11/24153954/British-Medical-Association-warns-Boris-Johnsons-lockdown.vpf  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.