Jump to content

சூரியனுக்கு மிக அண்மையில் பூமி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Last_year_was_the_Earth__warmest_since_record.jpg

சூரியனுக்கு மிக அண்மையில் பூமி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

சூரியனுக்கு மிக அண்மையில் பூமி சுழலுவதால், வெப்பத்துடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 57 ஆயிரத்து 492 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 39 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/சூரியனுக்கு-மிக-அண்மையில/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.