Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ரேடார் என்றால் என்ன.! எவ்வாறு செயல்படுகிறது.. பயன்கள் என்ன.?


Recommended Posts

மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை (Electromagnetic radiation wave) பயன்படுத்தி ஒரு விமானமோ அல்லது பொருளோ எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது. அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் ஒரு கருவி தான் ரேடார். Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே Radar.

1940-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் Radar என்ற சுருக்கமான சொல் உருவாக்கப்பட்டது.விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது. ரேடார் கருவியில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் ஆகியவை இருக்கும்.

ரேடாரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் மின்காந்த அலை சிக்னல்களை குறிப்பிட்ட திசையில் காற்றில் பரப்புகிறது. டிரான்ஸ்மிட்டர் மூலம் வெளியே செல்லும் சிக்னலானது ஒரு பொருள் மீது மோதி, திரும்பும் போது ரிசிவரானது அதனை பெற்று கொள்கிறது. ஒரு சில ரேடார் கருவிகளில் டிரான்ஸ்மிட்டர் ஆண்டனாவே ரிசிவர் ஆண்டனாவாகவும் செயல்படுகிறது.

டிரான்ஸ்மிட்டரிலிருந்து வெளிவரும் தொடர்ச்சியான ரேடியோ அலைகள், தன்னுடைய பாதையில் குறுக்கிடும் பொருள் மீது பட்டு, ரேடார் கருவியை நோக்கி வந்த வேகத்திலேயே திரும்பி செல்கிறது. இந்த மின்காந்த கதிர்வீச்சு அலைகளை பெற்று கொள்கிறது ரிசிவர். இதன் மூலம் குறிப்பிட்ட பொருளின் இருப்பிடம் மற்றும் வேகம் பற்றிய துல்லிய தகவல்களை தருகின்றன ரேடார் கருவிகள்.

ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகம் வரை ஒளி (Light) பயணிக்கும். இதே வேகத்தில் தான் ரேடாரில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளும் பயணிக்கிறது. இந்த வேகத்தில் செல்லும் மின்காந்த அலைகளின் பாதையில் ஏதேனும் குறுக்கிடும் போது, அந்த அலைகள் பொருள் மீது பட்டு மீண்டும் ரேடாரில் உள்ள ரிசிவருக்கு செல்கிறது.

டிரான்ஸ்மிட்டரிலிருந்து புறப்பட்டு பொருள் மீது மோத எடுத்து கொண்ட நேரம் மற்றும் பொருள் மீது மோதி ரிசிவருக்கு மின்காந்த அலைகள் வந்த சேர்ந்த நேரம் இரண்டையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக 4 வினாடிகளில் இந்த செயல் நடைபெறுகிறது என்று வைத்து கொள்வோம்.

ரேடார் அலைகளில் தட்டுப்பட்ட குறிப்பிட்ட பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை துல்லியமாக அறிய d=speed x time என்ற சமன்பாடு பயன்படுகிறது. இதில் speed அதாவது ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்பதை அறிவோம். இதனுடன் 4 வினாடிகளை பெருக்கினால் கிடைக்கும் முடிவு இரு தொலைவுகளின் முடிவு . அதாவது Radar to object மற்றும் object to Radar ஆகிய இரண்டின் பயண நேர முடிவு. எனவே கிடைத்த முடிவை இரண்டால் வகுப்பதால் வரும் விடையே ரேடார் பார்வையில் சிக்கிய பொருளின் தொலைவாகும்.

இரண்டாம் உலக போருக்கு முன்னும், பின்னும் பல நாடுகளால் ரேடார் கருவிகள் ரகசியமாக உருவாக்கப்பட்டன. ராணுவத் தேவைகளுக்காகவே ரேடார் கருவிகள் உருவாக்கப்பட்டன என்றாலும், அடுத்தடுத்து பல முன்னேற்றங்களால் பல துறைகளிலும் ரேடார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வான் பாதுகாப்பு, ஏவுகணையை தடுத்து நிறுத்தி தாக்கியழிக்கும் அமைப்புகள், விண்வெளி கண்காணிப்பு, வானிலை கண்காணிப்பு என பல துறைகளிலும் ரேடார்களின் பணி முக்கியமாக உள்ளது. ஒரே நேரத்தில் பல பொருட்களை அடையாளம் காட்டும் வகையிலும், பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பொருளை துல்லியமாக காட்டும் வகையிலும் ராணுவ பயன்பாட்டிற்காக அதிநவீன ரேடார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரேடார் சிக்னல்கள் குறிப்பாக பெரும்பாலான உலோகங்கள், கடல் நீர் மற்றும் ஈரமான தரை போன்ற கணிசமான மின் கடத்துத்திறன் கொண்ட பொருட்களால் நன்கு பிரதிபலிக்கப்படுகின்றன. சில ரேடர்களை வடிவமைக்கும்போது, நீராவி, மழைத்துளிகள் அல்லது வளிமண்டல வாயுக்கள் குறிப்பாக ஆக்ஸிஜன் ஆகியவற்றால் உறிஞ்சப்படும் அல்லது சிதறடிக்கப்படும் சில radio frequency-கள் தவிர்க்கப்படுகின்றன.

ரேடார் ரிசிவரில் பெறப்படும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக இருந்தால் Electronic Amplifiers மூலம் அதனை பலப்படுத்தி கொள்ள முடியும். போர்க்காலங்களில் எதிரி நாட்டின் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை முன்கூட்டியே கணிக்க உருவாக்கப்பட்ட ரேடார் தொழிநுட்பம், இன்று பல துறைகளிலும்  பயன்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/102420/ரேடார்-என்றால்-என்ன.!எவ்வாறு-செயல்படுகிறது..பயன்கள்-என்ன.?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். மேலும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பில் தொலைபேசி  ஊடாகவும், கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒன்லைன் முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் கொழும்பிலுள்ள இந்தியத்  தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு கடற்படையினர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இருந்தபோதும் கொவிட் சூழலால் அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடற்படையினரின் உதவியைப் பெற்றாவது இந்திய மீனவர்களின் வருகையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். இது விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். கிரிந்த மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவில் முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி வலியுறுத்தினார். இது தொடர்பில் அமைச்சு ஏற்கனவே கவனம் செலுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். ஒலுவில் துறைமுகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதனை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/95342  
  • 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)   மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று கடந்த காலங்களிலும் எமது அரசாங்கமே வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற வேலைத்திட்டங்களால் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மேற்கொண்டன. அத்துடன் ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொராேனா தொற்று போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. எமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலும்  மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் சிறந்ததொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சு கமத்தொழில் அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. எனது அமைச்சின் கீழும் விவசாய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கின்றோம். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் 4க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக்கொண்டுவந்து தொழில்பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார்.    https://www.virakesari.lk/article/95355  
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களைப் பலவந்தமாக கருணா வெளியேற்றியதையடுத்து மட்டுநகரில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுக் கிடந்தன மட்டுநகர், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை ஆகியவிடங்களில் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தமிழருக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்படுள்ளன. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை கருணா 12 மணிநேர அவகாசத்தில் விரட்டியடித்ததையடுத்து பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் உயிர் அச்சத்தில் வடக்கு நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள்.  முதல் நாளில் மட்டும் குறைந்தது 5000 யாழ்ப்பாணத் தமிழர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் நோக்கிப் பயணித்ததாக மட்டக்களப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் அறியத் தந்தார். யாழ்ப்பாண தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  கல்வியங்காட்டுப்பகுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான ஆடை நெசவு ஆலையும் மூடப்பட்டிருந்தது.  தமக்கு கருணா குழு கொலை அச்சுருத்தல் விடுத்துவருவதால் தாம் வெளியேறுகிறோம் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பொலீஸிடம் கொடுத்த முறையீடுகளைப் பொலீஸார் கண்டுகொள்ளவில்லையென்று அவர்கள் தெரிவித்தனர். பாண்டிருப்பில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்திவந்த தர்மரத்தினம் எனும் வர்த்தகர் அவரது கடையிலிருந்த அனைத்துப் பண்டங்களும் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரும் அவரது குடும்பமும் கடத்திச் செல்லப்பட்டு, "இனிமேல் இங்கிருந்தால் உங்களைக் கொல்வோம்" என்று கருணா குழுவினரால் எச்சரிக்கப்பட்டு உடுத்திருந்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு செங்கலடி ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாணத்தமிழர்களுக்குச் சொந்தமான பெருமளவு வீடுகளும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினராலும், அவர்களது ஆதரவாளர்களாலும் சூரையாடப்பட்டபின்னர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மட்டக்களப்பில் மீதமிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து அன்றைய பொழுதுகளைக் கழித்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.  
  • நந்தன் இதுக்கும் ஒருக்கா புள்ளி போடப்பா. பயிற்சி மாத்திரமல்ல எப்படி சாமர்த்தியமாக சிங்கள குடியேற்றம் செய்வது போனபோக்கில் இராணுவ முகாம் அமைக்காமல் சிறிய குடியேற்றம் சிறிய விகாரை அப்புறமா பாரிய முகாம் இப்படி குடியேற்றத்துக்கு றோடு போட்டு கொடுத்ததும் மொசாட் தான்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.