Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

இலங்கை மன்னன் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.!

Recommended Posts

இலங்கை மன்னன் தமிழில் கையொப்பமிட்ட கண்டி ஒப்பந்தம்: என்.சரவணன்

59603_1.jpg

கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

கண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்திடமுமிருந்து அன்னியரிடம் பறிபோனது.

காலனித்துவத்திடம் பறிபோன கதை

1505 இல் இலங்கை அந்நிய காலனித்துவத்திடம் பறிபோனது. போர்த்துக்கேயர் இலங்கை கைப்பற்றிய போதும் அவர்களால் கரையோரப் பிரதேசங்களையே 1685வரை ஆண்டனர். போர்த்துக்கேயரை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக கண்டி மன்னன் இரண்டாவது இராஜசிங்கன் ஒல்லாந்தரின் உதவியை நாடினார். அப்படி செய்தால் அதற்கு பிரதியுபகாரமாக மட்டக்களப்பில் அல்லது கொட்டியாரத்தில் ஒல்லாந்தருக்கு ஒரு கோட்டையை கட்டி கொடுப்பது என்பதே மன்னனின் திட்டமாக இருந்தது.

அதன்படி 23.05.1638இல் ஒல்லாந்தருக்கும் கண்டி அரசனுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒல்லாந்தருக்கு கண்டியின் விளைபொருள்களை ஏற்றுமதிக்கான ஏகபோக உரிமையை வழங்கி பொருளுதவி, படையுதவியையும் செய்வதாக உடன்பாடு காணப்பட்டது. அதன்படி ஒல்லாந்தரும் 1658 யூன் மாதமளவில் போர்த்துகேயரை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டனர். ஆனால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டபடி கைப்பற்றிய இடங்களை மன்னரிடம் ஒப்படைக்காமல் தாம் கைப்பற்றிய இடங்கள் தமக்குரியவை என்றனர்.

இதற்கிடையில் கண்டியின் அரசர்கள் மாறினார். மன்னர் நரேந்திர சிங்க (ஆட்சிபுரிந்தது 1707-1739) மன்னருக்கு அடுத்து ஆட்சிபுரிய வாரிசு இன்றிப் போனதால் அவரின் முதலாவது மனைவியின் சகோதரர் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டு அரசராக்கப்பட்டார். அதுபோலவே ஸ்ரீ விஜய ராஜசிங்கனுக்கும் வாரிசு இல்லாத நிலையில் அவரின் முதல் மனைவியின் சகோதரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 – 1782) மதுரையிலிருந்து அழைக்கப்பட்டு மன்னராக ஆக்கப்பட்டார்.

இப்படி நாயக்க வம்சத்து மன்னர்கள் சிங்கள பௌத்தர்களை ஆண்டது குறித்து பிற்காலங்களில் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாலும் அன்றைய ஆரம்ப கட்டத்தில் இந்த அளவு இனவாதத்துடன் அணுகப்படவில்லை.

அவர்களையும் ஒரு சிங்கள மன்னனாகவே கருதினார்கள். அந்த நாயக்க மன்னர்களும் பௌத்த மதத்துக்கு மாறி தம்மை சிங்கள மக்களின் அரசனாகத்தான் ஆட்சி நடத்தினார்கள். குறிப்பாக கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் தான் பௌத்த மதத்தைப் பலப்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பத்தரின் புனிதப்பல்லை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, புனிதப்பல்லை மக்கள் வணங்குவதற்காக வருடாந்த தலதா பெரஹர கொண்டாட்டம் 1753இல் இவரின் ஏற்பாட்டிலேயே தொடங்கப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக நலிந்து போயிருந்த பௌத்த மதத்தை கட்டியெழுப்புவதற்க்காக அன்றைய  சீயம் நாட்டு (தாய்லாந்து) அரசருக்கு தூது அனுப்பி அங்கிருந்து தேரவாத பௌத்த பிக்குகளை வரவழைத்து சீயம் நிகாய ஆரம்பிக்கப்பட்டது. பல நிலங்கள் விகாரைகளுக்கு வழங்கப்பட்டது. சிதைவுற்றிருந்த பல விகாரைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் ஒல்லாந்தருடன் பகைமை உணர்வுகள் தொடர்ந்த போதும் இரு தரப்புக்கும் இடையில் உக்கிர போர் முயற்சிகள் இடம்பெறவில்லை. ஆனால் ஒல்லாந்தரின் ஆட்சிப்பகுதிகளில் இருந்த கரையோர பிரதேசங்களில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சியைப் பயன்படுத்திய  கண்டி மன்னர் 1761இல் ஒரு படையெடுப்பை செய்தார். இதற்குப் பதிலடியாக ஒல்லாந்தரும் கண்டி ராச்சியத்துக்கு உரித்தான சிலாபம் புத்தளம் போன்ற பிரதேசங்களைப் பிடித்தனர்.

narendrasinghe.png

அத்துடன் நில்லாது கண்டி மீது படையெடுத்து வெற்றிமுரசு கொட்டினர். ஆனால் அதனை தக்கவைத்துகொள்ளும் பலமில்லாததால் ஒல்லாந்தர் பின்வாங்கினர். இரு தரப்பும் விட்டுகொடுப்புகளை செய்வதாக ஒரு முக்கிய சமாதான உடன்படிகையை 14.02.1776 இல் செய்துகொண்டனர். இந்த ஒப்பதத்தின் மூலம் சூட்சுமமாக வளங்களை கொள்ளையடித்தனர் ஒல்லாந்தர். இதன் உச்சக் கட்டமாக ஒல்லாந்தரை துரத்தியே ஆவது என்கிற முடிவுக்கு வந்த மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.

இதற்கு முன்னர் போர்த்துகேயரை விரட்ட ஒல்லாந்தர்களைப் பயன்படுத்தியதன் விளைவு போர்த்துக்கேயரின் இடத்தை ஒல்லாந்தர் வகித்தனர். அந்த வரலாற்றுப் பாடத்தை மறந்து மீண்டும் இந்த முறை ஒல்லாந்தர் மீது படையெடுப்புக்காக ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார் கண்டி மன்னர்.  ஆங்கிலேயர் இந்த சூழலைப் பயன்படுத்தி திருகோணமலையை 1782இல் கைப்பற்றியிருந்தனர். அதே ஆண்டு மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் குதிரையிலிருந்து விழுந்ததில் மரணமானார்.

uv8fcYk.jpg

uv8fcYk.jpg

அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 – 1798) ஆட்சியேறினார். இவரது ஆட்சியில் தான் அரசருக்கு எதிராக கண்டிப் பிரதானிகளதும், அதிகாரிகளதும் அதிருப்திகள் அதிகரித்தன. அவர்கள் அரசருக்கு எதிராக சூழ்ச்சி செய்துகொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  அடுத்ததாக முடிசூட்டப்பட்ட அவரின் மூத்த மனைவியின் சகோதரர் முத்துசாமியை ராஜாதிராஜசிங்கனுக்குப் பின்னர் முடிசூட்ட விடவில்லை. அதற்குப் பதிலாக இரண்டாவது மனைவியின் சகோதரன் ஸ்ரீ விக்கிரமா ராஜசிங்கனை முடிசூட்டினர் . அதற்கூடாக அரசாட்சியை தமது கைக்குள் வைத்திருக்கலாம் என்று போட்ட கணக்கு பிழைத்தது.

அவர்களின் சூழ்ச்சி எல்லை மீறிப் போனபோது மன்னரின் தண்டனைக்கு உள்ளானார்கள். இறுதியில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள் ஆங்கிலேயர்களின் துணையுடன் கண்டி அரசை கைப்பற்றி அரசரை சிறைபிடித்தனர். இலங்கையின் கடைசி அரசும் வீழ்ந்தது. முழு இலங்கையும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது.

1803, 1809ம் ஆண்டுகளில் கண்டியை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்திருந்தன. 1803இல் நிகழ்ந்த போரில் ஆயிரக்கணக்கான ஆங்கிலேயப்படையினர் கொல்லப்பட்டு ஒருவர் மாத்திரமே தப்பி சென்றார். அனால் 1815இல் கண்டியைப் பிடிக்கப்போன 3744 ஆங்கிலப் படையினரில் எவருக்கும் சேதமின்றி கண்டி கைப்பற்றப்பட்டது.

ஒப்பந்தம்

கண்டு கைப்பற்ற பின்னர் தம் மத்தியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள் என்றே காட்டிக்கொடுப்புக்கு துணைபோன பெரும்பாலான பிரதானிகள் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எமாற்றப்பட்டிருந்தார்கள். “இரு தரப்புக்கும் தேவைப்பட்டது அரசனை வீழ்த்துவது. அது முடிந்துவிட்டது. இனி நீங்கள் போகலாம்” என்பதே ஆங்கிலேயர்களின் சைகையாக இருந்தது.

11002489_893563890663639_666017290720282

சிறைப்பிடிக்கப்பட்ட அரசரின் நலன்களை ஏற்பாடு செய்வதற்காக டொய்லி 08 நாட்கள் ஒப்பந்தம் குறித்த உத்தியோகபூர்வமாக கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவில்லை.

கண்டி தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களிடம் பணிந்துவிட்டதால் அன்றைய ஆள்பதியின் விருப்பின் பேரில் அதிகாரி டொய்லி ஒரு மாநாட்டைக் கூட்டினார். விமரிசையான அந்த ஏற்பாட்டில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள், திசாவைகள் பலரும் கலந்துகொண்டனர்.  அங்கு ஏன் கண்டியை கைப்பற்றினோம் என்று விளக்கமளிக்கப்பட்டது. “கண்டிப் பிரதானிகளே கைப்பற்றும்படி அழைத்தார்கள், அவர்கள் எங்கள் படைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்” என்று ஆள்பதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கண்டி ராஜ மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு கண்டி ஒப்பந்தம் (Kandy convention) செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜோன் டொய்லியால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் பிரதானிகள் கையெழுத்திட்டனர்.  ஆங்கில-சிங்கள மொழிகளில் அது வாசிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் பின்னர் வெளியிடப்படவில்லை. ஆனால் 6 ஆம் திகதி ஆங்கிலேய வர்த்தமானி பத்திரிகையில் முதல் தடவையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

ஒப்பந்தம் செய்துமுடிக்கப்பட்டதன் பின்னர் ஆங்கிலேய கொடி ஏற்றப்பட்டது. குண்டுகளையும் துப்பாக்கிகளையும் வெடிக்கச் செய்து தமது வெற்றியைக் கொண்டாடினர் ஆங்கிலேயர்.

அதே நாள் பிரித்தானிய கொடியான ”யூனியன் ஜாக்” கொடியை வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் இழுத்து இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது ராஜ்ய துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் இன்றும் பாடப்புத்தகங்களில் உள்ள நாயகன் அவர். இன்றும் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக்கொடியை இறக்கி கையில் வைத்திருக்கும் ஒரு சிலை உண்டு.

தமிழில் வைக்கப்பட்ட கையெழுத்து

இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து வைப்பதை கௌரவமாக நினைப்பதைப்போல அப்போது தமிழில் கையெழுத்திடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழை ஓரளவு அறிந்தும் வைத்திருந்தனர். நாயக்க மன்னரின் உறவினர்கள் பலர் அரச சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் தமிழும் வழக்கில் இருந்தது. ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்ட கையெழுத்து. சிலரின் கையெழுத்து என்ன மொழி என்றே அடையாளம் காண முடியாது உள்ளதை ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆங்கிலேயர் சார்பில்

• ரொபர்ட் பிரவுன்றிக் – ஆள்பதி

• ஜோன் டொய்லி – பிரதான மொழிபெயர்ப்பாளர்

• ஜேம்ஸ் சதர்லன்ட் – ஆங்கிய அரசின் பிரதி செயலாளர்

கண்டி மக்கள் சார்பாக கையெழுத்திட்டவர்கள்

• எஹெலபொல மகா நிலமே

• மில்லேவ – வெல்லஸ்ஸ தொகுதி

• ரத்வத்த – மாத்தளை தொகுதி

• கலகொட – கண்டி கலாவிய

• மொல்லிகொட அதிகாரம் – ஏழு கோறளை

• மொல்லிகொட – மூன்று கோறளை

• பிலிமதலாவ அதிகாரம் – சப்பிரகமுவ தொகுதி

• பிலிமதலாவ – நான்கு கோறளை

• கெப்பெட்டிபொல – ஊவா

• கலகம – தமன்கடுவ

kandy-signs.jpg

கையெழுத்தில் சில மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக இப்போதைய புதிய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. குறிப்பாக எஹெலபொலவின் கையெழுத்து போலியாக இருக்க வாய்ப்புண்டு என்றும் அதற்கு எதுவாக இருக்கக்கூடிய காரணங்களையும் அந்த ஆய்வுகள் முன்வைக்கின்றன.  பலரது கையெழுத்துக்கள் அப்படி மோசடியானவை என்கிறது அந்த ஆய்வுகள்.

வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய வரலாற்றை ஆங்கிலேயர்களின் கண்களுக்கூடாகவும் அவர்களின் மூளைக்கூடாகவுமே பார்க்கத் திணிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் சொன்னதே இன்றும் எமக்கான ஆதாரமாகியிருக்கிறது. எனவே இந்த மோசடிகள் குறித்த சந்தேகங்களை அசட்டை செய்யவும் முடியாது.

ஒப்பந்த உள்ளடக்கம்

உடன்படிக்கை 12 பிரமாணங்களைக் கொண்டது. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் அரச போகத்தை இழப்பதுடன், இனி அந்த வம்சாவளியை சேர்ந்த எவருக்கும் ஆளுரிமை இல்லை என்றும், அவர்களில் எவரும் கண்டி பிரதேசத்துக்கும் நுழைந்தால் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்தே முதல் மூன்று  பிரமாணங்களும் பேசுகின்றன.

நான்காவது கண்டி பிரித்தானிய ஆட்சிக்குட்படுத்தப்பட்டதாக அறிவிக்கிறது. ஐந்தாவது பௌத்த மதத்தை பேணி பாதுகாப்பது குறித்தும், ஆறு, ஏழு, எட்டு ஆகியவை தண்டனை நிறைவேற்றுவதில் நெகிழ்ச்சித் தன்மை குறித்தும், ஒன்பதாவது கண்டியில் நீதி வழங்கும் அதிகாரம் ஆள்பதியின் கட்டுப்பாட்டில் இருப்பது, பத்தாவது இந்த ஒப்பந்தத்தின் வலிமை குறித்தும், பதினோராவது கண்டியில் பெறப்படும் வரி கண்டியின் அபிவிருத்திக்கு பயன்படும் என்றும், பன்னிரெண்டாவது வர்த்தகம் குறித்த விடயங்களை ஆள்பதி மன்னருக்கு பொறுப்பு கூறுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

வீழ்த்தியவர்கள் வீழ்ந்தார்கள்

ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பலவற்றை ஆங்கிலேயர் பின்பற்றவில்லை என்று அதிருப்திகொண்டனர் கையெழுத்திட்டவர்கள். பொது மக்கள் மத்தியிலும் ஆங்கிலேய எதிர்ப்பு நாளாக நாளாக வளர்ந்தது.

இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பெட்டிபோல, பிலிமத்தலாவ, மில்லவ போன்ற தலைவர்கள் தம்மை ஏமாற்றிய ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஒரு சிங்கள மன்னனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். அதன் விளைவாக அவர்கள் பலர் 1818இல் மரணதண்டனை விதிக்கப்பட்டனர். சிலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சிறைத்தண்டனை பெற்றனர்.
கண்டியரசன் ஆங்கிலேயர்களுக்கு கடைசியாக சொன்ன வசனம்

“எஹெலபொலவையும், மொல்லிகொடவையும் நம்பாதீர்கள். அவர்கள் என்னை ஏமாற்றியவர்கள். உங்களையும் ஏமாற்றத் தயங்க மாட்டார்கள்.”

இலங்கை ஏறத்தாள 450 வருடங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. போர்த்துக்கேயர் 153 வருடங்கள், ஒல்லாந்தர் 140 வருடங்கள், ஆங்கிலேயர் 152 என அது தொடர்ந்திருக்கிறது. ஒரு சண்டியரிடம் இருந்து தப்புவதற்காக இன்னொரு சண்டியரை நாடுவதும், காப்பாற்ற வந்த சண்டியர் முன்னைய சண்டியரை விரட்டிவிட்டு மேலும் மோசமான சண்டித்தனம் செய்வதுமாக தொடர்ந்திருக்கிறது.

இறுதியில் சொந்த தேசத்து மன்னரை விரட்டிவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பு பேய்களிடம் மொத்தமாக தம்மை ஒப்படைத்த கதை விசித்திரமானது. சொந்த மன்னனை அந்நியன் என்று தூற்றி அவரை விரட்ட செய்த சதி இறுதியில் உண்மையான அந்நியனிடம் தேசத்தை காவு கொடுத்தனர். அந்த வகையில் கண்டி ஒப்பந்தம் இலங்கையின் மரண சாசனம் தான். அந்த ஒப்பந்தத்தின் எதிர் விளைவை நாடு இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி – தினக்குரல்

http://www.vanakkamlondon.com/kandy-03-03-2020/

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மலையக அரண் சாய்ந்துவிட்டது க.ஆ.கோகிலவாணி  மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார்.  அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர்.  அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்ளது என்றே கூறலாம்.   மலையகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மலையகம் இழந்துகொண்டு வருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், பெ.சந்திரசேகரன், வேலாயுதம், எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலரின் இழப்புகளே இன்னும் ஈடுசெய்யப்படாத நிலையில், மலையகத்தின் மைந்தனாகவே திகழ்ந்து, தனது கம்பீர அரசியலால் மலையக மக்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பி வந்த தலை சிறந்த மலையக வீரனை, மலையக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர். ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. அதுவும் மலையகம் எனும் மாபெரும் பிரதேசத்துக்கே ஒற்றைத் தலைவனாய் நின்று, அம்மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து மீட்டு, அம்மக்களுக்காகக் குரலெப்பி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் போராடி, அவர்களது ஏதேச்சதிகாரம், தொழிலாளர்களைப் பாதிக்காது பாதுகாத்து வந்த காவலரண் அவர். மலையகத்தைப் பொறுத்தளவில், பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் தாய்த் தொழிற்சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையில்லை.  இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்தவர்களே, அரசியல் முரண்பாடுகளால் அந்தத் தொழிற்சங்கத்தை விட்டுப் பிரிந்து புதிய தொழிற்சங்கங்ளை உருவாக்கி, அவரவர் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் மலையக மக்களை வழிநடத்தி வருகின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பிறகு, இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்று, ஒரு தந்தையாக இருந்து மலையகத்தை வழிநடத்தி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், அவரது இழப்பு இன்று மலையகத்துக்கே சாபக்கேடாகிவிட்டது. அந்த ஆளுமைமிக்கத் தலைவனுக்கு ஈடாக ஒரு தலைவன் மலையகத்துக்கு இனி இல்லை. கம்பீர அரசியலே அவரது அடையாளம். அந்தக் கம்பீரத்துக்குப் பயந்தே, தொழிலாளர்கள் மீது கைவைக்க, அவர்களை அடிமைப்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடைநடுங்கின. அந்தக் கம்பீரத்துக்கு அடிபணிந்தே, மலையக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவர் தொடர்பில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், 'ஆறுமுகன்' என்ற ஒரு தலைவன் இல்லை எனில், மலையகத் தொழிலாளர் வர்க்கம் நசுக்கப்பட்டுப் போயிருக்கும். அந்த கம்பீர அரசியலை மலையகத்தில் இனிக் காணக்கிடைக்குமா என்பதே, மலையக மக்களின் ஏக்கமாக அமைந்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை தற்துணிவோடு எதிர்த்து நின்றுப் போராடி, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான்.  1998ஆம் ஆண்டு முதல், முதலாளிமார் சம்மேளனத்துடன் நேருக்கு நேர் நின்று, அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை 20 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வந்தவர். அவரது இழப்பு பேரிழப்பாகிவிட்டது.  அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மறைந்தாலும், அவர்களுக்கு நிகரான ஒரு தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவருக்குப் பின், ஓர் இடைவெளி மட்டுமே எஞ்சி நிற்கின்றது. 'தொழிற்சங்கம்', 'அரசியல்' என வரும்போது, நேர், எதிர் என இருபக்கங்களும் இருக்கவே செய்கின்றன. குற்றங்காணாத எந்த அரசியல்வாதியும், இலங்கையில் ஏன் உலகளவில் இல்லை. சில சில குறைபாடுகளால், மக்களின் மனதில் அவர் தொடர்பில் விரிசல் ஏற்பட்டாலும், அதனைச் சரிசெய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கட்டிக்காத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான்.  இந்திய வம்வசாவளி மக்கள் தொடர்பில், பாரத நாடு இன்னும் கரிசனை கொள்கின்றது என்றால், அது இ.தொ.கா என்னும் ஆலவிருட்சத்தின் அரசியல் காரணமாகத்தான். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிணைப்புக்கு, இ.தொ.காவே பாலமாக இருந்துச் செயற்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டின் தலைவர்களான அமரர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணச்சடங்குளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை, இ.தொ.காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது.  அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்பும்கூட, இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறவேண்டும். அதன் பின்னர், பிரமதர் மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான், பிரதமரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, தனது அமைச்சுக்கு சென்று பின்னர் வீடு திரும்பும்போதே, தனது 30 வருடகால அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை, இயல்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சார்ந்த இறுதிச் சந்திப்புகள் மிக முக்கியமான சந்திப்புகளாக அமைந்துள்ளன.  வரலாறு சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி, இராமநாதன், இராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இந்தியாவிலும், ஆங்கில மொழியில் இவர் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியைப் பலப்படுத்துவதே, அவரது ஆரம்பகாலச் செயற்பாடுகளாக அமைந்திருந்தன. 1993ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1994ஆம் ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராக, மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் நியமிக்கப்பட்டார். அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசம், 1994ஆம் ஆண்டாகும். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார். இ.தொ.காவின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1999ஆம் ஆண்டு இயற்கை எய்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 121,000 வாக்குகளால் வெற்றிபெற்றார்.  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை 2000ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், கூட்டொப்பந்தப் பேச்சில் பங்கேற்று, பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார். முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இ.தொ.கா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. இதில், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றிருந்தார்.  2002ஆம் ஆண்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, அதிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனூடாக, அவர் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இ.தொ.காவை பலப்படுத்தினார்.  நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதில் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டதுடன், அரசமைப்பின் ஓர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 121 ரூபாயாக இருந்த நாள் சம்பளத்தை, 147 ரூபாயாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து, அரசாங்கம் தனியார்த் துறைக்கு அறிவித்த சம்பள அதிகரப்பை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் வெற்றியும் கண்டார். 2008ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிராஜவுரிமை விடயத்தில், இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளையும் அங்கிகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கும் காரணமாக இருந்தார். மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2002ஆம் ஆண்டளவில் இந்திய வீட்டுத்திட்டத்தை மலையகப் பகுதிக்கு அறிமுகப்படுத்திய அவர், லிந்துலை - கலிடோனியா தோட்டத்தில், மாடி வீட்டுத் திட்டத்தின் கீழ் 300 வீடுகளை அமைத்துக்கொடுத்தார். அந்த வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்குக் காரணமாக இருந்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில், மலையகத்துக்கு 3,000 ஆசியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொடுத்தார். 2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 65,000 வாக்குளால் வெற்றிபெற்று, கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, 2010ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார். 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுக் காலப்பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்ததுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிந்து பசுக்களை இறக்குமதி செய்து, கொட்டகலை போன்ற பாற்பண்ணை அதிகம் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு விநியோகித்தார். பெருந்தோட்ட மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திலும், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சு பதவியை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இயற்கை எய்தினார். இவ்வாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது.  இ.தொ.காவின் தலைமைப் பதவியையும் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துவந்த அவர், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார். ஆறுமுகன் தொண்டமான், ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நாச்சியார், விஜி, ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்மார் இருவரும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரிஸின் இளைஞரணியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையக-அரண்-சாய்ந்துவிட்டது/91-250996
  • பொத்துவில் தமிழர் பிரதேசம்.. முழுச் சிங்கள பெளத்த மயம். 
  • இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு  எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம், வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்
  • யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது. தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய, தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.   https://www.virakesari.lk/article/82905
  • டென்சில் கொப்பேகடுவ இருந்து இவர் வரைக்கும் இதுதான் சொல்லிக்கிட்டு தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழர் நிலத்தில்.. சிங்கள மயமாக்கத்திற்கு இந்தக் கூச்சல் மிக அவசியம். உலகத்தை ஏமாற்ற.