Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்!- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO


Recommended Posts


WHO - Tiktok

தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கொரோனா பற்றி வரும் தவறான செய்திகளை தங்கள் வலைதளங்கள் மற்றும் செயலிகளிலிருந்து நீக்கி வருகின்றன. தவறான செய்திகளை நீக்குவது மட்டும் இதற்குத் தீர்வாகாது, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானதுதான். அதனால், உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தங்களுக்குப் பரவாமல் எப்படித் தற்காத்துக் கொள்வது மற்றும் நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை சுகாதார நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த வீடியோக்களை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பகிர்ந்து வந்தது.

தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இதன்மூலம் வைரஸ் தொடர்பான சரியான தகவல்களையும், விழிப்புணர்வையும் மேலும் அதிக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.vikatan.com/technology/tech-news/who-shares-corona-awareness-videos-in-tik-tok

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Facebook-gives-WHO-unlimited-ad-space-to-counter-coronavirus-misinformation-hoaxes.jpg

கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு: பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு

கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஷக்கர்பேர்க் (Mark Zuckerberg) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்த துல்லியமான தகவல்களை பேஸ்புக் இலவசமாக விளம்பரம் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடுத் தடுப்பு மையங்கள் ஆகியவற்றுடன் நடந்துவருவதாக தமது பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஷக்கர்பேர்க் பதிவு செய்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் தவிர தம்மை அணுகும் வேறு எந்த நிறுவனத்திற்கும் நபர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Facebook-gives-WHO-unlimited-ad-space-to-counter-coronavirus-misinformation-hoaxes-2.jpg

http://athavannews.com/கொரானா-வைரஸ்-குறித்த-விழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6

https://systems.jhu.edu/

உலக கொரோனா வைரஸ் தாக்கம் நேரலை , ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம்.  

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.