Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாலபத்திரர் வாங்கோ

 

ஆமா  "ஓணாண்டி" என்றால் என்ன பொருள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஓணாண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

வணக்கம் பாலபத்திரர் வாங்கோ

 

ஆமா  "ஓணாண்டி" என்றால் என்ன பொருள்?

வணக்கம் வருக, வருக, வருகவே!.  களத்தின் வளம் பெருகவே.

Link to comment
Share on other sites

On 11/4/2020 at 01:10, வல்வை சகாறா said:

ஆமா  "ஓணாண்டி" என்றால் என்ன பொருள்?

ஓணாண்டி என்றா ஓணானைப் போனற்றவர் என அர்த்தமாக்கும் 

Link to comment
Share on other sites

பாலபத்திர ஓணாண்டி வாருங்கோ வந்து யாழுக்கு அருள் தாருங்கோ.

நான் முதலில் வேலியில் போகும் ஓணாண் என்று எண்ணிவிட்டேன், மன்னித்தருள்க. ஓணாணைக் கண்டுள்ளேன் ஆனால் பாலபத்திரர் என்றால் என்ன என்று தேடினேன் கிடைத்ததைப் பகிர்கிறேன்.

 

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகந்நாதர் ஆலயம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

sudarraasipalan-211.jpg

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகந்நாதர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்கள் திருமேனி மரத்தால் ஆனது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த மூன்று திருமேனிகளும் உரிய சடங்குகளுடன் புதியதாக மரத்தில் வடிக்கப்பட்டு ஆலயத்தில் வைக்கப்படும். இந்த ஆலயத்தில் பலச் சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்த ஆலயத்தின் கொடி, காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

பொதுவாக காற்றானது, காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில், கடலில் இருந்து நிலத்தை நோக்கியும், மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும் 

ஜெகந்நாதர், சுபத்திரை, பாலபத்திரர்

இந்தக் கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல், பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்குத் தெரிவதில்லை.

ஆலயத்தின் மேல் பகுதியில் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.

இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு, வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி, இருபது லட்சமானாலும் சரி, சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணாவதும் இல்லை என்கிறார்கள்.

இந்த ஆலய சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு, விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது, அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.

சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது, கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்குக் கேட்காது. ஆனால், அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது, கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்குக் கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

 

 

Link to comment
Share on other sites

On 17/4/2020 at 18:13, Paanch said:

நான் முதலில் வேலியில் போகும் ஓணாண் என்று எண்ணிவிட்டேன், மன்னித்தருள்க. ஓணாணைக் கண்டுள்ளேன் ஆனால் பாலபத்திரர் என்றால் என்ன என்று தேடினேன் கிடைத்ததைப் பகிர்கிறேன்.

பாலபத்திரர் என்றா சரிதான்.
ஆனா ஓணாண்டி என்றா ஓணான் தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்திரர் என்று பலராமரைத்தான் சொல்கிறார்கள்.....சுபத்திரை தனது இரு அண்ணன்களான ஜெகந்நாதர் (கிருஷ்ணர்)பாலபத்திரரு ( பலராமர்)டன் காட்சி தரும் ஆலயம்......!  😁

இணைப்புக்கு நன்றி பாஞ்ச் .....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.