• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா? சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்

Recommended Posts

உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.

எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. சிகிச்சைக்கான பிரத்யேக மருந்துகளும் கண்டறியப்படவில்லை. அறிகுறிகளுக்கான சிகிச்சையே உலகம் முழுவதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங், இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா சட்டப்பேரவையிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். அங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சுமன் ஹரிபிரியா, "பசுவின் சாணத்தை எரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் புகைக்குக் கொரோனா வைரஸை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இது தீர்வாக அமையும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

"மதச்சடங்குகளில் பசுவின் சாணமும் கோமியமும் பயன்படுத்தப்படுவதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்களும் அடங்கியிருக்கின்றன. குஜராத்தில் செயல்படும் சில ஆயுர்வேத மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் பசுக்களும் தங்க வைக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குப் பசுவின் சாணம், கோமியத்தால் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த் (Panchamrit) மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. இந்த மருந்தின் மூலம் புற்றுநோய் குணமாக்கப்படுகிறது என்று அறிந்தேன். அதனால்தான் முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் பசுவை கடவுளாக வழிபட்டுள்ளனர்" என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

மேலும் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தின் பயன்கள் குறித்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியின் மூலமாக தான் இதை அறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் த்ரிவேந்திர சிங், "பசுக்கள் ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் வெளியேற்றும். அதனால் பசுக்களுக்கு மசாஜ் செய்தால் சுவாசப் பிரச்னைகள் குணமாகும். காசநோய் பிரச்னை இருப்பவர்கள் பசுக்கள் இருக்கும் பகுதியில் வாழ்ந்தால் நோய் முற்றிலும் குணமாகிவிடும்" என்று அதிர வைத்தார்.

அவ்வப்போது பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகப் பரிந்துரைக்கின்றனர் பா.ஜ.க அரசியல் பிரமுகர்கள். உண்மையிலேயே இந்த இரண்டிலும் மருந்துவக் குணங்கள் இருக்கின்றனவா? கொரோனா வைரஸ் நோய்க்கு இவை தீர்வாக அமையுமா என்று பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்.

"கொரோனா வைரஸின் செயல்திறன் பற்றியே இன்னும் சரியான புரிந்துணர்வு ஏற்படவில்லை. அந்த வைரஸின் டி.என்.ஏ வையே சில தினங்களுக்கு முன்புதான் வெளியிட்டிருக்கின்றனர். டி.என்.ஏ குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட பின், இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் உலகில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பதற்றமான சூழல் நிலவும்போது மக்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களை வழங்கக்கூடாது.

பசுவின் சாணத்தை எரிப்பதால் வெளிவரும் புகை, நோயைக் குணப்படுத்தும் என்பதெல்லாம் வெறும் அனுமானம்தான். இத்தகைய நோய்களை ஆன்மிகத்தின் வழியாக அணுகாமல், அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.

பசுவை ஒரு மதத்தின் குறியீடாக வைத்துக்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கம் போன்று ஏதாவது நிகழும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்குதான் நிலவுகிறது. பசுவின் சாணம், கோமியத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில்தான் பஞ்சகவ்யம் போன்ற மருந்துகளைத் தயாரிக்கின்றனர். அவற்றில் காணப்படும் பாக்டீரியா மண்ணுக்கு நல்லது செய்வை என்பதால் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு இது ஓகே. ஆனால், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இவை மருந்தாகப் பயன்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை.

இந்த நேரத்தில் மாற்று மருத்துவ முறையைப் பின்பற்றும் மருத்துவ நிபுணர்கள், முதலில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய் பரவாமல் தடுக்கும் ஆலோசனைகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு வைரஸ்களின் தாக்கத்தைப் போக்குவதற்குப் பயன்பட்ட மூலிகைகளை வைத்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து பார்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் 1960-ம் ஆண்டு முதல் வேறு வேறு வகையாக இந்த உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் இதற்கும் பயன்படுமா என்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரங்கள் இல்லாத தகவல்களையெல்லாம் பரப்பக்கூடாது" என்றார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் `சூத்ரா' என்ற பெயரில் பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோருக்குச் சம்பளம் வழங்கவே நிதியில்லாத நிலையில், பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ள பல கோடியை ஒதுக்கியுள்ளதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/health/healthy/can-cow-dung-cure-corona-virus

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை.  சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏  
  • Saravanan A 9 months ago மலையாளத்திலும் "ழ" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் "ழகரம்" மற்றும் "ற" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி "ஹளெ கன்னட" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில்  இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த "ப" (pa) "ஹ" (ha) வாக "வ" (va) "ப" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli),  புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu).  தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர.  தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை)  இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார்.  முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் "ழ" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்  
  • உடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.  
  • வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின்-க/