Jump to content

அதிகரித்துவரும் முழங்கால் மூட்டு வலிக்கான தீர்வு


Recommended Posts

இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


health__image_4_3_2020.jpg


உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டிய அவசியமான சூழல் உருவாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது, உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பது என பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம்  இன்றும் பெரும்பாலான முதியவர்கள் முழங்கால் மூட்டு வலி குறைய முறையான சிகிச்சை பெறாமல், தற்காலிக நிவாரணத்தை தான் பெற்று வருகிறார்கள்.

இதன் காரணமாகவும் அவர்களுக்கு மூட்டு மாற்று சத்திரசிகிச்சை அவசியமாகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வயதான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மேற்கொள்ளப்படும் முழங்கால் மூட்டு வலிக்குரிய சிகிச்சை பாதுகாப்பானதாக இருப்பதால், மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றினால் இத்தகைய பிரச்சனையில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.

டொக்டர் ராஜ்கண்ணா.
தொகுப்பு அனுஷா.

 

https://www.virakesari.lk/article/77036

Link to comment
Share on other sites

பொதுவாக கனடாவில் வைத்தியர்கள் அறுவைச்சிகிச்சையை தவிர்ப்பார்கள். முழங்கால் பிரச்சனை என்றால், 'ட்ரட்மில்' இல் ஓடு என ஓட்டி  விடுவார்கள்.

17 minutes ago, ampanai said:

முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டிய அவசியமான சூழல் உருவாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது,

நான் இதுவரை சம்மணமிட்டு இருப்பது மிகவும் நல்லது என்று எம்மவர்கள் பலர் சென்னதை நம்பி நான் எக்ஸ்ராவாக சம்மணமிட்டு இருந்து பழகி இருக்கிறேன். இனி நாற்காலி சோபாவில் மட்டுமே இருப்பேன்.😂

 

3 hours ago, ampanai said:

பொதுவாக கனடாவில் வைத்தியர்கள் அறுவைச்சிகிச்சையை தவிர்ப்பார்கள். முழங்கால் பிரச்சனை என்றால், 'ட்ரட்மில்' இல் ஓடு என ஓட்டி  விடுவார்கள்.

😎

எனது சின்னம்மா ஒருவர் முழங்கால் பிரச்சனைக்கு அறுவைச்சிகிச்சை செய்தவர் சிறிய அளவில் தான் முன்னேற்றம் கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

 

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது, உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பது என பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம்  இன்றும் பெரும்பாலான முதியவர்கள் முழங்கால் மூட்டு வலி குறைய முறையான சிகிச்சை பெறாமல், தற்காலிக நிவாரணத்தை தான் பெற்று வருகிறார்கள்.

https://www.virakesari.lk/article/77036

இது 100% தவறான செய்தி. சப்பாணி கட்டி இருப்பதனால் மூட்டுக்கள் ஆரோக்கியமாகின்றன. யோகாவில் முக்கியமான பயிர்ச்சியே  சப்பாணி கட்டி இருப்பதுதான்.

Link to comment
Share on other sites

18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது 100% தவறான செய்தி. சப்பாணி கட்டி இருப்பதனால் மூட்டுக்கள் ஆரோக்கியமாகின்றன. யோகாவில் முக்கியமான பயிர்ச்சியே  சப்பாணி கட்டி இருப்பதுதான்.

நான் நினைக்கின்றேன் முழங்கால் மடித்து இருப்பது இடையில் ( 40க்கு பின்னராக ) ஆரம்பிப்பது முழங்காலுக்கு கெடுதியாக அமையலாம். 

ஆனால், சிறுவயதில் இருந்தே செய்து வந்தால் தொடர்ந்தும் செய்யலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு முழங்காலையும் ஒப்பிரேசன் செய்து போட்டு இப்ப படுற பாடு இருக்கே......
வேண்டாம் அழுதுடுவன்.....:(

Link to comment
Share on other sites

  • 1 year later...

உடல் நரம்புகளை வலுவாக்கி, வீக்கங்களைக் குறைத்து, மூட்டு வலிகளுக்கு மட்டுமன்றி, சுவாச பாதிப்புகள் மற்றும் இரத்த சர்க்கரை பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணம் தருகிறது, வாத நாராயணன் மூலிகை. அழகிய சிவந்த மலர்களையும், புளிய இலைகள் போன்ற இலைகளையும் உடைய மருத்துவப்பலன்கள்மிக்க வாத நாராயணன் மரம்,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ அறுவை சிகிச்சை மட்டும் செய்துடாதைங்கோ யாரும்... எனது நண்பர்கள் ஒருவர் அல்ல இருவர் செய்துவிட்டு பட்டபாட்டை பார்த்து இருக்கிறேன்.. றில்லரால் துளைத்து முழங்கால் சில்லுக்குள் ஜெல் வைப்பார்கள்.. அது நிரந்தரமில்ல.. வருடம் வருடம் துளைத்து வைக்கணும்.. உயிரை கொல்லும் கொடிய வலி.. எனக்கு முழங்கால் பிரச்சினை வந்த போது இவர்கள் பட்ட பாட்டை பார்த்து விட்டு அறுவை சிகிச்சை செய்யவில்லை.. மூட்டுதெரபி செய்பவர்களுடம் போய் கிழமையில் மூன்று நாள் முழங்கால்களுக்கு மசாஜ் மூனுமாதம் ஒன் அவர் செஞ்சேன்.. மினிஸ்கூட்டர் எனப்படும் நின்று கொண்டு போகும் எலெக்றிக் ஸ்கூட்டரில் வேலைக்கு பலகிலோமிட்டர் நின்றுகொண்டு ஓடிப்போனதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாகதான் எனக்கு முழங்கால் வலி ஆரம்பித்தது அதனால் அப்புறம்  சைக்கிலில் வேலைக்கு போகதிடங்கினேன்.. மற்றும் ரேட்மில் வாங்கி வீட்டில் ஓடுகிரேன்.. இப்பொழுது நன்றாக இருக்கு.. அதனால்தான் சொல்கிறேன் தயவு செய்து யாரும் ஆப்பரேசன் செய்துவிடாதீர்கள்.. நரக வேதனை அது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது எனக்கு விற்றமின் டி குறைபாடும் இருந்தது(17 ரொம்ப கம்மி) இரத்தம் சோதித்தபோது தெரிந்தது. இப்பொழுது விட்டமின் டி 2000ml வாரம் ஒரு கண்ணாடி காப்சூல் ஒரு மாசம் எடுத்துவிட்டு இப்போ மாதம் ஒன்னு எடுக்கிறேன். வெளிநாடுகளில் வெய்யில் இல்லாததால் இது ஒரு பெரிய பிரச்சினை.. வருடம் வருடம் உடலை பரிசோதித்து தேவைஎனில் எடுங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.