Sign in to follow this  
ampanai

அதிகரித்துவரும் முழங்கால் மூட்டு வலிக்கான தீர்வு

Recommended Posts

இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


health__image_4_3_2020.jpg


உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டிய அவசியமான சூழல் உருவாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது, உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பது என பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம்  இன்றும் பெரும்பாலான முதியவர்கள் முழங்கால் மூட்டு வலி குறைய முறையான சிகிச்சை பெறாமல், தற்காலிக நிவாரணத்தை தான் பெற்று வருகிறார்கள்.

இதன் காரணமாகவும் அவர்களுக்கு மூட்டு மாற்று சத்திரசிகிச்சை அவசியமாகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வயதான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மேற்கொள்ளப்படும் முழங்கால் மூட்டு வலிக்குரிய சிகிச்சை பாதுகாப்பானதாக இருப்பதால், மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றினால் இத்தகைய பிரச்சனையில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.

டொக்டர் ராஜ்கண்ணா.
தொகுப்பு அனுஷா.

 

https://www.virakesari.lk/article/77036

Share this post


Link to post
Share on other sites

பொதுவாக கனடாவில் வைத்தியர்கள் அறுவைச்சிகிச்சையை தவிர்ப்பார்கள். முழங்கால் பிரச்சனை என்றால், 'ட்ரட்மில்' இல் ஓடு என ஓட்டி  விடுவார்கள்.

17 minutes ago, ampanai said:

முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டிய அவசியமான சூழல் உருவாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது,

நான் இதுவரை சம்மணமிட்டு இருப்பது மிகவும் நல்லது என்று எம்மவர்கள் பலர் சென்னதை நம்பி நான் எக்ஸ்ராவாக சம்மணமிட்டு இருந்து பழகி இருக்கிறேன். இனி நாற்காலி சோபாவில் மட்டுமே இருப்பேன்.😂

 

3 hours ago, ampanai said:

பொதுவாக கனடாவில் வைத்தியர்கள் அறுவைச்சிகிச்சையை தவிர்ப்பார்கள். முழங்கால் பிரச்சனை என்றால், 'ட்ரட்மில்' இல் ஓடு என ஓட்டி  விடுவார்கள்.

😎

எனது சின்னம்மா ஒருவர் முழங்கால் பிரச்சனைக்கு அறுவைச்சிகிச்சை செய்தவர் சிறிய அளவில் தான் முன்னேற்றம் கிடைத்தது.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

 

இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது, உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பது என பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம்  இன்றும் பெரும்பாலான முதியவர்கள் முழங்கால் மூட்டு வலி குறைய முறையான சிகிச்சை பெறாமல், தற்காலிக நிவாரணத்தை தான் பெற்று வருகிறார்கள்.

https://www.virakesari.lk/article/77036

இது 100% தவறான செய்தி. சப்பாணி கட்டி இருப்பதனால் மூட்டுக்கள் ஆரோக்கியமாகின்றன. யோகாவில் முக்கியமான பயிர்ச்சியே  சப்பாணி கட்டி இருப்பதுதான்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது 100% தவறான செய்தி. சப்பாணி கட்டி இருப்பதனால் மூட்டுக்கள் ஆரோக்கியமாகின்றன. யோகாவில் முக்கியமான பயிர்ச்சியே  சப்பாணி கட்டி இருப்பதுதான்.

நான் நினைக்கின்றேன் முழங்கால் மடித்து இருப்பது இடையில் ( 40க்கு பின்னராக ) ஆரம்பிப்பது முழங்காலுக்கு கெடுதியாக அமையலாம். 

ஆனால், சிறுவயதில் இருந்தே செய்து வந்தால் தொடர்ந்தும் செய்யலாம்.  

Share this post


Link to post
Share on other sites

நான் இரண்டு முழங்காலையும் ஒப்பிரேசன் செய்து போட்டு இப்ப படுற பாடு இருக்கே......
வேண்டாம் அழுதுடுவன்.....:(

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அந்தத் தலைப்பில் நான் இணைத்த வீடியோ நாலு நாட்களுக்கு முன்னர்தான் விகடனால் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் முன்னர் சொன்ன ஆமைக்கறி, உடும்புக்கறியோடு புதிதாக கறி இட்லியையும் அண்ணன் சீமான் உண்டு களித்ததைச் செப்பியிருந்தார்.😄 அதைக்கூடச் சரியாகச் பார்க்காமல் இந்தத் தலைப்புக்குள் இழுத்து வந்தது சரியா? தகுமா? நியாயமா? சொல்லுங்கள் உடையவரே!
    • உடையார் கூல் டவுன்😎 இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂  நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪 கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள். நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள். மதுவந்தியின் நம்பர்களை அவர் திடமாக நம்புவதுபோல நட்வர்சிங் நம்புகின்றார் என்பதற்காக சொன்னேன். 😄 அதற்காக நான் நெடுக்ஸ் மாதிரி பெண் வெறுப்பாளராகவும், நீங்கள் பெண்ணியவாதியாகவும் ஆகிவிடமுடியாது!😆 நான் சும்மாவே இரக்கமானவன். பொண்ணுங்கள் என்றால் அழுதிடுவேன். ஆமா..
    • இந்த ஆளு..... மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தாரு.... இப்ப போண்டா மாதிரி ஆகிட்டாரு
    • மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்   லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், "பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை சீனா மற்றும் இந்தியா பொதுவாக இயல்பானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. சீனா மற்றும் இந்தியா சரியான எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29165337/No-thirdparty-intervention-is-requir-chinese-Foreign.vpf
    • அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா?  இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?   சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????