Sign in to follow this  
ampanai

போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் மறைந்தார்!

Recommended Posts

prof.jpg

போர் நடைபெற்ற போது வன்னிக்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசான்களில் ஒருவராகிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் என்றழைக்கப்படும் மு.செ.குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழேந்தியுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை வன்னியில் பல்வேறு மொழிச்செம்மைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அதேபோல பெருமளவான போராளிகளுக்கு தமிழ் கற்பித்திருந்தார்.

அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் நெல்லை ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், “புத்தன் பேசுகிறான்” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ் அறிவோம்” என்ற பெயரில் இலக்கணம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் தமிழிசை பாவாணர் என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ் பகலவன் என்ற பட்டத்தையும் வழங்கி மதிப்பளித்துள்ளன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வரும் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது என்று தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://aruvi.com/article/tam/2020/03/04/8524/

Share this post


Link to post
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்..

Share this post


Link to post
Share on other sites

பேராசிரியர் அறிவரசன் அவர்களுக்கு, ஆழ்ந்த அஞ்சலிகள். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪 சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன. இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர். இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம். https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்
    • என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்! எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான்.  நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁
    • மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா. ஜப்பான் மீன் அந்த மாதிரி சுவை, பொரித்து சாப்பிட  இதெல்லாம் யாழ் மத்தியில்தான், நாங்கள் பெடியலா தூண்டில் போட்டு பிடிப்போம் எங்க ஊர் பெரிய குளத்தில். அப்படி பன்னாடை விறகு வைத்து சுட்டு சாப்பிடுவோம், சில வேளை கள்ளுக்கும் நல்ல சைட்டிஸ்😄 கடல் கெளிறு முள் குத்தினால், அதன் வலி சிலநாட்களுக்கு இருக்கும். அம்மா முன்னர் சமைத்தவா, எனக்கு செய்முறை தெரியா, ஆனா தலை சமைப்பதில்லை
    • மிகவும் உண்மை.  என்னுடைய அப்பம்மா வெளிப்படடையாக சொல்லுவார். குளம், ஆற்று மீன்கள் தாழ்ந்தவர்கள் (சாதியைச் சொல்லியும்) வாங்குவது என்று. ஆனால்  அப்பா, அம்மா சொல்லுவது கிடையாது, குளம், ஆற்று மீன்கள் வாங்குவதை விரும்புவது இல்லை. கடல் கெளிறு கூட வாங்குவது, ஊரில் ஓர் விதமாக பார்க்கப்படும். வேறு கடல் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் அருமையாக வாங்கப்படும், பொதுவாக தவிர்க்கப்படும். எனது வீட்டில் வியாழன், வெள்ளி, மற்றும் விரதங்கள், திருவிழாக்கள் தவிர, பொதுவாக மீன் தவிர்க்கப்பட முடியாத உணவு . எங்கிருந்து கருவாடாக வருகிறது.  கிழக்கில் உடனடி நன்னீர் மீன்கள் கிடைப்பது இல்லையா?   எப்படி சமைப்பது என்பது தெரியாது. உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும்.