Sign in to follow this  
poet

இருளில் சாதி இல்லை. - வ.ஐ.ச.ஜெயபாலன்.

Recommended Posts

இருளில் சாதி இல்லை.
.
அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது.
.

.
அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள்.
.
தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த ஒரு நிலக்கிழான் ஒருவன் “எங்களுக்குப் பிறந்ததுகள் எங்களை எதிர்த்து கோவிலுக்குள்ள நுளைய வருகுதுகள்” என்று கத்தியிருக்கிறான். சற்றும் தாமதிக்காமல் ஆலயபிரவேசத்துக்கு அணிவகுத்து வந்துகொண்டிருந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூக கிழவர் ஒருவர் பதிலுக்கு ”எங்களுக்குப் பிறந்ததுகள் வாசலை தடுக்குதுகள்” என கத்தியிருக்கிறார்.
.
நான் என் கவிதை ஒன்றில் ”இருளில் ஆணும் பெண்ணும் மட்டும்தான். சாதி இல்லை” என எழுதினேன். தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்திகளை வாசிக்கும்போது இந்த கதையாடல்தான் எனக்கு நினைவுக்கு வரும்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நீர்த்துப்போன சாதி இந்தக்காலத்தில் உள்ளவர்களுக்கு நன்றாய் பாடம் சொல்லி அடிபட  வேணுமென்பதுதான் உங்கள் கணவாக்கும் .

இன்னும் இரண்டு தலைமுறை போனால் தமிழ்நாட்டிலும் இங்கும் சாதி என்றால் என்ன என்று கேள்வி கேட்கப்படும் நிலை ஆனால் ஆளும் அரசு இயந்திரத்துக்கு சாதி தேவை அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஓர்  அங்கமே உங்களின் எழுத்துக்கள் .

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பெருமாள் நவீன சாதி வெறியர்கள் பலர் இப்படித்தான் பேசிறாங்க. போராளிகளின் குடும்பம் பெண்தலைமைக் குடும்பங்கள்  ஏழைப்பிள்ளைகளின் படிப்பு என உதவிக்கரம் நீட்டும் புலம் பெயர்ந்த உறவுகளை கைகூப்பி வணங்குகிறேன். அதேசமயம் இப்ப சாதி இல்லையென்று சொல்லிக்கொண்டு ஊர்மக்கள் மத்தியில் தம் தம் பெற்றோரின் சாதி வெறியை பெருமிதத்தை நிலை நிறுத்த கோவிலுக்கும் குழத்துக்கும் சுடலைக்கும் காசு அனுப்பும் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.               ஊர்க்கோயில்களை மீழக்கட்டி சாதி சண்டைபிடிக்க,     ஊர்ச் சுடலைக்கு மதில் எழுப்பி பிணங்களில்கூட சாதிபார்க்க எல்லாம் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பணம் குவிகிறது. மதச் சண்டைகளூட அடிப்படையில் சாதிச்சண்டைதான். பெருமாள் எந்த உலகத்தில் இருக்கிறீங்க? இவ்வளவு நடக்குது கண்டுகொள்ளாமல் யாழ்ப்பாணத்தில் இப்ப சாதி இல்ல என்கிறதே சாதிவாதம்தான். தயவு செய்து ஆணவக்கொலை நடக்கிற தமிழ் நாட்டிலும் சுடலைக்கு வெளியே தாழ்த்தப்பட்டவர்களின்  பிணங்கள் நாறடிக்கபடுகிற யாழ்பாணத்திலும் சாதி இல்லை என்று புண்ணுக்கு புனுகு பூசாதீங்க. வாதிடாதீங்க.

அசிங்கமாக இருக்கு.

 

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பையன்  வைகோ தமிழகத்தில் அரசியல் வாதி. தமிழீழத்தை விட அவர்க்கு திராவிடம் முக்கியம் என்றால் அந்த சமூக நீதி கொள்கையில் அவருக்கு பற்று இருந்தால் அது தவறானதல்ல.  அது அவரது கொள்கை. அதை அங்கீகரிப்பதே மனித நாகரீகம். அவரிடம்  நீங்கள் எந்த கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல எமக்கு என்ன உரிமை உள்ளது?  அதற்காக‍ அவர் துரோகி என்று கூறும் தகுதி எவருக்கும் இல்லை. 
    • துல்ப‌ன் வைக்கோவுக்கு த‌மிழீழத்தை விட‌ திராவிட‌ம் அதிக‌ முக்கிய‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு இவ‌ர்க‌ளின் உண்மை முக‌ம் தெரிந்து விட்ட‌து , த‌மிழ‌க‌ அர‌சியல் வாதிக‌ளில் த‌மிழீழ‌த்துக்காக‌ உண்மையும் நேர்மையுமா த‌மிழீழ‌த்தை ஆத‌ரித்த‌து அது எம்ஜி ஆர் ம‌ட்டும் தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஈழ‌த்தை வைத்து அர‌சிய‌ல் செய்தார்க‌ள்   , ஆதிமுக்கா க‌ட்சியில் இருக்கும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு இது ந‌ல்லாவே தெரியும் , அதுங்க‌ள் சொல்லுங்க‌ள் த‌ம்பி உங்க‌ளுக்கு த‌னி நாடு வேண்டி ர‌த்த‌ க‌ண்ணிர் விட்ட‌து எம்ஜி ஆர் தான் ,  
    • நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வெற்றி தோல்வி என்பது பெரிய விசயமாக கருதவில்லை. பல தளங்களில் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமானது. குறிப்பாக இளைய தலைமுறைக்கு நம்மாழ்வார் கருத்துக்களை விதைப்பதாகட்டும், இயற்கை நீர் நிலவளத்தின் பாதுகாப்பு, கார்பரேட்டுக்களின் அணுஉலை ஈதேன் மீத்தேன் கைரோகார்பன் திட்டங்களின் ஆபத்து. மணற்கொள்ளை, மத்தியரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான சதிகள், திராவிட அரசியல் கட்சிகளின் சாதிய ஓட்டு அரசியல் சாராய அரசியல் , குடிநீர் பிரச்சனை நிலத்தடி நீர் வற்றிப் போதலின் அவசியம்  என பல தளங்களில் இளைய தலை முறைக்கு ஒரு புதிய சிந்தனை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பக பல கல்லூரிகள் அவரை உரையாற்ற அழைத்தது எதிர்கால தலமுறைக்கு இந்த சிந்தனை அவசியமான என்பதை உணர்ந்துதான். தேர்தலின் வெற்றியை விட இந்த விழிப்புணர்வே அவசியமானது. அந்தவகையில் நாம்தமிழர் கட்சி தனது நோக்கில் கணிசமான வெற்றியை பெற்றுவிட்டது.  கடந்த வராரம் வன்னியில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களோடு கதைக்கும் போது ஒரு அவர்கள் கூறியது, கத்தரி பயிரடவில்லை அதற்கு பதிலாக நிலக்கடலை பயிரிடுகின்றார்கள். ஏன் என்று கேட்டால் கொரோனாவால் இந்தியாவில் இருந்து கைபிரட் கத்தரி விதைகள் வரவில்லை. பெரும்பாலானவர்கள் நாட்டு கத்தரி விதைகளை தொலைத்து விட்டார்கள். தக்காளி முருங்கை பப்பாசி போன்றவற்றுக்கும் கைபிரட்டையே நாடுகின்றார்கள். போர் முடிந்த பத்தாண்டுகளில் விவசாயத்தின் நிலமை தலைகீழாக போய்கொண்டிருக்கின்றது.  பாரம்பரிய விதைகளை அழிப்பதின் ஆபத்து குறித்து சீமான் விழிப்பணர்வு ஏற்படுத்துவது போல் யாரும் ஏற்படுத்தியதாக நான் அறியவில்லை.  மற்றும்படி ஈழ அரசியல் குறித்தும் இனப்படுகொலை போராட்டம் குறித்தும் கடந்த பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து ஞாபகப்படுத்தும் கட்சி நாமதமிழர் கட்சி மட்டுமே. அவர்களுக்கு நிகராக வேறு எவரும் அதை செய்ய வில்லை.  எப்படி புலிகளின் போராட்ட காலத்தில் புலிகளை ஒரு தரப்பு ஈழத்தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்தார்களோ  அதே நாம் தமிழர் விசயத்திலும் நடக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் கிடையாது.  நாம் தமிழர் கட்சிக்கு பதிலாக வேறு ஒரு கட்சி அதிகமாக ஈழ ஆதரவு போககை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கும் இந்த எதிர்ப்பு வருவது தவிர்க்க முடியாதது. இந்த இனத்தின் சிந்தனை முறை, புத்திஜீவித அளவுகோல்கள் அப்படிப் பட்டது. இதே திரியில் படித்தவர்கள் ஈழத்தமிழருக்கு தலமையாக வரவேண்டும் என்று எல்லாம் பினாத்துகின்றார்கள். ஏன் விக்கினேஸ்வரனின் படிப்புக்கு என்ன குறை ? படிப்பின் மேன்மை பதவி மேன்மை என பல காரணிகளை வைத்துதானனே முதலமைச்சராக்கினார்கள்.  விவாதங்களின் நோக்கம் பொது நன்மை நோக்கியாதனது அல்ல.  தாம் கொண்ட கருத்தின் வெற்றி நோக்கியதாகவே அமைவது எப்போதும் இங்கு வழமையான ஒன்று. இப்போதைக்கு ஈழத் தமிழர் பிரச்சனை இனப்படுகொலை குறித்து அதிகம் பேசும் சீமானை அதிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும்.  பின்பு அடுத்து எவர் போசுவாரோ அவரை பிடித்து இழுத்து விழுத்திவிட காத்திருப்பது. இந்த இழவை செய்வதுக்கு தி மு க வுக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ தமிழகத்தில் ஒரு கராணம் இருக்கின்றது ஆனால் ஈழத்தமிழருக்கு என்ன அவசியம் ? இதுதான் இந்த இனத்தின் சாபக்கேடு. 
    • உரிய நேரத்தில் சிறந்த பதிவு. நன்றி ஜஸ்ரின்.