Jump to content

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலமே மக்களின் விடுதலைக்கு உதவும் - மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலமே மக்களின் விடுதலைக்கு உதவும் - மாவை

 

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

நாவாந்துறையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து செயற்படுவதற்காகத்தான் கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டோம் ஆனால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகின்றது என்ற அற்ப நோக்கத்திற்காக அரசியல் சூழ்ச்சி செய்து நாம்மேற்கொண்டிருந்த அத்தனை நடவடிக்கைகளையும் இல்லாது செய்துவிட்டார்கள். இத்தகைய நிலைமையில் தான் இன்று நாங்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒருமித்து செயற்படுவதன் மூலம்தான் எமக்கான தீர்வினை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஐக்கியதேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியை உருவாக்கியது. 

இந்தச் சந்தர்ப்பத்தை நாங்களும் பயன்படுத்தி நீண்டகாலமாக பிரச்சினையாக இருந்த இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு தீர்வைக்காண்பதற்காக அதற்கேற்ற முன்னேற்பாடான தீர்வுமுயற்சிகளை நாம்மேற்கொண்டிருந்தோம் அதேவேளை அது எமது பகுதியில் அபிவிருத்தியையும் செய்வதற்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்தோம். 

இவ்வாறான முயற்சிகள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என தென்னிலங்கையைச் சார்ந்தோர் நினைத்தமையினால் அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி அத்தனை முயற்சிகளையும் இல்லாது செய்துள்ளார்கள் அதன் பின்னரான ஜனாதிபதித் தேர்தலும் நாங்கள் ஒருமித்த கருத்துக்களை வெளியிட்டபோதும் ஆட்சியில் அமர்ந்துள்ள கோத்தாபய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினால் ஆட்சியில் அமர்ந்துள்ளேன் எனவும் அவர்களுக்காகத்தான் செயற்படப்போகிறேன் என கருத்துக்களைக் தெரிவித்துள்ளார்.

mawai_senadhiraja.jpg

அது மட்டுமன்றி இந்த நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றியோ இனப்பிரச்சினை பற்றியே எத்தகைய கதைகளையும் கூறாது அவர்கள் செயலாற்றிவருகின்றார்கள். 

அவரது இந்தச் செயற்பாடானது தமிழ் மக்களை இன்னும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது எங்களை இன்னும் அச்சத்திலேயே ஆழ்த்தியுள்ளது. 

இத்தகைய நிலையில் பாராளுமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில் எங்களுக்குள்ளேயே பல கூட்டணிகள் உருவாகியுள்ளது. நாங்கள் எதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டோமோ அவ்வாறே மீளவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். 

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/77294

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

நாங்கள் எதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டோமோ அவ்வாறே மீளவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். 

எதற்காக??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசந்த்றையில் இன்னுமொரு மாளிகை கட்ட..

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.

அரசியல் என்றால்.... படிச்சவர்; பட்டம் பெற்றவர்; முன்னாள் அவர் / இவர்; .... என்று பார்க்காமல்

நேர்மையானவர்; வெளிப்படையானவர்; உண்மையானவர்; தேசியப்பற்று உள்ளவரா? என்று மட்டும் தான் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும்

சரிங்க நைனா! பலம் பெற்றிருந்து எதைச் சாதிச்சீங்க? ஒவ்வொரு தடவையும் அரைச்ச மாவையே அரைச்சு அலுக்கேலையா  உங்களுக்கு? இந்தத் தடவை இனொருவருக்கு சந்தர்ப்பம் கொடுத்து பார்த்தால் மாற்றம் வருகுதோ பார்க்கலாம். ஒன்றையே பார்த்து, கேட்டு சலித்துவிட்டது எமக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

  

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/77294

இதான் இவங்களோட தொழில் ரகசியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்ட காலத்திலையே விடுதலைக்கு உதவாத கூட்டம்.. இப்ப தமக்கு வாக்குச் சேகரித்து விடுதலை வாங்கித் தரப்போகுதாம்.

தாங்கள் தங்கள் பொக்கட்டுக்களை நிரப்ப.. விடுதலை ஒரு கோசம்.. இவங்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யுற அநியாயம்  எல்லாத்தையும், செய்து போட்டு...
எந்த முகத்துடன், இப்படி கேட்கிறார்கள்  என்று புரியவில்லை. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

AEA10-E4-E-6-A91-47-A8-BAF9-241-F383-AB5

Link to comment
Share on other sites

19 hours ago, தமிழ் சிறி said:

செய்யுற அநியாயம்  எல்லாத்தையும், செய்து போட்டு...
எந்த முகத்துடன், இப்படி கேட்கிறார்கள்  என்று புரியவில்லை. 😡

மக்கள் வாக்கு போடும்வரை இப்படி கேட்பது அவர்களுக்கு இலாபகரமானது. இவர்களுக்கு பாடம் படிப்பிக்கவாவது மக்கள் ஒட்டுமொத்தமாக மொட்டு கட்சியை அல்லது யூ. என். பி. யை  ஒரு முறையாவது முற்றாக ஆதரிக்க வேண்டும். இவர்கள் அனைவரையும் அப்படியே ஓரம்கட்டி விட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.