-
Tell a friend
-
Similar Content
-
By suvy
சான்றிதழ்.
அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r ஜோதிபால.......,
"ஆதர மல் பவண்னே
ஆயன மே கமண்ணே
ஹொய்தோ யன்னே
கவுதோ என்னே
துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார்.
அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது. சற்று தூரத்தில் ஒரு பஸ் தரிப்பிடம். அதில் வீதியை பார்த்தபடி ஒராள் நிக்கிறார். அருகே வருகையில் அது ஒரு பெண் எனத் தெரிகின்றது. அவள் முகத்தில் வேதனையுடன் காலை உதறிக் கொண்டிருந்தாள். வண்டியை பார்த்ததும் தனது தாவணியை உருவி அசைத்து நிறுத்துமாறு சைகை செய்கின்றாள். வண்டி நிக்காமல் அவளைக் கடந்து செல்கின்றது. ஒரு நிமிஷம் யோசித்தவன்,தனக்குள் இந்த நேரத்துக்கு இனி இங்கு பஸ் வராது. கூட்டிக்கொண்டு போய் கடைகளுக்கு கிட்ட விடுவம் என நினைத்து றிவ்வார்ஸில் அவளருகே வருகின்றான். அவள் வலியுடன் பதட்டமாய் நிப்பதைப் பார்த்து, வண்டியை சிறிது திருப்பி அந்த இடத்துக்கு வெளிச்சம் படுமாறு நிறுத்தி காண்ட் பிரேக் போட்டுவிட்டு இறங்கி அவளருகே வருகின்றான்.
இராகவன்: மொக்கத நோனா கோகேத யன்னே ....,( என்ன பெண்ணே எங்கு போகிறாய்).
பெண் : மாத்தையா, ஓயாட்ட மட்ட உதவி கறன்ன புழுவந்த. யம் பழிபோதாக் கயி.....( ஐயா எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா, எதோ பூச்சி கடிக்குது ).
அவளது முகத்தையும் உடையையும் பார்த்தவன், நீங்கள் தமிழா. இங்கு யாரையாவது தேடி வந்திருக்கிறீர்களா. எங்கு காட்டுங்கள்.
ஓம் நான் தமிழ்தான். இங்கு கடிக்குது என்று காலை காட்டுகின்றாள். எடுக்க வருகுதில்லை.
பொறுங்க நான் பார்க்கிறன், என்று சொல்லி பார்த்தால் அவளது கணுக்காலுக்கு மேல் ஆடுதசையில் மலை அட்டை ஒன்று கடித்து இரத்தம் உறிஞ்சிக்கொண்டிருக்கு. இது மலை அட்டை அசைய வேண்டாம் என்று சொல்லி வில்லுக் கத்தியை எடுத்து அவளது சுடிதாரை வெட்டி விட்டு பார்க்க அது இரத்தம் குடித்து குண்டாகிக் கொண்டிருக்கு. இராகவன் சற்றும் தாமதிக்காமல் பீடியின் நெருப்பை கிள்ளி எறிந்துவிட்டு அந்த பீடியை சப்பி அந்த ஜந்துவின் மேல் பொளிச் பொளிச் என்று துப்புகிறான்.அவளிடம் பேச்சு குடுத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் எச்சிலை உமிழ அது கடிப்பதை விட்டு தலையை உயர்த்துகிறது. அவனும் சுணங்காமல் கத்தியால் அதை வழித்து எடுத்து அப்பால் போட்டுவிட்டு அவளையும் ஏற்றிக்கொண்டு கடைகள் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். சில கடைகள் மட்டுமே அங்கிருக்கு.அங்கே அவளை இறக்கிவிட்டு செல்கிறான். அவனது கடையும் பேக்கரியும் அந்த வீதியின் கோடியில் இருக்கு.அங்கு வானை நிறுத்திவிட்டு உள்ளே போனவன் உறங்கி விடுகின்றான்.
சோதனை தொடரும்....!
-
-
Topics
-
Posts
-
நூறு தொகுதி ஜெயிக்கிறவன், முதல்வர் ஆவரவன் எல்லாம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றார்கள். வார்டு மெம்பர் கூட வெல்ல முடியாத காட்சி எல்லா தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றார்கள் எனறால் காரணம் என்ன?. உது எல்லாம் உய்தறிவதற்கு rocket science அறிவு தேவையில்லை.
-
ஆதாரம் ஆதாரமாக இருந்தால் சரி. எனக்கு தெரியும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை என. முயற்சியுங்கள் பார்க்கலாம்.
-
என்ன மாதிரி ஆதாரங்கள் எதிர்பாக்கின்றிர்கள்?. வாங்கி கணக்கு statements, டீல் பேசப்பட்ட காணொளி என்பவையா?
-
ஆதாரத்தோடு கதைத்து பழக வேண்டும். எழுந்தமானமாக கதைத்தே இங்கு சிலருக்கு பழகி விட்டது. அதெப்படி எடப்பாடி பிஜேபியுடன் கை கோர்த்து வெளிப்படையாக நிற்கும் போது ஒரு பதிலும் இல்லை. ( தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க நினைத்து இருந்தால்)
-
உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.