Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நிலம்........... (8).  🐥 🐥 🐥 🐥

                                 🐥 🐥 🐥 🐥.

 

                                                         என்ன செய்தி சொல்லு..... கட்டிலில் இருந்தபடி பணியனைக் கழட்டிக்கொண்டு அவன் கேட்கிறான்.அவனை நெருங்கிச் சென்ற ஷாலினி கொத்தாக அவன்தலையைபி பிடித்து தனது வயிற்றின் மீது அவன் கன்னத்தையும் காதையும் அழுத்திப் பிடித்து உனது பேபி உள்ளே இருக்கு,அதன் துடிப்பு உனக்கு கேட்குதா என்கிறாள்... ஒரு நிமிடம் பரவசமான நிக்கோலா, அடுத்தகணம் அவளைத் தள்ளி விட்டு நோ..... வேண்டாம் அபார்ஷன் பண்ணிவிடு என்கிறான்.குரலில் கலக்கம். கண்ணில் சிறு பயம்தெரிகிறது.....!

ஷாலினி: இல்லை நிக்கோலா நான் குழந்தையைப் பெற்று வளர்க்கப் போகிறேன்......!

நிக்கோலா: ம்கூம்..... இது சரிவராது.வேண்டாம் ஷாலினி. ஓ நீ என்னை பிளாக்மெயில் பண்ணுகிறாய்....!

ஷாலினி: பதறாதே நிக்கோலா, நான் உனக்கு ஒரு பிரச்சினையும் தரமாட்டேன்.பயப்பிடாதே நீ என்னை நம்பு ப்ளீஸ்.நீ வேறு நண்பர்களுடனும் இருந்திருக்கலாம்தானே.உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு நான் தருகிறேன்.ஆனால் இது வேண்டாம்.....!

ஷாலினி:முட்டாளா நீ.பணம் தேவை என்றால் நான் ஆசையாய் சேர்த்து வைத்த நகைகளை அடைவு வைப்பேனா. உனக்கு பத்து, நூறு தோழிகள் இருக்கலாம்.அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.இனிமேலும் நீ எப்போதும் போலவே இரு.நான் ஏனென்று கேட்க மாட்டேன்,உன் வழியில் குறுக்கிட மாட்டேன்.நீ என்னை சந்திக்கவும் வர வேண்டாம்.ஆனால் நான் உன் ஒருத்தனுடன்தான் என் அன்பைப் பகிர்ந்து கொண்டேன்.நீ ஒருத்தன்தான் என்னை நெருங்கலாம், என் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம். நிறைய நம்பிக்கை குடுத்து அவனை சமாதானப் படுத்துகிறாள்....அவனும் ஒருவாறு சமாதானமாகி நீ ரொம்ப வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாய், பிடிவாதக்காரியாகவும் இருக்கிறாய் ஷாலினி.....அப்படியே அவளை அனைத்து வயிற்றை வருடியபடி மார்பில் முகம் புதைத்து கொள்கிறான். இருவரும் ஒருவித பரவசமான மயக்கத்தில் படுத்திருக்கிறார்கள். நிக்கோலாவும் வாழ்வில் முதன்முறையாக ஒரு பெண்ணோடு கட்டிலில் உறவு கொள்ளாமல் படுத்திருக்கிறான்.....!

           அன்று சாரதா வேலையில் இருந்து போனைப் பார்த்தபோது அதில் அவளது வாங்கிக் கணக்கில் ஐயாயிரம் ஈரோ ஷாலினியால் போடப் பட்டிருந்தது.திடீரென்று சாரதாவுக்கு சந்தேகம்.ஷாலினிக்கு எப்படி இவ்வளவு கெதியாய் பணம் கிடைத்திருக்கும்.ஒருவேளை பிரேமன் குடுத்திருப்பானோ, இருக்கலாம் என்று நினைக்கிறாள்.

                                              சில நாட்களின் பின் ஷாலினி சூப்பர் மார்கெட்டுக்கு வேலைக்கு செல்கிறாள்.அங்கு அவளுடன் கூட வேலை செய்யும் பத்துமாத்தா (கறுப்பினப் பெண்) வந்து பிரெஞ் மொழியில் ஹே ஷாலினி, எஸ்க்கு தே ஒக்குறோன் துலா நுவல். (உனக்கு விடயம் தெரியாதா).....!

ஷாலினி:நோ.... சே குவா....!(இல்லையே என்ன விடயம்).

                  

பத்துமாத்தா:உனது நண்பன் நிக்கோலாவின் சகோதரி ஒரு விபத்தினால் ஆஸ்பத்திரியில் இருந்தாள் அல்லவா....!  ஓம் ...தெரியும்......அவள் இறந்து விட்டாள். இன்று மாலை அருகில் இருக்கும் சவக்காலையில் அடக்கம் செய்கிறார்கள்....! ஷாலினி போனைப் பார்க்கிறாள்.அதில் நிக்கோலா மெசேஜ் போட்டிருந்தான்.நான்தான் கவனிக்க வில்லை.....சே.....நன்றி பத்துமாத்தா, அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். நான் லீவு எடுத்துக் கொண்டு இப்பவே அங்கு போகிறேன்.....!

 

             வெளியே சாதாரணமாக மழை தூறிக்கொண்டிருக்கு.  ஷாலினி மெட்ரொ ரயிலில் அந்த சவக்காலைக்கு வந்து சேர்கிறாள்.அங்கு அதிக கூட்டமில்லை.நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே.சுமார் எழுபத்தைந்து பேர்வரை இருக்கலாம்.அங்குள்ள சர்ச்சில் பாதர் செபம் சொல்லிக்கொண்டிருந்தார்.அது முடிந்ததும் ஒவ்வொருவராக சென்று அங்கிருந்த ட்ரேயில் இருந்த நீண்ட தண்டுடன் சேர்ந்த செக்கச் சிவந்த ரோஜா மலர்களில் ஒவ்வருவரும் ஒவ்வொரு மலர் எடுத்து சென்று எமிலியின் பாதத்தில் வைத்து விட்டு அப்பால் நகர்கின்றார்கள்.நிக்கோலாவின் தாயும் தந்தையும் ஆளுக்கொரு மலர் வைத்து விட்டு வர அங்கு ஒரு மலர் மட்டும் மிதமுள்ளது.அதை தான் எடுத்து வைப்பம் என்று ஷாலினி முன்னால் வர நிக்கோலாவும் அருகே வருகின்றான். அவன் அதை வைக்கட்டும் என்று ஷாலினி சற்று பின்வாங்க நிக்கோலாவும் அவளைத் தடுத்து அம் மலரை தான் எடுத்து அவளின் கையில் கொடுத்து தோளோடு அணைத்துக் கொண்டு சென்று இருவருமாக மலரை எமிலியின் பாதத்தில் சமர்பிக்கின்றார்கள்.....!

 

                            பின்பு எல்லோரும் வெளியில் வருகின்றனர்.சவப்பெட்டியை நாங்குபேர் தூக்கி வருகின்றனர்.வெளியே மழை தூறிக்கொண்டிருப்பதால் எல்லோரும் ஒரேமாதிரி நீண்ட பிடியுள்ள பெரிய  கறுப்புக் குடை பிடித்துக் கொண்டு நிக்கிறார்கள்.ஷாலினி மட்டும் தனியாக தூறலில் நனைந்து கொண்டு நிற்பதைப் பார்த்த நிக்கோலா அவளைத்  தனது குடைக்குள் அழைத்துக் கொள்கிறான்.சவப்பெட்டி கயிற்றின் மூலம் குழிக்குள் இறக்கப் படுகின்றது.ஷாலினி உட்பட எல்லோரும் ஒவ்வொரு பிடி மண் எடுத்துப் போடுகின்றார்கள்.பின்பு எல்லோரும் கலைந்து செல்கின்றனர்..... நிக்கோலாவின் பெற்றோர் மனசால் மிகவும் உடைந்து போய் இருந்தார்கள்.ஷாலினி கொஞ்ச நேரம் அவர்கள்கூட  இருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு பின் நிக்கோலாவிடமும் விடை பெற்றுக் கொண்டு செல்கிறாள்......!

நிழல் நீளும்..........! (8).

 • Like 4
Link to post
Share on other sites
 • Replies 73
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

உ.                                                                                                                                               நிலம்  தழுவாத நிழல்கள்.   நிலம் ..... 1.

நிலம் ------ 2 🦜 🦜                                 பின்பு அவனது காரில் சென்று முன்கூட்டியே பதிவு செய்து வைத்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ரிசர்வ் செய்து வைத்திருந்த ஹோட்டல் அறைக்கு செல்கின்றனர்.இர

.                                    நிலம் ............(15).  🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝                                        🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝.                                              

 • கருத்துக்கள உறவுகள்

நிலம்........(9).  🦎 🦎 🦎 🦎🦎

                               🦎 🦎 🦎 🦎.

 

சாரதா வீடை விட்டு போயும் சில மாதங்களாகின்றன. அவளை சந்திக்க முடியவில்லை.IT கம்பெனியிலும் போய் விசாரித்தும் பலனில்லை.அவள் இவர்களை சந்திப்பதை தவிர்த்தே வருகின்றாள்.....நண்பர்களிடமெல்லாம் விசாரித்தாகி விட்டது.ஒரு பிரயோசனமும் இல்லை.அவள் எழுதிய கடிதத்தைப் படித்தபின் இயல்பாகவே பிரேமனும் ஷாலினியும் பேசிக்கொள்வது குறைந்து விட்டது.அவரவர் தத்தமது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவசியம் ஏற்பட்டால் ஓரிரு வார்த்தை அவ்வளவுதான்.யந்திர கதியில் நாட்கள் வாரங்களாக ஓடுகின்றன......!

                                    

                                    இப்போதெல்லாம் ஷாலினி தனது வேலை முடிந்ததும் நிக்கோலாவின் வீட்டுக்கு சென்று அவனின் பெற்றோருக்கு ஆறுதலாக இருந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு வருவது வழக்கமாகி விட்டது.வீட்டில் உம்  என்று இருப்பதைவிட இது எவ்வளவோ ஆறுதலாக இருக்கின்றது.அப்போது நிக்கோலாவும் வந்து இவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பான்.இப்படியான சந்தர்ப்பத்தில் ஒருநாள் நிக்கோலாவின் தந்தை ஆந்தரே ஷாலினியிடம் உனக்கு ஒரு விடயம் தெரியுமா.....என்ன அங்கிள்.......முன்பெல்லாம் நிக்கோலாவை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை.வாறதும்  போறதும் தெரியாது.ஆனால் இப்போது அவன் மாலையிலேயே வீட்டுக்கு வந்து விடுகிறான்..... ஓம் ஷாலினி நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று அவனின் தாய் மரியம் சொல்கிறாள்.ஷாலினி புன்முறுவல் பூக்க, நிக்கோலா மெதுவாக எழுந்து  நீங்கள் கதையுங்கள் நான் கோப்பி போட்டுக் கொண்டு வருகிறேன் என்று குசினிக்குள் போகிறான்......!

                                                                      அப்போது மரியம் ஷாலினியிடம் ஷாலினி நானும் ஆந்தரேயும் இன்னும் சில நாளில் எங்களின் கிராமத்துக்கு போகலாம் என்று இருக்கிறோம்..... ஏன் அன்ரி பாரிஸ் பிடிக்கவில்லையா.... அதுக்கில்லை ஷாலினி எமிலி எம்மை விட்டுப் பிரிந்ததில் இருந்து மனசெல்லாம் வெறுமையாயும்,விரக்தியாயும் இருக்கின்றது.நிக்கோலாவும் வேலைக்கு போனால் நாங்கள் இருவரும் தனியே இருப்பது சலிப்பாக இருக்கின்றது அதுதான்...... ஷாலினியும் நீங்கள் அங்கு சென்றும் தனியாகத்தானே இருக்கப் போறீங்கள்.அதுக்கு இங்கேயே இருக்கலாமே அன்ரி..... இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டே நிக்கோலாவும் கோப்பி தயாரித்துக் கொண்டிருக்கிறான்.....!

                      அதுக்கில்லை ஷாலினி எங்களுக்கும் வயதாகி விட்டது.அங்கே சில உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்.சிலகாலம் அங்கு இருந்து விட்டு பின் அப்படியே முதியோர் இல்லத்துக்கு செல்ல வேண்டியதுதான்.மரியம் சொல்ல ஆந்தரேயும் கவலையுடன் கேட்டுக்கொண்டு அருகில் இருக்கிறார்.நிக்கோலாவுக்கும் கவலையாக இருக்கின்றது.இப்பவே பார் ஷாலினி இந்த வீட்டை..... தோட்டமெல்லாம் குப்பையாய் கிடக்கிறது.நீச்சல் குளமும் அழுக்காக இருக்கிறது. (இவர்களின் வீடுகளில் ஹாலுக்கும் குசினிக்கும் நடுவே சிறிய குட்டைச் சுவர் மட்டும்தான் இருக்கும்.அதனால் பேசுவதை பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கலாம்.....!).

                அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவுகின்றது.

சிறிது நேரத்தின் பின் ஷாலினி சொல்கிறாள்..... நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா.... என்ன சொல்லு பார்ப்போம்......! இன்னும் சில நாளில் நான் ஒரு பிள்ளை பெற்று விடுவேன்.அந்தப் பிள்ளையை ஏன் நீங்கள் இருவரும் வைத்து வளர்க்கக் கூடாது...... என்ன சும்மா பகிடி பண்ணுகிறாயா ஷாலினி  நாங்கள் சீரியஸாகக் கதைக்கிறோம்......!

ஷாலினி: நானும் சீரியஸாகத்தான் சொல்கிறேன்.....இப்போ நீ கர்ப்பமாய் இருக்கிறாயா ஆந்தரே கேட்கிறார்..... ஓம் அங்கிள்......,மரியம் சொல்கிறாள் அப்பவும் நான் நினைத்தேன் நீ ஓவர்கோட்டை கழட்டி ஹாங்கரில் மாட்டும்போது வயிறு பெரிதாக இருக்கு கர்ப்பமாய் இருக்கும் என்று..... ஆந்தரே குறுக்கிட்டு நீ பிள்ளையை வளர்க்கத் தந்தாலும் உன் கணவன் ஒத்துக் கொள்வானா.... ம் ....ஒத்துக் கொள்ளலாம் அல்லது ஒத்துக் கொள்ளாமலும் போகலாம்.அனால் நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதைப்பற்றிக் கவலையில்லை.... நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்..... மரியம் குறுக்கிட்டு நீ சொல்வது கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால்  இன்னொருவரின் பிள்ளையை நாங்கள் எப்படி ஷாலினி எவ்வளவு நாட்களுக்குத்தான் வளர்ப்பது. பின்பும் பிரியும்போது கவலை இன்னும் அதிகமாய் இருக்குமே. இல்லையா ஆந்தரே .... ஆமாம் மரியம்.....!

ஷாலினி: சரி.....இன்னொருவர் பிள்ளை வேண்டாம், உங்களின் பேரனாக இருந்தால் மறுக்க மாட்டீர்கள்தானே..... இருவரும் வியப்புடன் ஷாலினியைப் பார்க்கின்றார்கள்.இவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டே நிக்கோலாவும் காபி ட்ரேயைக் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு சீனிப் பைக்கட்டுகளையும் அருகில் வைக்கிறான்.....!

அவர்களின் பார்வை நிக்கோலாவின் பக்கம் திரும்பி நிஜமா என்று வினவுகிறது. அவனும் ஆம் எனது தலை மட்டும் அசைக்கின்றான்..... மரியம் ஷாலினியின் பக்கம் திரும்பி என்னம்மா நீ, அவன் ஒரு விளையாட்டுப்பிள்ளை பொறுப்பே இல்லாதவன்.அவனை நீ எப்படி நம்பினாய்.அப்பவே அபார்சன் செய்திருக்கலாமே..... நிக்கோலா விளையாட்டுப் பிள்ளை என்று தெரிந்துதான் நானும் விளையாட்டாகத்தான் பழகினேன்.எதிர்பாராமல் கரு உருவாகி விட்டது. ஆனால் நான் அவனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.அவன் எவ்வளவு பேரோடும் பழகி இருக்கலாம்,இப்பவும் பழகிக் கொண்டிருக்கலாம்.அதையிட்டும் நான் கவலைப்படவில்லை.ஆனால் இது என்னிடம் முதன்முதலாக வந்த பிள்ளை.இதை அழிக்க நான் விரும்பவில்லை. உங்கள் குடும்பத்துடன் ஏதோ ஒரு தொடர்பு இருந்ததால்தான் அன்று எமிலியின் மரணச்சடங்கில் கூட இது கலந்து கொண்டு மலர் அஞ்சலி செய்து மண்ணும் இட்டது. இப்பவும் உங்களது விரக்தியைப் போக்கி உங்களை மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் வைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.மீண்டும் சொல்கிறேன் நான் உங்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. உங்களின் சந்தோசத்துக்கு குறையாக நானோ என் பிள்ளையோ ஒருநாளும் இருக்க மாட்டோம்.நிக்கோலாவுக்கே தெரியும், நான் நல்ல வேலையோடும் சம்பளத்தோடும் இருக்கின்றேன்.குழந்தையை தனியாக வளர்க்க என்னால் முடியும் என்கிறாள்.....!

நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் ஷாலினி. வரும் ஞாயிற்றுக் கிழமை வருகிறாயா மீண்டும் கதைக்கலாம்..... தாராளமாக என்று சொல்லிக் கொண்டே ஷாலினி அவர்களிடம் விடை பெறுகிறாள். மூவருமாக கேட் வரை வந்து அவளை வழியனுப்பி விட்டு வருகின்றனர்.... அப்போது மரியம் நிக்கோலாவிடம் என்னடா இந்தப் பெண் இப்படிச் சொல்கிறாள்.ஒன்றும் பிரச்சினை இல்லையே.....இல்லை மம்மி, நான் சந்தித்த பெண்களிலேயே இவள் மிகவும் வித்தியாசமானவள் மம்மி. மிகவும் உணர்ச்சி பூர்வமானவளாகவும் பாரம்பரியம் மிக்கவளுமாய் இருக்கிறாள்.எதையும் நேர் படப் பேசுகிறாள்.ஏதோ ஒரு கவர்ச்சி அவளிடம் இருக்குது மம்மி.இவளை விலக்கி விடவோ அல்லது ஏமாத்தவோ வேண்டும் என்று எண்ணம் கூட  எனக்கு வருவதில்லை மம்மி.....!

ஆந்தரே:  இவள் எந்த நாட்டுப் பெண்....!

நிக்கோலா :இவள் ஸ்ரீலங்கா டமில்ஸ்.....!

இருவருமாக ஓ....ஓ....ஸ்ரீலங்கா டமில்ஸ் என்று வியக்கின்றனர்......!

நிழல் நீளும்...........! (9).

 • Like 8
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதை மிக நன்றாகச் செல்கின்றது. நேரம் கிடைக்கும் பொழுதுகளில் தொடர்ந்து வாசிக்கின்றேன். தொடருங்கள்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலம்.............(10).  🦩 🦩 🦩 🦩 🦩

                                     🦩 🦩 🦩 🦩 🦩.

 

அன்று சாரதாவின் IT கம்பெனியில் மானேஜர் அவளை அழைத்து சுவிஸில் ஒரு அவசர வேலை. போய் வருகிறாயா என்று கேட்க ஓம் போய் வருகின்றேன். இனிமேல் எனக்கு இங்கேயே இருந்து செய்கிற மாதிரி வேலை வேணும் என்று கேட்கிறாள்.அவரும் சரி இப்ப நீ போய் வா,  நான் பார்த்து வைக்கிறேன் என்று சொல்கிறார்..... உடனே  வீட்டுக்கு சென்ற சாரதா தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு வனிதாவுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு விமானத்தில் சுவிஸுக்கு செல்கிறாள்.இப்ப இருக்கும் மனநிலையில் இந்தப் பயணம் ஒரு மருந்தாக அமைகின்றது.....!

 

                                                                                  சாரதா சுவிஸில் போய் இறங்குகின்றாள்.அப்பொழுது சீசன் காலமானதால் ஹோட்டல்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றது.அவசரத்தில் முன் பதிவும் செய்யவில்லை.போய் பார்க்கலாம் என்று வந்து விட்டாள். எப்போதும் ஆடம்பரமான ஹோட்டல்களில் தான் தங்குவது வழக்கம். சரி,வழக்கமாய் தங்கும் இடத்தில் நேரே போய்ப் பார்க்கலாம் என்று ஒரு ஹோட்டலுக்கு போகிறாள்.வரவேற்பறையில் இருந்தவர் பழக்கமானவர்.அவர் சொன்னார் இப்போது அறையெல்லாம் நிறைந்திருக்கு.அநேகமாய் மாலையில் சில அறைகள் காலியாகலாம். அப்போது வாருங்கள்,நான் உங்களுக்கு எப்படியாவது ஒரு அறை தரப் பார்க்கிறேன்.....சரி சார் நான் மாலையில் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பும்போது மனேஜர் அவளிடம், மேடம் நீங்கள் விரும்பினால் அருகில் உள்ள மைதானத்தில் கூடைப் பந்து விளையாட்டு நடைபெறுகின்றது.நீங்கள் இந்த டிக்கட்டில் போய் இருந்து பார்த்து விட்டு வாருங்கள் என்று ஒரு சீட்டை கொடுக்கிறார். சாரதாவும் அதை வாங்கிக் கொண்டு இதுவும் நல்ல யோசனைதான் சார், நான்கூட பாடசாலையில் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொன்டு பரிசெல்லாம் வாங்கியிருக்கிறேன். என்று வெளியே போகிறாள்.

                                           கூடைப்பந்துப் போட்டி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்து கொண்டிருக்கு.ஒவ்வொரு பக்கமும் பந்து கூடைக்குள் விழும்போதும் அந்தந்த ரசிகர்களின் ஆரவாரம் அபரிதமாய் இருக்கிறது.விளையாட்டின் கொமண்ட்ரி சுப்பராய் இருக்கு.அடிக்கடி மில்டன் என்னும் பெயர் தனியாக ஒலித்துக் கொண்டிருக்கவே சாரதாவும் ஆர்வமாய் போட்டியை கவனிக்கிறாள்.மில்டனின் கையில் பந்து வரும் போதெல்லாம் அவன் எதிராளியை ஏமாற்றி பந்தை கூடைக்குள் போடுவது ரசிக்கக் கூடியதாய் இருக்கின்றது.சத்தம் விண்ணைப் பிளக்கின்றது.பந்து அவன் நினைத்தபடியெல்லாம் முதுகாலும் தோளாலும் கால்களுக்கிடையாலும் சுழன்று சுழன்று வருகின்றது.சாரதாவுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டு விட்டது.அந்த விளையாட்டின் விதிமுறைகள் எல்லாம் அவளுக்கு அத்துப்படி.அதனால் கை தட்டி ரசிக்க முடிகின்றது.மில்டனின் விளையாட்டை அடிக்கடி ரிப்ளை பண்ணிக் காட்டுகின்றார்கள்.

                                                                                                                                                                         அவன்தான் எவ்வளவு உயரமானவன்.கால்களும்,கைகளும் உருண்டு திரண்டு முறுக்காக இருக்கின்றன.குட்டையான சுருள் முடிகளுடன் தொடைகள்தான் எவ்வளவு இறுக்கமாக இருக்கின்றது.விளையாடும்போது எவ்வளவு உயரத்துக்கு எம்பிக் குதிக்கிறான்.இவன் மில்டன் இல்லை முரடன் என்றால் சரியாய் இருக்கும்.குறுந்தாடியுடன் கூடிய களையான முகம்,முகத்தில் இருந்து விடாமல் ஒழுகும் வியர்வைத் துளிகள், வியர்வையை அவன் விரல்களால் வழித்து எறியும் லாவகம் எல்லாம் அவள் நினைக்காமலே புளகாங்கிதமடையச் செய்கிறது.....!

                                             ஒரு வழியாக போட்டி முடிய மில்டன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றார்கள்.அன்றைய சிறந்த விளையாட்டு வீரனுக்கான பரிசும் அவனுக்கே கிடைக்கிறது.ஏனைய வீரர்கள் எல்லோரும் சேர்ந்து மில்டனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு மைதானத்தை சுற்றி வருகின்றார்கள்.எல்லோருடனும் சேர்ந்து சாரதாவும் எழுந்து நின்று கரகோஷம் செய்து ரசிக்கின்றாள்.பின்பு வீதிக்கு வந்து அங்குள்ள ஒரு  உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு வருகிறாள்.அப்போதும் அங்கு அறை காலியாக இல்லை. என்ன செய்வது என்று மனேஜருடன் விவாதித்துக் கொண்டிருக்கிறாள்.அங்கே ஒரு மேசையில் ரிலாக்ஸ்டாக சிறிது மது அருந்திக் கொண்டிருந்த ஒருத்தன் எழுந்து வந்து மேனேஜரிடம் ப்ரோ நீண்ட நேரமாக நீங்கள் பேசுவது என் காதில் விழுந்தது. இந்தப்பெண்ணுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனது அறையில் வந்து தங்கிக் கொள்ளலாம்.அங்கு இரண்டு கட்டில்கள் தனித்தனியாக இருக்கின்றன.என்கிறான். அவன் கதைக்கும்போதுதான் சாரதா அவனைப் பார்க்கிறாள்.ஓ...இன்று மாலை மைதானத்தில் அபாரமாய் விளையாடிய மில்டன்..... மானேஜர் சாரதாவைப் பார்த்து உங்களுக்கு பிரச்சினை இல்லையென்றால் இன்று மட்டும் நீங்கள் அங்கு தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படி என்னுடன் பழக்கமோ அப்படியே இவரும் எனக்கு பழக்கமானவர்தான். எப்படியும் ஏதாவது ஒரு அறை நாளைக்கு காலியாகும் அது உங்களுக்குத்தான்.

                                                                                                                                                        சாரதாவுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. எதுக்கும் நான் ஒருமுறை அறையைப் பார்த்து விட்டு சொல்கிறேன் என்று சொல்ல மூவருமாக லிப்டில் அறைக்குச் செல்கின்றனர்.அது மிகவும் விசாலமான அறை.ஒரு டபுள் கட்டிலும் அதிக இடைவெளியில் ஒரு தனிக் கட்டிலும் இருந்தன. பெரிய வசதியான பாத்ரூமும் இருக்கு.தற்போது அவளுக்கும் வேறு வழி இல்லை.நாளைக்கு காலை ப்ரெஷ்சாக வேலைக்குப் போக வேண்டும். அரை மனசுடன் தங்குவதற்கு ஒப்புக் கொள்கிறாள்......!

                                                                            அன்றைய இரவு மில்டனும் சாரதாவும் பொதுவாக பல விடயங்களையும் கதைத்துக் கொண்டிருந்தனர். சாரதாவும் அவனிடம் இன்று மாலை மைதானத்தில் உங்களது விளையாட்டு மிகவும் சிறப்பாக இருந்தது.... அப்படியா ....மகிழ்ச்சி. எங்கே  டி. வி யிலா பார்த்தீர்கள்....! இல்லை நான் அந்த மைதானத்தில் இருந்து நேரடியாகவே பார்த்தேன்.....!

மில்டன்: உங்களுக்கு கூடைப்பந்து விளையாட்டு பிடிக்குமா.இப்போது எல்லோரும் கால்பந்தாட்டத்தைத்தான் மிகவும் விரும்புகிறார்கள்.....ம்கூம் ....நான் பாடசாலை அணியின் சாம்பியனாக்கும். இந்த விளையாட்டில் உங்களின் உயரம்தான் ப்ளஸ் பாயிண்ட்.....ஓ கே. குட்நைட்... எஸ். குட்நைட்... இருவரும் ஆளுக்கொரு கட்டிலில் படுத்து கொள்கின்றார்கள்.....!

                                அடுத்தநாள் காலை சாரதா நேரத்துக்கே எழுந்து குளித்து வெளிக்கிட்டு சின்னதா ஒரு மேக்கப்பும் செய்து கொண்டு வருகிறாள். மில்டன் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறான்.அவள் அவனை எழுப்பாமல் தனது பெட்டியில் இருந்து பைலை மட்டும் எடுத்துக் கொண்டு பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு கம்பெனிக்கு டாக்சியில் போகிறாள்.....!

நிழல் நீளும்.............(10).

 • Like 6
Link to post
Share on other sites

ஒரு தமிழ் பெண் ஒரே அறையில் யாரென்றும் தெரியாத ஆணுடன் இன்ரஸ்ட்டிங் 😀...தொடருங்கள் சுவியண்ணா 
 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலம்....................(11). 🐊 🐊 🐊 🐊 🐊 🐊

                                          🐊 🐊 🐊 🐊 🐊.

                                                                                                                                              சுமார் 3:00 மணியளவில் அவள் வேலை முடிந்து மீண்டும் அறைக்கு வந்தபோது மில்டன் வெளிக்கிட்டு ப்ரெஷ்சாக ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டு வெளியே ஆல்ப்ஸ் மலையின் பனிச்சிகரங்களைப் பார்த்துக் கொண்டு நிக்கிறான்.கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன் என்ன சாரதா வேலை எல்லாம் முடிந்ததா....ஓம் ....முடிந்தது மில்டன்.இன்னும் கொஞ்சம் இருக்கு அதை நாளைக்கு போன் மூலமாகவும் செய்யலாம்.....அது கிடக்கட்டும், என்ன நீங்கள் வெளிக்கிட்டு டிப்டாப்பாய் நிக்கிறீங்கள்,வெளியே கிளம்புகிறீர்களா....!

மில்டன்: ஆமாம், கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.வேலை இல்லை என்றால் நீங்களும் வரலாம்......! ஓ...யெஸ் ...அதுக்கென்ன சுவிஸ் ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் எவ்வளவு தரம் பார்த்தாலும் சலிக்காது....இருங்கள் ஒரு நிமிடம் ட்ரஸ் மாற்றிக்கொண்டு வருகிறேன்....!

 

                                         சொல்லியவாறு கெதியாக ஆடை மாற்றிக் கொண்டு வருகிறாள்.குளிர் தாங்கக்  கூடிய நீலநிறத்தில் ஓவர்கோட்டும் விலங்கின் ரோமத்தினாலான தொப்பியும் தடிமனான கறுப்பு நிற லெக்கின்சும் ஒரு முழம்வரை லேஸ் கயிற்றால் கட்டிய நீண்ட சப்பாத்தும் பூப்போட்ட  வெள்ளை மப்ளரோடும் தேவதைபோல் வருகிறாள்......சாரதா நீங்கள் மிகவும் அழகாய் இருக்கின்ரீர்கள்என்று பாராட்டுகின்றான்..... நன்றி மிஸ்டர் மில்டன்.நான் ரெடி கிளம்பலாம்......!

                                                                                 இருவரும்  வெளியில் வந்து ஒரு பேரூந்தில் ஏறுகின்றார்கள்.அதன் குலுக்களில் ஒருத்தரை ஒருத்தர் உரசிக்கொண்டு பிரயாணம் செய்து ஒரு படகுக் கரையை அடைகின்றனர். பின் ஆற்றிலே குஷாலாக படகுச் சவாரி.சுற்றிலும் வெண்பனி மலைகள் அழகாய் இருக்கின்றன.அதன்பின் கேபிள் காரில் ஒரு மலையின் உச்சியை அடைகின்றனர்.அங்கு ஒரு சின்ன ரெஸ்ரூரண்ட்டும் இருக்கிறது.அவன் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனாகையால் ஆங்காங்கே சிலர் அவர்களுடன் படங்களும் எடுத்து கொள்ளுகின்றனர். அவனும் சலிக்காமல் அவர்களுக்கு போஸ் குடுக்கிறான்.அந்த மலையின் உச்சியில் இருந்து மற்ற மலைகளை டெலஸ்கோப் ஊடாகவும் நேரிலும்  பார்க்கும்போது கண்களுக்கு நல்ல விருந்தாக இருக்கின்றது.ஒரு இடத்தில் மலை ஓரத்தில் இருந்து ஐந்து மீற்றர் வெளியே தடுப்பு கம்பிகள் போட்டிருந்தார்கள்.கீழே கண்ணாடித் தரை. இருவரும் அதில் ஏறிநின்று கீழே பார்க்க படு பாதாளமாய் பயங்கரமாய் இருக்கின்றது.சாரதா மில்டனின் கையை மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் .ஆங்காங்கே சிலர் அந்த இயற்கையின் பிரமாண்டத்தை வியந்தபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.மில்டனும் அதே கிறக்கத்துடன் சாரதாவைப் பார்க்க சாரதாவும் புன்சிரிப்புடன் தலை குனிந்து கொள்கிறாள்.இருவரின் கைகளும் ஒன்றையொன்று பற்றியபடி இருக்க அவன் ஒருகையால் அவள் தாடையை உயர்த்தி அவள் எதிர்பாராத தருணத்தில் உதட்டுடன் உதடு பதித்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு விட்டு என்றென்றும் இருவரின் நினைவுகளில் இருக்கட்டும் என்று சொல்லி சிரிக்கிறான். மில்டன் நான் இதை எதிர் பார்க்கவில்லை என்று அவள் கோபமாய் கூற முயன்றவள், கோபம் வராததால் பனிக்கட்டிகளை கொத்தாக உருட்டி எடுத்து அவன் மீது ஏறிகிறாள். பதிலுக்கு அவனும் பனியை அள்ளி எறிய சற்று நேரத்தில் அந்த விளையாட்டு அங்கிருந்த எல்லோரிடமும் "கொரோனா" போல் தொற்றிக் கொள்கிறது......!

                                பின் அங்கே ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு இறங்கி வந்து இன்னோர் இடத்தில் மொன்ட்கோல் பியரில் (பறக்கும் பலூன்) உயரத்தில் பறக்கும் பொழுது அவர்கள் மிகவும் அந்நியோன்னியமாக இருந்தார்கள்.அந்த உயரத்திலும் ஓரிருதடவை அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள்.பின் அங்கிருந்து வந்து ஒரு ரெஸ்டாரண்டில் இரவு உணவை சாப்பிடும்போது மில்டன் மதுவும் எடுத்துக் கொள்கிறான்.சாரதாவையும் கொஞ்சம் அருந்தும்படி கேட்க அவள் மறுக்கிறாள். எனக்காகக் கொஞ்சம் என்று சொல்லி கிளாசில் சிறிது மதுவும் கோலாவும் கலந்து இது பெண்களுக்கானது.ஆல்கஹால் குறைவு என்று சொல்லிக் குடுக்கிறான்.அவளும் எனக்கு இது பழக்கமில்லை என்று சொல்லிவிட்டு உனக்காக சிறிது டேஸ்ட் பண்ணுகிறேன் என்று சொல்லி குடிக்கிறாள்.இப்ப அவள் மனம் முழுதும் ஷாலினியும் பிரேமனும் செய்த துரோகம் நெஞ்சைப் பிசைய பீட்ஸாவை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கிறாள் .....ம்கூம் குடித்துக் கொண்டே சாப்பிடுகிறாள். பின்பு அந்த மாலில் இருந்த சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.புதிய படம்.நிறைய துப்பாக்கிச் சண்டை, கார் ரேஸ்களுடன் காதல் காட்சிகளுக்கும் குறைவில்லை. அங்கேயும் கொஞ்சமாய் பியர் குடித்துக் கொண்டே படம் பார்க்கிறார்கள்.இரவு அறைக்கு வரும்போது நேரம் 11:00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது......!

                            அறைக்குள் நுழைந்ததுமே மில்டன் சாரதாவை அலேக்காக அணைத்துத்   தூக்கிக் கொண்டு கட்டிலை நெருங்க நெருங்க சப்பாத்துகள் சட்டைகள்  எல்லாம் ஆங்காங்கே ஒவ்வொன்றாக விடைபெறுகின்றன.சாராதாவால் நிகழும் தப்பை உணர முடிகின்றது ஆனால் தடுக்க முடியவில்லை.அந்த போதையில் அதுவும் தேவையாக இருக்கின்றது.ஷாலினியும் பிரேமனும் கண்முன்னே வருகிறார்கள்.கூடவே அவர்கள் தனக்குச் செய்த துரோகமும்.மில்டனுக்கும் பொறுமையில்லை. அவளை ஒரு பாஸ்கட் பந்தாகவே நினைத்து விட்டான். நேற்று அவன் விளையாட்டில் பெற்ற வெற்றிக்கு  இன்று எதிர்பாராமல் கையில்கிடைத்த பரிசுதான் இந்தத் தேவதை.   இடை மீதும் மார் மீதும் தோள் மீதும்   அவளை உருட்டி புரட்டி எடுக்க அவளும் தளிராக கொடியாக மாறி அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம்  இணங்கி வருகிறாள் என்ற நிறைய நினைவுகளுடன் சாரதாவை பிடித்தபடி மில்டன் லிப்டில் ஏறிப் போகிறான்.அப்போதே அவனது கரங்கள் ஆனந்த லீலையை ஆரம்பிக்க துறுதுறுக்கின்றன......!

                         அவர்கள் ஹொட்டலில் நுழையும்போதே கவுண்டரில் இருந்து பார்த்த மானேஜர், என்ன இது பொதுவாக இந்தப் பெண் மது அருந்த மாட்டாளே....இப்ப என்ன தள்ளாடிக் கொண்டு வருகிறாள்.எதோ சரியில்லாமல் இருக்கு பார்ப்பம் என்று நினைத்துக் கொண்டு விறு விறு என்று லிப்டில் மேல போகிறார்…… !

                                                         அவர்களுக்கு முன் அந்த அறைக்கு சென்றவர் அவளது பெட்டியை எடுத்து வேறொரு அறையில் வைத்து விட்டுவர இருவரும் ஒருவரை யொருவர் அணைத்தபடி அறைக்கு முன்னால் வருகின்றனர்.அவர் மில்டனோடு கை குலுக்கி விட்டு அவனை அவனது அறைக்குள் தள்ளாத குறையாய் அனுப்பிவிட்டு, வாருங்கள் மேடம் உங்களின் ரூம் தயாராகி விட்டது என்று சொல்லி அவளை அழைத்து சென்று அந்த அறைக்குள் விட்டு கதவை சாத்திவிட்டு செல்கிறார்.....!

நிழல் நீளும்........!(11).

 • Like 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் நெஞ்சிடிக்கப் பண்ணிப்போட்டியள் 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்ச நேரம் நெஞ்சிடிக்கப் பண்ணிப்போட்டியள் 😀

கொஞ்சம்  முதலே தொடரும் போட்டிருக்க வேண்டும். கொரோனா பிரச்சினையில யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டால் கொஸ்பிட்டலுக்கு போறதெல்லாம் சிரமம் என்றுதான் கடைசி இரண்டு பந்தியும் எழுதியது......!  😂

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டு வரும் அனைவருக்கும் மிக்க நன்றி......!  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிச்சத்தை நாங்கள் வாசிச்சு முடிக்க நீங்களும் கவனமா இருந்துகொள்ளுங்கோ அண்ணா 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள் சுவியண்ணா. சுவாரிசியத்திற்கு குறைவில்லாமல் வாசகர்களை அடுத்தது என்ன நடக்கும் என்ற ஒரு விறுவிறுப்புடன் அடுத்த தொடருக்காக காத்திருக்கவைக்கிறது உங்கள் எழுத்து.  நாவல் எழுதுவதற்கான அனைத்து தகமையும் உங்ககளுக்கு உள்ளது என்னால் அது மிகையாகாது!

தொடரட்டும் உங்கள் நி.த.நி.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கு அவசியமின்றி வெளியில் சென்று பிடிபட்டால் 135 ஈரோ தண்டம்.மேலும் செக்கப்பு அது இது எண்டு ...வேண்டாம்.......!   😎

மிக்க நன்றி சகோதரி தமிழினி......!   🌹

Link to post
Share on other sites

இன்னமும் ஒட்டி இருக்கும் கலாச்சாரமும் ,பண்பாடும் விடவில்லை போல 🙂
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 நிலம்..........(12). 🐞 🐞 🐞 🐞 🐞 🐞

                                 🐞 🐞 🐞 🐞 🐞 🐞.

                              

                                             அதிகாலை அலாமின் சிணுங்கல்களில்  சாரதா முழித்து விட்டாள்.  மதுப் பழக்கமில்லாததால் தலை லேசாக வலிக்கிறது.நேற்று மாலை நடந்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவில் வருகிறது.ஓ...மை காட்.அந்தச் சமயத்தில் மானேஜர் மட்டும் வரவில்லையென்றால் வாழ்நாள் முழுதும் நீங்காத அவமானம் ஏற்பட்டிருக்கும்.அவன் தொட்ட, முத்தமிட்ட இடமெல்லாம் மேனியில் அரவம் ஊர்வதுபோல் அருவருப்பாக இருக்கிறது. போர்வையை சுற்றிக்கொண்டே பாத்ரூமில் நுழைகிறாள்.ஷவரின் நீரிலும் ஷாம்பூவின் நுரையிலும் உடலின் அழுக்குகள் கழுவுப்பட்டு கரைந்து போக அன்றைய பாவம் உள்ளத்தில் ரணமாகத் தங்கி விடுகின்றது.யாரைப் பழிவாங்க, எதற்காக இந்த அவஸ்தை.சிறுவயதில் படித்த கதையில் "குளிக்க மாட்டேன்  என்று ஓடிய நாய்குட்டி குளத்துக்குள் விழுந்ததுபோல்" ஆகி விட்டது. அவள் அறியாமலே அவள் அழுகிறாள். பின் அவள் வெளிக்கிட்டு  கவுண்டருக்கு வருகிறாள்.அங்கு மனேஜரைக் கண்டதும் பெட்டியைப் போட்டுவிட்டு ஓடிச்சென்று அவரின் கையை பிடித்துக்கொண்டு அழுகிறாள் வார்த்தைகள் வரவில்லை.அவரும் ஆதரவாக அவளை அணைத்து கவலைப் படாதே சாரதா நீயும் என் மகள் போலத்தான்.எல்லாம் சரியாகி விட்டது.  என்னிலும் பிழை இருக்கு.நானும் உன்னைத் தனியாக அங்கு விட்டிருக்கக் கூடாது.இங்குள்ள பெண்களில் அநேகமானோர் ஒரு பிரபலத்துடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்வர்.எப்படியோ எமது ஹோட்டலின் நற் பெயரும் காப்பாற்றப் பட்டு விட்டது.சந்தோசமாகப் போய்வா.இனிமேல் குடிக்காதே.முன்பு இருந்ததுபோல் இரு என்ன....ஓம் என்றவள் உங்களுக்கு மிகவும் நன்றி சார்.என்றும் உங்களை மறக்க மாட்டேன் சார். அவர்களின் பில்லைச் செட்டில் பண்ணிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு ராக்சியில் விமான நிலையம் வந்து பாரிஸ் செல்லும் விமானத்தில் ஏறுகின்றாள்.....!    

                                                                             

 

                                                        அன்று ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் எதிர்பாராவிதமாக வனிதாவும் ஷாலினியும் சந்திக்கின்றனர்.ஷாலினி ஒரு சிநேகமான புன்னகையுடன் வனிதாவைப்  பார்க்க வனிதாவும்  கொஞ்சம் கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு ஷாலினி அருகே வருகிறாள்.....என்ன ஷாலினி என்ன இந்தப்பக்கம் ஷொப்பிங் செய்யவா....இல்லை வனிதா, நான் இப்போது ஷொப்பிங் செய்யும் மனநிலையில் இல்லை.....வேறென்ன விசேஷம் .... ஒன்றுமில்லை சாரதாவின் உடைகள் இங்கு ட்ரைகிளினிங்கில் கொடுத்தது.அதை எடுக்க அண்ணாவும் நானும் வந்தனாங்கள்..... ஓ......அண்ணாவா அது யார்....!

ஷாலினி : என்ன வனிதா தெரியாதமாதிரி கேட்கிறாய். பிரேமன் அண்ணாதான்.....!

வனிதா : ம்.....ஜோடியாகத்தான் வந்திருக்கிறீங்கள்.அப்ப சாரதா வரவில்லையா....!

ஷாலினி : என்ன வனிதா பொடிவைத்து பேசுகிறாய்.ஒரு சிறு மனஸ்தாபத்தில் சாரதா வீட்டுக்கு வருவதில்லை.போனிலும் தொடர்பில்லாமல் இருக்கு.அதுதான் கவலையுடன் இருக்கிறோம்.உனக்கு சாரதா இருக்குமிடம் தெரியுமா சொல்லு வனிதா ப்ளீஸ்....!

வனிதா : இஞ்ச பார் ஷாலினி, நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பவில்லை.நீயும் பிரேமனும் சேர்ந்து அவளுக்கு துரோகம் செய்து போட்டீங்கள். ஒரு பக்கம் உயிர்த்தோழி  மறுபக்கம் காதலித்துக் கைப்பிடித்த கணவன். அவள் பாவம், எவ்வளவு வேதனைப் பட்டிருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா.....!

அப்பொழுது அங்கு உடுப்புப் பார்சலுடன் பிரேமன் வருகிறான்.வந்து என்ன வனிதா நலமா என்று  விசாரிக்கிறான்.சவரம் செய்யாத முகத்துடன் வாடிப்போய் சோகமாய்  இருக்கிறான்.....ஷாலினி குறுக்கிட்டு வனிதா எங்கள் இருவர் மீதும் செம கடுப்பில் இருக்கிறாள் அண்ணா.....சாரதா இவளைச் சந்தித்திருக்கலாம்.அல்லது இவள் கூடத்தான் இருக்கிறாளோ தெரியாது.....!

பிரேமன் வனிதாவிடம் ஏன் வனிதா சாரதாவை நீ சந்தித்திருந்தால் அல்லது அவள் உன்னோடு இருந்தால் ஒரு போன் அடிச்சு சொல்லி இருக்கக் கூடாதா......

வனிதா : அதெப்படி அண்ணா நான் சொல்லுவன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.நீங்கள் சாரதாவுக்கு துரோகம் செய்து போட்டு இப்பவும் சோடி போட்டுக்கொண்டுதானே திரிகிறீங்கள்....ஷாலினியைப் பார்த்து நீ ஆமான ஆள் என்றால் அன்றே நீ வீட்டை விட்டுப் போயிருக்க வேண்டும்.கதைக்கிறாய் கதை.....!

பிரேமன் : வா வனிதா, எல்லோரும் பாக்கினம் அந்த பாருக்குள் போய் இருந்து கதைப்பம்.மூவரும் பாருக்குள் சென்று ஓரமாய் ஒரு மேசைப்பக்கம் சென்று அமர்கின்றார்கள்.அப்போது ஷாலினி தனது ஓவர்கோட்டை கழட்டி கதிரையில் போடும்போது அவளது வயிற்றைப் பார்த்த வனிதா என்ன ஷாலினி நீ கர்ப்பமாய் இருக்கிறாயா....!

ஷாலினி : ஓம் வனிதா, சாரதா வீட்டை விட்டுப் போன அன்றுதான் நான் காலையில் டொக்டரிடம் சென்று கர்ப்பத்தை உறுதிப் படுத்திக் கொண்டு வந்தனான்.அப்போது அவர் சில மாத்திரைகள் தந்தவர்.அதைப் போட்டுக்கொண்டு சாரதா வந்ததும் இருவரிடமும் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.அப்படியே ஹாலில் டி. வி  பார்த்தபடி தூங்கி விட்டேன்.பின்பு அண்ணா வந்ததோ சாரதா வந்ததோ எனக்குத் தெரியாது.பின் அண்ணா டி.வி. போட்ட சத்தத்தில்தான் எழுந்து கொண்டேன்.அப்ப அண்ணாவும் என்னைக் கடிந்து கொண்டார்.விசிட்டர்ஸ் வருவினம் ஹாலில் படுக்காதை அறையிலே போய்ப் படு என்று. பின் நான் அண்ணாவுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு அறைக்குப் போய் விட்டேன்.....!

வனிதா : ஷாலினியிடம் கர்ப்பத்தைக் காட்டி இது அந்த பிரெஞ்சுப் பொடியனுடன் திரிவியே  அவனா என்று கேட்க .....ஓம் வனிதா அவன் பெயர் நிக்கோலா.அவன் இதை அபார்சன் செய்யச்சொல்லி அடம்பிடித்தான்.நான்தான் மறுத்து விட்டேன்.....!

வனிதா : ஏன்டி செய்திருக்கலாமே, அவனுக்கு இது எத்தனையாவதோ என்று சொல்ல ஷாலினியும் அவனுக்கு இது எத்தனையாவதாயும் இருக்கலாம், ஆனால் எனக்கு என் கர்ப்பத்தில் தங்கிய முதல் பிள்ளை.இந்தப் பிள்ளையின் அப்பா நிக்கோலாதான்.அதில் சந்தேகமே இல்லை....!

பிரேமனும் அன்று நடந்ததை அப்படியே வனிதாவிடம் சொல்லி விட்டு அடுத்தநாள் காலை சேர்விஸ் ரூமில் சாரதாவின் கடிதத்தைக் கண்டதும் இடி விழுந்ததுபோல் இருந்தது என்றான். அப்போது தலையில் பட்ட காயத்தின் தழும்பும் நெற்றியில் இருந்தது. அதையும் வனிதா பார்க்கிறாள்....எவ்வளவோ தடவை சாரதாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்றவன் வனிதா சாரதா இப்போது எங்கிருக்கிறாள். உன்கூடத்தான் இருக்கிறாளா.தயவு செய்து சொல்லு வனிதா. அப்படி இப்படி என்று ஏழு எட்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.....!

வனிதா : நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது உங்கள் மேல் பிழை இல்லை என்றே தோன்றுகிறது.சந்தர்ப்ப சூழ்நிலைகளும் காட்சிப் பிழைகளும் வஞ்சித்து விட்டன.சாரதாவின் பேச்சைக் கேட்டு நானும் உங்களைத் தவறாக நினைத்து விட்டேன்..... நீங்கள் இரண்டு பேரும் குறை நினைக்காதையுங்கோ.சாரதாவும் மிக்க கவலையுடன்தான் எனக்குத் தெரிந்த இடத்தில் இருக்கிறாள்.ஆனால் இப்ப வேலை அலுவலாய் சுவிஸுக்கு போய் இருக்கிறாள்.அவள் வந்ததும் நான் பக்குவமாய் சொல்லி உங்களுக்கும் போன் செய்கிறேன்.அப்போது நீங்கள் வந்து அவளைச் சந்திக்கலாம். பிரேம் பில்லிற்கு பணம் செலுத்தி விட்டு முன்னால் போக வனிதாவும் ஷாலினியும் சற்று பின்னால் வருகிறார்கள்.அப்போது ஷாலினி வனிதாவிடம், வனிதா நீ சொன்னதுபோல் அன்று நானும் உடனேயே வீட்டை  விட்டுப் போயிருப்பேன். ஆனால் வீண் பழியை சுமந்து கொண்டு அங்கிருந்து போக விரும்பவில்லை.அத்துடன் அன்னையை நினைக்கவும் பாவமாய் இருந்தது.ஒரு குற்றமும் செய்யாமல் இவ்வளவு நாளும் அவர் படும் துன்பத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றாள்.....!

             சே .....சாரதாவின் பேச்சை  நம்பி நானும் இவர்களைத் தப்பாய் நினைத்து விட்டேனே என்ற குற்ற உணர்ச்சி வனிதாவின் மனசில் முள்ளாய் குத்தியது.சாரதா வந்ததும் அவளுடன் கதைக்கிறேன் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு வனிதா விடை பெற்றுக்கொண்டு செல்கிறாள்......!

நிழல் நீளும் ......! (12).

 • Like 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பச்சை போட விடுகுதில்லை.தொடருங்கள் அண்ணா. ஆவலாய் வாசிக்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சை போட விடுகுதில்லை.தொடருங்கள் அண்ணா. ஆவலாய் வாசிக்கின்றேன்.

பச்சையை விடுங்கள்.....சிறு கருத்திட்டாலே மிக மகிழ்வேன். நன்றி சகோதரி.....!   👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா

கதை நன்றாக போகின்றது. ஆனால் இரு பெண்களையும் நடைமுறை கலாச்சாரத்தினுள் நகர்த்திச் செல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

சுவி அண்ணா

கதை நன்றாக போகின்றது. ஆனால் இரு பெண்களையும் நடைமுறை கலாச்சாரத்தினுள் நகர்த்திச் செல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.நீங்கள் சொல்வது சரியே......! நான் இந்த யாழ் இணையத்தின் ஊக்குவிப்பில்தான் முதன்முதலாக கதைகள் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இதுவரை ஒரு ஐந்தாறு கதைகள் எழுதியுள்ளேன்.ஆரம்பத்தில் கன்றுக்குட்டி துள்ளுவதுபோல் தலை கால் புரியாமல் கொஞ்சம் ரசனைகளுடன் எழுதியிருக்கிறேன். பின் வர வர இங்கு அறிமுகமானவர்கள் நிறைய படிக்கும் இடம் ஆகையால் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறேன்.கலாசாரத்திலும் கூட, நிழலி கூட  முந்தைய கதைகளில் நீங்கள் அவசர படுகிறீர்கள் போல் இருக்கு என்றெல்லாம் கருத்திட்டுள்ளார். ஆனால் நான்தான் சுயகட்டுப்பாட்டுடன் எழுதுகின்றேன்.....யாழின் சென்ற அகவைகளில் மற்றும் கதைக்களத்தில் அந்தக் கதைகள் இருக்கு நேரமிருந்தால் படித்து கருத்திடவும்.......!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 10:54 AM, suvy said:

  இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே நாட்டமுள்ளதாக இருக்கின்றது.இதனாலதான் மக்களிடம் துன்பமும்,துயரமும், அழிவும் பெருகி வருகின்றன.இந்த வாழ்க்கை முறை மிகத் தவறான முறையாகும்.முதலில் இதை அடியோடு மாற்றியாக வேண்டும்".....!

இப்படி எத்தனையோ பேர் சொன்னாலும் உலகமாந்தர்கள் கேட்கவா போகின்றார்கள்!

கதை அந்தமாதிரி களைகட்டியிருக்கின்றது.

 

Link to post
Share on other sites

சுவியண்ணா , நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ அதையே எழுதுங்கள் ...மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது அவர்களுக்காய் கதையை மாத்த வேண்டாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

சுவியண்ணா , நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ அதையே எழுதுங்கள் ...மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது அவர்களுக்காய் கதையை மாத்த வேண்டாம் 

A story is a letter the author writes to himself, to tell himself things that he would be unable to discover otherwise.

- from "The Shadow of the Wind"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலம்............(13). 🦗 🦗 🦗 🦗 🦗 🦗 🦗

                                    🦗 🦗 🦗 🦗 🦗 🦗.

 

                                           வனிதா வீட்டுக்கு வரும்போது மாலையாகி விட்டிருந்தது.நேராக சாரதாவின் அறைக்கு வருகிறாள்.சாரதா ஒரு குட்டித் துக்கம் போட்டு விட்டு கோப்பி குடித்துக் கொண்டிருக்கிறாள். வனிதாவை கண்டதும் என்ன வெளியே நல்ல குளிர் போல.உனக்கும் ஒரு கோப்பி போடவா எனக்கேட்க வனிதாவும் ம்....போடு என்றபடியே வந்து எதிர் சோபாவில் அமருகின்றாள்..... வனிதா தான் இன்று எதேட்சையாக அந்தப் பெரிய கடைத் தொகுதியில் பிரேமனையும் ஷாலினியையும் சந்தித்ததாகவும் அப்பொழுது நடந்த உரையாடல்கள் அத்தனையையும் விபரமாக சாரதாவிடம் சொல்கிறாள்.சொல்லி விட்டு எனக்கென்னவோ அவர்கள் தப்பு செய்கிறவர்கள் மாதிரித் தெரியவில்லை. மேலும் ஷாலினி தற்போது கர்ப்பமாய் இருக்கிறாள்.விரைவில் குழந்தை பிறக்கும் போல் இருக்கிறது.அன்று அதை உன்னிடம் முதலில் சொல்ல வேண்டும் என்று ஆர்வமாய் இருந்ததாகவும் சொல்கிறாள்.....!

                                                                                                                                       எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட சாரதா அன்று நடந்ததை மீண்டும் யோசித்துப் பார்க்கிறாள்.அன்று தான் மெதுவாக கதவை சாத்திக் கொண்டு வரும் போது டீ. வீ  யின் சத்தம் பெரிதாகக் கேட்டது போல்தான் இருக்கிறது.நான் உள்ளே போகும்போது சத்தமில்லை....அப்படி என்றால் நான்தான் தப்பாக நினைத்து விட்டேனோ.....ஓ....நோ, என்ர கடவுளே இது என்ன கொடுமை என மனதுக்குள் நினைத்து கொள்கிறாள்.நேற்றிரவு தான் சுவிஸில் ஒரு பெருத்த அவமானத்தில் இருந்து தப்பி வந்தது வேறு மனசை உறுத்துகிறது.ஆனால் இதையெல்லாம் வனிதாவிடம் சொல்லவில்லை.....!

வனிதா: ஏன் சாரதா இப்ப நீ என்ன சொல்கிறாய். உன்னுடன் கதைத்து விட்டு அவர்களுக்கு போன் செய்வதாகச் சொல்லி இருக்கிறேன்.(கொஞ்ச நேரம் இருவரும் விவாதிக்கின்றார்கள்) பின்பு சாரதா ஒருவாறு சமாதானமாகி அவர்களுக்கு போன் செய்யச் சொல்ல வனிதாவும் செய்துவிட்டு வாட்ஸாப்பில் முகவரியையும் அனுப்பி வைக்கிறாள்.....!

                                                                                  ஒரு மணித்தியாலத்தின் பின் ஷாலினியும் பிரேமனும் வனிதாவின் வீட்டுக்கு வருகின்றனர்.வனிதாவும் அவர்களை வரவேற்று வீடு ஹாலில் உட்காரவைத்து விட்டு உள்ளே சென்று சாரதாவைக் கூட்டி வருகின்றாள்.சாரதாவும் வந்து கதவோடு நிக்கின்றாள்.....அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவுகின்றது.... அந்த நிசப்பத்தை கலைத்து வனிதா கேட்கிறாள் என்ன சாப்பிடுகிறீர்கள் பிரேம்.குளிர்பானம் அல்லது சூடாக கோப்பி ஏதாவது.... ஒன்றும் வேண்டாம் வனிதா இப்பதான் சாப்பிட்டோம் என்றவன் நேராக சாரதாவைப் பார்த்து என்ன சாரதா இப்படிப் பண்ணிட்டியே, அன்று நேரே உள்ளே வந்து பேசியிருக்கலாமே.நாங்கள் உனக்காக நெடுநேரம் காத்திருந்தோம் தெரியுமா.....!

சாரதா: வனிதா எல்லாவற்றையும் சொன்னாள். அன்று நான் உங்களைப் பார்த்த நிலையில் என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ.அவள் குரல் கம்முகிறது.கண்ணீர் கொட்டுகிறது.ஷாலினி எதுவும் பேசாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.அவள் இதயம் ரணமாக இருக்கிறது. சரி சாரதா வா வீட்டுக்கு போகலாம்.நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுவோம் என்று தயாவாகக் கேட்டுக் கொள்கிறான்.வனிதாவும் கண்களால் போகும்படி ஜாடை காட்டுகிறாள்.கொஞ்சம் பிகு செய்த சாரதா பின் தன் அறைக்குச்  சென்று தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு வனிதாவிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வருகின்றாள். கடைசியாக எழுந்து வந்த ஷாலினி வனிதாவின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ரெம்ப நன்றி வனிதா இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று சொல்லும்போது இரு சொட்டு கண்ணீர் வனிதாவின் கைகளில் விழுகிறது.....!

வீட்டில் சாரதாவும் பிரேமனும் நடந்தவைகளை மறந்து பழக ஆரம்பித்து விட்டார்கள்.ஷாலினியும் வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கிறாள்.ஆனால் இரவுகளில் தாமதமாகத்தான் வருகிறாள்.வெளியே சுபாபமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் மூவருக்குள்ளும் ஒரு மெல்லிய திரை விழுந்து விட்டது.சாரதாவும் தனது கம்பெனியில் கேட்டு தனக்கு விருப்பமான ஊர் சுற்றும் வேலையை மாற்றிக் கொண்டாள். அதனால் சில நாட்கள் கம்பெனியிலும் சில நாட்கள் வீட்டிலும் இருந்து செய்வது போலவும் அவள் வேலை அமைகின்றது. ஒருநாள் ஷாலினி தாமதமாக வீட்டுக்கு வருவதைப் பார்த்து சாரதா அவளிடம் என்ன ஷாலினி தினமும் தாமதமாக வருகிறாயே வேலை நேரம் ஏதாவது மாற்றியுள்ளார்களா என்று கேட்கிறாள்.... அப்படி எதுவும் இல்லை.நான் நிக்கோலாவுடன் பொழுதைக் கழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் போகிறாள்.....!

நிழல் நீளும்..........(13).

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் அவசரமாக முடிக்கப்போறீங்களோ என்டு.நீளும் என்டதைப் பாத்த பின்தான் இன்னும் விடுப்பு இருக்கு என்டு நிம்மதி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியை நீங்கள் எதோ வேண்டாவெறுப்பாக எழுதியதுபோல் இருக்கண்ணா 🙂

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By suvy
   சான்றிதழ்.
   அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r  ஜோதிபால.......,
   "ஆதர மல் பவண்னே 
   ஆயன மே கமண்ணே 
   ஹொய்தோ யன்னே 
   கவுதோ என்னே 
   துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார்.
   அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது. சற்று தூரத்தில் ஒரு பஸ் தரிப்பிடம். அதில் வீதியை பார்த்தபடி ஒராள் நிக்கிறார். அருகே வருகையில் அது ஒரு பெண் எனத் தெரிகின்றது. அவள் முகத்தில் வேதனையுடன் காலை உதறிக் கொண்டிருந்தாள். வண்டியை பார்த்ததும் தனது தாவணியை உருவி அசைத்து நிறுத்துமாறு சைகை செய்கின்றாள். வண்டி நிக்காமல் அவளைக் கடந்து செல்கின்றது. ஒரு நிமிஷம் யோசித்தவன்,தனக்குள் இந்த நேரத்துக்கு இனி இங்கு பஸ் வராது. கூட்டிக்கொண்டு போய் கடைகளுக்கு கிட்ட விடுவம் என நினைத்து றிவ்வார்ஸில் அவளருகே வருகின்றான். அவள் வலியுடன் பதட்டமாய் நிப்பதைப்  பார்த்து, வண்டியை சிறிது திருப்பி அந்த இடத்துக்கு வெளிச்சம் படுமாறு நிறுத்தி காண்ட் பிரேக் போட்டுவிட்டு இறங்கி அவளருகே வருகின்றான்.
   இராகவன்: மொக்கத நோனா கோகேத யன்னே ....,( என்ன பெண்ணே எங்கு போகிறாய்).
   பெண் : மாத்தையா, ஓயாட்ட  மட்ட உதவி கறன்ன புழுவந்த. யம் பழிபோதாக் கயி.....( ஐயா எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா, எதோ பூச்சி கடிக்குது ).
   அவளது முகத்தையும் உடையையும் பார்த்தவன், நீங்கள் தமிழா. இங்கு யாரையாவது தேடி வந்திருக்கிறீர்களா. எங்கு காட்டுங்கள்.
   ஓம் நான் தமிழ்தான். இங்கு கடிக்குது என்று காலை காட்டுகின்றாள். எடுக்க வருகுதில்லை.
   பொறுங்க நான் பார்க்கிறன், என்று சொல்லி பார்த்தால் அவளது கணுக்காலுக்கு மேல் ஆடுதசையில் மலை அட்டை ஒன்று கடித்து இரத்தம் உறிஞ்சிக்கொண்டிருக்கு. இது மலை அட்டை  அசைய வேண்டாம் என்று சொல்லி வில்லுக் கத்தியை எடுத்து  அவளது சுடிதாரை வெட்டி விட்டு பார்க்க அது இரத்தம் குடித்து குண்டாகிக்  கொண்டிருக்கு. இராகவன் சற்றும் தாமதிக்காமல் பீடியின் நெருப்பை கிள்ளி எறிந்துவிட்டு அந்த பீடியை சப்பி அந்த ஜந்துவின் மேல் பொளிச் பொளிச் என்று துப்புகிறான்.அவளிடம் பேச்சு குடுத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் எச்சிலை உமிழ அது கடிப்பதை விட்டு தலையை உயர்த்துகிறது. அவனும் சுணங்காமல் கத்தியால் அதை வழித்து எடுத்து அப்பால் போட்டுவிட்டு அவளையும் ஏற்றிக்கொண்டு கடைகள் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். சில கடைகள் மட்டுமே அங்கிருக்கு.அங்கே அவளை இறக்கிவிட்டு செல்கிறான். அவனது கடையும் பேக்கரியும் அந்த வீதியின் கோடியில் இருக்கு.அங்கு வானை நிறுத்திவிட்டு உள்ளே போனவன் உறங்கி விடுகின்றான்.
   சோதனை தொடரும்....!
    
    
 • Topics

 • Posts

  • இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும் துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ காலம் : ஆனி 2006 மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட்   "நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005.   இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது. இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார்.     1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார். பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள். பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும்  கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.  2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது   ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது. சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.      
  • ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்🙏  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.