Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடங்கியது சந்திரயான் -3 திட்டப்பணி!


Recommended Posts

இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும்போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சமீபத்தில் ஒரு விண்வெளி நிகழ்வில் கலந்துகொண்டபோது, ‘‘2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சியப் பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கும் எங்கள் மூன்றாவது சந்திர திட்டத்தில், நாங்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளோம். 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லேண்டர் மற்றும் ரோவரை ஏவுவதற்கான திட்டப்பணி, வேகமடைந்துள்ளது. சந்திரயான்-3-க்கு ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே இருக்கும் என்பதால், சந்திர விண்கலத்திற்கு ரூ. 610 கோடி செலவாகும், இதில் ஏவுதள ராக்கெட்டுக்கு ரூ. 360 கோடி அடங்கும்” என்று சிவன் கூறியுள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=569202

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 3:23 AM, ampanai said:

சந்திரயான்-3-க்கு ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே இருக்கும் என்பதால், சந்திர விண்கலத்திற்கு ரூ. 610 கோடி செலவாகும், இதில் ஏவுதள ராக்கெட்டுக்கு ரூ. 360 கோடி அடங்கும்” என்று சிவன் கூறியுள்ளார்.

வடக்குபட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊ.. ஊ..😊

hqdefault.jpg 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிவர் புயல்; சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. பதிவு: நவம்பர் 24,  2020 16:52 PM சென்னை, வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘நிவர்’ புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இரு மார்க்கங்களிலும் நாளை 1 நாள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/24165254/Niver-storm-All-trains-from-Chennai-to-Southern-Districts.vpf  
    • 05) ஹைபுன்  ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது. தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன. ..... இதன் மரபு.....  ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும் 
    • ஐ.நா.மீது குற்றத்தை சுமத்தி, தனது பொறுப்பிலிருந்து ஒளிந்து கொள்ளப்பார்க்கிறார் ஒபாமா.  75 Views ‘உறுதியளிக்கப்பட்ட நிலம்’ (A Promised Land) என்கிற தனது நினைவுகளின் தொகுப்பு நூலில், இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து எழுதும் போது, Ethinic Slaughter என்று குறிப்பிடுகிறார். இருப்பினும் ‘இனப்படுகொலை’ என்பதற்கு, Genocide என்று சர்வதேச அளவில் பயன்பாட்டிலுள்ள வார்த்தைப் பிரயோகத்தை ஒபாமா தவிர்த்துள்ளார். ஐ.நா சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச்சபையின் உறுப்புநாடு அமெரிக்கா. அந்த சபை இயங்குவதற்கான அதிகளவு நிதி வழங்கும் முதன்மையான நாடு அமெரிக்கா. பின்னாளில் அதற்காக நிதிப்பங்களிப்பை டிரம்ப் குறைத்துக் கொண்டார் என்பது வேறு விடயம். இவரின் ஆட்சிக்காலத்திலேயே இது நடந்தது. ஐ.நா சபை என்பது அமெரிக்காவைவிட பலம் பொருந்திய அமைப்பு என்று சொல்ல வருகிறாரா? அல்லது ஐ.நா.சபை என்பது எண்ணிக்கையில்  சிறுபான்மையாகவுள்ள தேசிய இனங்களை ஒடுக்கும் நாடுகளின் அதியுயர் சபை என்று நிறுவ வருகிறாரா?. எதையும் மேலோட்டமாக சொல்லிவிட்டு, வரலாற்றின் இருண்ட பக்கங்களிலிருந்து தாம் அந்நியமாகி நிற்பது போல் ஒளிந்துகொள்ள முடியாது. 97 இல் விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க கொண்டு வந்த தடை, ஒபாமா காலத்திலும் நீக்கப்படவில்லை. புலிகள் இருந்த சமாதான பேச்சுவார்த்தை மேடைகளில் பங்கு கொள்ளவும் அமெரிக்கா மறுத்தது. இந்த ‘பூகோள அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பது போலிருக்கிறது ஒபாமாவின் கதை. அவர் கட்சி ஆட்சிதானே இனி அமெரிக்காவில் வரப்போகிறது. பார்ப்போம். -இதயச்சந்திரன்-   https://www.ilakku.org/ஐ-நா-மீது-குற்றத்தை-சுமத்/
    • வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள்’-தமிழ் அரசியல் கைதி கோரிக்கை    85 Views வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என  தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன், நீதி வேண்டம் அல்லது மரணம் வேண்டும், என தலைப்பிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கனகசபை தேவதாசன், வயது 63, ஆகிய நான் பயங்கரவாதித் தடுப்புச் சடடத்தின் கீழ்க் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் எனக்கெதிராகத் தொடுக்கப்பட்ட 110 6194,12 மற்றும் 110 5638,11 ஆகிய 2 வழக்குகளிலும் முறையே 20 ஆண்டுச் சிறை மற்றும்: ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டன. இத் தீர்ப்பை எதிர்த்து நான் மேன்முறையீடு செய்துள்ளதுடன், இவ் வழக்குகளை விரைவில்முடிவுக்குக் கொண்டுவர விரும்பி, இரண்டிலும் எனக்காக நானே வாதாடுகிறேன். ஆனாலும் மேற்படி 04 283,17 மற்றும் 0ரூ 413,18 ஆகிய 2 மேன்முறையீட்டு வழக்குகளும் நீதிநடைமுறையின் வீண் தாமதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக: முற்றாக முடங்கிவிட்டன. இதன் மூலம், 1. நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு முற்றாக மறுக்கப்படுகிறது. 2. என் அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது. இதனை விளக்கித் தங்களுக்கு சிறையூடாக 6 மாதங்களின் முன் கடிதம் அனுப்பினேன். துரதிருஷ்டவசமாக, அதற்குப் பதில் இன்னமும் வந்து சேரவில்லை. எனவே இவ்விடயத்தை இன்று வேறுவழியின்றிப் பகிரங்கப்படுத்துகிறேன். மேதகு ஜனாதிபதி அவர்களே, 1. எனது இந்த 2 மேன்முறையீட்டு வழக்குகளையும் துரித விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டு உதவுமாறும் ; 2. அல்லது இந்த 2 வழக்குகளிலும் நான் பிணைபெற ஆவண செய்துதவுமாறும் கோருகிறேன். 3. மேற்சொன்ன கோரிக்கையை நிறைவு செய்யும் இயலுமை தங்களுக்கில்லை எனத் தாங்கள் கருதும் பட்சத்தில், அரசியல் யாப்பில் தங்களிற்குத் தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, என் தண்டனையை மரண தண்டனையாக தரமுயர்த்தி, ‘யுத்தக் குற்றவாளி’ என என்னைப் பிரகடனப்படுத்தி உடனடி யாகவே பகிரங்கமாக என்னைத் தூக்கிலிட உத்தரவிடுங்கள். என் இம் முடிவு தொடர்பில் யாரும் என்னை ஆற்றுப்படுத்த முனைய வேண்டாம். எனக்கு நீதி வேண்டும் அல்லது -மரணம் வேண்டும், அவ்வளவுதான்!   https://www.ilakku.org/வழக்கை-துரிதப்படுத்துங/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.