Recommended Posts

Image may contain: cloud, sky, outdoor and nature

அழகிய பனிபடர் அல்ப் மலைத்தொடர்

Image may contain: one or more people, sky, tree, skyscraper, shoes and outdoor

Image may contain: one or more people, tree, sky, shoes and outdoor

ஐக்கிய நாடுகள் சபை தலைமைக்காரியாலம்.. மற்றும் போர் வேண்டாம் என்பதை உணர்த்த வைப்பட்டுள்ள பீரங்கியும்.

Image may contain: sky and outdoor

Image may contain: 14 people, possible text that says 'NKA LE GÉNOCIDE DES TAMOULS A Le an Tamilen in Sri Lanka sse kämpft O0 von denen, er Tamilen naben, Gerechtigkeit nalen die von diesen angenen du génocide Depuis la déco et l'indépendance du Sri-L des dirigeo qui ont régné sur le est à la C depuis plus de nous réclamons international par ces dirige a vivre libre dro souhaito notre 1 en. CHEN GERECHTIGKEIT'

பல்லாயிரம் சொந்தங்களைப் பறிகொடுத்த பின்னும்.. தமது உரிமைக்காக பாதுகாப்பான ஜெனிவாவில் கூடிக் கூட போராட மனநிலையற்ற தமிழர்கள் பலர். ஒரு சிலரின் சொந்த முயற்சியால்.. ஜெனிவா வாழ் பிற இன மக்களிடம் உள்ள ஈழத்தமிழர் துயர் பட்டறிவு அதிகம். 

Image may contain: outdoor, possible text that says 'NATIONS UNIES UNITED NATIONS'

Image may contain: sky and outdoor

ஐநா சபை.

Image may contain: shoes, sky and outdoor

Image may contain: sky

ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?!

 

எனி ஐநாவில் இருந்து அறிவியல் நோக்கி..

Image may contain: sky and outdoor

இங்கு தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள.. கடவுளின் துகளை தேடி நடத்தப்பட்ட 27 கிலோமீற்றர் சுற்றுவட்டமுள்ள நீண்ட ஹெட்ரோன் மொத்தல் உபகரணம் உள்ளது. பெளதீகவியலின் மிகப் பெரிய ஆய்வு இதுவாகும். இறுதியில் கடவுளின் துணிக்கை என்று கருதப்பட்ட ஹிப்ஸ் பார்சானும்.. உடைந்து இன்னும் பல துணிக்கைகள் ஆனது தான் இதுவரை நடந்துள்ளது. இவ்வாய்வு இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஜெனிவாவில்.. பிரான்ஸ் எல்லையை ஒட்டி உள்ள CERN நகரில் உள்ளது.

இந்த டோமில்.. விண்ணில் இருந்து பூமிக்குள் நுழையும் கதிர்ப்புகளை குவியச் செய்து.. காண்பிக்கிறார்கள்.

Image may contain: sky and outdoor

Image may contain: outdoor, possible text that says 'Science Accélérateur de science'

LHC (Large Hadron Collider) மாதிரி. 

Image may contain: sky and outdoor

ஆகாயத்தில் இருந்து.. CERN.

Image may contain: sky, cloud and outdoor

No photo description available.

சேர்ன் அருகில்... காட்சிப்படுத்தப்பட்டுள்ள.. நினைவேடு. உலகின் பல மொழிகளிலும் அறிவியல் பதிவுகள் உள்ளன. தமிழை தேடியும் காணக்கிடைக்கவில்லை. அரபு.. ஹிந்தி காணக்கூடியதாக இருந்தது. 

No photo description available.

LHC இல் உள்ள இராட்சத மின்காந்தங்களின் மாதிரி.

No photo description available.

எல் எச் சி இல.. துணிக்கைகளை கைது செய்யும் முறை - மாதிரி.

No photo description available.

27 கிலோமீற்றர்கள் சுற்றளவுள்ள எல் எச் சி யின் புவி விபரப்படம் மற்றும் எங்கெங்கு என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை விளக்கும்.. தொடு உணர் திரை காட்சிப்படுத்தல்.

No photo description available.

ஹெட்ரோன் துணிக்கைகளின் ஆரம்ப ஆர்முடுகலை தூண்டும் உபகரணம்.. மாதிரி. 

No photo description available.

எல் எச் சி யில் துணிக்கைகளை இனங்காணப் பயன்படுத்தப்படும்.. பொறிமுறை. மாதிரி.

ஜெனிவா நகரின் அழகு..

Image may contain: sky, bridge, bird, outdoor, water and nature

Image may contain: sky, ocean, outdoor, water and nature

Image may contain: sky, ocean, boat, bridge, outdoor, water and nature

Image may contain: cloud, sky, outdoor and nature

Image may contain: cloud, sky, outdoor and nature

Image may contain: cloud, sky, mountain, outdoor and nature

Image may contain: bird, outdoor, water and nature

Image may contain: sky, outdoor, water and nature

நேரடி விசிட் மற்றும் படப்பிடிப்பு - நெடுக்ஸ்

 • Like 13

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் உங்கள் படத்துடன் போட்டால் மட்டும் தான் நீங்கள் எடுத்தது என்று நம்பலாம் 🤪

Share this post


Link to post
Share on other sites

படங்களும் அவற்றின் விளக்கங்களும் நன்றாக இருக்கின்றது நெடுக்ஸ்.....!   👍

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கும்  விளக்கத்துக்கு நன்றி நெடுக்கு .

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?

83793030_10157117393422944_7005558952217

நம்மை நம்பி உட்கார வேண்டாம்.

இப்படி இருக்குமோ?

படங்கள் இணைப்புக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் உங்கள் படத்துடன் போட்டால் மட்டும் தான் நீங்கள் எடுத்தது என்று நம்பலாம் 🤪

நீங்க‌ள் ர‌தி அக்கா கூட‌ சேர்ந்து அவாவின் ச‌ந்தேக‌ புத்தி உங்க‌ளுக்கும் தொத்திட்டு போல‌ 😁, நெடுங்கால‌ போவான் அண்ணா அவ‌ரின் ப‌ட‌த்தை போட‌ மாட்டார் என்று என‌க்கு ந‌ல்லாவே தெரியும் 😁

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, nedukkalapoovan said:

 

Image may contain: shoes, sky and outdoor

Image may contain: sky

ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?!

 

 

 

 

 

 

 

 

உடைந்த கதிரை - கண்ணிவெடி மற்றும் பொறிவெடி எதிர்ப்புச் சின்னம். 

Edited by goshan_che
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

உந்த ஹெட்ரோன் கொலைடர் நிலையத்துக்கு அருகில்தான் பழைய ஜெனிவாநகரை இரெண்டாக பிரித்த பிரெஞ்ச்-சுவிஸ் எல்லை காவல் நிலையம் இருக்கிறது. 

ஜெனிவா லேக் நடுவே இரவில் மின்னொளியில் மிளிரும் அழகிய ராட்சத water fountain உளது.

இன்னும் ஜெனிவாவில் நின்றால் இவற்றையும் பார்க்கவும்.

படங்களும் விபரணமும் அருமை.

Share this post


Link to post
Share on other sites

அதுக்காக கண்ணிவெடி வைச்சே கதிரையை உடைச்சிருக்கிறார்கள்......!   👍

Share this post


Link to post
Share on other sites

யெனிவாவுக்குப் பலமுறை சென்றுள்ளேன் ஆனாலும் அங்கு நான் பார்க்கத்தவறிய அதன் அழகை நெடுக் அவர்கள் விபரத்துடன் களத்தில் காட்சிப்படுத்திய கானொளி அற்புதம். 🙌 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஜெனீவாவில் உடைந்த காலுடன் உயரமான ஒரு பெரிய நாற்காலி ஏன் இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், அதற்கான காரணம் இங்கே.

1997 ஆம் ஆண்டில்,  உடலை ஊனமாக்கும் ஆள் எதிர்ப்பு நில கண்ணிவெடிகளை (Anti-personnel mines) பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஒட்டாவா ஒப்பந்தம் அல்லது கண்ணிவெடி தடை ஒப்பந்தம் என்று அறியப்பட்டது. அதே நேரத்தில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், கண்ணிவெடிகளின் பயன்பாட்டை நிறுத்தவும் நாடுகளை ஊக்குவிப்பதற்காக, அரசு சாரா அமைப்பு ஹேண்டிகேப் இன்டர்நேஷனல் (Handicap International) சுவிஸ் சிற்பி டேனியல் பெர்செட்டை (Daniel Berset) கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் மீது  கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் ஒரு சிற்பத்தை உருவாக்கித்தருமாறு வேண்டிக்கொண்டது.

இதன் விளைவாக 12 மீட்டர் உயரமும் 5.5 தொன் நிறையையுடன் அதன் இடது கால் பாதியாக உடைந்த ஒரு கதிரை ஐ.நா கட்டிடத்தின் முன் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது, ஆனால் இப்போது அது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக உள்ளது. இந்த நாற்காலி சமீபத்தில் புனரமைக்கப்பட்டு  சர்வதேச ஜெனீவாவின் அடையாளமாக மாறிய பின்னர் இது விரைவில் அகற்றப்படும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

ஆனால் நோக்கம் நிறைவேறியதா? ஹேண்டிகேப் இன்டர்நேஷனல் தனது பிரச்சாரத்தில் தனியாக செயல்படவில்லை. ஒட்டாவா ஒப்பந்தம் ஐ.நா. உறுப்பு நாடுகளால் முழு ஒப்புதலையும் அடைவதை உறுதிசெய்ய பல அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒட்டாவா உடன்படிக்கையை இயற்றுவதற்கான அதன் முயற்சியில் நில கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சர்வதேச பிரச்சாரத்திற்கு 1997 ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நில கண்ணிவெடி தடை ஒப்பந்தம் 1999 இல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு  ஹேண்டிகேப் இன்டர்நேஷனல் மற்றும் பல இஸ்தாபனங்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அனைத்து நாடுகளும் ஒட்டாவா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இன்றுவரை, 162 நாடுகள் கையெழுத்திட்ட, கையெழுத்திடாத 34 நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளடங்கும்.

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் நுழைவாயிலில் நிற்கும் உடைந்த நாற்காலி அமைக்கப்பட்டுள்ள இடம் உலகெங்கிலும் உள்ள மனித நேய ஆர்வலர்கள்   அமைதியான முறையில் தமது கருத்தை வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச திறந்தவெளி அரங்காக திகழ்கிறது.

Edited by vanangaamudi
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

உது எப்ப போனனீங்கள் போன வருடமே?
 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: sky, tree and outdoor

Image may contain: sky, cloud and outdoor

ஜெனிவா சதுக்கத்தில்.. அமைந்துள்ள.. ஐநா அகதிகளுக்கான அமைப்பின் தலைமைக்காரியாலயம்.

Image may contain: sky and outdoor

Image may contain: sky, night, car and outdoor

பெரும் பணக்காரர்கள் பணத்தை பதுக்கி வைக்கும் முக்கிய வங்கிகளில் ஒன்று.

Image may contain: sky and outdoor

சுவிஸின் போக்குவரத்தில் ஈடுபடும்.. பேரூந்து.

Image may contain: sky and outdoor

சுவிஸ் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் டிராம். சேர்ன் தரிப்பிடத்தில்.

மேலும் சில காட்சிகள்..

Image may contain: skyscraper, sky, tree, car and outdoor

Image may contain: sky, bridge, outdoor and water

Image may contain: sky, outdoor and water

Image may contain: tree, plant, sky, bridge, outdoor and nature

Image may contain: sky, cloud, bridge, ocean, outdoor, nature and water

 

அல்ப்ஸ் இயற்கை காட்சிகள்..

Image may contain: sky, cloud, tree, plant, mountain, outdoor and nature

Image may contain: sky, tree, cloud, plant, mountain, outdoor and nature

Image may contain: sky, cloud, tree, mountain, outdoor and nature

ஜெனிவா  ராட்சத water fountain  தொலைவில் தெரிகிறது... இது பிரான்ஸ் எல்லை மலைச் சரிவில் இருந்து ஜெனிவா நகரை நோக்கிய பார்வை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, ரதி said:

உது எப்ப போனனீங்கள் போன வருடமே?
 

இவ்வாண்டு... இம்மாதம்.. ஜெனிவா ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமான பின்.. இத்தாலியில் இருந்து.. ஜெனிவாவுக்கு கொரானா வந்த பின். 

Share this post


Link to post
Share on other sites

உலகத்தில் இருக்கும் எல்லோரும் சுவிற்சலாந்தை பெருமையாக புகழ்ந்து கொண்டாடினாலும்.......
அந்த நாடுதான் ஏழை மக்களுக்கு துரோகம் செய்யும் நாடு.
உலக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மறைத்து வைத்திருக்க உதவும் நாடு.
 உலக மாபாதகர்கள் செய்யும் கொள்ளைகளுக்கு   உதவிக்கரமாக இருந்துவிட்டு......
பல சமூக நல தொண்டு நிறுவனங்களை தன்னகத்தே வைத்திருந்து தன்னை வெள்ளை மனம் கொண்டதாக நாடகமாடும் நாடு.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, குமாரசாமி said:

உலகத்தில் இருக்கும் எல்லோரும் சுவிற்சலாந்தை பெருமையாக புகழ்ந்து கொண்டாடினாலும்.......
அந்த நாடுதான் ஏழை மக்களுக்கு துரோகம் செய்யும் நாடு.
உலக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மறைத்து வைத்திருக்க உதவும் நாடு.
 உலக மாபாதகர்கள் செய்யும் கொள்ளைகளுக்கு   உதவிக்கரமாக இருந்துவிட்டு......
பல சமூக நல தொண்டு நிறுவனங்களை தன்னகத்தே வைத்திருந்து தன்னை வெள்ளை மனம் கொண்டதாக நாடகமாடும் நாடு.

(உண்மை தான் தான் இந்தியா திருட‌ர்க‌ளின் ப‌ண‌ங்க‌ள் சுவிஸ் வ‌ங்கியில் மாற்று க‌ருத்து இல்லை )

தாத்தா சுவிஸ் மொழிக்கும் ஜேர்ம‌ன் மொழிக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் இல்லை ,

டென்மார்க் மொழியும் நோர்வோ மொழியும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் வித்தியாச‌ம் , நோர்வே நாட்டுக் கார‌ர் க‌தைப்ப‌து என‌க்கு விள‌ங்கும்  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அழகான ஜெனீவா படங்களுக்கு நன்றி நெடுக்ஸ். என் கையில் எப்போதும் இருக்கும் சுவிஸ் கடிகாரம் படிக்கும் காலத்தில் ஜெனீவா போனபோது வாங்கியது. அதன் பின்னர் இன்னமும் போகவில்லை.
இந்த வருடம் சம்மருக்குப் போகலாம் என்ற திட்டம் இருந்தது. கொரானா எந்தப் பக்கம் போகின்றா என்று பார்த்துப் போவோம்😎

Share this post


Link to post
Share on other sites
On ‎3‎/‎8‎/‎2020 at 8:26 PM, nedukkalapoovan said:

இவ்வாண்டு... இம்மாதம்.. ஜெனிவா ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமான பின்.. இத்தாலியில் இருந்து.. ஜெனிவாவுக்கு கொரானா வந்த பின். 

ஏன் ஜெனிவாவில் உரையாற்ற  போனீங்களா

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, ரதி said:

ஏன் ஜெனிவாவில் உரையாற்ற  போனீங்களா

உங்கினேக்கை முகநூல் அது இது எண்டு தனியொருவனாய் ஜெனிவாவிலை நிண்டு மல்லுக்கட்டுற வீடியோ ஒண்டு உலாவுது கண்டனிங்களோ தங்கச்சி? 😁

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.     கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.   விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.   இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2545989
  • நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.   இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009   அப்படிபோடு அரிவாளை 🤣🤣
  • எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf
  • லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?   புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf
  • தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து Bharati May 26, 2020தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து2020-05-25T20:17:47+00:00 திருக்கோவில் நிருபர் தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும், நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் அத்தியாவசியமாதனதாகும். அதைவிடுத்து நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான நியமனங்கள் செய்யப்பட முடியுமா? எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும். காரணம் அது வாக்காளரைக் கவர்வதற்கான அனுமதிக்கப்பட முடியாத ஒரு செயல் என்பதும், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாதிருக்கும் என்பதுமேயாகும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் மிகவும் அலட்சியமாக, சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார். தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது. உண்மையில், மிகவும் அவதானத்தோடும் நிதானத்தோடும் உண்மையைக் கண்டறியும் இத்துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும். இவ்வகையில் இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுனர்களாக இருக்க வேண்டும் என்பதும் முதன்மையான விடயமாக இருக்க வேண்டிய அதேவேளை இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் இடம்பெறுதலும் அத்தியாவசியமாதனதாகும். நடைபெற்றிருக்கும் நியமனமானது மேற்குறித்த எந்த நியமங்களையும் பின்பற்றாத ஒன்றாகவே அமைகின்றது. பொதுத் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் தனது கட்சிக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொள்கின்றார் என்பது வெளிப்படையானதாகும். பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்து தன்னைச் சுற்றிவர இராணுவத்தினரால் ஒரு கவசத்தை அமைத்துக் கொள்கின்றார் ஜனாதிபதி என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் வெற்றியிலே ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த வியத்மக குழுவினர் கூட இந்த இராணுவ வளையம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. அண்மையில் சுகாதார அமைச்சு அத்துடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுகளுக்கான செயலாளர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது அதிருப்தியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து தனது ஆதரவுப் பங்காளிகளாக ஆக்குவதில் ஜனாதிபதி அவர்கள் கொண்ட அக்கறை தான் தொல்லியல் தொடர்பிலான இந்த நியமனம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நாட்டின் உண்மையான பூர்வீகம் தொல்லியல் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வு நிறுவனமானது இந்த வகையில் இயங்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு ஆக்க செயற்பாட்டில் நாங்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாயிருந்தோம். அரசியலமைப்பு வரைபின் உருவாக்கத்தில் அடுத்த அங்கமாக வனத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்லியல்துறை என்பன தொடர்பான சட்டங்கள் மீளாயப்பட்டு இவை தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். வரைபின் இறுதி அங்கமாக இவ்விடயம் கையாளப்பட இருந்த வேளையிலே தான் ஒக்டோபர் 26 அரசியல் உறுதியின்மை நிகழ்வு ஏற்பட்டது. முழுக்க முழுக்க புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுக்கும் ஒரு செயலாக நாம் அதனைப் பார்த்தோம். இச்செயற்பாட்டின் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைகின்றது. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முடியாத மக்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவிக் முடியாத இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது நாகரிக உலகம் அரசு மீது இன்னுமொரு கேள்வியைத் தொடுப்பதற்கு காலாய் அமையும். இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொட்டுக் கட்சியிலும் அதற்கு ஆதரவு வழங்கக் கூடிய கட்சிகளிலும் வேட்பாளர்களாக நிற்பவர்களும் அவற்றின் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மேற்குறித்த விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி மக்களை கேட்டுக் கொள்வதில் என்ன தார்மீக நியாயம் இருக்கின்றது என்பதை இவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பொய்மையால் மூடப்படவுள்ள எமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தடையாக இருக்கும் தங்கள் சிந்தனைகளில் அவர்கள் தெளிவடைய வேண்டும். தமிழ் மக்களை தமிழர் அரசியல், தமிழர் பாரம்பரியம், வடகிழக்கில் தமிழர்களின் இருப்பு என்கின்ற விடயங்களின் பால் அக்கறையோடும், உறுதியோடும் செயற்படுகின்ற அரசியல் சக்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களுடைய அரசியற் சிந்தனைகளை இந்தக் கடைசி நேரத்திலாவது சரியான திசைக்கு திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். http://thinakkural.lk/article/43426