தமிழ் சிறி

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு

Recommended Posts

coronavirus-south-korea-720x450.jpg

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் மே மாதமளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனாவின்-தாக்கம்-சுமா/

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது. ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடியாது.

என்னால் முடியும் -  கொரோனா 🤪

4 hours ago, தமிழ் சிறி said:

மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

Edited by Dash
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
49 minutes ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, ampanai said:

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

இந்தியாவில்... வாகனம் வைத்திருக்கும்  மக்கள் அதிகம் வீட்டில் இருப்பதால்....
பெற்றோலின்  தேவை குறைந்து.... விலை மலிந்துள்ளதாம்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

12 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

அந்த 'கிளுகிளுப்பு' கொள்ளும் 'இனப்பற்றாளர்களில்' நானும் ஒருவன்   🙂 

அதற்கான காரணம், சிங்கள தேசத்தின் பொருளாதாரம் முழுமையாக சிதைய வேண்டும் என்பது அல்ல. அங்கு எமது உறவுகளும் உள்ளார்கள் என்பது தெரியும். சிங்களவ மக்களின் பொருளாதாரமும் சரியாய் வேண்டும் என்பதல்ல. 

ஆனால், அரசின் பொருளாதாரம் அவரகளின் இராணுவ இயந்திரத்திற்கு தீனி போடுவதை இல்லமால் செய்யும் அளவிற்கு சரிய வேண்டும் என்பது எனது விருப்பம்.   

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

இலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீடு / பணம் 

COVID-19 hits Lanka’s economy; outflows of Rs. 19.6bn in two weeks

By S. Rubatheesan
View(s): 1069

With the coronavirus (COVID-19) slowing down the global economy, foreigners have rushed to encash Treasury Bonds and Bills held by them in Sri Lanka, resulting in an outflow of Rs 19.6 billion in two weeks, the Central Bank said.

According to Central Bank statistics, Rs 8.23 billion of foreign outflow was recorded this week by Friday while last week Rs 11.42 billion government securities were encashed.

Monthly Monetary Policy Review issued by the Central Bank of Sri Lanka (CBSL) said this week that the escalation of the coronavirus (COVID-19) outbreak to a ‘global health emergency’ was likely to affect Sri Lanka’s economic performance.

“Sri Lanka’s economic links with China could be directly affected as significant volumes of consumer goods, intermediate goods and investment goods are imported from China. The likely slowdown of the global economy and disruptions to the supply chain could affect Sri Lanka’s merchandise and service exports as well as related logistics,” the CBSL Policy Review said while stressing that the slowdown in global tourist movements would affect Sri Lanka’s tourism sector, in addition to the direct impact of lower arrivals from China.

http://www.sundaytimes.lk/200308/news/covid-19-hits-lankas-economy-outflows-of-rs-19-6bn-in-two-weeks-395801.html

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

  உண்மைதான், நாமெல்லாம் போராட்ட காலத்தில் இல்லை, போராடி தோற்ற காலத்திலிருக்கிறோம் என்பதை  நமது சில ஊடகங்களும், பொழுதுபோக்கு தேச பற்றாளர்களும் மறந்து ஒரு மயக்கத்திலிருக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் சரிகின்றது எனும்போதெல்லாம்  எம்மையும் அறியாமல் ஒரு வலி ஏற்படுகிறது,

தமிழகத்தில் கர்நாடகா அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ,அதுவரை தமிழகத்தில் கால்நடை,சம்பாபயிர், அது இரண்டையும் தாங்கி சுமக்கும் தமிழக விவசாயி எவன் செத்தாலும் எமக்கு கவலையில்லை என்பதுபோல் கர்நாடகம் நடந்து கொள்ளும் நிலையில்தான்  இலங்கை தமிழர் பகுதியின் வாழ்வியலும் 2009இன் பின்னர்  சிங்களவனில் தொங்கி கொண்டிருக்கிறது.

இலங்கை பொருளாதாரம்  கொஞ்சம் நிமிர்ந்தால்தான், ஏதாவது கொஞ்சம் சிங்களவன் நமக்கும் கிள்ளி போடுவான் என்ற நிலையில்  மானத்துக்காய் போராடிய ஒரே குற்றத்தால் மானம் கெட்ட நிலையில்...எம்மினம்.

கால் கிலோ மீனை வாங்கி ஏழுபேர் சாப்பிட்டும்  ஒரு கோழியை மாசத்தில் ஒரு தடவைகூட வாங்க பத்துமுறை யோசித்தும் வாழும் தாயக தமிழர் பற்றி,

ஒரு கிலோ மீனை ஒவ்வொருநாளும் ஒரு மனிதனே சாப்பிட்டு கொண்டும்,  ஒரு நாள்    போத்தல் விஸ்கி பார்ட்டிக்கு 5 கோழிகளை வறுத்து தின்னும்  நாமெல்லாம் எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாத   எம்மினம்  எப்படிதான் வாழ்க்கை செலவை சமாளிக்கிறது  என்பதை எப்போதான் புரிந்து கொள்ள போகிறோமோ?

சோற்றுக்காக சுதந்திரத்தை இழக்ககூடாது என்று  சிந்தனை நமக்கு வரலாம், நாங்கள் வயிறுமுட்ட பிரியாணி திண்டுகொண்டு அவர்களை மட்டும் சுதந்திரத்தை கவனிக்க சொல்லி யாரும் சிந்திக்ககூடாது அது தவறு.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

Share this post

Link to post
Share on other sites

c) மலையக மக்களின் குருதியை 72 வருடங்களாக குடிக்கும் சிங்கள நாடு 

மொத்த தேசிய உற்பத்தி ~ 82 அமெரிக்க பில்லியன்கள் 
இதில் தேயிலை ஊடாக வருவது - 1.4 அமெரிக்க பில்லியன்கள் 

ஆனால், அந்த மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்ததாக இல்லை 

மூலம் ::   http://www.colombopage.com/archive_17B/Dec24_1514124607CH.php

d) இராணுவ செலவு : வருடத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்கள் !

மூலம் :: https://www.janes.com/article/87729/sri-lanka-raises-defence-budget

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, ampanai said:

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

Edited by Dash
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, Dash said:

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

Edited by ampanai
Spelling error

Share this post

Link to post
Share on other sites

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக  அண்ணளவாக 6%/வருடத்திற்கு வளர்ந்துள்ளது. அப்படியானால், பாதிக்கப்பட்ட, மீட்கப்பட்ட  தமிழர்களின் பொருளாதாரம் அதை விடவும் அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும். வளர்ந்திருக்கின்றதா? இல்லை என்றால் யார் காரணம்:  புலம்பெயர் செல்வந்தர்கள்? இல்லை பகுதிநேர / பொழுதுபோக்கு தேச பற்றாளர்கள் ??

தாயக மக்களுக்கு முயற்சி இல்லை என்றால், எவ்வாறு புலம்பெயர்ந்த அவர்களின் அதே உறவுகள் ஒப்பீட்டளவில் முன்னேறி இருக்கின்றார்கள்? ஆக, சிங்களம் தான் முன்னேற்றத்தை  தாயகத்தில் கட்டுப்படுத்துகின்றது என்பது உண்மையாகின்றது. 

புலம்பெயர் மக்களால் பொதுவாக புறக்கணிக்கப்படும் மலையக மக்களை பாருங்கள். அவர்கள் முன்னேறவில்லையா ? இல்லை முன்னேற்றம் மறுக்கப்படுகின்றதா? இல்லை அதற்கும் புலம்பெயர் தமிழர்கள் மீது தான் குறை சொல்ல முடியுமா???

Share this post

Link to post
Share on other sites

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்.

ஆனால், இன்றும் இராணுவத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்களை செலவழிப்பது என்பது தமிழ் மக்களை ஒரு இராணுவ அடக்குமுறைக்குள், ஒரு உளவியல் அழுத்தத்திற்குள் வைத்திருக்கும் ஒரே நோக்கம். அதை முறிபடிக்க இன்று எம்மிடம் எந்த வழியோ இல்லை அரசியல் பலமோ இல்லை.

இவ்வாறான உலக பொருளாதார நெருக்கடிகளே மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும் வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும். சர்வாதிகார, குடும்ப மற்றும் இராணுவ ஆட்சிகளை கூட பொருளாதார மந்தம் தடுக்கும்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்

image_a49eb5b83b.jpg 

Share this post

Link to post
Share on other sites
On 3/9/2020 at 10:47 AM, ampanai said:

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

உண்மை. ஆனால், இன்றுள்ள மத்திய அரசியல் முறையால் அது பெரியளவில் சாத்தியமில்லை. 

குறைந்தபட்சம், மாகாண ஆட்சிக்குள், நேரடி வெளிநாட்டு முதலீடு வேறு அழுத்தங்களுக்கு ஆகாமல் அமுலாக்க முடியும் என்றால் சாத்தியமாகலாம். 

அதுவரை, சிறிய அளவிலேயே உதவிகளை செய்ய முடியும் .

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
17 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

பார்ரா ........ அண்ணன்  கிளம்பிட்டாறு தங்களுக்கு தெரிந்த  பொருளாதாரத்தை சொல்லி தருவதுதானே .  சொறிலங்கா புலம்பெயரை நேரடியாய் உதவி செய்ய விடமாட்டார்கள் எனும் அரசியலையும் புரியனும் .அம்பானி விழுந்து விழுந்து சொல்வது உங்களுக்கு  புரியவில்லையா ?

அல்லது வழக்கம்போல் புலம்பெயர் மீதான சேறடிப்பா ?

Edited by பெருமாள்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.