Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது?ஊரில் இரத்தம் எடுத்த பின்பு இன்னும் எடுக்கலையா?
தங்கச்சி ஒரு வருடத்துக்கு ஒருக்கால் என்றாலும் பிசிக்கல் சோதனை செய்யுங்கள்.அந்தநேரம் இரத்தமும் எடுத்து கொலஸ்ரரோல் சீனி மற்றைய வைட்டமின்கள் என்ன நிலையில் இருக்கிறதென்பதை அறியுங்கள்.

நம்மவர்கள் எல்ரோரையுமே வைட்டமின் டி எடுக்க சொல்கிறார்கள்.
இது பல பிரச்சனைக்கும் டி குறைபாடே காரணம் என்கிறார்கள்.

நில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.

இரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு  நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை.
எந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 21:38, ரதி said:

இரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு  நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை.
எந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன் 

ஒரு வயதுக்கு பிறகு இரத்தம்,யூரின் எடுத்து செக்பண்ணுறது நல்லம். ஒரு சில வருத்தங்கள் இருக்கிறது எங்களுக்கே தெரியிறேல்லை. வருத்தம் கூடீனாப்பிறகுதான் தெரிய வரும். சிலருக்கு பிரசர் இருப்பதே தெரிவதில்லை.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி
    உங்க ஊரில சூராவளி மழை என்றார்கள். நீங்கள் எல்லோரும் நலம் தானே?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி
    உங்க ஊரில சூராவளி மழை என்றார்கள். நீங்கள் எல்லோரும் நலம் தானே?

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை  பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு. 

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

Edited by nilmini
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை  பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு. spacer.png

உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நில்மினி🙏

 உங்களை போல் குரு அமையும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..

நாங்களும் அப்படியே ஒரு சில ஆசிரியர்களை விட

பின்னால் போர்வையால் போர்த்திவிட்டிருப்பது பாடியா??? எங்களை கலாய்க்க வேண்டுமென்று இப்படி போஸ் கொடுக்கின்றீர்களா தாயே???😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nilmini said:

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை  பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு. 

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

சந்தோசம் கவனமாக இருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நில்மினி🙏

 உங்களை போல் குரு அமையும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..

நாங்களும் அப்படியே ஒரு சில ஆசிரியர்களை விட

பின்னால் போர்வையால் போர்த்திவிட்டிருப்பது பாடியா??? எங்களை கலாய்க்க வேண்டுமென்று இப்படி போஸ் கொடுக்கின்றீர்களா தாயே???😂

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி உடையார். எனது அப்பா போல நல்ல ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nilmini said:

ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)😂

இந்த திரிக்குள் நான் வரவில்லை.. .இனியுமில்லை 😨😨😨

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

---ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)😂

119445610_1572214409653860_8177173729210291059_n.jpg?_nc_cat=102&_nc_sid=dbeb18&_nc_ohc=3Kk0s2JwmeIAX_dRJ11&_nc_ht=scontent-frt3-1.xx&oh=239487881ef758c94129604c3dfd26f9&oe=5F87C483

கெதியாய்... கண்ணை திறந்து,  காட்டுங்கோ... நில்மினி.  :grin: 😂

1 hour ago, உடையார் said:

இந்த திரிக்குள் நான் வரவில்லை.. .இனியுமில்லை 😨😨😨

தமிழறிவு!!: கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை.

உடையார்... துணிவான ஆள் என்று நினைத்தேன்.
மூடியிருக்கிற,  "பாடியை" பார்த்தே... தலை விறைத்து, பயந்து போனார். 🤣
அவரின் பயத்தை போக்க... சிட்னி முருகன் கோயிலுக்குப் போய்... 
கையில் கயிறு, கட்டினால்,
பயம் பறந்து போகும். :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 21:35, ஈழப்பிரியன் said:

நில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்து முடித்துவிடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது பாதகமான விளைவுகளாகவும் முடியும். உதாரணத்துக்கு நாங்கள் காலையில் எழுந்தவுடன், இன்று இன்று இவ்வளவு புரதம், கொழுப்பு, மாச்சத்து, விட்டமின் , மினெரல்ஸ் எனது உடலுக்கு தேவை என்று கணக்கு பார்த்து எடுப்பதில்லை. ஆனால் புரதம், வைட்டமின் போன்றவை உடலால் தயாரிக்கவும் முடியாது, சேகரித்து வைக்கவும் முடியாது. இவை ஒவ்வொரு நாளும் தேவையான அளவு எடுக்க வேண்டும். மற்றும் கல்சியம்  போன்ற  மினெரல் வகைகள் நாம் தேவையான அளவு உணவுடன் எடுக்காவிட்டால், உடல் எமது எலும்புகள், பற்கள் லில் இருந்து கல்சியத்தை சுரண்டி எடுத்துவிடும். இத்தானில் எலும்புகள் தேய்ந்து போகும். அத்துடன் வயதானர்வகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு உணவுகுழாய்களில் இருந்து கல்சியம் உறிஞ்சப்படுவதுக்கு விட்டமின் D நிறைய தேவை. அதனால்தான் கல்சியம் tablet உடன் calcitriol  (D3) சேர்த்து விற்கிறார்கள். ஆனால் எமது உடலுக்கு மிகவும் பொருத்தமானது உணவுடன் சேர்ந்து இருக்கும் விட்டமின் மினரல்கள் தான். மருந்தாக எடுப்பவை அவ்வளவு உகந்தது அல்ல. வேறு வழி  இல்லாவிடில் எடுத்துத்தான் ஆகவேணும் . நீரும் அப்படிதான். மரக்கறி, பழங்களில் இருக்கும் நீர்தான் உடலுக்கு மிகவும் உகந்த தண்ணி. அதைவிட்டு அடிக்கடி அளவுக்கு அதிகமாக தண்ணி குடிப்பது நல்ல பலன்களை தராது.

இதனால் நாம் அறிவது என்னவென்றால், எமது உணவுப்பழக்கங்கள் மிகவும் முக்கியமானது. எமது உடல் உணவினாலும் , நீரினாலும் மட்டுமே ஆனது. உயிரை பற்றி அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். என்றபடியால் ஒவ்வொரு நாளும் நிறைய மரக்கறி, பழங்கள் மட்டும் எல்லா nutrients உம்  சேர்ந்த வீட்டில் தயாரித்த உணவை உண்பதே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இறைச்சி வகைகள் எமது மிக நீண்ட வளைந்த குடல்களால் சென்று முடிய 3 நாட்கள் வரை எடுக்கும். அதற்குள் அவை நச்சுத்தன்மை அடைந்து பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். என்றபடியால் மீன், முட்டை மற்றும் மரக்கறி பழங்களே சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது . அமெரிக்கா போன்ற நாடுகளில் விக்கும் பாலும் கூடாது. ஹோர்மோன்கள் நிறைந்தவை. உலகெங்கும் விக்கும் இறைச்சி வகைகள், farm இல்  வளர்க்கும் மீன் வகையிலும் உதவாது. மற்றது கடைகளில் விக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ( பிஸ்கட் , பாண், மாமிசம் என்று நீண்ட நாட்கள் குளிரூட்டி இல்லாமல் இருக்கக்கூடிய உணவில் எல்லாம் transfat எனப்படும் கொழுப்பு உள்ளது. அவை உடலுக்கு கேடு விளைவிப்பவை (குருதிக்குழாய்கள், இருதய நோய்கள்). ஏனென்றால் அவை செயற்கையாக கட்டியாக்கப்பட்ட கொழுப்பை கொண்டவை. அத்துடன் நிறய சீனி, உப்பு சேர்க்கப்பட்டவை. பேக்கரியில் விக்கும் பாண் ஓரளவுக்கு நல்லம். எனவே உணவே உடல், உணவே மருந்து என்று கவனமாக சாப்பிட்டு வந்தாலே முக்காவாசி வருத்தமும் இல்லாமல்  போய்விடும். அல்லது வருத்தம் வராது. கடைசியாக சொல்ல விரும்புவது, ரெண்டு சாப்பாட்டுக்கு நடுவில் உணவுகுழாய்களுக்கு கொஞ்சம் ஒய்வு குடுக்கவேணும். எந்த நேரமும் வேலை செய்தால் அவை களைத்து பிழையாக வேலை செய்யத்தொடங்கி விடும். நடுவில் தண்ணி மட்டும் குடிக்கவேணும். 

spacer.png

  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 21:35, ஈழப்பிரியன் said:

நில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.

பலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே? எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள தகவல்கள், என்னையும் கடந்த கிழமையில் இருந்து இந்த டியை எடுக்க சொல்லிவிட்டார் வைத்தியர் 😪

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

பலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே? எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா. 

சீ ....சீ   இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கக்கூடாது மகள்.... நீங்கள் ஆவிகளுடன் போராடுபவர் உங்களிடம் இந்தப் பாவிகள்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.....!  🩺

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

பலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே? எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா. 

அட நீங்கள் வேறை.அந்த மனிசனுக்கு கோபம் வாற நரம்பு நாளமெல்லாம் வேலை செய்யாது. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்து முடித்துவிடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது பாதகமான விளைவுகளாகவும் முடியும். உதாரணத்துக்கு நாங்கள் காலையில் எழுந்தவுடன், இன்று இன்று இவ்வளவு புரதம், கொழுப்பு, மாச்சத்து, விட்டமின் , மினெரல்ஸ் எனது உடலுக்கு தேவை என்று கணக்கு பார்த்து எடுப்பதில்லை. ஆனால் புரதம், வைட்டமின் போன்றவை உடலால் தயாரிக்கவும் முடியாது, சேகரித்து வைக்கவும் முடியாது. இவை ஒவ்வொரு நாளும் தேவையான அளவு எடுக்க வேண்டும். மற்றும் கல்சியம்  போன்ற  மினெரல் வகைகள் நாம் தேவையான அளவு உணவுடன் எடுக்காவிட்டால், உடல் எமது எலும்புகள், பற்கள் லில் இருந்து கல்சியத்தை சுரண்டி எடுத்துவிடும். இத்தானில் எலும்புகள் தேய்ந்து போகும். அத்துடன் வயதானர்வகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு உணவுகுழாய்களில் இருந்து கல்சியம் உறிஞ்சப்படுவதுக்கு விட்டமின் D நிறைய தேவை. அதனால்தான் கல்சியம் tablet உடன் calcitriol  (D3) சேர்த்து விற்கிறார்கள். ஆனால் எமது உடலுக்கு மிகவும் பொருத்தமானது உணவுடன் சேர்ந்து இருக்கும் விட்டமின் மினரல்கள் தான். மருந்தாக எடுப்பவை அவ்வளவு உகந்தது அல்ல. வேறு வழி  இல்லாவிடில் எடுத்துத்தான் ஆகவேணும் . நீரும் அப்படிதான். மரக்கறி, பழங்களில் இருக்கும் நீர்தான் உடலுக்கு மிகவும் உகந்த தண்ணி. அதைவிட்டு அடிக்கடி அளவுக்கு அதிகமாக தண்ணி குடிப்பது நல்ல பலன்களை தராது.

இதனால் நாம் அறிவது என்னவென்றால், எமது உணவுப்பழக்கங்கள் மிகவும் முக்கியமானது. எமது உடல் உணவினாலும் , நீரினாலும் மட்டுமே ஆனது. உயிரை பற்றி அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். என்றபடியால் ஒவ்வொரு நாளும் நிறைய மரக்கறி, பழங்கள் மட்டும் எல்லா nutrients உம்  சேர்ந்த வீட்டில் தயாரித்த உணவை உண்பதே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இறைச்சி வகைகள் எமது மிக நீண்ட வளைந்த குடல்களால் சென்று முடிய 3 நாட்கள் வரை எடுக்கும். அதற்குள் அவை நச்சுத்தன்மை அடைந்து பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். என்றபடியால் மீன், முட்டை மற்றும் மரக்கறி பழங்களே சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது . அமெரிக்கா போன்ற நாடுகளில் விக்கும் பாலும் கூடாது. ஹோர்மோன்கள் நிறைந்தவை. உலகெங்கும் விக்கும் இறைச்சி வகைகள், farm இல்  வளர்க்கும் மீன் வகையிலும் உதவாது. மற்றது கடைகளில் விக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ( பிஸ்கட் , பாண், மாமிசம் என்று நீண்ட நாட்கள் குளிரூட்டி இல்லாமல் இருக்கக்கூடிய உணவில் எல்லாம் transfat எனப்படும் கொழுப்பு உள்ளது. அவை உடலுக்கு கேடு விளைவிப்பவை (குருதிக்குழாய்கள், இருதய நோய்கள்). ஏனென்றால் அவை செயற்கையாக கட்டியாக்கப்பட்ட கொழுப்பை கொண்டவை. அத்துடன் நிறய சீனி, உப்பு சேர்க்கப்பட்டவை. பேக்கரியில் விக்கும் பாண் ஓரளவுக்கு நல்லம். எனவே உணவே உடல், உணவே மருந்து என்று கவனமாக சாப்பிட்டு வந்தாலே முக்காவாசி வருத்தமும் இல்லாமல்  போய்விடும். அல்லது வருத்தம் வராது. கடைசியாக சொல்ல விரும்புவது, ரெண்டு சாப்பாட்டுக்கு நடுவில் உணவுகுழாய்களுக்கு கொஞ்சம் ஒய்வு குடுக்கவேணும். எந்த நேரமும் வேலை செய்தால் அவை களைத்து பிழையாக வேலை செய்யத்தொடங்கி விடும். நடுவில் தண்ணி மட்டும் குடிக்கவேணும். 

spacer.png

எனக்குத் தெரிந்த பல பேர் கொரோனாவுக்கு பயத்தில் "அயன்", "விற்றமின்" மாத்திரைகள் எடுக்கின்றனர்...இதனால் எதுவும் பக்க விளைவுகள் வராதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெயில்ல நின்றால்/வேலை செய்தால் விற்றமின் டி தோலே தயாரிக்குமாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

பலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே? எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா. 

வணக்கம் நில்மினி
இது ஒரு பொதுக் கேள்வி தான்.நான் நீண்ட காலமாக 1000 ஐயு எடுக்கிறேன்.இபபோ போதாதென்று 2000 எடுக்க வேண்டுமென்று டாக்ரர் கூறினார்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் எதை சாப்பிடுவது?கார்பரேட் நிறுவனங்கள் தருவதைத் தான் எல்லோரும் உண்ண வேண்டிய நிலைமை.
அண்மையில் குடும்ப நண்பரான டாக்ரருடன் கதைக்கும் போது எமது மக்கள் எல்லோருக்குமே வயது வித்தியாசமில்லாமல் டி குறைபாடு இருக்கிறது.அவர் எல்லோருமே எடுக்க வேண்டுமென்கிறார்.
வருடத்தில் 3 மாதம் வெய்யில்.அந்த நாள்களிலும் வீடு கார் வேலை கடை என்று எங்கும் ஏசி.
உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தம் : கொழுப்பில் மட்டும் கரையக்கூடிய விட்டமின்களான A, D, E, K எமது ஈரலில், கொழுப்பு கலங்களில்   செயலற்ற நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் (சிலநாட்களில் இருந்து சில மாதங்கள் வரை). தேவையான நேரங்களில் ஈரல், சிறுநீரகங்களில் செயல்பாடு அடையும்.  B complex, C போன்ற நீரில் கரையும் விட்டமின்கள் சேமிக்கப்படமாட்டுது . 

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

வெயில்ல நின்றால்/வேலை செய்தால் விற்றமின் டி தோலே தயாரிக்குமாமே?

சூரிய கதிர்களில் இருக்கும் Ultraviolet B (UVB) rays  எமது தோலில்  இருக்கும் 7-DHC  என்ற ஒருவகை நல்ல கொலெஸ்டெரோலுடன் தாக்கமடைந்து விட்டமின்  D இன் முன்னோடி ஒன்றை தயாரிக்கும். இது ஈரல், சிறுநீரகம் போன்ற இடங்களில் முதிர்ச்சி அடைந்து விட்டமின்  D ஆக மாறி உடலுக்கு உதவும். 
மிகக்குறைந்த உணவு வகைகளே விட்டமின்  நிறைந்ததாக இருப்பதால் எமது தோல் நிறம் கொண்டவர்கள் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரையான வெயிலில் 2 மணிநேரம் வரை நின்றால் மிகவும் பயனடையலாம். இது கொஞ்சம் கஸ்டமான விசயம் தான். வெள்ளை தோலுக்கு  30 நிமிடம் போதுமானது. வெயிலில் இருந்து தயாரிக்கப்படும் விட்டமின் D மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை. மற்றது கொழுப்பை சாப்பிட்டில் இருந்து அறவே நிப்பாட்ட வேண்டாம். 

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நில்மினி,

எனது பங்குக்கு ஒரு அட்வைசும் கேள்வியும்.

அட்வைஸ் - யூகே வாசி எனில் ஜீ பி யை அழைத்து விட்டமின் டி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். நான் ஆசிய இனத்தவர் என்று சொல்லுங்கள். உடனே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறது. 

ஜி பி யிடம் போக தொற்று பயம் என்றால் - சூப்பர் டிரக் - ஒன் லைன் டெஸ்டிங்ன்கிட் 39£ க்கு விற்கிறார்கள். வீட்டில் இருந்தே ரத்த மாதிரியை அனுப்பலாம். வரும் முடிவை ஜி பி யிடம் காட்டி ஆலோசனையை டெலி போனில் பெறலாம்.

கேள்வி- நில்மினி விட்டமின் டி வாயால் எடுக்கும் போது, குடல் வழியே உடலில் சுவருவது குறைவாமே? இதை எப்படி கையாளலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2020 at 05:13, ரதி said:

எனக்குத் தெரிந்த பல பேர் கொரோனாவுக்கு பயத்தில் "அயன்", "விற்றமின்" மாத்திரைகள் எடுக்கின்றனர்...இதனால் எதுவும் பக்க விளைவுகள் வராதா?

கோரோனோ மூக்கு, வாய் வழியாக உள்ளே நுழைய முற்படும்போது எமது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் வாயுடேனேயே, தொண்டையுடேனேயே நின்றுவிடும். மிக அதிகளவு கிருமிகள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் வந்தாலோ (அதிக கூட்டம் உள்ள இடங்களில் இது சாத்தியம்) அல்லது எதிர்ப்பு சக்தி அவ்வளவு போதாமல் இருந்தாலோ நுரையீரலுக்குள் போய்விடும். அங்குள்ள கலங்களில் தாம் இனம் பெருகி நுரையீரலை அழிக்கும்போது  மிகக்கூடிய எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இவ்வளவு செயல்களுக்கும் மருந்து ஒன்றுமே இல்லை. எமது உடல் மட்டுமே வெண்கலங்களை கொண்டு சண்டை போடமுடியும். அதற்கு விட்டமின் மட்டும் எடுத்தால் போதாது. பலவருடங்களாக நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின், உணவு முறை, அறுவை சிகிச்சைகள், வயது, மது, சிகரெட், மரபணு கோளாறுகள், மன நிலைமை (அதிகம் கவலைப்பட்டு Stress ஆகியவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்). 
நான் இந்த கோரோனோ பிரச்சனை துடங்கின காலம் முதல் நிறய ஓர்கானிக் மஞ்சள், மிளகு, கீரை வகைகள், எல்லா பெரிகளும் சேர்ந்த தேன்  சேர்த்த ஸ்மூதி , மீன் இவைகளை அதிகம் உணவில் சேர்க்கிறேன். இப்பதான்  Ashwagandha என்று ஒரு பவுடர் வாங்கினேன். மற்றும்படி கண்டபாட்டுக்கு வைட்டமின் வகைகளை எடுப்பது தேவையற்றது சிலசமயம் ஆபத்தானது. evening primrose oil , Centrum  போன்றவை நல்லம் என்று நினைக்கிறன். இப்படி தாக்கப்பட்ட உடலில் ஆபத்தான பக்டீரியாக்கள் புகுந்து தமது வேலையை துடங்கும். இவற்றுக்குத்தான் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எமது பாடகர்  இறந்தது போனதுக்கு அதிகப்படியான  காரணம் இந்த பக்க விளைவுகளால் தான். அவரது உடல் நிலை , வயது இந்த பக்க விளைவுகளின் தாக்கத்தையும் அதற்கு கொடுத்த மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை .

Edited by nilmini
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நன்றி நில்மினி,

எனது பங்குக்கு ஒரு அட்வைசும் கேள்வியும்.

அட்வைஸ் - யூகே வாசி எனில் ஜீ பி யை அழைத்து விட்டமின் டி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். நான் ஆசிய இனத்தவர் என்று சொல்லுங்கள். உடனே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறது. 

ஜி பி யிடம் போக தொற்று பயம் என்றால் - சூப்பர் டிரக் - ஒன் லைன் டெஸ்டிங்ன்கிட் 39£ க்கு விற்கிறார்கள். வீட்டில் இருந்தே ரத்த மாதிரியை அனுப்பலாம். வரும் முடிவை ஜி பி யிடம் காட்டி ஆலோசனையை டெலி போனில் பெறலாம்.

கேள்வி- நில்மினி விட்டமின் டி வாயால் எடுக்கும் போது, குடல் வழியே உடலில் சுவருவது குறைவாமே? இதை எப்படி கையாளலாம்?

இப்படியெல்லாம் அரசாங்கம் உங்களை கவனிக்கிறதா? அமெரிக்காவில் இப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரவர் தமது நலனை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். 
குடல் வருத்தம் ஏதும் இருந்தாலேயன்றி பொதுவாக வைட்டமின் D குடலில் நன்றாக உறிஞ்சப்படும். வயதான பெண்களுக்குத்தான் அதிகப்படியான விட்டமின் D,  மக்னிசியும் தேவைப்படும். கொழுப்புள்ள மீன்கள், காளான், மஞ்சள் கரு போன்றவை நல்லது. சிலர்  Fortified உணவுகள் supplements போன்றவற்றை எடுக்கிறார்கள். UV லாம்ப் உம் நல்லம் என்று அறிந்தேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

ஓம்,

சிறு காய்சல் முதல் கான்சர் டிரீட்மெண்ட் வரை எமக்கு எல்லாமே இலவசம் (free at the point of delivery). தரமும் ஓப்பீட்டளவில் குறைவில்லை.

ஆனால் அதிக வேலை பழு, funding cuts காரணமாக காத்திருக்கும் நேரம் அதிகமாகலாம். 

இங்கே பெரும்பான்மையானோருக்கு மருத்துவ காப்புறுதி இல்லை. NHS தான். 

இதை மாற்றி, தனியார் மயபடுத்தி, உங்கள் சிஸ்டம் போல கொண்டுவர “முதலைகள்” முயற்சித்தபடிதான் இருக்கிறாரகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

நான் இருக்கும் ஊர் முதலைகளின் ஊர் தானே. அதனால்தான் திரும்ப நியூசிலாந்து போகிறேன். கனடா, இங்கிலாந்து போன்று பல நாடுகளிலும் universal healthcare இருக்கு என்று தெரியும். இந்த விட்டமின் D ஆசிய இனத்தவர்களுக்கு ஸ்பெஷல் treatment என்பவைதான் விளங்கவில்லை. இதைப்பற்றி அறியத்தரவும். 

நியுசிலாந்தில் எம்மை விட நல்ல சிஸ்டம் என கேள்வி பட்டுள்ளேன்.

ஸ்பெசல் டிரீட்மெண்ட் இல்லை. ஆனால்,

இங்கே ஆசிய/அப்பிரிக்க இனத்தவரின் மத்தியில் கொரோனா இறப்பு வீதம் வெள்ளையினத்தோரை விட மிக அதிகம். இதை பற்றி ஒரு விசாரணையும் நடந்தது.

அதில் வாழ்கை முறை உட்பட சில காரணங்கள் இந்த இறப்பு வீத அதிகரிப்புக்கு காரணம் என கூறப்பட்டது. 

விட்டமின் டி குறைபாட்டை கூறாவிடிலும், ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது.

ஆகவே ஜி பி சர்ஜரிக்கு போன் போட்டு நான் ஆசிய இனத்தவர், எனக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என சந்தேகிக்கிறேன் என்று சொன்னால் - விரைவாக ரத்த பரிசோதனை அப்பாய்மெண்ட் தருகிறார்கள். 

இல்லாவிட்டால், நீ இள வயது/ ஒரு பிரச்ச்னையும் இல்லை எனவே ரத்த பரிசோதனை தேவையில்லை என தட்டி கழிக்க கூடும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.