Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

இதற்கு சில காரணங்களும் தீர்வுகளும் இருக்கு குமாரசாமி அண்ணா. ரெண்டு நாளில் பதில் போடுகிறேன் 

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nilmini said:

இதற்கு சில காரணங்களும் தீர்வுகளும் இருக்கு குமாரசாமி அண்ணா. ரெண்டு நாளில் பதில் போடுகிறேன் 

நன்றி.

அவசரமில்லை ஆறுதலாய் சொல்லுங்கோ.:cool:
ஆனால் ஒண்டு ராசவன்னியருக்கு வந்த நிலமை எனக்கு வரக்கூடாது கண்டிப்பாய் சொல்லீட்டன்.:grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நன்றி.

அவசரமில்லை ஆறுதலாய் சொல்லுங்கோ.:cool:
ஆனால் ஒண்டு ராசவன்னியருக்கு வந்த நிலமை எனக்கு வரக்கூடாது கண்டிப்பாய் சொல்லீட்டன்.:grin:

ஏற்கனவே பதில் எழுத தொடங்கியாச்சு 👩‍🔬

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2020 at 11:20, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

எண்ட வெட்டு கொத்துகளை வாசித்து பயந்துபோய் தனக்கு மருத்துவ அறிவுரையும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். என்னை போய் அலுவலுகளை பார்க்கச்சொல்லி குமாரசாமி அண்ணை சொல்கிறார் போல கிடக்கு🤔

உடலில் யூரிக் அமிலம் கூடுவதை  hyperuricemia என்று சொல்வார்கள். இது மூட்டுகளுக்குள்  சேர்ந்து ஆர்தரைடிஸ் மாதிரி வீங்கி நோகும் (Gout arthritis) அத்துடன் ரத்தம், சிறுநீரிலும் அமிலத்தன்மை கூடும். அது உடம்புக்கு தீமை விளைவிக்கும். யூரிக் அமிலம் உடலில் தேங்குவற்கு சில காரணங்கள் இருக்கு. சுயமாக கண்டுபிடிக்க ஒரே வழி மூட்டு உளைவுதான் . சிவப்பாக வந்து வீங்கும், நோகும் . கீரை வகைகள் ஓட்ஸ் மாதிரி நார் சத்து கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். அவை யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். Apple Cider Vinegar உம்  மிகவும் நல்லது. Organic extra virgin ஒலிவ் எண்ணெய் போட்டு salad செய்து வினிகரையும் சேர்த்து சாப்பிடுங்கள். Cherry பழம் மற்றும் விட்டமின் சி நிறைந்த உணவுகள் . ஒரு நாளைக்கு 40 Cherry பழங்களை  கொஞ்ச நேரம் விட்டு விட்டு நாள் முழுதும் சாப்பிட்டால் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக குறையும். sardine , tuna , நண்டு, நெத்தலி , கொழுப்புள்ள இறைச்சி வகைகள் அமிலத்தை கூட்டும் .

அடுத்த ஒரு மாசத்துக்கு : தினமும் 40 செர்ரி பழம் , ஓட்ஸை வறுத்து பொடியாக்கி புட்டு, ஓர்கானிக் அப்பிள் சிடர் வினிகர் , கீரை வகை இலைகள், ஓர்கானிக் ஒலிவ் எண்ணெய் போட்டு சலட் , நிறைய இளஞ்சூட்டு தண்ணி, இவைகளை சாப்பிட்டுவிட்டு யூரிக் அமிலத்தின் அளவை டெஸ்ட் பண்ணி பாருங்கள். நிச்சயம் குறைந்து இருக்கும். 

Edited by nilmini
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

மிக்க நன்றி நில்மினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மிக்க நன்றி நில்மினி.

நீங்கள் குடிப்பதில்லை ,மாமிசமும் சாப்பிடுவதில்லை ...எப்படி உங்களுக்கு வந்தது?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் குடிப்பதில்லை ,மாமிசமும் சாப்பிடுவதில்லை ...எப்படி உங்களுக்கு வந்தது?
 
 எனக்கு கேள்வி துண்டற விளங்கேல்லை.......எது எப்பிடி வந்தது?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் குடிப்பதில்லை ,மாமிசமும் சாப்பிடுவதில்லை ...எப்படி உங்களுக்கு வந்தது?
 
இப்ப தான் அப்படி.
சிறிய வயதில் நன்றாக விதைத்துள்ளார்.
அறுவடை செய்கிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் அப்படி.
சிறிய வயதில் நன்றாக விதைத்துள்ளார்.
அறுவடை செய்கிறார்.

இப்பவும் எனக்கு 30வயதுதான் இருக்கும் எண்டு மதிக்கிறாங்கள் தெரியுமே...:cool:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 எனக்கு கேள்வி துண்டற விளங்கேல்லை.......எது எப்பிடி வந்தது?

17 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் அப்படி.
சிறிய வயதில் நன்றாக விதைத்துள்ளார்.
அறுவடை செய்கிறார்.

உப்ப விளங்கிச்சா அண்ணா 😄

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2020 at 04:28, குமாரசாமி said:

மிக்க நன்றி நில்மினி.

பப்பாசிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சம் தேயிலையையும்  போட்டு கொதிக்கவைத்து குடித்துக்கொண்டு வர யூரிக் அசிட்/Gout  அகன்றுவிடும் எண்டு ஆதாரத்துடன் படித்தேன். முயற்சி செய்து பாருங்களேன் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nilmini said:

பப்பாசிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சம் தேயிலையையும்  போட்டு கொதிக்கவைத்து குடித்துக்கொண்டு வர யூரிக் அசிட்/Gout  அகன்றுவிடும் எண்டு ஆதாரத்துடன் படித்தேன். முயற்சி செய்து பாருங்களேன் 

பப்பாசி தின்றால் குழந்தைப் பேறு தடைப்படலாம் என்கிறார்கள்.இதனால் குமாரசாமி இந்த முறையை தவிர்ப்பார் என்றே எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2020 at 18:08, குமாரசாமி said:

இப்பவும் எனக்கு 30வயதுதான் இருக்கும் எண்டு மதிக்கிறாங்கள் தெரியுமே...:cool:

ஆ..அப்போ ஏனாம் பப்பாசிக்காய் வைத்தியம் எல்லாம் தேவைப்படுகிறது...✍️உங்கள் பிரச்சனையை சொல்லத் தேவை இல்லை பட் கண்டதையும் அவிச்சுக்  குடிச்சுட்டு கிடக்காதீங்கோ.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன அண்ணமாரால் எனக்கு ஒரே confusion ஆக   கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

இது என்ன அண்ணமாரால் எனக்கு ஒரே confusion ஆக   கிடக்கு 

தங்கச்சி இது தொழில் ரகசியம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பப்பாசி தின்றால் குழந்தைப் பேறு தடைப்படலாம் என்கிறார்கள்.இதனால் குமாரசாமி இந்த முறையை தவிர்ப்பார் என்றே எண்ணுகிறேன்.

இவர் தேவையில்லாத வேலை பாக்கிறார்.....எங்கையும் தனிய சந்திப்பார்தானே....அப்ப இருக்கு விளையாட்டு.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

பப்பாசி தின்றால் குழந்தைப் பேறு தடைப்படலாம் என்கிறார்கள்.இதனால் குமாரசாமி இந்த முறையை தவிர்ப்பார் என்றே எண்ணுகிறேன்.

இந்த பப்பாசி காயால் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் விரிவுரையாளராக இருந்த செந்தில்மோகன் உலகப்புகழ் பெற்றார். பிரித்தானியாவிலும் கிறீஸ்தவ ஐரோப்பிய உலகிலும் கருக்கலைப்புக்கு மருத்துவ காரணம் இல்லாவிட்டால் அனுமதி இல்லை. செந்தில்மோகன் கலாநிதி பட்டத்துக்காக தேர்ந்து கொண்ட ஆய்வு, பப்பாக்காயில் உள்ள இரசாயனங்கள் எப்படி கருக்கலைப்புக்கு உதவுகின்றன என்பதாகும். இவரது ஆய்வின் முடிவு பகிரங்கமானதும் உலகப்புகழ் பெற்றார்.

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கற்பகதரு said:

இத்துடன்  அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சி நிறைவுக்கு வருகின்றது. இதனை தொகுத்து வழங்கியவர் "தகவல் தென்றல்" கற்பதரு அவர்கள்.😎

இதனைத்தொடர்ந்து உங்கள் காதுக்கு இனிய பாடல் இதோ..

  • Thanks 1
  • Haha 4
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி,

வாழ்த்துக்களுடனும் வணக்கங்களும். . .

எனக்கு ரத்தம் எடுக்கும்போது  வைத்தியர்கள் சிரமப்படுகிறார்கள்.

காலையில் நிறைய தண்ணீர் குடித்து விட்டுதான் போகிறேன்.  ஆனாலும் சிரமம் தான். 3, 4 தடவைகள் முயற்சிசெய்கிறார்கள்.

இதற்கு தீர்வு கிடைக்குமா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கறுப்பி said:

வணக்கம் நில்மினி,

வாழ்த்துக்களுடனும் வணக்கங்களும். . .

எனக்கு ரத்தம் எடுக்கும்போது  வைத்தியர்கள் சிரமப்படுகிறார்கள்.

காலையில் நிறைய தண்ணீர் குடித்து விட்டுதான் போகிறேன்.  ஆனாலும் சிரமம் தான். 3, 4 தடவைகள் முயற்சிசெய்கிறார்கள்.

இதற்கு தீர்வு கிடைக்குமா...?

நீங்கள் ஏன் இரத்தம் கொடுக்கிறீர்கள்? உதைக் கேட்டால் என் அண்ணருக்கு மனசு நோகப் போகுது😍
எனக்கும் அவ்வளவு கெதியில் இரத்தம் எடுக்கேலாது ...ஒருக்கால் ஊரில் இருக்கும்  போது கையில் குத்தி பார்த்து சரி வராமல் காலில் குத்தி எடுத்தார்கள் ...நான் நினைக்கிறேன் இது நரம்போடு சம்மந்தப்பட்ட்து என்று 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கறுப்பி said:

வணக்கம் நில்மினி,

வாழ்த்துக்களுடனும் வணக்கங்களும். . .

எனக்கு ரத்தம் எடுக்கும்போது  வைத்தியர்கள் சிரமப்படுகிறார்கள்.

காலையில் நிறைய தண்ணீர் குடித்து விட்டுதான் போகிறேன்.  ஆனாலும் சிரமம் தான். 3, 4 தடவைகள் முயற்சிசெய்கிறார்கள்.

இதற்கு தீர்வு கிடைக்குமா...?

வணக்கம் கறுப்பி, யாழ் களத்தில்  உங்களை சந்தித்தை இட்டு மகிழ்ச்சி. எனக்கும் இதே பிரச்சனை தான் 6 மாதத்துக்கு ஒருக்கா தைரொக்சின் அளவு பாக்க ரத்தம் எடுப்பார்கள். ஒரு சில அனுபவம் வாய்ந்தவர்கள் பட்டென்று எடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நிறையநேரம் சென்றுதான்  தோலுக்கு அடியில் ஆழமாக இல்லாத ரத்த நாளங்களை கண்டு பிடிப்பார்கள்.  இப்படி நாளங்களை கண்டுபிடிக்க கஸ்டமாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கு. 
1. சிலரின் நாளங்கள் வழமயான  பாதையில் இல்லாமல் கொஞ்சம் விலகி இருக்கும்
2. சிலருக்கு ஊசியேற்றியபின் நாளம்  பிரண்டு போய் விடும் ( அனுபவம் உள்ளவர்கள் அதை சுகமாக கையாண்டு விடுவார்கள்)  ( இந்த ரெண்டும் காரணமாக இருக்கலாம்) 
3.  மிகச்சிலபேருக்கு தாழ்  குருதி அழுத்தம் காரணம் 
4. நாளக்குருதி  ஓட்டம் குறைவு  
5. உடல் பருமன் அதிகரித்தாலும் கஸ்டம் 

முதல் இரண்டு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் நல்ல சுடுதண்ணி நிறைய குடித்து, கையை முடிந்தளவுக்கு வெண்ணீரில் முக்கிவைத்துவிட்டு எடுத்தால் சுகமாக எடுக்கலாம்.
மணிக்கட்டை  பலதடவை சுழட்டி விட்டு எடுத்தாலும் சுகமாக நாளத்தை கண்டு பிடிக்கலாம் .

Edited by nilmini
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கும் அவ்வளவு கெதியில் இரத்தம் எடுக்கேலாது ...ஒருக்கால் ஊரில் இருக்கும்  போது கையில் குத்தி பார்த்து சரி வராமல் காலில் குத்தி எடுத்தார்கள் ...நான் நினைக்கிறேன் இது நரம்போடு சம்மந்தப்பட்ட்து என்று 

என்னது?ஊரில் இரத்தம் எடுத்த பின்பு இன்னும் எடுக்கலையா?
தங்கச்சி ஒரு வருடத்துக்கு ஒருக்கால் என்றாலும் பிசிக்கல் சோதனை செய்யுங்கள்.அந்தநேரம் இரத்தமும் எடுத்து கொலஸ்ரரோல் சீனி மற்றைய வைட்டமின்கள் என்ன நிலையில் இருக்கிறதென்பதை அறியுங்கள்.

நம்மவர்கள் எல்ரோரையுமே வைட்டமின் டி எடுக்க சொல்கிறார்கள்.
இது பல பிரச்சனைக்கும் டி குறைபாடே காரணம் என்கிறார்கள்.

நில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.

வார முடிவில் பதிவிடுகிறேன்  அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nilmini said:

வார முடிவில் பதிவிடுகிறேன்  அண்ணா 

நில்மினிக்கு... வாற லீவு நாளில், இரண்டு முக்கிய வேலைகள் இருக்கிறது. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nilmini said:

வணக்கம் கறுப்பி, யாழ் களத்தில்  உங்களை சந்தித்தை இட்டு மகிழ்ச்சி. எனக்கும் இதே பிரச்சனை தான் 6 மாதத்துக்கு ஒருக்கா தைரொக்சின் அளவு பாக்க ரத்தம் எடுப்பார்கள். ஒரு சில அனுபவம் வாய்ந்தவர்கள் பட்டென்று எடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நிறையநேரம் சென்றுதான்  தோலுக்கு அடியில் ஆழமாக இல்லாத ரத்த நாளங்களை கண்டு பிடிப்பார்கள்.  இப்படி நாளங்களை கண்டுபிடிக்க கஸ்டமாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கு. 
1. சிலரின் நாளங்கள் வழமயான  பாதையில் இல்லாமல் கொஞ்சம் விலகி இருக்கும்
2. சிலருக்கு ஊசியேற்றியபின் நாளம்  பிரண்டு போய் விடும் ( அனுபவம் உள்ளவர்கள் அதை சுகமாக கையாண்டு விடுவார்கள்)  ( இந்த ரெண்டும் காரணமாக இருக்கலாம்) 
3.  மிகச்சிலபேருக்கு தாழ்  குருதி அழுத்தம் காரணம் 
4. நாளக்குருதி  ஓட்டம் குறைவு  
5. உடல் பருமன் அதிகரித்தாலும் கஸ்டம் 

முதல் இரண்டு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் நல்ல சுடுதண்ணி நிறைய குடித்து, கையை முடிந்தளவுக்கு வெண்ணீரில் முக்கிவைத்துவிட்டு எடுத்தால் சுகமாக எடுக்கலாம்.
மணிக்கட்டை  பலதடவை சுழட்டி விட்டு எடுத்தாலும் சுகமாக நாளத்தை கண்டு பிடிக்கலாம் .

நீங்கள் கூறியவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

மிகவும் நன்றிகள்....

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.