Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வணக்கம்! மீண்டும் ஒரு அலுப்புக் கேள்வியுடன்.......

அக்குபஞ்சர் சிகிச்சை  மூட்டுவலிகளுக்கு பலன் தருமென சொல்கிறார்கள். இதனால் பின்விளைவுகள் ஏதேனும் இருக்கின்றதா?

எனக்கு பதில் சொல்லுறதுக்கு முதல் தேங்காய் எண்ணை நல்லதோ எண்டு கேட்டுப்போட்டு  அங்கை ஒராள்  காய்ஞ்சு போய் நிக்கிறார் அவருக்கு  பதிலை சொல்லீட்டு எனக்கு ஆறுதலாய் சொல்லலாம்.😁

ஓம் குமாரசாமி அண்ணை , தேங்காய் எண்ணெய் மற்றும் நித்திரை பற்றிய விடயங்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் பிராக்கு கூடிப்போச்சு. புதன் கிழமை போடுவேன். அக்குபஞ்சர் நல்ல இண்ட்ரஸ்டிங் தலைப்பு நிச்சயம் அலுப்புக்கேள்வி இல்லை 😂 . நல்ல  பதிவு ஒன்று போடுகிறேன்

Link to post
Share on other sites
 • Replies 385
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

 • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 13:51, உடையார் said:

குமாரசாமி, நான் வளர்ந்தது ஒரு அழகிய சிறிய கிராமம் அந்த கிரமத்தை சுற்றி வயலும் காடுதான், எங்கள் ஊரில் ஒரு 20 குடும்பங்கள் இருக்கும், எல்லாரும் சொந்தம் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி சாப்பிடுவோம், பெடியள வாசிக சாலையில்தான் முழு நேரமும் இரவு படுப்பது முதல், அப்படியொரு சந்தோஷமான கவலையற்ற வாழ்க்கை, இரவு பன்னிரண்டு மணிக்கு சுட சுட பாண் வாங்கி வந்து சம்பலுடன் சப்பிடுவோம், பனையேறி களவாக கள் இறக்கி குடிப்போம், நான் நன்றாக ஏறுவேன் பனை, ஏறி இருந்து குடித்துவிட்டு, மிகுதியை இறக்கி கொண்டுவருவேன், தேவாமிர்தம். இரவு ........குளத்து விசி கிணற்றில் நில வெளிச்சத்தில் நீச்சல் அடிப்போம், யாரும் எங்களை கேள்வி கேட்கமாட்டார்கள், அப்படி வளர்ந்தோம் ஒற்றுமையாக. அந்த நினைவுகள் இறக்கும்வரை பசுமையாக இருக்கும். கவலையற்ற வாழ்க்கை ஊரோடு.

இப்ப எங்கள் கிராமில்லை, ஒரே காடுதான்.  தனால் எனக்கு அங்கு போக விருப்பமில்லை, இங்கேயே இருக்கப்போகின்றேன், ஆனா, என் மக்களுக்கு ஏதவாது நல்லது செய்துவிட்டுதான் இறப்பேன், அதுதான் என் கடைசி ஆசை. பல திட்டங்களிருக்கு, செயல் வடிவத்திற்க்கு இன்னும் நாட்கள் தேவை. பிள்ளைகளை கரையேற்றிவிட்டால் என் உழைப்பு முழுக்க மக்களின் முன்னேற்றத்திற்குதான் 

உடையார்! நானும் அதே. சேம் பிளட்.
 என்ன ஒன்று.என்னை கூடாத கூட்டங்களுடன் கூடியவன் என்று என்னை பலர் ஒதுக்கினார்கள். அதில் என் உறவினர்களும் அடக்கம்.

 • Sad 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எங்கே நில்மினியைக் காணவில்லை 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2020 at 06:08, ரதி said:

எங்கே நில்மினியைக் காணவில்லை 

நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்

On 25/5/2020 at 00:44, nilmini said:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:
On 5/6/2020 at 15:08, ரதி said:

எங்கே நில்மினியைக் காணவில்லை 

நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்

கடந்த புதன் நல்ல பதிவுடன் வருவதாக சொல்லியிருந்தா இன்னும் காணவில்லை.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிள்ளை இங்கு வந்த உடனே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தான் இனிமேல் தினமும் இங்கு வந்து ஒப்பமிடுவேன் என்று சொன்னது.நானும் தமிழ்சிறியும் அவரைப் பாராட்டினம்.அதன்பின் அவ வைத்தியர் என்றவுடனே எல்லாரும் வரிசையாய் வந்து வடம் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் தேரைத் தெருவில விட்டாச்சுது. இப்ப தேர் அங்குமில்லை இங்குமில்லை எங்கு நிக்குதோ தெரியவில்லை....!   😷 

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்

நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள  நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

6 hours ago, suvy said:

அந்தப் பிள்ளை இங்கு வந்த உடனே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தான் இனிமேல் தினமும் இங்கு வந்து ஒப்பமிடுவேன் என்று சொன்னது.நானும் தமிழ்சிறியும் அவரைப் பாராட்டினம்.அதன்பின் அவ வைத்தியர் என்றவுடனே எல்லாரும் வரிசையாய் வந்து வடம் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் தேரைத் தெருவில விட்டாச்சுது. இப்ப தேர் அங்குமில்லை இங்குமில்லை எங்கு நிக்குதோ தெரியவில்லை....!   😷 

தேர் கொஞ்சம் தடுமாறி விட்டது... அம்மாவின் சுகயீனம் காரணமாக. இப்ப மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டது. பதிவுகள் , பதில்கள் விரைவில் தொடரும் . என்னைப்பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு 

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

Edited by nilmini
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள  நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

தேர் கொஞ்சம் தடுமாறி விட்டது... அம்மாவின் சுகயீனம் காரணமாக. இப்ப மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டது. பதிவுகள் , பதில்கள் விரைவில் தொடரும் . என்னைப்பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு 

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

அம்மா உப்ப சுகமாய் இருக்கிறாரா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

2 hours ago, ரதி said:

அம்மா உப்ப சுகமாய் இருக்கிறாரா?

நானும் கேட்க வேண்டும் என்று வர ரதியும் கேட்டிருக்கிறார்.
எதுவோ
உங்கள் அம்மா நலமடைய எல்லோரும் இறைவனை வேண்டுகிறோம்.

நீண்ட நாட்களுக்கு விடுமுறை போவதானால் காணாமல் போகிறோம் (நாற் சந்தி)திரியில் ஒரு கிழமை ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்களுக்கு காணாமல் போகிறேன் என்று ஒரு வரி எழுதிவிட்டால் யாரும் தேடாமல் இருப்பார்கள்.
மீண்டும் கண்டது சந்தோசம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அம்மா உப்ப சுகமாய் இருக்கிறாரா?

எங்களை கண்டவுடன் நல்ல உசாராக இருந்தா ரதி. நாங்கள் வெளிக்கிட  திரும்ப சோர்ந்து போய்விட்டா. ஆனாலும் உடல் நிலை இப்ப நல்லா இருக்குது. விசாரித்ததுக்கு நன்றி. 

42 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் கேட்க வேண்டும் என்று வர ரதியும் கேட்டிருக்கிறார்.
எதுவோ
உங்கள் அம்மா நலமடைய எல்லோரும் இறைவனை வேண்டுகிறோம்.

நீண்ட நாட்களுக்கு விடுமுறை போவதானால் காணாமல் போகிறோம் (நாற் சந்தி)திரியில் ஒரு கிழமை ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்களுக்கு காணாமல் போகிறேன் என்று ஒரு வரி எழுதிவிட்டால் யாரும் தேடாமல் இருப்பார்கள்.
மீண்டும் கண்டது சந்தோசம்.

இப்ப பரவாயில்லை அண்ணா. அதுவும் நல்ல ஐடியா தான். ஓரிரு கிழமை இருக்கமாட்டோம் என்று போட்டுவிட்டால் எல்லாருக்கும் தெரியும். கவலை படவோ , தேடவோ மாட்டார்கள். நன்றி. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

       எனக்கு சிறு வயதிலிருந்தே சம்பல் பைத்தியம்.3 பிள்ளைகளும் அதே மாதிரி.இப்போது சம்பலுக்கு தடை.அந்த தடையை உடைக்க ஏதாவது வழி இருக்கா என்று தேடுகிறேன்.
      குழல்புட்டு என்றால் தேங்காய் பூவுக்கு பதிலாக கரட்டை சுரண்டி போடுப்படும்.
சிறு வயதில் முட்டுக்காய் தின்னாத நாளே இருக்காது.
        அதே மாதிரி வீட்டு குசினி விறாந்தையில் எந்தக் காலமும் வாழைக்குலை தூங்கும்.
இப்ப வாழைப்பழம் சீனி என்று தடை.
       தடை போடுவதாலோ என்னவோ எனக்கோ கெடு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

மிகவும் நன்றி குமாரசாமி அண்ணா. எனக்கும் எல்லோரையும் மீண்டும் சந்தித்ததில் நல்ல சந்தோசம். ஈழப்பிரியன் அண்ணா நல்ல சம்பல், சொதி , தேங்காய் எண்ணெயில் பொறித்த பொரியலுகள் விரைவில் சாப்பிட தொடங்கலாம். 

1 hour ago, ஈழப்பிரியன் said:

இது என்ன இப்பிடி முட்டுக்கட்டையா கிடக்கு ? பொறுங்க வாறன். கெதியா இது எல்லாம் சாப்பிடுகிறமாதிரி  ஆதாரத்துடன் பதிவை போடுகிறேன். இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தால் கொஞ்சம் வெள்ளன போட்டிருப்பன் . நியூயோர்க் போய்விட்டர்களா ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள  நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

நில்மினியை... மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. 
உங்களுக்கு வேறு வேலைப் பளுக்கள் வந்ததால்... இங்கு வரவில்லை என நினைத்தேன்.
அம்மாவுக்கு சுகமில்லாமல் வந்தது, என்று எதிர் பார்க்க வில்லை.
அவர், குணம் அடைந்தது சந்தோசம். அவரை விசாரித்ததாக... சொல்லுங்கள். :)

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

மீண்டும் கண்டதில் சந்தோசம்; உங்கள் அம்மா நலமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏

5 hours ago, குமாரசாமி said:

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

அந்தளவுக்கு நொந்து போய்விட்டாரா?  😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

மிகவும் நன்றி குமாரசாமி அண்ணா. எனக்கும் எல்லோரையும் மீண்டும் சந்தித்ததில் நல்ல சந்தோசம். ஈழப்பிரியன் அண்ணா நல்ல சம்பல், சொதி , தேங்காய் எண்ணெயில் பொறித்த பொரியலுகள் விரைவில் சாப்பிட தொடங்கலாம். 

ஆகா நல்லசேதி வரப்போகுது நல்லசேதி வரப்போகுது.
ஈழப்பிரியனுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக் கொடுங்கம்மா.நில்மினி அம்மா.

1 hour ago, nilmini said:

நியூயோர்க் போய்விட்டர்களா ?

இல்லையே இன்னும் கலிபோர்ணியா தான்.இரண்டு தடவை போய்வர போட்ட ரிக்கற் மாற்றிமாற்றி இப்ப அடுத்த மாதம் 3திகதி போய் 18 வாற மாதிரி ஒரு ரிக்கற் போட்டிருக்கு.
ஆர்ப்பாட்டங்களால கொரோனா கூடப் போகுது என்கிறார்கள்.நிலமையைப் பார்த்தே போவேன்.

32 minutes ago, உடையார் said:

அந்தளவுக்கு நொந்து போய்விட்டாரா?  😀

நொந்து நுhடுல்சா போனன் உடையார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆகா நல்லசேதி வரப்போகுது நல்லசேதி வரப்போகுது.
ஈழப்பிரியனுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக் கொடுங்கம்மா.நில்மினி அம்மா.

இல்லையே இன்னும் கலிபோர்ணியா தான்.இரண்டு தடவை போய்வர போட்ட ரிக்கற் மாற்றிமாற்றி இப்ப அடுத்த மாதம் 3திகதி போய் 18 வாற மாதிரி ஒரு ரிக்கற் போட்டிருக்கு.
ஆர்ப்பாட்டங்களால கொரோனா கூடப் போகுது என்கிறார்கள்.நிலமையைப் பார்த்தே போவேன்.

நொந்து நுhடுல்சா போனன் உடையார்.

அன்பு காட்டுப்பாடுகளை மீறுவது கடினம். கவலை வேண்டாம் ஈழப்பிரியன், நில்மினி நல்லதொரு தீர்வுடன் வருவார், ஆதாரங்களுடன்.

இவ்வளவு நாளும் தடை செய்ததிற்கு நட்ட ஈடா சுவை சுவையாக  விதம் விதமாக நீங்கள் கேட்பது எல்லாம் சமைக்க சொல்லுங்கள்😀

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

       எனக்கு சிறு வயதிலிருந்தே சம்பல் பைத்தியம்.3 பிள்ளைகளும் அதே மாதிரி.இப்போது சம்பலுக்கு தடை.அந்த தடையை உடைக்க ஏதாவது வழி இருக்கா என்று தேடுகிறேன்.
      குழல்புட்டு என்றால் தேங்காய் பூவுக்கு பதிலாக கரட்டை சுரண்டி போடுப்படும்.
சிறு வயதில் முட்டுக்காய் தின்னாத நாளே இருக்காது.
        அதே மாதிரி வீட்டு குசினி விறாந்தையில் எந்தக் காலமும் வாழைக்குலை தூங்கும்.
இப்ப வாழைப்பழம் சீனி என்று தடை.
       தடை போடுவதாலோ என்னவோ எனக்கோ கெடு.

நான் விவசாய் குடும்பத்திலை பிறந்து வளர்ந்தவன்.தென்னை,பனை எல்லாம் எனக்கு பரம்பரை சொத்து. அப்பிடியிருக்கேக்கை நானும் எப்பிடியிருந்திருப்பன் எண்டு யோசிச்சு பாருங்கோ.....
நான் முட்டுக்காய் தேங்காய்ப்பூ போட்டு அவிச்ச புட்டை மிஸ் பண்ணுறன்.
நாங்கள் சாப்பிட்டு வளர்ந்தமாதிரி இப்ப அங்கை இருக்கிற இளம் சமுதாயம் ஒண்டையும் அனுபவிக்காது எண்டு நினைக்கிறன். ஏனெண்டால் அங்கையும் கம்பேக்கர்,பிட்சா  மோகம் எல்லாம் கெடுத்துப்போட்டுது.  
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 00:46, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி நீண்டகால குழப்பம் உங்கள் மூலமாகவாவது தெளிவடையலாம் என எதிர்பார்க்கிறேன்.

தேங்காய்
தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டையும் பல டாக்ரர்மாரே குளப்பியடிக்கிறார்கள்.
இதன் நன்மை தீமை பற்றி ஆறுதலாக ஆராந்து ஒரு பதிவை தாருங்கள்
மிகவும் நன்றி.

மிகவும் பிந்திய பதிலுக்கு  மன்னிக்கவும் ஈழப்பிரியன்  அண்ணா 

தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை  கூட்டும்  Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை   தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil,  HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும்  என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat  உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும்.

முட்டையில் மிகக்குறைந்த saturated fat  தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin  போன்ற நோயெதிர்ப்பு  காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை)

கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல்  உடலில் எரிந்து விடும்  என்று  ஆய்வுகள் கூறுகின்றன.  இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Pacific islanders,  60விகிதத்துக்கும்  அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது.

முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை  பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற  பிரச்சனைகள்  மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான  நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் )

தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil  மற்ற எண்ணெய்களிலும்  ஒரு வித்தியாசமான fattyacid  ஆல்  ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது.

இந்த ஆதாரங்களை  human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம்  போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு  நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது.

எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய்  மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால்  உண்மை விளங்கி விடும்)

நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை

Edited by nilmini
 • Thanks 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nilmini said:

நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை

பெரியதொரு விளக்கம் தந்திருக்கிறீர்கள்.🐹🙏🙏🙏
மிகவும் நன்றி.இரண்டு மூன்று தடவை வாசித்தால்த் தான் கொஞ்சமென்றாலும் விளங்கும்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.

அடுத்து லைனில் நிற்பவர் நீங்கள் தான்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2020 at 22:11, தமிழ் சிறி said:

நில்மினியை... மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. 
உங்களுக்கு வேறு வேலைப் பளுக்கள் வந்ததால்... இங்கு வரவில்லை என நினைத்தேன்.
அம்மாவுக்கு சுகமில்லாமல் வந்தது, என்று எதிர் பார்க்க வில்லை.
அவர், குணம் அடைந்தது சந்தோசம். அவரை விசாரித்ததாக... சொல்லுங்கள். :)

எப்படி சுகம் சிறி. அம்மாவிடம் நீர் சுகம் விசாரித்ததாக சொன்னேன். கேட்டது சந்தோசம் என்று  சொன்னா . உமக்கும் குடும்பத்துக்கும் தனது அன்பை தெரிவிப்பதாகவும் சொன்னா. உமது அம்மா அப்பாவை பற்றி அடிக்கடி கதைப்பா . மிகவும் நல்ல மனிதர்கள். 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

எப்படி சுகம் சிறி. அம்மாவிடம் நீர் சுகம் விசாரித்ததாக சொன்னேன். கேட்டது சந்தோசம் என்று  சொன்னா . உமக்கும் குடும்பத்துக்கும் தனது அன்பை தெரிவிப்பதாகவும் சொன்னா. உமது அம்மா அப்பாவை பற்றி அடிக்கடி கதைப்பா . மிகவும் நல்ல மனிதர்கள். 

நாங்களும் தானே சுகம் விசாரித்தனாங்கள் சொல்லல்லையோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்களும் தானே சுகம் விசாரித்தனாங்கள் சொல்லல்லையோ?

சொன்னேன் சொன்னேன். குறிப்பிட மறந்துவிட்டேன். வயது போன காலத்தில் இப்படி யாரும் சுகம்  விசாரித்ததாக சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். 

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.