Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம்.

அந்த வகையில் ஈழத்தின் வரலாற்றை பின் புலமாக வைத்து நானும் ஒரு உரை நடை கவிதை எழுதலாம் எனவிழைகிறேன்.

கவனிக்க - இது வெறும் புனை கதை. இதில் வரலாற்றின் பாத்திரங்கள் வருவர், போவர் ஆனால் இது வரலாறுஇல்லை. சொல்லப்போனால் இதில் இப்போ இலங்கையில் வரலாறு என ஏற்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் பலதும், 180 பாகை நேரெதிர் திசையில் சித்தரிக்கப் படுகிறன.

இந்த முயற்சிக்கு கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி, அவதார புருசன், ராமானுஜகாவியம் என்பனவே இன்ஸ்பிரேசன்.

ஆனால் அந்த தரத்தில் எதிர்பாராதீர்கள்

உயர, உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது 😂.

நன்றி,

கோஷான் சே

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

என் கதை

I

இது என் கதை

வடக்கே வங்கமும்

தெற்கே சிங்கமும் இருக்க

இடையே இருந்தவர் -தம் கதை.

 

இது - நான் சொல்ல மறந்த கதை அல்ல

நீங்கள் கேட்க மறந்த கதை

இன்றும் கேட்க மறுக்கும் கதை.

 

ஆண்டுகள் ஆயிரமாய் ஆண்டவர்

மாண்ட கதை

மாண்டவர் மீண்ட கதை

மண் மீட்ட கதை

மீட்டவர் மீண்டும் தோற்ற கதை.

 

என் மனத்தின் கதை அல்ல -இது என் இனத்தின் கதை

ஏதிலிகளாய் ஆகிவிட்ட ஓர் சனத்தின் கதை

அவர் நெஞ்சத்து வாழும் சினத்தின் கதை.

 

மேகம் கனத்து வரும் மழை

என் மனம் கனத்து வருகிறது இக்கதை.

கேளுங்கள் மக்காள் என் கதையை

என் இனத்திற்கு நடந்த வதையை.

II

ஈழம் - எம்மை சூழ இருந்தது நீலம்

கல் தோன்றி, பின் மண் தோன்றி தாந்தோன்றியது தமிழர்கள் காலம்.

நீரிணையின் இரு கரையிலும்

நீட்டிப் படுத்தாள் தமிழன்னை

ஊட்டி வளர்த்தாள் ஊர் பிள்ளைகள் ஒன்பதை

தானே வளர்ந்தது தமிழ்ப் பிள்ளை.

 

முலை ஒன்றை தமிழ் அகத்திலும்

மற்றொன்றை என் நிலத்திலும் தந்தாள் தாய்

எம் புறத்தில் அரணாய் அமைந்தது தமிழகம்

நீர் பிரித்ததை மொழி-வேர் சேர்த்தது.

 

இராவணக் குடிகள் என்றும் நாகர் என்றும்

இயக்கர் என்றும் வேடர் என்றும்

இங்கே இருந்தவர்கள் - நம்மவர்கள்

எம் முன்னவர்கள் - இத்தேசத்தின் மன்னவர்கள்.

 

இமயம் முதல் கடாரம் வரை பரந்து பட்ட தமிழ்

ஈழத்திலும் சிறந்துபட்டிருந்தது

அதன் ஆளுமை நிறைந்து பட்டிருந்தது.

 

இவ்வாறு தமிழ் தழைக்க

இனம் பிழைக்க

காட்டாறு போல கரைபுரண்டு ஓடியது

எங்கள் கற்கால வரலாறு.

 

பூமிப்பந்து சுழன்றது

புதுமைகள் பல விழைந்தது

மன்னவராயிரம் வந்தனர் -தமிழ்

மக்கள் பல்லாயிரம் ஆயினர்.

 

தொன்மையும் புதுமையும் சேர

செம்மையாய் வளர்ந்ததது

ஈழத்தில் செந்தமிழ்.

 

சோழர் எமக்குச்சொந்தமென்றாகினர்

பாண்டியர் எமக்கு பந்தமென்றாகினர்

சேரர் எமக்குச்சேர்குடியாகினர்

பல்லவர் எமக்கு வல்லமை சேர்த்தனர்.

 

தெய்வேந்திர முனையில் தமிழ் ஆர்பரித்தது

பருத்தித்துறையில் அதே தமிழ் அரவணைத்தது.

தெற்கே காலி முதல்

வடக்கே விரிந்த ஆழி வரை

தமிழ் இங்கே ஆட்சி செய்தது

ஆனால், காலம் ஒரு சூழ்சி செய்தது.

 

III

தொடரும்.....🔜

 

 

 

 

 

 

 • Like 18
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம்.

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.

மிகுதிக் கவிதைக்கும் ஆவலாக உள்ளோம்.

தொடருங்கள்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாசமுள்ள கோசான்-சே 

பகருகின்றதோர்  வரலாறிது 

நேசமுடன் வாசித்து தேச 

நிலவரத்தை கண்டு கொள்வீர்......!   😁

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துரைத்த ஈழப்பிரியன், சுவி அண்ணாக்களுக்கும், பச்சை தந்த சுவைப்பிரியனுக்கும் நன்றி.

➗➗➗➗➗➗➗➗➗➗➗➗➗➗

 

Edited by goshan_che
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

III

ஈழத்தின் மேற்குக்கரையில்

தாமிரபரணி ஆற்றுக்கரையில்

இருந்தது ஒரு துறைமுகம்

கல்யாணி என்று அதன் பெயர் வரும்.

 

அந்தத் துறையில்

தமிழர்கள் - இறையில்

ஓர் அந்தி நேரம் வந்துகுதித்தனர்

மந்திச் சாயலில் ஒரு மக்கட் கூட்டம்.

 

அவர்கள் லாடா நாட்டில் இருந்து விரட்டப்பட்டவர்கள்

கூடாத செய்கையால் நாடோடிகளாக துரத்தப்பட்டவர்கள்.

அவர்கள் ஏழுபது பத்துப்பேர் மொத்தமாய் இருந்தார்கள், பெரும் சத்தமாய் கதைத்தர்கள்.

அவர்களின் தலைவன் விசயன்

உண்மையில் அவன் ஒரு விசமன்.

லாடாவில் - அவன் முடிக்குரியவன்

பிறப்பால் பெரும் குடிக்குரியவன்.

ஆனாலும் பெயரில் ஜெயத்தையும்

செயலில் விசத்தையும் காட்டினான் விசயன்.

 

சிங்கத்தின் பேரன் - அவன் சரித்திரம்

ஆனாலும் அவனில் நிலைத்தது தரித்திரம்.

 

கூடாச் செயலால் குமைந்து போய்

லாடா அவனை போடா எனத் துரத்தியது

காலம் அவனை ஈழத்தின்பால் திருப்பியது.

 

படகை காற்று திருப்பிப்போட்டது

வரலாற்றை காலம் புரட்டிப்போட்டது.

IV

தொடரும்

Edited by goshan_che
 • Like 7
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேல கிடந்தது
இப்ப கீழ கிடக்குது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

மேல கிடந்தது
இப்ப கீழ கிடக்குது.

ஓமையா - ஐபோன் நோட்ல எழுதி வெட்டி ஒட்டினா, அங்கையிம் இங்கையுமா தொங்குது. formatting ல திக்குமுக்காடி போனேன். பின் கணனி போய் வெட்டி திருத்தினேன்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 8:28 PM, goshan_che said:

மன்னவராயிரம் வந்தனர் -தமிழ்

மக்கள் பல்லாயிரம் ஆயினர்.

தமிழர்கள் பல்லாயிரமாக பெருக சிங்களவர்கள் பல இலட்சமாக பெருகியிருப்பார்களோ!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மேல கிடந்தது
இப்ப கீழ கிடக்குது.

நம்ம வரலாறும் அப்படித்தானே ஆகி விட்டது பிரியன் .......!  🤔

Link to post
Share on other sites

ஆகா எமக்குப் போட்டியாக இன்னொரு கவிஞரா யாழில்.."?????

நன்றாகவே இருக்கு.தொடருங்கள் கோசான்.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோசான்...உங்களிடமிருந்து, இப்பிடி அழகான கவிதை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மிக  நன்றாக உள்ளது... தொடருங்கள். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 8:39 PM, கிருபன் said:

தமிழர்கள் பல்லாயிரமாக பெருக சிங்களவர்கள் பல இலட்சமாக பெருகியிருப்பார்களோ!

இந்த கணக்கு, சிங்களவர் என்றொரு இனம் உருவாக முன்னம், ஈழத்தில் இருந்த தமிழர்களின் எண்ணிகை. 

மன்னவராயிரம் வந்தனர். தமிழ் மக்கள் பல்நூறாயிரம் ஆயினர் 

என வந்திருந்தால் நல்லாய் இருந்திருக்குமோ?

ஆனாலும் ஆயிரம் மன்னவர் என்பது மிகைபடுத்தல்தான். Poetic license 😂

On 3/9/2020 at 9:10 PM, பகலவன் said:

நன்றாக இருக்கிறது. தொடருங்கள் கோசான்.

நன்றி

உண்மையில் நீங்கள் பகலவன் தான்.

கண்டதில் ஒரு இனம்புரியாத சந்தோசம்.

 

On 3/9/2020 at 9:39 PM, suvy said:

நம்ம வரலாறும் அப்படித்தானே ஆகி விட்டது பிரியன் .......!  🤔

ச்சா.. டைமிங் அருமை அண்ணா

 

On 3/9/2020 at 10:06 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா எமக்குப் போட்டியாக இன்னொரு கவிஞரா யாழில்.."?????

நன்றாகவே இருக்கு.தொடருங்கள் கோசான்.

 

 

நன்றி. உங்கள் மொழி வளத்துக்கு கிட்டவும் இல்லை. 

 

On 3/9/2020 at 10:36 PM, தமிழ் சிறி said:

கோசான்...உங்களிடமிருந்து, இப்பிடி அழகான கவிதை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மிக  நன்றாக உள்ளது... தொடருங்கள். :)

நானே எதிர்பார்க்கவில்லை 😂

காதல் தண்டபாணிக்கு சந்தியா மகளாக வந்த மாதிரி 😂

நன்றி அண்ணா

11 hours ago, Kavallur Kanmani said:

நன்றாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.

நன்றி

பச்சை குத்திய, தமிழினி அக்கா, ரதி அக்காச்சி, நாதமுனி, நுணா மற்றும் ஏனையோருக்கும் நன்றி.

Edited by goshan_che
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IV

அது ஏசு பிறப்பதற்கு அரை நூற்றாண்டு முன்பு

தமிழன் நாகரீகத்தில் கரை கண்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு.

 

கிரேக்க நாகரீகத்துக்கு அப்போதுதான் பல் முளைத்திருந்தது

ரோம ராஜ்ஜியம் வரப்போகும் இடத்தில் வெறும் புல் முளைத்திருந்தது.

 

சிந்து வெளியில் முந்து சிவனை கொண்டு ஆடிய மூத்த குடி

வந்தேறி வடக்கர்களால் வஞ்சிக்கப்பட்டு விந்தியத்துக்கு கீழே ஏற்றியது தன் கொடி. 

ஒட்டகம் கூடாரத்தை நிறைத்தது உரிமைகாரப் புலி ஊரை விட்டகன்றது. 

 

வீரத்தால் வீழ்த்த முடியாத வேங்கைகளை, வேதம் வீழ்தியது, வர்ண பேதம் புகட்டியது. 

 

ஒரு கண்டத்தை ஆள வேண்டிய புலி ஒரு முக்கோணத்துக்குள் முடக்கப்பட்டது. ஆனாலும் நெஞ்சில் வெஞ்சினம் வேக இருந்தது.

 

ஈழம் அப்போ ஒரு தீவாய் இருந்தது ஆனால் முன்பொரு யுகம் அது தமிழகத்துடன் இணைந்து வெகு தோதாய் இருந்தது.

 

பனிக்காலத்தின் முடிவில்  பனி உருகி ஓடியது. கடல், தமிழன் மண்ணை மூடியது.

ஈழம் தன் நிலத்தொடர்பிழந்தது ஆனாலும் அறுந்த தொப்புள் கொடியை பாக்கு-நீரிணைத்தது.

 

நீரிணையின் இருபுறமும் தாமிரபரணி ஓடியது அதன் அலைகள் தமிழ் சந்தங்கள் பாடியது.

 

ஈழத்து தாமிரபரணியின் பெயரில் தாமிரமிருந்து ஆனால் அது பாய்ந்த வயல்களிலோ பொன் விளைந்தது.

 

உலகத்துக்கு கட்டுமரத்தை கற்றுக் கொடுத்தவன் கல்யாணியில் இருந்து கரை நீங்கினான். திரை கடெலுங்கும் தன் கை ஓங்கினான். 

 

தாமிரபரணியின் கரையில் ரத்தினங்களுக்கு மத்தியில் கூழாங்கற்களும் கிடந்தன. 

கல்யாணித் துறையில் நிறைக் கற்கள் தங்கத்தில் ஜொலித்தன.

 

ஈழம் வெகு செழிப்பாய் இருந்தது ஆனால் விழிப்பை மறந்தது.

 

ஒற்றைத் தீவில் மூன்று குடிகளே இருந்தன ஆனாலும் ஒன்றை ஒன்று இடித்தன.

மேற்கே இயக்கர்கள் இறையாண்மை கொண்டார்கள்.

வடக்கே நாகர்கள் நாட்டாண்மை ஆனார்கள்.

விந்தினை நாட்டில் வேடர்கள் வேந்தர்கள் ஆனார்கள்.

 

இயக்க நாடு எழில் மிக உற்றது இறைவன் உறையும் பொழில் அது நிகர்த்தது.

சிரசு -வத்தை - இயக்கதேசத்து தலைநகர். ஈழத்தில் ஒப்பீடே இல்லா முதல் நகர்.

இயக்க நாடு ஒரு தாயாதி சமூகமாக இருந்தது. ஒரு தயவுயாசியால் வரப்போகும் ஆபத்தை அறியாத சுகவாசிக் கூட்டமாய் இருந்ததது.

அன்று - போதி மரத்து ஞானகுருவன் ஞாலம் நீங்கிய நாள். ஆசியஜோதி அடங்கிய நாள்.

அந்தத் துர்நாளில், பின்னாளில் எழப்போகும் பிரளயங்களுக்கெல்லாம் முன்நாண் இழுத்த படி, கல்யாணிக் கரையில் கால் பதித்தான் விசயன்.

 

V

தொடரும் 🔜

Edited by goshan_che
 • Like 10
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகாவம்ச வரலாறு புனைகதை என்பதால் மாற்று வரலாற்றை கோஷான் சே புனையவேண்டும்!!

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 8:55 PM, கிருபன் said:

மகாவம்ச வரலாறு புனைகதை என்பதால் மாற்று வரலாற்றை கோஷான் சே புனையவேண்டும்!!

உத நாங்கள் ஒரு 300 வருடத்துக்கு முன்பாவது செஞ்சிருக்கோணும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

V

விசயனின் மரக்கலம் தரை தொட்டது கல்யாணியின் நிறை வளம் அவன் மனம் சுட்டது.

கடற்பயணத்தின் கோரம் அவர்களின் கலத்தில் மட்டுமல்ல, முகத்திலும் தெரிந்தது.

ஓட்டை விழுந்திருந்தது அவர்கள் வள்ளத்தில். முகத்தில் புதைந்திருந்தன கண்கள் - தோல் பள்ளத்தில்.

பாய்மரக் கயிறு இழுத்து, இழுத்து -இற்றுப் போயிருந்தது. 

அவர்கள் கைகளோ பழுத்து -ரேகை அற்றுப் போயிருந்தது.

அவர்களுக்கு பசி பழகிப்போயிருந்தது. 

அதானால் பத்தும் விலகிப் போயிருந்தது.

 

கல்யாணியின் மாந்தர்கள் அவர்களை விசித்திரமாய் பார்த்தார்கள். ஆனாலும் பசித்திருக்க ஒண்ணாமல் பாத்திரம் இட்டார்கள்.

இரப்புணிகளின் இலையில், சோற்றுடன் வெண்ணை விட்டார்கள்.

வரப்போகும் ஆபத்தை அறியாமல், தம் தலையில் மண்ணை இட்டார்கள்.

ஈகை மிகுந்த இயக்கர்கள் பாவம் பார்த்தார்கள்.

பாம்புக்கு பாலை வார்த்தார்கள்.

 

அறு சுவை பந்தி, நிறைந்தது எழுநூறு தொந்தி.

விசயனின் உண்டிச் சுருக்கம் தளர்ந்தது. அவன் நெஞ்சில் கருக்கல் வளர்ந்தது.

இறங்கிய இரவே, தான் இரந்த நாட்டுக்கு இரெண்டகம் செய்யத்துணிந்தான்.

தக்க நேரம் வரும் வரை பணிந்தான்.

ஈழத்தில் விசயன் அந்நியன் ஆனாலும் புத்தியில் அவன் வெகு நுண்ணியன்.

தஞ்சமடைந்த நாட்டில் பஞ்சம் பிழைப்பது வழமை.

ஆனால் வஞ்சம் நினைத்தது அவன் நெஞ்சத்து கயமை.

இயக்க நாட்டு வளமை அவன் நெஞ்சில் பொருதியது.

இயக்கச்சிகள் இளமை அவன் கண்ணை உறுத்தியது.

இரெண்டையும் கவரத் திட்டம் போட்டான் ஈற்றில் உறக்கம் வர ஒரு தூக்கம் போட்டான்.

 

அந்த இரவு அரவமின்றிக் கலைந்தது. அடுத்த நாள் ஈழத்தில் இழவு காலம் பிறந்தது.

VI

தொடரும்

பச்சை புள்ளிகள் இட்ட நந்தன், உடையார், காவலூர் கண்மணி அக்கா, மேலும் ஒரு ஒவ்வொரு பாகத்திலும் பச்சை குத்திய அனைவருக்கும் கருத்துரைத்த கிருபன் ஜியுக்கும் நன்றிகள்.

பிகு: வாழ்த்தை மட்டும் இன்றி குறைகளையும் சொல்லுங்கோ.

Edited by goshan_che
 • Like 5
Link to post
Share on other sites

நன்றாக எழுதுகிறீர்கள் கோசான். தெரிந்த விடயம்தான் என்றாலும் உங்கள் எழுத்து இரசிக்கும்படி உள்ளது. தொடருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் குறை இன்னும் தெரியவில்லை.குறை கண்டு பிடிப்பதானால் நீங்கள் படித்த பாடசாலையில் நான் பேராசிரியராய் இருந்திருக்க வேண்டும் கோசான்-சே.....!  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக எழுதுகிறீர்கள் கோசான். தெரிந்த விடயம்தான் என்றாலும் உங்கள் எழுத்து இரசிக்கும்படி உள்ளது. தொடருங்கள்.

நன்றி அன்ரி.

தெரிந்த விசயத்தை எழுதுவதும் படிப்பதும் இலகு. மேலே நான் சொன்ன வாலியின் உதாரணங்களில் பாண்டவர் பூமி, அவதாரபுருசன் (ராமாயணம்) படிக்க இலகுவாக இருந்தது ஆனால் இராமானுஜகாவியம் விடயம் தெரியாததாலும் வைணவ சொல்லாடல்கள் புரியததாலும் கஸ்டமாய் இருந்தது.

2 hours ago, suvy said:

இதில் குறை இன்னும் தெரியவில்லை.குறை கண்டு பிடிப்பதானால் நீங்கள் படித்த பாடசாலையில் நான் பேராசிரியராய் இருந்திருக்க வேண்டும் கோசான்-சே.....!  👍

நன்றி அண்ணா,

உண்மைதான் நான் இன்னும் படித்துக் கொண்டிருக்கும் பாடசாலையில் நீங்கள் பேராசிரியர் இல்லை அண்ணா - துணை வேந்தர்!

இந்த பாகம் எழுதும் போது வார்த்தை பஞ்சம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது போல ஒரு உணர்வு. “இட்டார்கள்” என்ற சொல் இரெண்டு முறை வந்தது.

ஆங்கிலத்தில் rhyming dictionary இருக்கிறது. ஒரு சொல்லை எழுதிவிட்டு அதற்கு சந்தம் சேரும் சொல்லை தேடி எழுதலாம். எல்லா புத்தக கடையிலும் கிடைக்கும்.

தமிழில் இப்படி உள்ளதா? தேடியும் கிடைக்கவில்லை எனக்கு.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நல்லாருக்கு தலை.. ஒரு லைக் பட்டினகூட அமத்த அனுமதி தாறாங்கள் இல்லை.. மிச்சம் எப்ப வரும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 9:29 PM, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லாருக்கு தலை.. ஒரு லைக் பட்டினகூட அமத்த அனுமதி தாறாங்கள் இல்லை.. மிச்சம் எப்ப வரும்?

நன்றி ஓணாண்டியரே. விரைவில் வரும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உலகில் வாக்களிப்பது சட்டப் படி விதிக்கப் பட்ட கடமை என்றில்லாத எல்லா நாடுகளிலும் 65- 70 % பேர் வாக்களிப்பது வழமைக்கு மாறானது அல்ல - இது ஒப்பீட்டளவில் நல்ல வாக்களிப்பு வீதமும் கூட! இந்த வாக்களிப்பு வீதத்தால் நீங்கள் விரும்பும் கட்சி வெல்லவில்லையென்பது சப்பைக் கட்டு. தமிழக மக்கள் நான் அறிந்த வரையில் ஸ்திர நிலையை விரும்புபவர்கள். இங்கே சில சமயங்களில் காட்டப் படும் விம்பம் போல  சினிமாப் பைத்தியங்களோ, முன் யோசனையற்ற மடையர்களோ அல்ல அவர்கள்! நீங்கள் விரும்பும் கட்சி வெல்ல முடியாமைக்கு மிக முக்கிய காரணம் தூய தமிழ் வாதம் என்ற போர்வையில் பரப்பப் படும் தெலுங்கு உட்பட்ட ஏனைய வம்சாவழியினருக்கெதிரான நிலைப்பாடு. இந்தத் தேவையில்லாத தெலுங்கு/கன்னட/மலையாள எதிர்ப்பு ஆணியை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் கட்சி  தமிழ் நாட்டில் தேர்தலில் வெல்ல முடியாது. அடுத்த 100 ஆண்டுகளில் சில வேளை சாத்தியமாகலாம்! (வந்தேறி என்ற trigger word இனால் உணர்ச்சி மயப்பட்டு திரியை பிரான்சிலிருந்து தமிழகத்திற்குத் திரியைத் திருப்பியது யார் என்று மேலே சென்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!😎)  
  • அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!   👍
  • தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்... டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்... நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்... இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி.........!   💐
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.