Jump to content

இந்திய பங்குச் சந்தைகள் 7 மாதங்கள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி : கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தைகள் பாதிப்பு


Recommended Posts

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து 36,071 ஆக வர்த்தகம் தொடங்கியுள்ளது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி 7 மாதத்தில் இல்லாத அளவு பெரும் சரிவை கொண்டுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 425 புள்ளிகள் சரிந்து 10,564 ஆக வர்த்தகம் ஆகிவருகிறது.  டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன.  

அதே போல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்தது. ஜப்பானில் நிக்கி 6% க்கும் மேலாக சரிவடைந்தது.ஹாங்காங்கில் 3.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனிடையே ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய யெஸ் வங்கியின் பங்குகள் பங்குச் சந்தை 15% உயர்வை கண்டுள்ளது. யெஸ் வங்கியில் முதலீடு செய்யவுள்ளதாக எஸ்பிஐ அறிவித்த நிலையில், பங்குகள் இவ்வாறு உயர்வை கண்டுள்ளது.இதனிடையே 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவை கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் 7 மாதங்கள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.  இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது.

மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாக கருதப்படுகிறது.  கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரசால் ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதாரம் 20,000 கோடி டாலருக்கு மேல் இழப்பை சந்திக்கும் என்ற புள்ளி விவரங்கள் வெளியானது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570081

 

கொழும்பு பங்கு சந்தையும் சரிந்துள்ளது : https://www.cse.lk/home/market

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.