Sign in to follow this  
ampanai

இந்திய பங்குச் சந்தைகள் 7 மாதங்கள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி : கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தைகள் பாதிப்பு

Recommended Posts

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து 36,071 ஆக வர்த்தகம் தொடங்கியுள்ளது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி 7 மாதத்தில் இல்லாத அளவு பெரும் சரிவை கொண்டுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 425 புள்ளிகள் சரிந்து 10,564 ஆக வர்த்தகம் ஆகிவருகிறது.  டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன.  

அதே போல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்தது. ஜப்பானில் நிக்கி 6% க்கும் மேலாக சரிவடைந்தது.ஹாங்காங்கில் 3.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனிடையே ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய யெஸ் வங்கியின் பங்குகள் பங்குச் சந்தை 15% உயர்வை கண்டுள்ளது. யெஸ் வங்கியில் முதலீடு செய்யவுள்ளதாக எஸ்பிஐ அறிவித்த நிலையில், பங்குகள் இவ்வாறு உயர்வை கண்டுள்ளது.இதனிடையே 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவை கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் 7 மாதங்கள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.  இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது.

மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாக கருதப்படுகிறது.  கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரசால் ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதாரம் 20,000 கோடி டாலருக்கு மேல் இழப்பை சந்திக்கும் என்ற புள்ளி விவரங்கள் வெளியானது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570081

 

கொழும்பு பங்கு சந்தையும் சரிந்துள்ளது : https://www.cse.lk/home/market

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. விகடனின் இந்த ஈவு இரக்கமற்ற செயலைக் கண்டித்து பல இலக்கியவாதிகள் தமது விருதை திருப்பியளித்து வருகின்றனர். அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கியவாதியான சோபாசக்தி தனக்கு விகடன் அளித்த 3 விருதுகளையும் திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சோபாசக்கி தமது விருதுகளை திருப்பி அளித்தது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது. அனைத்து தமிழ் மக்களும் விகடன் குழுமத்தை கண்டிப்பதோடு வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம்.           155Nad Esan, Eelapriyan Balan மற்றும் 153 பேர்   42 கருத்துக்கள் 24 பகிர்வுகள் விரும்பு   கருத்துத் தெரிவி பகிர்  
    • இப்படியான போர்க்குற்றவாளிகளை கொண்ட இராணுவத்தை, ஐ.நா. அமைதி படையில் வேறு இணைத்து 'மதிப்பளிக்கிறார்கள்' 😡
    • இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை.  அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை.  பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை.  இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  
    • •எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள். அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள். அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு. குறிப்பு - இன்று யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் ஆகும். (31.05.1981)