Jump to content

Recommended Posts

முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. 

‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்!
 
இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவும் எண்ணவில்லை.  ஒருவேளை இதுதான் பிறவிப் பயன் என்பதா!
 
unmade-bed.jpg
 
வாலிபத்தின் காரணமாக விளைந்த சிந்தனை தடுமாற்றத்தின் வினைதான் இத்தொற்று. இருவருக்கும் இடையேயிருந்த இறுக்கத்தின் காரணமாக மனதில் மறைந்திருந்த இச்சை இரகசியமாய் எட்டிப் பார்த்தது, தொடக்கத்தில் இருந்த தயக்கம் சட்டென்று விலக, வேட்கையும் விரகமும் ஒருசேர இணைந்து என்னை முன்னிருத்திச் சென்றது. தேகச் சூட்டில் எனை மறைந்து இன்பத்தில் இலயித்திருந்தது நினைவில் உள்ளது.
 
இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.
 
நடந்து முடிந்ததை இன்றெண்ணிப் பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை. தீவினையின் முடிவில் நன்மை விளைவதில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். விலகிச் செல்ல துணிந்த பின் திரும்பத் திரும்ப எண்ணுவதில் பலனில்லை. என்னுள்ளிருக்கும் இந்தக் குற்றவுணர்வு என்னுள்ளே மடிந்து அழியட்டும் !!
 
Link to comment
Share on other sites

13 hours ago, அருள்மொழிவர்மன் said:

இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.

இவ்வாறானவை பல சமூகங்களில் மத்தியிலும் உள்ள சமூக பிரச்சனைகள்.  இப்பொழுதெல்லாம், பலரும் வைத்திய பரிசோதனை செய்துதான் திருமணம் செய்கிறார்கள். 

மேலாக, தவறு செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளும்பொழுதே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். மன்னிப்பதால், மறு பாதி தீர்ந்துவிடும். வாழ்க்கை வாழ்வதற்கே !   

Link to comment
Share on other sites

On 3/11/2020 at 1:55 PM, ampanai said:

இவ்வாறானவை பல சமூகங்களில் மத்தியிலும் உள்ள சமூக பிரச்சனைகள்.  இப்பொழுதெல்லாம், பலரும் வைத்திய பரிசோதனை செய்துதான் திருமணம் செய்கிறார்கள். 

மேலாக, தவறு செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளும்பொழுதே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். மன்னிப்பதால், மறு பாதி தீர்ந்துவிடும். வாழ்க்கை வாழ்வதற்கே !   

இருபாலரும் திருமணத்திற்கு முன்பு வைத்திய பரிசோதனை செய்து கொள்வது நடைமுறைக்கு வந்தால் மிக்க நன்று.

வழக்கம் போல கற்பனையை கலந்து எழுதினேன். தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலைமாதரிடம் பெரும் தொற்றை வீட்டுப் பெண்ணிடம் விதைப்பது மிகக் கொடுமையானதுதான்.இப்போது பரவும்  கொரோனாவுக்கும் இது பொருந்தும்.நல்ல பதிவு அருள்மொழிவர்மன்.....!  🤔

Link to comment
Share on other sites

1 hour ago, அருள்மொழிவர்மன் said:

இருபாலரும் திருமணத்திற்கு முன்பு வைத்திய பரிசோதனை செய்து கொள்வது நடைமுறைக்கு வந்தால் மிக்க நன்று.

வழக்கம் போல கற்பனையை கலந்து எழுதினேன். தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்.

கனடாவில், ஒருவருக்கு எச்.ஐ.வி. திரு இருந்து அதை மறைத்து திருமணம் செய்வது குற்றச்செயல்.

திருமணத்திற்கு முன்னராக சுகாதார பரிசோதனை செய்வது என்பது ஆரோக்கியமானது.

சிலர், பரம்பரை வியாதிகளையும் தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.