Sign in to follow this  
ampanai

கொரோனா வைரஸ்; இத்தனை தீவிரமாக வீரியம் பெற்றது ஏன்?

Recommended Posts

கொரோனா என்பது தற்சமயம் உலகில் அதிகம் வருத்தத்துடனும் வலியுடனும் பயத்துடனும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகின்றது. இதற்கு கோவிட்- -19 (civid --19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரும் இட்டுவிட்டது.  

‘Middle East respiratory Disease, Spanish flu’ என ஊர் பெயரிலோ, ‘Swine flu’ என விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரஸை அழைக்கக் கூடாது. ‘பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும் விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரஸுக்குக்கூட இன, மொழி, சாதிய அடையாளம் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும் விலக்கலையும் சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதே இதற்குப் பின்னுள்ள காரணமாகும்.  

கடந்த இரண்டு மாத காலமாக உலகம் மிரண்டு போய் நிற்கிறது. ‘இப்படியான சிக்கல்களை எதிர்காலத்தில் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே எச்சரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஏனெனில் உறக்க நிலையில் இருந்த பக்றீரியா, வைரஸ் பலவும் உசுப்பேறி உலாவரும் காலம் இது. உலகைச் சூடாக்குவதிலும், பனிமலைகளை உருக்கித் தள்ளியதிலும் இவ்வகை நுண்ணுயிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனமும் சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.  

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸினால் ஒட்டுமொத்த சீனாவும் முடங்கிப் போயுள்ளது. இந்த வேளையில், இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கவும் முடியாதுள்ளது. ஏனெனில் டெங்கு காயச்சலுக்கான தாக்கம் கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு வித்தியாசமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முன்னொரு போதும் இல்லாதபடி இக்காய்ச்சலுக்கு பின்னால் தீவிர மூட்டுவலியும் ஏற்படுகின்றன. இது நுண்ணுயிரியின் வீரியத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களின் விளைவு எனக் கருதப்படுகின்றன. அதனால் இவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னெச்சரிக்கையின் அடையாளங்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

குறிப்பாக டெங்கு நோய் உடலில் பரவும் விதம், அதன் விளைவான அறிகுறிகள், மருந்து பொருட்களுக்குக் கட்டுப்படும் விதம் ஆகிய அம்சங்களில் 2018பருவத் தொற்றுக்கும் 2019பருவத் தொற்றுக்கும் இடையில் கணிசமான மாற்றங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.  

அதேநேரம், Multi drug resistant tuberculosis எனும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத காச நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. காச நோய்க்கான மருந்தை நேரடியாக நோயாளருக்கு வழங்கும் (DOTS) திட்டங்கள் அறிமுகமான பின்னரும், காச நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதாகத் தெரியவில்லை.  

மேலும் சாதாரண பூசணத் தொற்றுக்கு பாவிக்கும் எதிர் பூசண நுண்ணுயிரிகள் சமீபமாகப் பலனற்று போவதாக மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் பழைய பூசணங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய வீரியமா? அல்லது அவை எல்லாம் பூசணம் 2.0என புதிய வடிவம் எடுத்துவிட்டனவா?’ என்ற கேள்விகளும் இந்திய மருத்துவ நிபுணர்கள் மத்தியில் ஏழுந்துள்ளன.  

முன்பு எளிதாகக் கையாளப்பட்ட சுவாசத்தொகுதி தொற்று, சிறுநீரக தொற்றுக்கான மருந்துப் பொருட்கள் இப்போது அவ்வளவு எளிதாக நோய் நிலையைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இல்லை. 

இதேவேளை, சாதாரண சிறுநீரக குழாய்கள் தொற்றாக வெளிப்படும் ‘ஈ - கோலை’ என்கிற நுண்ணுயிரி, இப்போது உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் குருதி சிறுதித்தட்டு நோயைக்கூட (T.T.P) ஆங்காங்கே தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது. இவை மாத்திரமல்லாமல், நீரிழிவு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்திவரும் அதேநேரம், நுரையீரலில் ஏற்படும் காசமும் மூச்சுக்குழல் தொற்றும் அசாதாரண நிலையை அடைவது அதிகரித்துள்ளது.  

இந்நிலைகள் குறித்து மருத்துவ உலகம் மிகவும் கவனமாக அணுக வேண்டிய மிக முக்கியமான காலத்தில் உள்ளது. இந்நுண்ணுயிரிகளின் தாக்கம் நெருக்கடிகளை ஏற்படுத்தவும் அவை செயற்படாமல் போகும் நிலை உருவாவதற்கும் மருத்துவ உலகம் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை (அன்டிபயாட்டிக்) ஒழுங்குமுறையாக கையாளாததே பிரதான காரணம் என்கிறனர் மருத்துவ ஆய்வாளர்கள். அதாவது நுளம்பு ஒழிப்புக்கு ஏ.கே-47துப்பாக்கியை எடுத்துச் செல்லும் மனோபாவம் மருத்துவ உலகில் கடந்த 25ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்றது. மருந்து நிறுவனங்கள் புது புது வடிவில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வருடாவருடம் சந்தைக்கு அறிமுகப்படுத்தின. இதன் விளைவாக எதற்கு இலேசான அடிப்படை மருந்துகள்? எடு அணுகுண்டை என்கிற மனோபாவத்தில் மருத்துவர்களும் மருத்துவ நிறுவனங்களும் செயல்பட்டனர்.  

இதனால் தொடக்க நிலை நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் தீவிர நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் நிலை உருவானது. இதன் காரணத்தினால் தான் பல நுண்ணுயிரிகள் பலம் பெற்று மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகும் நிலை அதிகரித்திருக்கின்றது என்பதை மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.  

இவை இவ்வாறிருக்க, உணவுப் பொருட்களுக்கு சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள் தொடக்கம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பல விடயங்களும் இந்நுண்ணுயிர்கள் பலம் பெற பங்களிப்பு செய்து வந்துள்ளன. ஒவ்வொருவரது குடலிலும் கோடிக்கணக்கான பக்றீரியாக்கள், வைரஸ்கள் உள்ளன. அவை சமிபாட்டு பணிகளை மாத்திரம் மேற்கொள்வதாக மருத்துவ உலகம் நம்பி வந்தது. ஆனால் அவை சமிபாட்டுக்கான Probiotics மாத்திரமல்ல, நோயெதிப்பு சக்தி, புத்திசாலித்தனம் என்பன மேம்படவும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும் எனப் பல பணிகளுக்கு மிக அவசியம் என்பது தொடர்பான புரிதல் தற்போது அதிகரித்து வருகிறது. Gut biome -Second genome என பெயரிடப்பட்டு நுட்பமாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த Gut biome கூட்டத்தை சிதைக்கும் வண்ணம் இரசாயனப் பொருட்களை அள்ளித்தெளித்த துரித உணவைச் சாப்பிடுவதும்கூட வைரஸ், பக்றீரியாவை தூண்டி விடலாம்.  

எனினும் மருத்துவ அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பலம் பொருந்திய சீனாவுக்கே இன்று கொரோனா பெரும் சவாலாக உள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வைரஸ் தாக்கம் தீவிரமடைவதற்கு இங்குள்ள வெப்ப காலநிலை தடையாக உள்ளது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இது மருத்துவ அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத கருத்து என இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியக மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டியள்ளார்.  

ஆகவே கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதற்கு மருந்துப் பொருட்களின் தவறானதும் பிழையானதும் பயன்பாடா காரணம் என்ற அச்சமும் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் கொரோனா வைரஸ் உலகில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் இன்றைய சூழலில் நோய்கள் தொடர்பில் கவனயீமாக நடந்து கொள்ளவும் கூடாது. நோய்த்தொற்றுக்களைத் தவிர்த்துக் கொள்வதிலும் விரைவாகக் குணப்படுத்திக் கொள்வதிலும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இவற்றின் நிமித்தம் மருத்துவர்களின் ஆலோசனை, வழிகாட்டல்கள் படி செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

https://www.thinakaran.lk/2020/03/07/சுகாதாரம்/49245/கொரோனா-வைரஸ்-இத்தனை-தீவிரமாக-வீரியம்-பெற்றது-ஏன்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்   லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், "பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை சீனா மற்றும் இந்தியா பொதுவாக இயல்பானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. சீனா மற்றும் இந்தியா சரியான எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29165337/No-thirdparty-intervention-is-requir-chinese-Foreign.vpf
  • அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா?  இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?   சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????
  • பலத்த மழையால் கீழடி அகழாய்வுப் பணி நிறுத்தம்: திருப்புவனத்தில் 108.4 மி.மீ., மழைப்பதிவு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கீழடியில் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. திருப்புவனத்தில் அதிகபட்சம் 108.4 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி மணலூரிலும் பணிகள் தொடங்கின. மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. கீழடியில் தார்பாய் மூடியும் குழிகள் நிரம்பின. இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. ‘மழைநீர் வற்றி, மண் காய்ந்த பிறகே மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கும்,’ என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 108.4 மி.மீ., மழை பதிவானது. சிவகங்கையில் 43 மி.மீ., மானாமதுரையில் 19, இளையான்குடியில் 31, தேவகோட்டையில் 16.6, காரைக்குடியில் 18.4, திருப்பத்தூரில் 18, காளையார்கோவிலில் 78.8, சிங்கம்புணரியில் 5.2 மி.மீ., மொத்தம் 254.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/556932-keeladi-excavation-stopped-due-to-heavy-rains-1.html
  • பெற்றோரிடம் போராளிகள் கையளிக்கப்பட்ட போது.   ஊடகவியலாளர்.. நிராஜ் டேவிட்டின் முகநூல் பதிவில் இருந்து. ‘வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டாகவும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் சில முக்கியஸ்தர்களால் தற்பொழுதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் இந்த அவதூறு பிள்ளையானின் ரீ.எம்.வீ.பி. கட்சியின் மகளீர் அணித் தலைவியினால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கருணா விவகாரத்தின் காலப்பகுதியில் கிழக்கில் செயல்பட்ட, அங்கு நடைபெற்ற பல சம்பவங்களைப் பதிவுசெய்த ஊடகவியலாளன்; என்கின்ற ரீதியில், ஒரு வரலாற்றுச் சம்பவம் ஆட்சியாளர்களின் தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் திரிவுபடுத்தப்படுகின்றது என்பதை உலகின் பார்வைக்கு கொண்டுவரவேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது. வெருகல் நடவடிக்கையின் பங்காளியாக நாங்கள் இல்லாவிட்டாலும், சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். வெருகல் மீட்பு நடவடிக்கை முடிவுற்று மறு தினம் நாங்கள் வெருகல் பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், வேதநாயகம், சந்திரபிரகா~; போன்றவர்களுடன் நானும் சென்றிருந்தேன். நடேசன், இரா உதையக்குமர் போன்றவர்கள் தனியாக வந்திருந்தார்கள். வழி நெடுகிலும் இருந்த விடுதலைப் புலிகளின் காவல் அரன்கள், காடுகளுக்குள் இருந்து திடீரென்று தோன்றிய விடுதலைப் புலிகளின் அணிகள் - இவர்களின் கடுமையான விசாரணைகளைக் கடந்து வெருகல் பிரதேசத்திற்கு சென்று – சம்பவத்தை பதிவு செய்தோம். • வெருகல் தாக்குதலை ‘வெருகல் சம்பவம்’ என்ற பெயரில் அழைக்கும்படியும், குறிப்பிடும்படியும் தலைவர் பணித்துள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் எங்களிடம் தெரிவித்தார். • அங்கு நாங்கள் சந்தித்த கௌசல்யன், குயிலின்பன், தளபதி ரமே~;, தளபதி பாணு போன்றவர்கள் ‘கருணா ஆடிவிட்டுச் சென்ற கோமாளிக் கூத்து’ என்றே – கருணாவின் பிரிவு விவகாரம் நடைபெற்ற அந்த 41 நாட் சம்பவத்தை குறிப்பிட்டார்கள். • கருணா தரப்பில் நின்ற நூற்றுக்கணக்கான பெண் போராளிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். • செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் பேரூந்துகள், பிக்கப் வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்கள். • இந்தச் சம்பவத்தில் 8 கருணா தரப்பு போராளிகள் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் எங்களுக்கு அறிவிக்கப்படது. • ஆனால் உண்மையில் கருணா தரப்பில் நின்ற 33 போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்பதும், த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக வேண்டுகோள் முன்வைத்ததைத் தொடர்ந்து, இரண்டு பொறுப்பாளர்கள் போக மீதி 31 போராளிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்கள் என்பதும் பின்நாட்களில் எங்களுக்குத் தெரியவந்தது. • கருணா தரப்பில் நின்று போராடி பின்னர் விடுதலைப் புலிகளால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல போராளிகளை நாங்கள் செவ்விகண்டிருந்தோம். தாங்கள் ‘அண்ணாக்களால்’ கண்ணியமாக நடாத்தப்பட்டாகவே அவர்கள் தெரிவித்தார்கள். • வெருகல், கதிரவெளி, வாகரை பிரதேசவாசிகளையும் செவ்வி கண்டிருந்தோம். யாருமே இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக எங்களிடம் கூறவேயில்லை. • வெருகல் (தாக்குதல்) சம்பவம் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியால்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜெயந்தன் படையணி போராளிகளின் உறவினர்கள், நன்பர்கள்தான் எதிரே கருணா அணியில் நின்ற போராளிகள். அப்படி இருக்க தனது உறவுகளைக் கிழக்கு மாகாணப் போராளிகளே மரியாதைக்; குறைவாக நடாத்தியதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. • விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலுமே பெண்களை மாணபங்கப்படுத்தும் காரியத்தை செய்ததே இல்லை. அவர்களது எதிரிகள் கூட இந்தக் குற்றச்சாட்டை நம்பமாட்டார்கள். • கருணா கூட இந்தக் குற்றச்சாட்டை அண்மையில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. • 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிள்ளையான் தலைமையிலான ரி.எம்.வீ.பி. கட்சி 2008ம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணசபையின் சகல அதிகாரங்களுடன் கொலோச்சியிருந்தது. இற்றை வரைக்கும் அலுவலகங்கள் வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வெருகலில் அப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றிருந்தால் ஏன் பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை? • ஏன் ஆதாரங்களைத் திரட்டவில்லை. • அந்த சண்டையில் இரு தரப்புக்களிலும் கலந்துகொண்ட எத்தனையோ போராளிகள் இன்றைக்கும் வாழும் சாட்சிகளாக அந்த மண்ணிலேயே இருக்கின்றார்கள். ஏன் அவர்களிடம் ஆதாரங்களைத் தேடவில்லை? • மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை அகற்றிய தற்போது சுவிட்சலாந்தில் வசிக்கும் அரசசார்பற்ற நிறுவண ஊழியரிடம் பேசும் போது, தொலைவில் இருந்து சுடப்பட்ட காயங்களே அனைத்து போராளிகளின் உடல்களிலும் காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். • வெருகல் சண்டையில்; பங்குபற்றிய பல விடுதலைப் புலி உறுப்பினர்கள், பொறுப்பாளர்களை பிரித்தானியாவிலும், சுவிட்சலாந்திலும், பிரான்சிலும் செவ்விகண்டிருந்தேன். அவர்களில் எவருமே அப்படியான ஒரு துர் சம்பவம் நடந்ததை ஒப்புக்கொள்ளவில்லை என்பதும், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பமே கிடையாது என்று அடித்துக் கூறுகின்றார்கள். இந்த சம்பவத்தின் போது என்னால் பதிவு செய்யப்பட்ட செவ்விகள் ஒலிப்பதிவு ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைத்ததும் நிச்சயம் வெளியிடுவேன்.
  • கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்   கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பதிவு: மே 29,  2020 16:02 PM ஜகார்தா இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:- நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும். கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள் எறுன கூறினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையையும் காட்டுகிறது" என்று மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29160241/Corona-Is-Like-Your-Wife-Anger-Over-Indonesia-Ministers.vpf