Sign in to follow this  
தமிழ் சிறி

கொரோனா வைரஸ் : வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு வங்கிகள் சலுகை

Recommended Posts

RBS.jpg

கொரோனா வைரஸ் : வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு வங்கிகள் சலுகை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன் கொடுப்பனவுகள் (mortgage payments) மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்களை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க ரோயல் ஸ்கொட்லன்ட் வங்கி (RBS) அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கங்களின் விளைவாக வாடிக்கையாளர்கள் நிதி சிக்கலில் சிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, வருமான இழப்பு என்று RBS செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

TSB வங்கியும் வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு இரண்டு மாதங்ககள் சலுகை வழங்கச் சம்மதித்துள்ளது.

வைரஸின் தாக்கம் உணரப்படுவதால் மக்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து முழுமையாக மீளப்பெற இரு வங்கிகளும் அனுமதித்துள்ளன.

பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு மேலதிக உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளதாக வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முக்கிய வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யுகே ஃபைனான்ஸ் (UK Finance) தெரிவிக்கையில்; அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிகப் பணத்தை (overdrafts) அதிகரிப்பது அல்லது கடனுக்கான திருப்பிச் செலுத்துதல்கள் அல்லது வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கவுள்ளன என்று கூறியுள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-வீட்டுக்கட/

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா வைரஸ் தாக்கங்களின் விளைவாக வாடிக்கையாளர்கள் நிதி சிக்கலில் சிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, வருமான இழப்பு என்று RBS செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

TSB வங்கியும் வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு இரண்டு மாதங்ககள் சலுகை வழங்கச் சம்மதித்துள்ளது.

உலகம் முழுவதும் பணம் இறைக்கப்படுகின்றது. 

ஆக, பண வீக்கம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. 

எனவே, பிட்கொயின் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரிக்கும்.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • படுகொலையான அருட்தந்தை சந்திரா அடிகாளரின் நினைவேந்தல்   மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளாரின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. புனித மரியாள் பேராலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் பங்குத்தந்தை வணபிதா சிலமன் அன்னதாஸ் தலைமையில் நேற்று மாலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தையின் உறவினர்கள், வணபிதாக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் சமாதியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகள் ( 46வயது), 1988 ஜுன் 6ம் திகதி, இனம்தெரியாத துப்பாக்கி தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகள் 1942 மட்டக்களப்பு புளியந்தீவு பெனாண்டோ வீதியில் பிறந்தவர். 1970 ஆம் ஆண்டில் கத்தோலிக்க திருமறைக்குள் அருட்தந்தையாக அபிஷேகம் செய்யப்பட்டு, 1988 ஜுன் 6 வரை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியவர் ஒடுக்கப்பட்டோர், அநீதி இழைக்கப்பட்டோர், வறியவர்கள், தேவை நாடி நிற்போர் என முழு சமூகத்துக்குமே சிறப்பு பணி செய்தவர். துணிந்த ஆழுமையும் நேரியல் சிந்தனையும் இளைஞர்களை உயரியல் சிந்தனையில் நெறிப்படுத்தும் ஆர்வமும் கொண்டவர் கத்தோலிக்க திருமறை பணியோடு வாழ்ந்தவர். உள்நாட்டுபோர் இலங்கையில் உக்கிரமடைந்த வேளையில் துணிந்து செயற்பட்டு சாதாரண மக்கள் இப்போரின் வடுக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என தன்னை மாய்த்துக் கொண்டவர். சமாதானத்தின் காவலனாக தூதுவனாக முரண்பட்ட இரண்டு தரப்புக்கும் நடுவே நியாயமான நடுவராக அன்பு பணி செய்தவர். எப்போதுமே நீதிக்காக குரல் கொடுத்த அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகள் சமாதானபணி செய்தார் என்ற ஒரே செயற்பாட்டிற்காக இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளினால், 1988 ஜுன் 6ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை இந்திய அமைதிப்படைகளின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட ப்ளொட் அல்லது ஈபிஆர்எல்எப் புரிந்தது என்றும் குற்றச்சாட்டுக்கள் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.   https://newuthayan.com/படுகொலை-செய்யப்பட்ட-அருட/
  • தேர்தல் ஒத்திகை தொடங்கியது – (படங்கள்)   கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீவ்சார்த்த தேர்தல் ஒத்திகை இன்று (10) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படவுள்ளது.     https://newuthayan.com/தேர்தல்-ஒத்திகை-நடவடி/
  • சீமானை எதிர்ப்பவர்கள் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் வைக்காமல் வேற்றுத்தனமான கருத்துக்களை வைத்து ஊழல்கட்சிகளுக்கே மறைமுக ஆதரவை வழங்குகின்றார்கள். பார்பனியம் இவரை கொண்டு நடத்துகின்றது,ஈழப்பிரச்சனைகளை நீர்த்துப்போக செய்கின்றார்கள் என விவாதிப்பவர்கள் இதுவரை எந்த ஆதாரங்களையும் காட்டவேயில்லை.  
  • வான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் பாெருள்..! இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தொடை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://newuthayan.com/வான்-பரப்பில்-அடையாளம்-க/   ??????  
  • நாதா என‌க்கு ல‌க்ஸ்ம‌ன்காதிர் காம‌ர‌ யார் கொலை செய்தார்க‌ள் தெரியாது , ஆனால் ப‌ழி எம்ம‌வ‌ர்க‌ள் மேல் சும‌த்த‌ப் ப‌ட்ட‌து ,  அத‌ற்கு பிற‌க்கு தான் எம்ம‌வ‌ர் ஜ‌ரோப்பாவுக்கு வ‌ர‌ ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து / நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியும் ந‌ட‌ந்து இருக்க‌லாம் ,  அவ‌னின் இற‌ப்பு அப்போது ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சியை த‌ந்தாலும் , அவ‌ரின் கொலையால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து எம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையும் / ம‌கிந்தா ப‌ர‌ம்ப‌ர‌ மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் , அர‌சிய‌லுக்காக‌ அப்பாவி ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ள் 😡