Sign in to follow this  
தமிழ் சிறி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியாக பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர்!

Recommended Posts

1583687194080-720x450.jpg

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியாக பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர்!

இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வத்திக்கானில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் நேற்று (திங்கட்கிழமை) காலை தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய்த்தொற்றுப் பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது.

108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வத்திக்கான் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

வத்திக்கானில், கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-அச்சுறுத்தல்-காரண/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this