Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விண்வெளியிலேயே கீரை வளர்த்து சாதனை படைத்தது நாசா.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா.!

vik.jpg

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா.பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களின் உணவாக உட்கொள்ளுவார்கள்.

இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

2024 ஆம் ஆண்டளவில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்க நாசாவால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை அனுப்ப நாசா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அப்படி அதிக நாட்கள் விண்வெளிக்கு சென்று தங்கும் வீரர்கள் உட்கொள்ளும் உணவு அதிக நாட்கள் பதப்படுத்தபடுவதால் உணவின் தரம், சுவை, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளும் குறைகிறது. இதனால் வீரர்கள் எடை குறைவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுக்க கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் விண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை நடந்து வந்துள்ளது. வீரர்கள் தங்கியுள்ள விண்கலனில் ஒரு பெரிய பீங்கான் தொட்டியில் பூமியில் இருந்து எடுத்து சென்ற மண்ணை நிரப்பி, ஒரு குழாய் மூலம் நீரை செலுத்தும் சிறிய நீர் பாசன முறையையும் வெளிச்சத்திற்கு எல்.ஈ.டி. விளக்குகளை வைத்து கீரையை விண்வெளி வீரர்களே வளர்த்தனர்.

அப்படி வளர்க்கப்பட்ட கீரை மீண்டும் பூமிக்கு அனுப்பி பரிசோதித்ததில் பூமியில் வளர்வது போன்றே விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையும் அனைத்து சத்துக்களை கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த முறையில் விண்வெளியில் கீரை சுமார் 36 முதல் 56 நாட்கள் வரை தடையில்லாமல் வளருவதாகவும் பல ஆண்டுகள் இப்படி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு இப்பொது வெற்றி பெற்றுள்ளதாக நாசா கென்னடி விண்வெளி மையத்தின் விஞ்ஞானி “ஜியோயா மாஸா” தெரிவித்தார்.

http://www.vanakkamlondon.com/விண்வெளியிலேயே-கீரைகளை-வ/

டிஸ்கி:

====== விண்வெளி வீரர் =====

FB_IMG_15115406494185048.jpg

கல் சட்டி, மத்து, சமையல் குறிப்பு புஸ்தகம், குசினி சாமான்கள் எல்லாம் எடுத்து விண்வெளிக்கு போறன் .. போவியா.!☺️.😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி:

====== விண்வெளி வீரர் =====

FB_IMG_15115406494185048.jpg

கல் சட்டி, மத்து, சமையல் குறிப்பு புஸ்தகம், குசினி சாமான்கள் எல்லாம் எடுத்து விண்வெளிக்கு போறன் .. போவியா.!☺️.😊

Bildergebnis für தீப்பெட்டி

இது, இல்லாமல்... எப்படி சமைக்கிறது.  :grin:

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒரு பெரிய பீங்கான் தொட்டியில் பூமியில் இருந்து எடுத்து சென்ற மண்ணை நிரப்பி, ஒரு குழாய் மூலம் நீரை செலுத்தும் சிறிய நீர் பாசன முறையையும் வெளிச்சத்திற்கு எல்.ஈ.டி. விளக்குகளை வைத்து கீரையை விண்வெளி வீரர்களே வளர்த்தனர்.

பாராட்டுக்கள்.

பூமியைத்தான் அழித்து வருகின்றோம்...  மாற்று இடம் ஒன்று தேவை.

அங்கேயேவது சூழலை மாசடையாமல் பார்த்துக்கொள்வோம் 🥶

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

பாராட்டுக்கள்.

பூமியைத்தான் அழித்து வருகின்றோம்...  மாற்று இடம் ஒன்று தேவை.

அங்கேயேவது சூழலை மாசடையாமல் பார்த்துக்கொள்வோம் 🥶

சகல வளங்களும் நிறைந்த பூமாதேவியை பாதுகாத்தாலே போதும்.😁
மாற்று  இடம் தேவையில்லை.🍀

Link to post
Share on other sites
14 minutes ago, குமாரசாமி said:

சகல வளங்களும் நிறைந்த பூமாதேவியை பாதுகாத்தாலே போதும்.😁
மாற்று  இடம் தேவையில்லை.🍀

அந்தக்காலத்தை மனித குலம் கடந்து போய்விட்டது 😞 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதுசென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலேயே கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்து விட்டது.புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/11/24125120/2103843/Tamil-News-Nivar-cyclone-Bay-of-Bengal-centered-3.vpf
    • ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது என்றும், இதனால் தேசிய சுகாதாரத்தில்  ஏற்படக்கூடிய பாதிப்பு ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. மார்ச் இறுதி வரை நீடிக்கும் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்திற்குள் இங்கிலாந்து காலடி எடுத்து வைக்கிறது என்று போரிஸ் ஜான்சன் எச்சரித்தார். மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் திருத்தப்பட்ட பிராந்திய மூன்று அடுக்கு கட்டுப்பாட்டு முறை குறித்த விவரங்களை பிரதமர் வெளியிட்டார்.இந்த நிலையில் அபாயங்கள் நிறைந்த ஒரு திட்டத்தை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார். மேலும் கொரோனாவுக்கு எதிராக தற்போது வரை நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தவிர்க்கும் வகையில் மற்றும் பொதுமக்கள் செய்த கடினமான தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரதமரின் புதிய திட்டம் உள்ளது என விமர்சித்துள்ளார் புதிய நடவடிக்கைகள் அக்டோபரை விட கடுமையானவை என்று பிரதமர் கூறுகிறார், உண்மையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொற்று விகிதங்கள் மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது  மற்றும் இறப்புகள் அதிகமாக இருக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளில் 4,000 பேர் மற்றும் உட்புறங்களில் 1,000 பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது முழு ஊரங்கிற்கு வழிவகுத்த மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் திட்டம் எதனால் தோல்வியடைந்தது என்பது தற்போது நமக்கு தெரியும், அரசாங்கம் மீண்டும் அதே தவறுகளை செய்து கொரோனா பரவுவதை அதிகரிக்க வழிவகுக்கக்கூடாது என டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார். https://www.dailythanthi.com/News/World/2020/11/24153954/British-Medical-Association-warns-Boris-Johnsons-lockdown.vpf  
    • தற்போது இக்குறைகள் இல்லை. நன்றி நிர்வாகம். 😊
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.