Sign in to follow this  
ampanai

ரஷ்யாவை ஒரு கை பார்க்க சவுதி முடிவு; கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்துகிறது

Recommended Posts

சில தினங்களுக்கு முன், கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த, சவுதி அரசின், சவுதி அராம்கோ நிறுவனம், அடுத்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக, ரஷ்யாவை மிரட்டியுள்ளது.


gallerye_024803155_2498930.jpg

 

 

பேச்சு தோல்வி:
இதனால், சவுதி, ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கு, 'கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை' என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம்.

இதையடுத்து, சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைத்தது. அத்துடன், ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா வழங்குவதை விட, நான்கு மடங்கு குறைந்த விலையில், கச்சா எண்ணெய் வழங்குவதாக, சவுதி அராம்கோ தெரிவித்து உள்ளது.


gallerye_024812909_2498930.jpg


அபாயம்:
இந்நிலையில், ஏப்ரல் முதல், கச்சா எண்ணெய் உற்பத்தியில், தினமும், 25 லட்சம் பீப்பாயை அதிகரிக்க உள்ளதாக, நேற்று சவுதி அராம்கோ அறிவித்தது. இதன் மூலம், ஒரு நாள் கச்சா எண்ணெய் உற்பத்தி, 98 லட்சம் பீப்பாயில் இருந்து, 1.23 கோடியாக உயரும். இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மேலும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.

ரஷ்யாவுக்கு எதிராக சவுதி அராம்கோ எடுத்துள்ள நடவடிக்கையால், அமெரிக்காவின் 'ஷெல்' எரிபொருள் நிறுவனங்கள் மூடப்படும் அபாயமும் உள்ளது. 'கொரோனா வைரஸ்' பிரச்னையால், உலகளவில் தேவை குறைந்து வரும் நிலையில், சவுதி, கச்சா எண்ணெய் விலையை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என, சந்தையாளர்கள் தெரிவித்தனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2498930

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வாட்சாப் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாக சீன எதிர்ப்பு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு குறிப்பாக, 'சீனாவை சேர்ந்த அல்லது சீன நிறுவனங்களோடு கூட்டு வைத்துள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகளை திறன்பேசியிலிருந்து நீக்குங்கள்' என்று அந்த பகிர்வுகள் வலியுறுத்துகின்றன. மேலும், ட்விட்டரில் தினந்தினம் ட்ரெண்டாகி வரும் "BoycottChina", "BoycottChineseApp" மற்றும் "BoycottChineseProducts" உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய மக்களிடையே நிலவி வரும் சீன எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அவ்வப்போது சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், தற்போது லட்சக்கணக்கான மக்கள் சீன திறன்பேசி செயலிகளை தங்களது அலைபேசிகளிருந்து நீக்குவது முற்றிலும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயன்பாட்டாளர்களின் திறன்பேசியில் உள்ள சீன செயலிகளை மட்டும் நீக்குவதாக கூறப்பட்ட "Remove China Apps" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஆனால், கூகுளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாறாக இந்த செயலி செயல்பட்டதால் ஜூன் 3ஆம் தேதி இது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   டிக்டாக், பப்ஜி மொபைல், ஷேர்ஐடி, செண்டர், காம் ஸ்கேனர், பியூட்டி பிளஸ், க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ், லைக் மற்றும் யுசி பிரௌசர் உள்ளிட்டவை மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையால் இலக்கு வைக்கப்பட்ட சில செயலிகளாகும். டிக்டாக் செயலியை இந்தியர்கள் தங்களது திறன்பேசியில் இருந்து நீக்கினால் அதன் உரிமையாளரான சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாட்சாப் பயனாளர்களிடையே பரவிய செய்தி இதன் வீரியத்தை அதிகரித்துவிட்டது. சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த விடயங்களில் பிணைப்பு அதிகமாக உள்ளது.   எனவே, சீனாவுக்கு எதிரான இந்திய மக்களின் இதுபோன்ற எதிர்ப்பலைகள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே. இந்தியாவில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் சந்தை மதிப்பீட்டு நிறுவனமோ இதன் மதிப்பு நான்கு பில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாக கூறுகிறது. எனவே, சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திறன்பேசி செயலிகளை நீக்கும் இந்திய மக்களின் செயல்பாடு உண்மையில் எத்தனை காலத்திற்கு நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/global-52918186
    • வந்தால், கடத்தி வெடிவைக்க, உங்க அண்ணரும், அதற்காக வெளியே வரப்போகும் பிள்ளையானும் ரெடி. கிழக்கு பல்கலைகழக பேராசிரியருக்கு நடந்தது என்ன?
    • இனி பொம்மைகளுடன் சாப்பிடலாம்!   கனி கரோனா பெருந்தொற்றின் காரணமாக பல துறைகள் தலைகீழ் மாற்றங்களை எதிர்கொண்டுவருகின்றன. அந்த வகையில் உணவகத் துறை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவகங்கள் இந்த நேரத்தில் இயங்குவதற்குப் பல புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன லித்துவேனியத் தலைநகர் வில்னியஸின் மேயர், அந்த நகரின் சில இடங்களில் உணவகங்கள் வெளிப்புற 'கஃபே'க்கள் அமைப்பதற்கு ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்நகரில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் உட்புறமாக இயங்குவதற்குப் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளன. உணவகங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகச் சில மேசைகளைக் காலியாக வைக்க வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தக் காலி மேசைகள் ஃபேஷன் காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கின்றன. அந்நகரின் சுற்றுலா நிறுவனமான ‘கோ வில்னியஸ்’, உணவகங்கள், அந்நகரின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த உணவக ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றன. உணவகங்களில் காலியாக விடப்பட்டிருக்கும் மேசைகளில் ஜவுளிக் கடை பொம்மைகளான ‘மேனிக்கின்’ஸை (Mannequins) ‘பருவநிலை பேஷன்’ என்ற பெயரில் புது ஆடைகளுடன் அமரவைத்துள்ளனர். இந்நகரில் உள்ள பல உணவகங்கள் இந்த ஃபேஷன் காட்சியகத்துடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. தனிமனித இடைவெளிக்காகக் காலியாக விடப்பட்டிருக்கும் உணவக மேசைகளை அகற்றுவது நன்றாக இருக்காது என்பதால், இந்த ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்கள் அந்த நகரின் உணவக உரிமையாளர்கள். வாடிக்கையாளர்கள் தனிமையில் அமர்ந்து உண்ணும் எண்ணத்தைப் போக்க இந்த ஜவுளிக் கடை பொம்மைகள் உதவிகரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் உணவக உரிமையாளர்கள். உணவகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள், பொருட்கள் ஆகியவை பிடித்திருந்தால், அவற்றை எங்கே வாங்கலாம் என்ற தகவலையும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. லித்துவேனியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவின் வாஷிங்டனின் பிரபல உணவகமான ‘தி இன்’ னும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக உணவகத்தில் ஜவுளிக் கடை பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிவரும் காலத்தில், இதுபோன்ற பல புதுமையான போக்குகளை உணவகங்கள் மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பார்க்க நேரிடலாம்!   https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/557451-eating-with-toys-1.html
    • அம்மானுக்கும் இல்லை!! 😂 துரோகத்தால் வீழ்த்திய ஒருவரை, இப்போ அரசியலுக்காக, அவர் ஒருவரே தேசிய தலைவர் என்பது பச்சோந்தித்தனம். நம்ம தல, மகிந்தா தானே என்று சொல்லும் நேர்மை, ஆண்மை வேண்டும். அது கிராம் என்ன விலை?
    • இன்றும் நாளையும் பூமிக்கு அருகில் விண் கற்கள்.!  இரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் பேசும்போது, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் நாளையும், நாளை மறுநாளும் பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். http://www.vanakkamlondon.com/நாசாவின்-அதிர்ச்சி-தகவல்/