No photo description available.
Image may contain: 1 person, closeup
Nishanthan Suvekaran
 

பொய்சொல்லி சிக்கி கொண்ட கூட்டமைப்பினர்- ஆப்பிழுத்த குரங்காய் நிலை!

சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும் சிங்கள அரசின் அதிதீவிர நண்பருமான சுமந்திரின் சிபாரிசின் பெயரில் களமிறங்க இருந்த இலங்கையின் மனிதஉரிமையாளராக இருந்து தற்போது பதவிவிலகியிருக்கும் அம்பிகா சற்குணநாதன்.

இலங்கை ஐநா ஒப்பத்தில் இருந்து விலகுவதன்காரணத்தினாலேயே பதவிவிலகுவதாக சுமந்திரனும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில்.

நேற்று (10.03.2020) என திகதியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தன்னுடைய பதவிவிலகல் 6மாதங்களுக்கு முன்னமே திட்டமிட்பட்டுவிட்டதாகவும் தனது பதவிவிலகுக்கான காரணங்கள் என குறிப்பிட்டு வெளிவந்த செய்திகள் பொய்யெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தம்மை தேர்தலில் போட்டியிடும்படி ஒரு கட்சி அழைத்திருப்பதாகவும் தாம் அது தொடர்பாக ஒரு முடிவு ஒன்றை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மிகக்குறிப்பாக இந்த அம்பிகா சற்குணநாதன் யார் என நோக்கையில் 2009ம் ஆண்டு இனப்படுகொலை உச்சம் பெற்றிருந்த வேளையில் இது பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என நிறுவுவதற்கு மிகக்கடுமையாக பணிபுரிந்த ஒருவராவார்.

அது மட்டுமின்றி படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் அவர்களை விடுதலைப்புலிகள் தான் கொலைசெய்ததாகவும் நீலன் திருச்செல்வத்தின் இலக்கை அடைவதே தனது நோக்கம் என கூறி நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை நிலையத்தின் தலைமை பதவியை ஏற்றிருந்த ஒருவராவார்.

இலங்கையில் சித்திரவதை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என கூறி சிறிலங்கா அரசாங்காத்திற்கு வெள்ளையடிப்பதற்கும் தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை மூடிமறைப்பதற்கு மிகத்தீவிரமாக செயற்பட்டுவந்தவர் ஆவார்.

அனைத்திற்கும் அப்பால் சிறிலங்கா அரசை சர்வதேச பொறிமுறைகளில் இருந்து தப்பவைப்பதற்காகவும் காலநீடிப்பை பெற்றுக்கொடுப்பதற்காகவும் சுமந்திரன் போன்றோருடன் இணைந்து மிகக்கடுமையா உழைத்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் தேசிய அரசியலில் நுழைந்திருக்கின்ற கறுப்பாடுகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை அழிப்பதற்கு பகீரதப்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் போது அம்பிகா போன்றோரின் வரவு தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை மிகத்தீவிரமான அளவில் பாதிக்கும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.